CD-EVILSPEAK-Q-35
நம்முடைய இருதயத்தின் விருப்பம் தீமையாக இருப்பதற்கு பதிலாக மற்றவர்கள் மேல் நாம் வைத்திருக்கக்கூடிய அன்பு அதிகமாய் காணப்பட்டு அவர்கள் நஷ்டமடையாதபடிக்கும், காயப்படாதபடிக்கும் உண்மையான தீய காரியங்களை அறிவிப்பதற்கு அனுமதி பெறுகிறோம். இதுவே இந்தப் பிரமாணத்தின் ஒரே விதிவிலக்கான காரணம். ஏனெனில் நாம் இதை அறிவிக்காத பட்சத்தில் மற்றவர் நஷ்டமடைந்து விடுவாரே. எடுத்துக்காட்டாக ஒரு கொலை நடந்துவிட்டால் அதைக்குறித்து பேசிக் கொண்டிருப்பதை காட்டிலும் சட்டத்திற்குட்பட்ட மேலதிகாரியிடம் அந்த உண்மையை அறிவிப்பது கடமையாக இருக்கும். அதே போல ஒருவரிடம் இருக்கக்கூடிய பலவீனங்களை நாமறிந்தால், அந்தப் பலவீனத்தினால் ஓர் அபாய நிலையை அடைந்து கொண்டிருக்கிறார்கள், என்பதை நாம் உணரும்போது அதை முறைப்படி அறிவிப்பது நம்முடைய கடமையாகும். சபைக்காவது சரி அல்லது தனிப்பட்ட நபருக்காவது நாம் அறிந்த உண்மைகளை மட்டுமே அறிவிக்க வேண்டும். இப்படிப்பட்ட காரியங்களை பேசுவது அவதூறாயிராது. மாறாக சம்பந்தபப்ட்ட நபரை வீழ்ச்சியிலிருந்து தப்புவிக்கும். ஏனெனில் இது நல்ல நோக்கத்துடன் பேசப்பட்டது. இப்படிப்பட்ட காரியங்களை பேசுவதற்கு முன் நம்மை நாம் சீர்தூக்கி, ஆராய்ந்து பார்க்க வேண்டும். நம்முடைய நோக்கம் சரியானதா? நம்முடைய நாவு மற்றவர்களை காயப்படுத்த பயன்படுகிறதா? அல்லது ஆசீர்வதிக்கப் பயன்படுகிறதா என்பதை நமக்குள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இதன் மத்தியில் பலவீனப்பட்ட நபரிடம் மிகுந்த அன்பை காட்டி அவர்களை மீண்டும் சத்தியத்தின் பாதையில் நடத்த முயற்சிக்க வேண்டும். அவர்களின் தவறை ஓயாமல் சுட்டிக் காட்டுவதை தவிர்க்க வேண்டும். அந்தப் பிரச்சனைக்கு தேவைபடாத அந்த நபரின் பலவீனத்தை எதற்கும் மேற்கோள் காட்டிவிடக் கூடாது.