CD-EVILSPEAK-Q-25
R3045 (col.2p3,4): –
தவறான சாட்சிகள் பொய் சொல்லுவதற்கு சமமானது. ஆனால் ஒரு காரியத்தை தவறாக சொல்லும் போது அது ஆழமான பொய்யாக மாறிவிடுகிறது. நேரடியான வாக்கியமாக இருந்தாலும் சரி, மறைமுகமான வாக்கியமாக இருந்தாலும் சரி, ஒருவரிடம் தவறான காரியங்கள் அறிவிக்கப்பட்டால் பொய் பேசுவதைக் காட்டிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உண்மையில் நாகரீகமுள்ள ஜனங்கள் மத்தியில் அவர்களின் மனசாட்சியின் உக்கிரத்தை தணிக்க, இப்படிப்பட்ட தந்திரமான பேச்சுக்களை பேசிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் திருப்தியடைகிறார்கள். ஒருவர் தவறான காரியங்களை சொல்லும்போது மெளனமாய் இருந்தாலும் அல்லது தலையை மட்டும் அசைத்தாலும், அந்தத் தவறுக்கு சாட்சியளிப்பவராக இருக்கிறார். இதற்குத் தொடர்பாக தவறான ஒரு வாக்கியம் பேசப்படுவதைக் காட்டிலும் மெளனம் சம்மதத்திற்கு அறிகுறியாக புரிந்து கொள்ளப்படும். தேவனுடைய வீட்டில் மோசேக்கு கீழுள்ள ஊழியக்காரராகிய யூதர்களுக்கு நியாயப்பிரமாணத்தில் இது ஒரு முக்கிய கற்பனையாக கொடுக்கப்பட்டிருக்க, புதிய உடண்படிக்கையின் கீழுள்ள தேவ புத்திரர்கள் எவ்வளவு முக்கியமாக கடைபிடிக்க வேண்டியதாக இருக்குமே, இந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளை இந்தக் கற்பனை தடை செய்கிறது. ஓர் அயலானை பொறுத்தவரையில், உண்மையல்லாத காரியங்களை பேசுவது மட்டும் அல்ல, அவருடைய தரத்தை குறைக்கக்கூடிய எந்தவிதமான காரியத்தையும் அவரை பற்றி பேசுவது தவறாகும். அது உண்மையாக இருக்கும் பட்சத்திலும் அவரைப்பற்றி பேச அவசியமில்லை. ஒரு வேளை மற்றவர்களை அழிவினின்று காக்கவும், சட்டத்தின்படி விடுதலை செய்யவும் அல்லது ஒருவரை எச்சரிக்கவேயன்றி இப்படிப்பட்ட உண்மைகளை நாம் எங்கும் பேசிவிடக்கூடாது. மேலும் இப்படிப்பட்டச் சூழ்நிலையில் தேவைப்பட்ட காரியங்களை மட்டுமே பேச வேண்டும். இவையனைத்தும் அன்பின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
அன்பின் பிரமாணத்தினால் நம்முடைய சகோதரர்களோடு நாம் ஐக்கியப்பட்டிருக்கிறோம். ஆகவே நம்முடைய முழு கவனத்தை அந்த ஐக்கியத்தின் மேல் வைக்க வேண்டும். நம்முடைய ஆண்டவரின் பாடங்களை முழுமையாக கற்றுக் கொள்வதற்கு கிறிஸ்தவர்களுக்கு சற்று கடினமாக தோன்றுகிறது. தனிப்பட்ட காரியங்கள் அல்லது பொதுக்காரியங்களிலும் ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரியைக் குறித்து குறைகள் இருந்தால் நாம் மற்றவர்களிடம் அல்ல அந்த நபரிடமே அந்தக் காரியங்களை குறித்து பேச வேண்டும்.