CD-PRAYER-Q-43
R2649 [col. 1 6 through col. 2 :4]
நம்முடைய ஆண்டவர், கூட்டம் கலைந்தபின், தனிமையில் ஜெபிப்பதற்கு மலைக்கு சென்றார். சில சமயங்களில் தம்முடைய சீஷர்கள் கேட்கும்படியாக அவர் ஜெபித்தார். அதனால் அவர்கள் அவருடைய ஜெபத்தின் வார்த்தைகளை பதிவு செய்திருக்கிறார்கள். அவர் இந்த வாய்ப்புகளில் திருப்தியடையவில்லை என்பது தெளிவாகிறது. ஆகவே அவர் அடிக்கடி தந்தையிடம் தனிமையில் ஜெபிக்க நாடினார். சீஷர்களுக்கும் இதை, ” உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.” (மத்தேயு 6:6) அனுபவமுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் பரலோகத் தகப்பனுடனான இத்தகைய தனிப்பட்ட ஐக்கியத்தின் மதிப்பை உணர்ந்திருக்கிறார்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுவும் இதே போன்ற ஐக்கியத்தின் அவசியத்தை உணர்ந்ததில் ஆச்சரியமில்லை. பிதாவைப்பற்றிய அவரது அறிவும், உலகத் தோற்றத்திற்கு முன்பாக இவர் பெற்றிருந்த அவருடனான ஐக்கியமும், அவரைத் திருப்தியாக்கி மேலும் பிதாவிடம் ஜெபத்தை ஏறெடுத்தல் தேவையில்லாதது என்று நினைக்க வைக்காமல். மாறாக, அது கூடுதலான அந்நியோந்நியத்திற்கும் ஐக்கியத்திற்குமே அவரது வாஞ்சையைத் தூண்டியது. குறிப்பாக அவர் உலகத்தில் தனியாக இருந்ததால் – அவருடைய அன்பான சீஷர்கள் கூட இன்னும் ஆவியினால் ஜெநிப்பிக்கப்படாமல் இருந்ததால் (யோவான் 7:39). ஆவிக்குரிய விஷயங்கள் தொடர்பாக அவருடன் ஐக்கியங்கொள்ளவோ, விழுந்துப்போன மனுக்குலத்திற்கு எவ்வகையிலும் வராத, ஒரு பரிபூரண மனிதனாக இருந்த அவருக்கு மாத்திரம் வந்திட்ட சோதனைகளை பகுத்துணரவோ முடியாமல்போனது. தன்னுடைய சொந்த பக்திவைராக்கியத்தின் புத்துணர்வுக்காக, பரலோக தகப்பனின் அத்தகைய ஐக்கியம் அவருக்குத் தேவைப்பட்டது. இது அவரது சொந்த அன்பையும், பக்தியையும் அனலோடு வைத்திருப்பதற்காகவும், அவருடைய பிரதிஷ்டை மற்றும் மனிதனாக மரண பரியந்தம் பலி செலுத்துவதற்கு அடிப்படையாக இருந்தது. நம்முடைய கர்த்தர் காலை, மாலை வேளைகளில் ஜெபத்தில் அதிக நேரம் செலவிட்டார் என்பதற்கு எந்தவிதமான தகவலும் இல்லை, ஆனாலும் அவர் ஒரு போதும் தந்தையின் முகத்தைத் தேடுவதை ஒதுக்கியிருக்கமாட்டார் என்று நாம் கருதலாம். ஆனால் இந்த சுருக்கமான வழிபாடுகள் மற்றும் அனுதின ஜெபங்கள் இந்த பாடத்தில் குறிப்பிடப்பட்டதுபோல, பல சந்தர்ப்பங்களில் கூடுதலாக வழங்கப்படுகிறது. நம்முடைய கர்த்தர் இரவு முழுவதும் ஜெபத்திலும் பிதாவுடனான ஐக்கியத்திலும் கழித்தார். கர்த்தருடைய ஜனங்களுக்கு இதில் ஒரு பாடம் உள்ளது. வாழ்க்கையின் கடமைகள், தினமும் நம்மீது அழுத்தம் கொடுக்கும்போது, அவைகளை புறக்கணிக்கக்கூடாது. “நான் என் தந்தையின் வேலைக்காக வந்தேன்” என்று நம்முடைய ஆண்டவர் சொன்ன வார்த்தைகளை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும். மேலும் இது எளிமையான, சிறிய ஜெபங்களைப் பற்றி நம்முடைய ஆண்டவர் கூறினதை குறிப்பிடுகிறது. “அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.” (மத்தேயு 6:7,8) மேலும் அவருடைய சீஷர்களுக்கு கொடுக்கப்பட்ட ஜெபத்தின் உதாரணம் சுருக்கமானது. ஆயினும்கூட தேவனுடைய தயவால். அவருடன் உடன் பணியாளர்களாக இருப்பதற்கு நாம் பாக்கியம் பெற்ற வேலையின் முக்கியத்துவத்தை நாம் உணருவதற்கு ஏற்றவாறு, நம்முடைய இருதயங்கள் ஆவிக்குரிய ஐக்கியத்தில் ஈர்க்கப்படவேண்டும். ஆயினும்கூட, விகிதாச்சாரத்தில், கர்த்தரின் தயவால், அவருடன் உடன் ஊழியர்களாக இருப்பதற்கு நாம் சிலாக்கியம் பெற்றிருக்கும் மகத்தான வேலையின் முக்கியத்துவத்தை நாம் உணருகையில், நம்முடைய இருதயங்கள், ஆவிக்குரிய ஐக்கியத்தின் காலங்களுக்கு ஈர்க்கப்பட வேண்டும் மற்றும் ஈர்க்கப்படும். இது போன்ற காலங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே அனுபவித்த இரக்கங்கள் மற்றும் உதவிகளுக்காக நன்றி செலுத்துவதற்கும், எதிர்காலத்திற்கான நம்முடைய நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட கிருபையான வாக்குத்தத் தங்களுக்காகவும் கர்த்தருடனான ஐக்கியத்திற்கும் அர்ப்பணிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. அதினால் ஜெபமானது பிதாவிடம் வேண்டுகோள்களை வைக்க வேண்டும் என்கிற அர்த்தத்திலல்லாமல் மாறாக, நம்மைக் குறித்ததான அவருடைய சித்தத்தைச் சிந்திக்கும் வகையிலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக நாம் எவ்வாறு அவருக்கு ஊழியஞ்செய்து, அவரைப் பிரியப்படுத்தலாம் என்கிற வகையில் குறிப்பிடப்படுகிறது.
R3551 [col. 1:2]: –
நம்முடைய ஆண்டவரின் முழு வாழ்க்கையின் ஒரு எடுத்துக்காட்டே “இடைவிடாமல் ஜெபியுங்கள்” என்று எல்லா சபைக்கும் அப்போஸ்தலரின அறிவுறுத்தல்களாக உள்ளது. வெளிப்படையாகவே, நம்முடைய கர்த்தர் எப்பொழுதும் ஜெபம் செய்யும் மனப்பான்மையில் இருந்தார். அவருடைய பாதுகாவலரின் பராமரிப்பை உணர்ந்தவராக, அவர் மேல் நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு துன்பகரமான சூழ்நிலைகளிலும், எல்லா அனுபவங்களையும் நன்மைக்கு ஏதுவாகச் செய்தவற்காக அவரை நோக்கி பார்ப்பதற்கும், மேலும் அவருடைய வாழ்க்கையின் சகல காரியங்களுக்கும் பிதாவுக்கு நன்றி செலுத்துவதில் அவர் மனம் நிறைந்திருந்தது. ஆனால் நிறுத்தப்படாத நம்முடைய ஆண்டவரின் தொடர்ச்சியான ஜெபம், பிதாவிடம் தனிமையில் பேசுவதற்காக வாழ்க்கையின் விவகாரங்களிலிருந்து விலகிச் சென்றபோது அவருடைய பக்திக்கு தடை வரவில்லை. சில நேரங்களில் சுருக்கமாகவும், சில நேரங்களில் மலைகளில் தனிமையில் ஒரு இரவு முழுவதும் ஜெபித்தார். அவர் தனது சீஷர்களை நேசித்த போதிலும் அவர்கள் இன்னும் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படாதினால், அவருடைய நிலைப்பாட்டில் இருந்து காரியங்களை முழுமையாக சீஷர்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. பிதாவினால் மட்டுமே முழு சூழ்நிலையையும் புரிந்துகொள்ள முடிந்தது. ஆகவே, எல்லா மனித உதவிகளிலிருந்தும் தனிமைப்படுத்தி, ஜெபத்தில் பிதாவிடம் நெருங்குவதற்கு அவரை ஈர்த்தது.