Q-15
“தீத் 2:2 – “முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு.”
2 தீமோ 3:10 – “நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்.”
R2723 (col.1 P2-col.2 P2)
நம்முடைய பாடத்திற்கு ஏற்ற வார்த்தைகளை தீத்து 2:1-15ம் வசனங்களில் பவுல் குறிப்பிடுகிறார். கிரேத்தா தீவில் உள்ள விசுவாசிகளின் சபைக்கு கண்காணியாக இருந்த தீத்துவுக்கு சில கட்டளைகள் கொடுக்கப்பட்டது. இந்தக் கட்டளைகள் தத்தம் செய்த விசுவாசிகளைத் தவிர வேறோருவருக்கும் பொருந்தாது. குறிப்பாக கிரேத்தாவில் உள்ளவர்கள் ஆறு வகுப்பாராகப் பிரிக்கப்படுகிறார்கள். (1) முதிர் வயதுள்ள புருஷர்கள் (2) முதிர்வயதுள்ள ஸ்தீரிகள் (3) வாலிபர் (4) இளம்பெண்கள் (5) கிறிஸ்துவுக்கு சுதந்தரவாளிகள் – ஊழியக்காரர்கள் (6) தீத்து (7) இந்தப் பாடம் சபையில் உள்ள எல்லா வகுப்பினருக்கும் சொல்லப்படும் அறிவுரைகளோடு முடிவடைகிறது.
போதகராக இருந்த தீத்துவுக்கு, ஒவ்வொரு வகுப்பாரைப் பற்றிய சிந்தை தன்னுடைய மனதில் இருந்ததாக, ஞானமாக ஊழியம் செய்து அவர் அவரை அந்தந்த நிலைக்குக் கொண்டுவர பாடுபட்டிருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அவருடைய கவனத்திற்கு பவுல் கொண்டுவந்தார். “நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு.” என்று சொல்லி, அதற்குப் பின்வரும் சகல கட்டளைகளையும் அதன் அடிப்படையில் தெரியப்படுத்தினார். கிரேத்தா தீவிலிருந்தவர்கள் நல்ல குணலட்சணம் இல்லாதவர்களும், ஞானத்தில் குறைவுள்ளவர்களாகவும் இருந்ததினால், அப்போஸ்தலனாகிய பவுல், இப்படிப்பட்ட அறிவுரையைக் கொடுத்தார் என்று கருதுகிறார்கள். ஆனால் இங்கு கட்டளையாகச் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் கடைசி காலத்தில் உள்ள நமக்கு, இவ்வளவாகச் சத்தியத்தில் வெளிச்சம் பெற்றிருந்து, எவ்வளவு நேர்த்தியாகப் பொருந்துகிறது என்று பார்க்கலாம்.
முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்க வேண்டும் என்று புத்தி சொல்லுகிறார். அவர்களுடைய வாழ் நாட்களின் அனுபவங்கள் மட்டும் அல்ல, அவர்களுடைய கிறிஸ்துவ ஜீவியத்திலும் அவர்கள் பெற்ற அனுபவங்கள் அவர்களுக்குள் நல்லொழுக்கத்தையும், முதிர்ச்சியையும் கொண்டு வரவேண்டும். இந்த மூன்று குணங்களும் தங்களுடைய அழியக்கூடிய இந்தச் சரீரத்தில் அதிகமாக நிலைத்திருந்தால், அவர்களை புது சிந்தை அருமையாகச் செயல்படும். ஆனால், புது சிருஷ்டிகளுக்கு இதற்குக் கூடுதலாக மற்றும் மூன்று குணங்கள் தேவைப்படுகிறது – தேறின விசுவாசம், முழுமையான அன்பு, நீடிய பொறுமை, அப்போஸ்தலனின் உள்நோக்கத்தின்படி கிரேக்க வார்த்தையில் சொல்லப்படும் விசுவாசம், அன்பு, பொறுமைக்குள் அநேகவிதமான விசுவாசம், அநேக விதமான அன்பு, அநேக விதமான பொறுமை என்றும் அவைகள் என்னென்ன பொருளை உடையது என்றும் குறிப்பிடுகிறார். விசுவாசம், அன்பு, பொறுமை இவைகள் தேவனுடையவைகள் என்றும் “தேவனால் அவர்கள் போதிக்கப்படுவார்கள்” என்றும் எழுதியிருக்கிறபடி அவருடைய வார்த்தைகளின் மூலம் தம்முடைய ஜனங்களுக்கு இவைகளைக் கட்டளையிடுகிறார் என்றும் நம்முடைய மனதில் பதிய வைக்கும்படி இப்படியாக பிரித்துச் சொல்லியிருக்கிறார்.
ஆவியின் கனியின் வரிசையில் அன்பு முதலாவது இடத்தைப் பிடித்திருந்தாலும், அப்போஸ்தலனாகிய பவுல் தற்செயலாக விசுவாசத்தை முதலில் எழுதவில்லை. ஒருவர் சத்தியத்தின் ஆவியைப் பெறாமல், சத்தியத்தைப் பெறமுடியாது. ஆகவே சத்தியத்தின் முக்கியத்துவம் விசுவாசத்தையே சார்ந்துள்ளது.
ஒரு மனுஷன் எதை நம்புகிறான் என்ற அவசியமில்லை. ஆனால் அவன் என்ன செய்கிறான் என்பது அவசியம் என்று அடிக்கடி நமக்குச் சொல்லப்படுகிறது. இதற்கு முழுமையான விசுவாசமே முக்கியமானது என்று நாம் பதில் அளிக்கலாம். ஏனெனில், இந்த விசுவாசத்தினால் நம்முடைய நடத்தை ஒழுங்குபட்டு, ஊக்குவிக்கப்படும். நாம் பெற்ற சத்தியத்தின் அளவுக்கேற்றபடி நமக்குள் விசுவாசம் இருக்கும். ஏனெனில் நமக்குள் சத்தியம் இருந்தால் மட்டுமே நாம் சுத்திகரிக்கப்படமுடியும் – அதற்குப் பதிலாக நாம் தவறுகளைப்பற்றிக் கொண்டிருந்தால், அவைகள் நமக்குள் இருக்கும் சத்தியத்தைக் கட்டுப்படுத்தி, அதை பலனளிக்கவிடாது. இந்த ஒரு சூழ்நிலையில் நாம் சுத்திகரிக்கப்படுதலின் அளவு குறைந்து கொண்டே போகும். ஆகவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்முடைய ஆண்டவரின் ஜெபத்தை நினைவில் கொள்ளவேண்டும் – “உம்முடைய வசனமே சத்தியம், உம்முடைய சத்தியத்தினால் அவர்களைப் பரிசுத்தமாக்கும்.”
அதே போல் தற்செயலான அன்புக்கு முன் அவர் பொறுமையை வைக்கவில்லை. இயல்பான வாழ்க்கையில் பொறுமையைக் கற்றுக்கொண்டாலும், எடுத்துக்காட்டாக – உலகப்பிரகாரமானக் குறிக்கோள், ஆசைகளுக்காகக் காத்திருப்பது நம்முடைய இருதயத்தைப் பாதிப்பதில்லை. ஆனால், வெளியிலிருந்து தடைகள் மிகப்பலமாக வரும்போது, அதுவரைக்கும் இருந்த பொறுமை எல்லை தாண்டி முந்தியிருந்த பதற்றத்தை விட பொறுமையற்ற சூழ்நிலை வந்துவிடும். இறுதிவரைக்கும் பொறுமையாக இருப்பது நம்முடைய இருதயங்களில் ஏற்படும் மாற்றமாக இருக்கவேண்டும். நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருக்கும் சுயநலம் என்னும் ஊற்றை, அன்பு என்ற ஊற்றாக மாற்ற வேண்டும்.
இந்தக் குணங்கள் எவ்வளவு மகத்துவமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தினங்களில், இப்படிப்பட்ட குண நலன்கள் உள்ள முதியோர்களைக் காண்பது அரிதாகவே இருக்கிறது. ஆனால் சபைகளில் உள்ள மூத்த சகோதரர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும், அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்க வேண்டும். அவர்களுடைய புதிய சிந்தை தேவனுடைய விசுவாசமுள்ள தேவனுடைய வார்த்தைகளினால் நிறைந்து, அவர்களின் இருதயங்கள் அன்பினால் நிரப்பப்பட்டு, சகலவிதமான நற்குணங்களை வெளிப்படுத்த வேண்டும். இவையனைத்தையும் ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் பொறுமையாக இருக்க வேண்டும். எல்லா மூத்த சகோதரர்களும் தேவனுக்குமுன் பூரண புருஷர்களாக இருந்து, ஜீவனுள்ள தலையாகிய கிறிஸ்துவின் சரீரத்தின் அளவுக்கு வளர்ச்சியடைந்து, அவருடைய சாயலை தரித்துக்கொள்ள வேண்டும். நம்முடைய சிந்தையில் இந்தச் சாயலை முன்வைத்து நம்முடைய கிறிஸ்துவ வாழ்க்கைக்கு மாதிரியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
R2791 (COL. 2 P3, 5) – R2792 (col.1 P1)
அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய வார்த்தைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் கிறிஸ்துவ குணங்களில் நீடிய பொறுமையை அன்பைக் காட்டிலும் மேலான இடத்தில் கோடிட்டுக் காட்டுகிறார். பரிசுப்பொருளைப் பெற்றுக்கொள்ள இந்த ஒரு எல்லை வரைக்கும் நாம் ஓடவேண்டியவர்களாக இருக்கிறோம். எடுத்துக்காட்டாக தீத்துவுக்கு (தீத்து) கிறிஸ்துவ மேன்மையானக் குணங்களைப்பற்றி எழுதும்போது விழித்திருந்து, ஜாக்கிரதையுள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும், விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாகவும், பொறுமையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிறார். இந்தக்குணங்கள் அனைத்தையும் பெற்றிருப்பவர்கள் கடைசி பரீட்சையாகிய பொறுமையில் ஜெயிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, அவரால் ஏற்றுக்கொள்ளப்படும்போது, சந்தோஷத்துடன் சகிக்கும் மனப்பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
அன்பு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி, நாம் பெறும் பரிசு பொருளுக்கு இலக்காக வைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த ஒரு குணம் அன்பைவிட சிறந்ததாக நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்கலாம். இந்தப் பொறுமை நம்முடைய வாழ்க்கையில் ஒரு பகுதியில் மட்டும் செயல்படுவதில்லை. மாறாக, துவக்கம் முதல் முடிவுவரைக்கும் இந்தப் பொறுமை நமக்குத் தேவைப்படுகிறது. ஆதியில் அனுபவிக்கும் உபத்திரவங்களில் நாம் நீடிய பொறுமையோடு இருந்தால், நாட்கள் வேகமாக செல்லும்போது வரும் அதிகமான சோதனைகளில் நாம் நீடிய பொறுமையில் உறுதிப்பட்டவர்களாக ஆவியில் வளர்ச்சியடைவோம். முதலாவது கால் பங்கில், அதற்குப் பின் அரைபங்கு, அதற்குப் பின் முக்கால் பங்கு அதற்குப் பின் பூரணமான அன்பின் வளர்ச்சி நம்மை பரிசுப்பொருளைப் பெற தகுதிப்படுத்துகிறது. நாம் நம்முடைய சிநேகிதர்களை மாத்திரம் அல்ல, சத்துருக்களையும் சிநேகிக்கக் கூடிய அன்பைப் பெற்றுக் கொண்டபின் எதிர்பார்க்கப்பட்ட விசுவாசத்தோடும், சந்தோஷத்தோடும், நீடிய பொறுமையோடும் தேவன் அனுமதிக்கும் கடைசி சோதனைகளில் ஜெயித்துக் காட்ட வேண்டும். ஆகவே அப்போஸ்தலன் – “அனைத்தையும் செய்து முடித்த பின் பொறுமையோடு நிலைத்திருங்கள்”, “குறிக்கப்பட்ட நிலையை அடைந்தபின் பொறுமை தன்னுடைய வேலைகளைப் பூரணமாகச் செய்ய அனுமதியுங்கள்”. உங்களுக்குள் இருக்கும் நீடிய பொறுமை, நீங்கள் பெறப்போகும் பரிசுக்காக வளர்ந்திருக்கும் அன்பை மட்டும் இல்லாமல், மற்ற குணங்களையும் ஆழமாக வேர்கொண்டு உங்களுக்குள் ஸ்தாபிக்கப்படுவதை நிரூபிக்க எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் சந்தோஷத்துடன் சகிப்பதற்கு உங்களைப் பழக்குவிக்கும்.
ஆம், நம்முடைய ஆண்டவராம் இயேசு இந்தத் தீமையான உலகத்தில் பாடுகளை அனுபவித்ததைப் போல, நாமும் அனுபவிக்க தேவன் செய்த ஏற்பாடுகளை நாம் கண்டோம். இதன் மூலம் நம்முடைய ஆண்டவரின் குணங்களை நமக்குள் ஆழமாகப் பதியவைத்து, நம்மை எந்த விதத்திலும் வீழ்த்தும் காரியங்களுக்கு மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாக நம்மை காத்துக் கொள்ளும்.