CD-LOVE-Q-5
“தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” (மத்தேயு 10:37) நம்முடைய குடும்ப நண்பர்களிடம் கடமை அன்பு நியாயமானது. ஆனால், இந்த கடமை அன்பை நம்முடைய ஆண்டவருக்கு ஈடாகாது. இல்லாவிட்டால் நாம் “ஜெயம் பெற்றவர்களாக” அவரைப் பின்பற்ற முடியாது. “தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்து போவான்;” (யோவான் 12:25) வாழ்க்கையை நேசிப்பது நமது கடமை. அதாவது அதை மதிக்க வேண்டும், அதை அழித்துவிட விரும்பாமல், முட்டாள்தனமாக வீணடிக்கக்கூடாது. ஆனால் கிறிஸ்துவின் சீஷரானவர்கள், மரணபரியந்தம் அவருடைய அடிச்சுவட்டில் நடப்பதற்கு உறுதியளித்தவர்கள், ஒரு ஆவிக்குரிய ஜீவி, “புது சிருஷ்டியாக” வாழக்கூடிய வாழ்க்கையின் நம்பிக்கைக்காக, ஏற்கனவே ஒரு மனிதனாக தனது வாழ்க்கையை சரணடைந்திருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவர் இனி பூமிக்குரிய வாழ்க்கையோடும், கடமைகளோடும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. ஆனால் அகாபே அன்பினால் தூண்டப்பட்டு, தன்னுடைய இயல்பான வாழ்க்கையை மனப்பூரவமாக தேவனுடைய பணிக்கு – “சகோதரர்களுக்காக” அற்பணித்தவர். “நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்” (யோவான் 16:27) இந்த இரண்டு காரியங்களிலும் (பிலியோ) கடமை அன்பை குறிக்கிறது. பேதுரு சாட்சிக்கொடுத்தபடி, மொத்தமாக சீஷர்கள் பாராட்டத்தக்கதாக. இதுவே அன்பின் உயர்ந்த வடிவமாகும். மற்றும் அவர்களுக்கான பிதாவின் அன்பும் அதே கடமை அன்பாக இருந்தது. சீஷர்கள் இன்னும் பரிசுத்த ஆவியையும், மற்றும் அதன் அகாபே அல்லது தன்னலமற்ற அன்பு மற்றும் அதன் தன்மைகளைப் பெறாதிருந்தார்கள். இவர்கள் கிறிஸ்துவினிடம் கடமை அன்பை செலுத்தி, அவருடைய நண்பர்களாகவும். சீஷர்களாகவுமானார்கள். எனவே தந்தை அவர்களை நேசிக்க முடியாமல், அவர்களிடம் ஒரு கடமை அன்பையே செலுத்தினார்.
“நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்;” (யோவான் 15:19) உலகின் பெற்றோர். குழந்தை மற்றும் அண்டை வீட்டார் அனைவரும் “தனது சொந்தம்” – என்ற சுயநலத்தின் அடிப்படையில், இந்த பிலியோ அல்லது கடமை அன்பினால் நடத்தப்படுகிறது. “ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் (Anath ema Maranatha) அனாத்யிமா மாராநாதா சபிக்கப்பட்ட வனாயிருக்கக்கடவன்,” (ஆண்டவரின் இரண்டாம் வருகையில், சபிக்கப்பட்டவராக அல்லது இரண்டாம் மரணத்திற்கு தீர்ப்பளிக்கப்பட்டவராக இருப்பார் ) 1 கொரிந்தியர் 16:22. தேவன் அவருக்குள் அளித்த இரட்சிப்பின் அறிவை பெற்றுக் கொண்ட அனைவரிடமும், கிறிஸ்துவின் வேலைக்கான மதிப்பு எதிர்ப்பார்க்கப்படுகிறது. மற்றும் யாராவது இந்த பிலியோ அல்லது கடமை அன்புக்கு பதிலளிக்க மறுத்தால், ஆயிர வருட ஆட்சியில் பூமிக்குரிய வாழ்க்கையிலிருந்து அறுப்புண்டு போவார். அவர்கள் நித்தியமாக ஜீவனை அடையக்கூடிய யார் ஒருவரும், பிலியோ அல்லது கடமை அன்பை நடைமுறைப்படுத்தி. அவர்கள் முன்னோக்கிச் சென்று, அகாபே அன்பு, உண்மை, தன்னலமற்ற அன்பின் அடையாளத்தை பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது பிலியோ அல்லது கடமை அன்பை இதுவரையில் அறிந்திராதவர்களுக்கு தற்போதய வாழ்க்கை, வாய்ப்பின் வாசலை மூடுவதில்லை. அதற்காக தேவனுக்கு நன்றி. ஆயினும், இன்னும் அகாபே அன்பை பெறவில்லை. “பண ஆசை”, “தங்களையே நேசிப்பவர்கள்”, “முன்னுரிமை பெற வேண்டும் என்ற ஆசை”. “மகிழ்ச்சியை நேசிப்பவர்கள்”, “விருந்தோம்பலை நேசிப்பவர்கள்” மற்றும் நண்பர்களிடம் பிலியோ அல்லது கடமை அன்பு அல்லது ஒரு காரணத்திற்காக அல்லது ஒரு கோரிக்கைக்கான அன்பு. “தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும் (பிலியோ), சகோதர சிநேகத்தோடே அன்பையும் (தன்னலமற்ற அன்பு – அகாபே) கூட்டி வழங்குங்கள்.” என்று பேதுரு அறிவுரைக் கூறுகிறார். (2 பேதுரு 1:7)
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16) மனிதனின் மீட்பைத் தூண்டிய அன்பு, பிலியோ அல்லது கடமை அன்பு அல்ல. அல்லது கடனாக பதில் செய்வதற்கு மனுஷன் தன்னுடைய சிருஷ்டி கருக்காக எதையும் செய்ததுமில்லை. நம்முடைய மீட்புக்குத் தூண்டப்பட்ட தேவனுடைய அன்பு அகாபே அல்லது தன்னலமற்ற அன்பு, மற்றும் இரக்கமே. தேவனுக்கு மனிதன் எதையும் செய்யாததினால், அவர் அவனுக்கு கடமைப்பட்டவரும் அல்ல. ஆகவே, தேவன் தமது சிருஷ்டிக்கு, மரணத்தீர்ப்பை கொடுத்ததில் எந்த அநியாயமும் செய்யவில்லை. “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8) தேவன் நிரூபித்திட்ட இந்த அன்பை (அகாபே), பரிசைப் பெற்றுகொள்வதற்கு நாம் எட்டிப்பிடிக்க வேண்டிய ஒரு உயர்வான நிலை அல்லது அடையாளமாக நமக்கு முன் வைத்திருக்கிறார். விழுந்து போன நம்முடைய மாம்சத்தில் இது சாத்தியமற்றது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட மனதுகள், சித்தங்கள், இருதயங்கள் இதை அடையலாம். இந்த நிலை வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுகிறது – “அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்” (லுக்கா 10:27, ரோமர் 3:9) “கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே” (1 தீமோத்தேயு 1:5) அதாவது, தேவனுடைய பங்கீட்டில், அனைத்து அறிவுறுத்தல்கள் மற்றும் ஒழுக்கத்தின் பொருள் என்னவெனில், அகாபே அன்பு – என்ற இந்த வார்த்தையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த சாயலில் நம்மை கொண்டு வர வேண்டும் என்பதே. “தேவன் அன்பாகவே இருக்கிறார். அந்த அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனிலும், தேவன் அவனிலும் நிலைத்திருக்கிறார். (1 யோவான் 4:16) பவுலை போல, கடமை அன்பை மட்டும் பெற்றிருப்போரை நாம் “சகோதரர்களாக கண்டுணர வேண்டும். “என்னோடிருக்கிற யாவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. “(தீத்து 3:15) ஆனால் நம்மிடம் “சகோதர அன்போடு” (1 பேதுரு 2:17) அகாபே அல்லது உயர்ந்த அன்பு உள்ளதா என்று நாம் பார்க்க வேண்டும். இது இன்றைய வாழ்க்கையின் மதிப்பையும், இரட்சிப்பையும் எண்ணாமல். மகிழ்ச்சியோடே சகோதரர்களுக்காக ஜீவனையே கொடுக்கும் – தங்கள் சார்பாக, அநுதினமும், மணிநேரங்கள், பணம், மற்றும் பூமிக்குரிய சகல காரியங்களையும் பலி செலுத்தும். – (1 யோவான் 3:16) அப்போஸ்தலனாகிய பேதுரு, இந்த இரண்டு விதமான அன்பையும் ஒரே வசனத்தில் வேறுப்படுத்தி காண்பிக்கிறார். “ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, (பிலியோ) ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்; (அகாபே)” (1 பேதுரு 1:22) “அன்பானது (அகாபே) பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு (அகாபே) நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.” (ரோமர் 13:10) “அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்” (1 கொரிந்தியர் 8:1) அன்பைப் பற்றி அப்போஸ்தலருடைய சொற்பொழிவில், 1 கொரிந்தியர் 13:1,2,3,4,8,14:1 வசனங்களில், அகாபே என்பதற்கு பதிலாக அன்பு என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. இங்கு அவர் பாணியில், அகாபே அன்பு கிறிஸ்தவ குணலட்சணங்களில் மேலோங்கியதும், மிக முக்கியமானதும், என்றும் மற்ற எந்த கிறிஸ்தவ கனிகளிலும் தலைமையானது என்றும், இந்த அன்பின்றி எந்தவிதமான பலிகளும், சுயத்தை வெறுத்தலும், தேவனுடைய மதிப்பில் பயனற்றது என்றும் அவர் குறிப்பிடுகிறார். அதேவேளையில், இந்த அகாபே அன்போடு, நம்முடைய தளர்ந்த முயற்சிகளின் உற்சாகமூட்டும் நோக்கங்கள் கிறிஸ்துவின் வழியாக அங்கீகரிக்கப்படும்.