CD-LOVE-Q-38
R2453 [col. 2P2-5]: –
இந்த “சகோதரர்களுக்கான” இறுதி மற்றும் மிகவும் தேடப்படுகிற சோதனையாதெனில், “சகோதரர்களுக்கான அன்பு” மாத்திரமே, இதில் விழித்திருந்து, போராயுதம் தரித்தவர்களும் கூட விழுந்து விடுவார்கள். எனவே இந்த சோதனையில் இராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கு ஏராளமானவர்கள் தகுதியற்றவர்களாக கணக்கிடப் படுவார்கள். (ரோமர் 8:20) ம் வசனத்திற்கு இசைவாக அன்பின் ஆவியைப் பெற்றிருப்பர், “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளி களாயிருக்கிறோம்.” என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. – 1 யோவான் 3:14,16, 1 பேதுரு 1:22, 3:8. யுகத்தின் முடிவில் (வெளி 3:10) சிறப்பான சலுகை மற்றும் சிறப்பான விசாரணையில், மற்ற சோதனைகளை போல, இதுவும் கவனத்திற்குரியதும், கூர்மையாகவும் இருக்கும். நாம் இவைகளை வெற்றிகரமாக சந்திக்க, நாம் தயாராக இருப்பதற்கு, இந்த சோதனைகள் எப்படி வரும் என்பதை இப்போது பார்க்கலாம். (a) “மனுஷனுடைய சகோதரத்தும்” என்று அறிவிக்கிற தெய்வீக வார்த்தையை மதிக்காத உலகத்தின் அளவற்ற தளத்தின் மீதும் அல்ல. இது தீமையின் பிள்ளைகளையும் கடவுளின் பிள்ளைகளையும் அடையாளம் கண்டுகொள்ளும். பிந்தையவர்கள் அனைவரும். கனப்படுத்தப்பட்டு, நேசிக்கப்பட்டு, “சகோதரர்களாக” மதிக்கப்படுவார்கள்- மன்னிப்புக்காகவும், ஆண்டவரின் ஊழியத்திற்காகவும், முழுமையாக அர்ப்பணிப்புக்காகவும், அனைவரும் கிறிஸ்துவின் மாபெரும் இரத்தத்தின் மேல் நம்பிக்கையுள்ளவர்கள். (b) இப்படிப்பட்டவர்கள் “பாபிலோனில்” அல்லது அவளை விட்டு வெளியே மூட நம்பிக்கைகளினாலும், தவறான போதனைகளினாலும் குருடாக்கப்பட்டு, விலங்கிடப்பட்டு, நித்திரையில் காணப்பட்டால், விழித்திருக்கக்கூடிய ஒரு சிலுவையின் போர் வீரனாக, சர்வாயுதங்களை தரித்துக்கொண்டு, மகிழ்ச்சியோடு சிறந்த மற்றும் விரைவான முறையில் ஞானமாக மீட்பு பணியை வேகப்படுத்த வேண்டியது அவரது கடமையாகும். எந்த ஒரு தன்னுணர்வு, சுய-புகழ் அல்லது சுயத்தின் ஆவி அவரை தடுக்க வேண்டாம். அன்பின் ஆவியே அவருடைய முழு வல்லமையை உற்சாகப்படுத்த வேண்டும். சகோதரர்களுக்காக தன்னுடைய ஜீவனையே கொடுக்கக்கூடிய அளவுக்கும் அன்பின் ஆவி செயல்பட வேண்டும். இந்த ஆவியைப் பெற்றிருக்கும் அனைவரும், அவிசுவாசத்தை நோக்கி குருட்டுதனமாக வழிநடத்தப்பட்டதினால். ஆண்டவரிடம் அவர்கள் கொண்டுள்ள பிடியை விட்டுவிடுவதற்கான அபாயத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வாஞ்சிக்க வேண்டும். (c) “இரட்சிப்பின் அதிபதியின்” (எபிரெயர் 2:10) அதே ஆவி, இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் சகோதரர்களை மட்டும் அல்ல, தம்மைப் போலவே சர்வாயுதங்களை தரித்திருக்கும் சகோதரர் களுக்காகவும் ஜீவனை கொடுக்கக்கூடிய அன்பில் அவர்களை வழிநடத்தும். அவர் சகோதரர்களின் சோதனையில் இறங்கி, அவர்களின் பாதரட்சை மற்றும் அவர்களின் சர்வாயுதவர்கங்களின் எல்லா பாகங்களையும் சரிசெய்துக்கொள்ள உதவுவார்கள். மூத்த சகோதரராகிய நம்முடைய இரட்சிப்பின் அதிபதியைப் போல, யார் ஒருவரும், குறிப்பான பலவீனத்திலோ, இடறலடையக் கூடியவர்களையோ இகழவோ, கடிந்துக் கொள்ளவோமாட்டார். இதற்கு எதிரிடையாக, பலமுள்ளவர்களுடைய ஐக்கியத்தில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தாலும், பலவீனரிடம் மிக கவனமுள்ளவராக, உதவிச்செய்யக்கூடியவராகவும் இருப்பார். பரஸ்பர பாராட்டல்களுக்கும், மகிழ்ச்சிக்கும், பலவான்கள் தங்களைத் தாங்களாகவே கூட்டிச் சேர்ப்பதற்கு இது நேரம் இல்லை சகோதரர்கள் தங்கள் சார்பாக தங்களுடைய ஜீவனையும் கொடுக்கக்கூடிய அன்பை பெற்றவர்கள் இனிவரும் காலத்தில் கூடுவார்கள். “நல்லது உத்தமனும் உண்மையுமுள்ள ஊழியக்காரரே – உங்கள் ஆண்டவருடைய மகிழ்ச்சிக்குள் பிரவேசியுங்கள்.” என்று சொல்லும் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்பார்கள்.
R3180 [col. 1 P2]: –
ஒரு காரியம் உண்டு, எவ்வாறாயினும், நம்முடைய சக சிருஷ்டிகளுக்கு மட்டுமல்ல, நம்முடைய சொந்த குடும்பத்தாருக்கும், நமது சொந்த சுற்றப்புறத்தினருக்கும் மட்டுமல்லாமல், எல்லா மனிதர்களுக்கும் நாம் எப்போதும் தொடர்ந்து கடன்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அப்போஸ்தலர் கூறுகிறார். அதாவது அன்பில் கடன்பட்டிருக்கிறோம். தெய்வீக சட்டத்தின் கீழ் நாம் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறோம். அன்றாட கிறிஸ்தவ கடமைகளில் இது ஒரு பகுதியாகும். ஒரு பெற்றோர் அல்லது குடும்பத்தின் உறுப்பினர், அவர் வீடு மற்றும் அதன் வசதிகளும் சலுகைகளும், அமைதியாக மற்றும் நல்லிணக்கத்திற்கும் ஆதரவாக செயல்படுகிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். அவரது அயலகத்தார் மற்றும் நண்பர்களிடையே உள்ள அவரது செல்வாக்கு, தீமைக்காகவும், சண்டைக்காகவும் அல்ல நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும் இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளவேண்டும். “ஆகையால், நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். அவர் எல்லா நேரங்களிலும் தனது சொந்த நேரத்தையும் வசதிகளையும் செலவழித்து எல்லா மனுஷருக்கும் நன்மை செய்ய தயாராக இருக்கவேண்டும். சகோதரார்களுக்காக தம் ஜீவனை கொடுக்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டும். அதாவது சத்தியத்தை அறிவிப்பதற்கு, நேரத்தை செலவிடுவதற்கும், தீய நாட்களில் சத்தியத்தில் நிலைத்து நிற்க, ஆண்டவருடைய சகோதரர்களுக்கு எந்த விதத்திலும் அவருடைய சர்வாயுதவர்க்கங்களை அணிந்துக்கொள்ள, உதவி செய்யும்படிக்கு, ஒவ்வொரு நாளும், ஜீவனை கொடுப்பதற்கு வாய்ப்புகளை தேடவேண்டும்.
மற்றும் சகோதரர்களுக்கான அன்பு, வெறுமனே பிரிவினையினாலோ, குழுமனப்பான்மையினாலோ அல்லது நாம் விரும்பும் இயற்கை குணங்களை உடைய சகோதரர்கள் மேல் வைக்கும் அன்பை இது பொருள்படுத்தாது. இது புதிய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட அனைவர் மற்றும் அன்பின் பொன்னான பிரமாணத்தின் படி நடக்க முயல்கிற அனைவர் மேலுள்ள அன்பை இது பொருள்படுத்துகிறது. நம்முடைய சிந்தனைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் பொருந்தாதபடிக்கு, சிலர் இயற்கையான வளர்ச்சி மற்றும் மனநிலையை தனித்தன்மையாக கொண்டிருந்தார்களானால், நாம் அவர்களை நேசித்து, அவர்களை சந்தோஷப்படுத்தி, மகிழ்ச்சியோடு அவர்களுக்கு ஊழியம் செய்வோம். ஏனென்றால், அவர்கள் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். அவரால் அங்கீகரிப்பை பெற்று, புதிய உடன்படிக்கையின் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, இராஜரீகமான சுயாதீன பிரமாணத்தையும் ஜீவனையும் தங்களுடைய நிலைபாடாக ஏற்படுத்திக்கொண்டனர். ஆகவே நாம் அவர்களை இனி மாம்சத்தின் தனித்தன்மைகளாகிய முடிச்சுகள், திருப்பங்களின்படி அறியாமல், புதிய சுபாவத்தில் உள்ள “புது சிருஷ்டிகளாக” அறிந்திருக்கிறோம். அதாவது, நம் ஒவ்வொருவருக்கும் அன்பின் பிரமாணத்திற்கு எதிரான, நம்முடைய சொந்த இயல்பான வஞ்சகங்கள், சாதுரியங்களை கண்டறிந்து, இந்த மாம்சத்தின் அபூரணங்களை கூடுமான அளவுக்கு துரிதமாக புறம்பாக்க நாம் முயலவேண்டும். மற்றும் அவைகள் கூடுமான அளவுக்கு மற்றவர்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிலைப்பாட்டிலிருந்து, கிறிஸ்துவின் சரீரத்தின் பல்வேறு அங்கத்தினர்கள் என்றுமே குறைபாடுகளை குறிப்பிடமாட்டார்கள். அல்லது மற்றவர்களை பழிப்பதற்கும் கேலிக்குரிய காரியங்களுக்கும் அவர்கள் இணங்கமாட்டார்கள். ஆனால் ஒவ்வொருவரும் முடிந்த அளவுக்கு தங்களுடைய சொந்த குறைபாடுகளை மூடி மறைப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் போல மற்றவர்களின் குறைபாடுகளை மறைப்பார்கள். மற்றும் தங்களிடம் பரிவுணர்வோடிருப்பது போல, மற்றவர்களைச் சூழும் பிரச்சனைகளில், அவர்களிடம் பரிவுணர்வோடிருந்து, ஆண்டவரும் அவரிடம் பரிவுணர்வோடு நடந்துக்கொள்ள விரும்புவார்கள்.. “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்ட வர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர் கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் (கிறிஸ்துவின் சிந்தை, அன்பு) அவருடையவனல்ல” (ரோமர் 8:9)
R3547 [col. 1P3]: –
நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்று கர்த்தர் கற்பித்ததை குறித்து நமக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால் “நான் உங்களை நேசித்தது போல” என்ற இந்த வார்த்தைகளில் உள்ள சிந்தனையை எண்ணி வியப்படைகிறோம். ஆண்டவர் நம் ஒவ்வொருவர் மீதும் வைத்திருக்கும் அதே அன்பை நாம் எவ்வாறு ஒருவருக்கொருவர் காட்டமுடியும்? இது நம்முடைய முதல் கேள்வி. இது இயலாத காரியம் என்று முதலில் நாம் பதில் அளிக்கலாம். ஆனால் நாம் ஆண்டவருடைய ஆவியினால் அதிகதிகமாக நிரப்பப்படும் போது, அவருடைய எல்லாவற்றின் மேலும், பரிபூரண அன்பின் நிலைப்பாட்டிற்கு கிட்டத்தட்ட வந்தடைகிறோம். இந்த அன்பு மற்றவர்களை காயப்படுத்த மறுப்பதோடு, சகோதரர்களுக்கு நன்மை செய்வதில் மகிழ்ச்சி அடையும். ஆம், இது ஒருவருடைய சொந்த நேரத்தையும் வசதிகளையும் இழந்து நன்மை செய்யக்கூடிய அதிகமாக அன்பாகும். இவ்வாறு இயேசு நம்மனைவரையும் நேசித்தார். அவருடைய விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே நம்மை மீட்டார். மற்றும் நாம் எந்த அளவுக்கு கிருபையிலும், அறிவிலும் அவருக்கான அன்பிலும் வளருகிறோமோ, அந்த அளவுக்கு நாம் கிறிஸ்துவை போல, கிறிஸ்துவின் அன்பை பெறுவோம். இந்த அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேற்றமாக இருக்கிறது. ஒருவர் சகோதரர்களுக்காக இப்படிப்பட்ட அன்பை பெற்றிருந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி, ஏங்கி தவித்துக் கொண்டிருக்கும் சர்வசிருஷ்டிகளின் மேல் பரிவுணர்வுள்ள அன்பைப் பெற்றிருப்பார்கள் மற்றும் அவர்கள் சார்பாக ஒரு சிறிய அளவிலான காரியம் செய்ய முடியும் என்ற மகிழ்ச்சி அடையவார்கள், மற்றும் ஆதாமின் இனத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்காகவும், தாம் நியமிக்கப்பட்ட நேரத்திலும், அவருடைய மகிழ்ச்சியிலும், ஒரு மிகபெரிய அற்புதமான ஆசீர்வாதத்தை அவர் வைத்திருப்பது இரட்டிப்பான சந்தோஷமாகும்.
R3639 [col. 2 P4, 5]: –
தேவ ஜனங்களை காயப்படுத்துவதற்கான எதிராளியின் கருவிகள் – புகழ்ச்சி மற்றும் தற்பெருமை அல்லது கர்வம். இந்த உண்மையை உணர்ந்துக்கொள்ளும், அதற்கு ஏற்றபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உண்மை, தேவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள் யார் ஒருவரும், தரியுவைப்போல புகழ்ச்சி அல்லது அதிகாரத்தின் உச்சியிலோ, வைக்கப்படக்கூடாது. அல்லது அவர்களை தனிப்பட்ட வணக்க வழிபாடு செய்யக்கூடாது. ஆயினும், பேசுவதற்கு, சிறிய உலகங்கள், சிறிய சாம்ராஜ்யங்கள், அறிமுகமான சிறிய வட்டங்கள் உள்ளன. இவைகளில், அதே கொள்கைகளில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செயல்படலாம். தேவ ஜனங்களின் ஒவ்வொரு சிறிய குழுவிலும், தாலந்துகள் அல்லது பிற விதிமுறைகளின் காரணமாக, நிறுவனத்தின் அன்பிலும் மரியாதையிலும் ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கலாம். இது நியாயமானது மட்டுமல்ல, நீதியானதும் கூட என்று ஆண்டவருடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டுகிறது. இவர்கள் உண்மையுள்ள ஊழியர்களாக இருந்தால், இவர்கள் நேசிக்கப்பட வேண்டும், இவர்கள் செயல்களுக்காக கௌரவிக்கப்படவேண்டும். ஆனால் அவர்கள் இன்னும் நம்முடைய சகோதரர்களாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும், எந்த அர்த்தத்திலும் தேவனுக்கே உரிய மரியாதையையும், பக்தியையும் அவர்களுக்கு கொடுத்துவிடக்கூடாது. எந்த வழியிலும், வழிபாடுகளிலும், தலைமையான தேவன் மட்டுமே தகுதிப்பெற்றவர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த கொள்கையில், எந்த மாகாணமும், சபைகளின் கூட்டமைப்புகளும் தலையிடக்கூடாது. சபையின் சகோதர, சகோதரிகள், உண்மையுள்ள மூப்பர்களை மிகவும் உயர்வாக மதிக்கும்போது, வேறேந்த விதத்திலும் வீணான தற்பெருமையை தூண்டிவிடும்படிக்கும், அவர்களை புகழவோ, முகஸ்துதியோ செய்து, இதனால் அவர்கள் தேவனுக்கும் அவருடைய மந்தைக்கும் ஊழியர்களாக இராதபடிக்கு நீக்கப்படாதபடிக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேவனுடைய குடும்பங்களில் எந்தவொரு திறமையும் உள்ள ஒவ்வொரு மூப்பரும், பெருமை, நீசமான ஆசைகள் மற்றும் இலட்சியத்தின் நன்னெறித் தாக்கங்களுக்கு எதிராக அவர்கள் காத்துக் கொள்ள வேண்டும். மேலும் சத்தியத்தையும் அதன் அறிவைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் திறமையைப் பெற்றவர்கள் தேவனுக்கு மட்டுமே சேர வேண்டிய மகிமையை தாங்கள் பெற்றுக்கொள்வதற்கு எதிராக அவர்களை காத்துக்கொள்ளவேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி மனத்தாழ்மையே. நம்முடைய முக்கியமான பாடமாகும். இது எந்த அளவுக்கு புறகணிக்கப்படுகிறதோ, அதன் விளைவாக, அந்த அளவுக்கு பிரச்சனைகளை நிச்சயமாக சந்திக்கவேண்டும்.
அப்போஸ்தலர் மூலமாக, ஆண்டவர் தெளிவாக கற்றுக்கொடுக்கிற காரியங்களாவன ஆண்டவருடைய கிருபையும், சிலாக்கியங்களும் எல்லா புது சிருஷ்டிகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அது அவர்களுடைய வைராக்கியம், அவருக்காக அவர்கள் கொண்ட அன்பு, மற்றும் அவருக்குள் காணப்படும் கொள்கைகளை பொருத்தே உள்ளது. மற்றும் அழிவுக்குரிய சரீரத்தின் நிறம், பால், இனம் முதலானவை, அவருடைய ஜனங்களின் நீயாயத்தீர்ப்பு வழங்குவதிலும், மதிப்பிடுகையிலும், இறுதியாக வெகுமதி கொடுப்பதிலும் எந்தவிதமான பாகுபாட்டையும் காட்டாது.
இந்த விஷயத்தில் பிதாவின் சித்தத்தை அறிந்து, புது சிருஷ்டிகள் அனைவரும், ஒரே கண்ணோட்டத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவுக்குள் அனைவரையும் “சகோதரர்கள்” என்று எண்ணி, அனைவரிடமும் அன்பாக நடந்து கொண்டு, அனைவருக்கும் சேவைச் செய்ய நாடவேண்டும். தேவனுக்காக அதிக அளவு வைராக்கியத்தைக் காட்டிய வர்களுக்கு அவர் சலுகைகாட்டி, கனப்படுத்தினார். இதுபோன்ற செய்வதற்கு தேவனை தவிர, நாம் எந்த விஷயத்திலும் சகோதரர்களிடையே பாகுபாடு காண்பிக்கக்கூடாது. இந்த நிறம், பால், இனம் என்பவைகளை ஒதுக்கிவிட்டு, பாகுபாடு பார்க்காமல் இருப்பது புது சிருஷ்டிகளாகிய நமக்குரியது, மேலும், நம்முடைய அழிவுக்குரிய சரீரங்களையும், அவர்கள் உலகத்தோடு கொண்டுள்ள உறவையும், ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள உறவையும் ஓரளவுக்கு மாத்திரமே பாதிக்கிறது. ஆகவே இருபாலருக்கும் இடையில் உள்ள உறவும், நடத்தையும் உரிய முறையில் புது சிருஷ்டிகளால் காக்கப்படவேண்டும்.
இவர்கள், உண்மையிலேயே, உலகத்தாரைக் காட்டிலும் அதிக அளவு ஞானமும், முன்யோசனையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் தெளிந்த புத்தியின் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி, ஒரு புதுசிருஷ்டியாக இருப்பதினால், மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்க முற்படுகிறபடியால், அவர்களுடைய மாம்ச பெலவீனங்களைப் பொறுத்த வரையில், இருபாலருக்கும் இடையில் உள்ள சில சரியான நடத்தை, கற்பு, வரையறுப்பதைக் குறித்து, உலகத்தாரைக் காட்டிலும் இன்னும் அதிக ஜாக்கிரதை உள்ளவர்களாக இருப்பது அவர்களுக்கு நல்லது. புதுசிருஷ்டி எந்த அளவுக்கு ஆவிக்குரிய வாழ்க்கையை வஞ்சிக்கிறதோ, புது சிருஷ்டியின் நலனுக்கு எதிராக பாலிய இச்சைகள் யுத்தம் செய்கின்றன என்று உணரும் அளவுக்கு, அதே விகிதத்தில் அவர்களுடைய பாதங்களுக்கு செம்மையான பாதைகளை உண்டு பண்ணவும், அவர்களுக்கும், இச்சைகளுக்கும் இடையில் எத்தனை தடைகளை, உறுதியாக உண்டுபண்ண முடியுமோ அந்த அளவுக்கு புது சிருஷ்டி உலகத்தாரைக் காட்டிலும் அதிகமாக செய்ய முயற்சிக்க வேண்டும். இந்த விவாதம் ஜாதி வேறுபாடுகள் பார்ப்பதற்கும் பொருந்தும். மாம்சத்தில் உள்ள உறவுக்கும். ஐக்கியத்திற்கும். ஆவியின் உறவிற்கும் ஐக்கியத்திற்கும் இடையில் பெரிய வித்தியாசம் உண்டு. புது சிருஷ்டியின் நலன்கள் மாம்சத்தில் தனியாக பிரிக்கப்பட்டு இருப்பதால், பொதுவாக பாதுகாக்கப்படுகின்றன. என்று நாம் நம்புகிறோம். ஏனெனில், ஒரு ஜாதியினரின் குறிக்கோள்கள், விருப்பங்கள், வாஞ்சைகள், நிலைமைகள் போன்றவை இன்னொரு ஜாதியினரின் குறிக்கோள்கள் போன்றவைகளோடு ஏறக்குறைய முரண்பட்டே இருக்கின்றன.
ஆகவே, மனுக்குலத்தின் பல்வேறு ஜாதியினர். அவர்கள் புதுசிருஷ்டிகள் என்றிருக்கும்போது. அவர்களின் ஆவிக்குரிய நலன்களின் தனித்தன்மையின் அளவின் மூலம் நன்கு பாதுகாக்கப்படலாம். புது சிருஷ்டிகளுக்கும் மாம்சத்தில் உள்ளவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் இதன் அடிப்படையில் தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டால், எந்தவித பிரச்சனையும் இருக்காது. கிறிஸ்து இயேசுவுக்குள் ஆண்களும் பெண்களும் ஒரே சகோதரத்துவத்தில் உள்ளபடியால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதற்கு, இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் அப்போஸ்தலரின் வார்த்தைகள் ஆதரவு அளிக்கிறது. அதேபோல, இந்த இரண்டு பாலாருக்கும் இடையில் எந்த விதமான வரைமுறையற்ற காரியத்தை அது குறிப்பிடுகிறது என்றும் ஒருவரும் புரிந்துகொள்ளக்கூடாது. ஆனாலும், ஆவிக்குரிய மேன்மையிலும், உறவிலும், ஒருவருக்கொருவரும் மற்றும், எல்லாருக்கும் செய்ய வேண்டிய ஆவிக்குரிய மற்றும் உலகத்துக்குரிய கடமைகளை குறித்தும் நமக்கு ஒரு நிலைப்பாட்டை அது ஏற்படுத்துகிறது.