CD-FAITH-Q-25
யாக் – 2:14
R3586 (col. 1 P2.3)
யுகங்களைப் பற்றிய தெய்வீக திட்டங்களோடு தொடர்புள்ள ஒவ்வொரு வேத வசனங்கள் மற்றும் வசனங்களிலுள்ள உண்மைகளின் அடிப்படையில் நமக்கு ஒரு தேர்வு உண்டாயிருக்கிறது. நாம் எதை இழந்தாலும், சுயத்தை வெறுத்தும், நம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தும், தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பித்தும், இந்த ஒரு தேர்வில் வெற்றிப்பெற விரும்புகிறோம். அப்போஸ்தலர்கள் சொல்வதுப் போல் – “அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.” (பிலி 2:12, உன் 2:22) இருந்தாலும், இந்த நற்கிரியைகளெல்லாம் “புது சிருஷடிகளுக்குரியதாக” இருக்கிறது. – கிறிஸ்துவின் சரீர அங்கங்களுக்கு சம்பந்தப்பட்டதே தவிர நம்முடைய மாம்சத்தினாலானதல்ல. இவையனைத்தும் தேவனுடைய கிரியைகளாக இருக்கிறது, ஏனெனில், அவருடைய வார்த்தைகள், நமக்குள் பெற்றிருக்கும் தேவ ஆவியினால் செயலாற்றப்படுகிறது – “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.” பிலி 2:13, எபே 3:20
எப்படியிருந்தாலும், நாம் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. நம்முடைய நீதிமானாக்கப்பட்ட நிலைமை, நம்மை அழைத்த அழைப்பு, அல்லது தேவனுடைய இராஜ்யத்தில் நமக்களிக்கப்படும் மேன்மையான நிலை அனைத்துமே, நம்முடைய கிரியைகளின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளாமல், நாம் வைத்திருக்கும் எளிமையான விசுவாசத்தின் அடிப்படையிலேயே நாம் பெற்றிருக்கிறோம். நாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டு, தேவனுடைய சமாதானத்தைப் பெற்றிருக்கிறோம். ஆகவே நாம் எந்த வேலைகளை செய்வதற்கு முன்னும் நாம் அவருடைய பார்வையில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறோமா என்று நாம் முதலில் நிதானிக்க வேண்டும். இப்படியாக நாம் நம்முடைய அழியக்கூடிய சரீரங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்து, அவருடைய ஒவ்வொரு வேலைகளிலும், முழு ஈடுபாடோடு கிரியைகளை துவங்கும் பொழுது, அவருடைய பார்வையில் அங்கீகரிக்கப்படும். அதற்குப் பின் நம்முடைய பலியின் ஜீவியம் துவங்கும், சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கும், இந்த உலகத்தை மேற்கொள்ள துவங்குவோம், இந்த உலகத்தோடும், மாம்சத்தோடும், பிசாசோடும் போர் புரிய துவங்குவோம். நம்முடைய இருதயங்களில் இந்த போர்களில் நாம் ஜெயிக்கவேண்டும் (நாம் மாம்சத்தில் பூரணப்படாமலிருந்தாலும்). இல்லாவிட்டால் நம்முடைய தேர்ந்தெடுத்தலை உறுதிப்படுத்தவும் முடியாது, நமக்காக தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மை கிரயத்திற்கு வாங்கி, தன்னுடைய பங்காளிகள் என்று நம்மை அடையாளப்படுத்தும் அந்தக் கீரிடத்தையும் பெற முடியாது.
R2847 (col. 1P5 – col. 2 P1)
ஆபிரகாமின் விசுவாசத்திற்கு ஆதாரமாக அவருடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆபிரகாம் தேவனை விசுவாசித்ததின் அடிப்படையில் – “ஆண்டவரே, என்னுடைய விசுவாசத்தின் நிமித்தம் நீர் என்னை ஆசீர்வதித்து, பாபிலோனிலும், கல்தேயாவிலும், என்னை பயன்படுத்தி என்னுடைய விசுவாசத்தை அறிந்துகொள்ளும் என்று எவ்வளவு அவர் மன்றாடியிருந்தாலும், பயனற்றதாக இருந்திருக்கும், இதை போல இன்றைக்கும் அநேக ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள், இதே கோணத்தில் சிந்திக்கிறார்கள். இது மிகவும் தவறான ஒன்றாகும். தேவன் நம்முடைய இருதயத்தை பார்ப்பது உண்மைதான், ஆனாலும் அவர் நம்முடைய அபூரணமான கிரியைகளை அல்ல, அவரிடத்தில் நம்மை சேர்க்கக்கூடிய நம்முடைய விசுவாசத்தையே அவர் கவனிக்கிறார். இந்த விசுவாசம் அதிகரிக்கும்பொழுது தானாகவே, கிரியைகள் பூரணப்படுத்தப்படுகிறது. மேலும், நாம் அதிகமான விசுவாசமுள்ளவர்களாக இருந்தும், கிரியைகளைச் செய்யாமல் போனால், நாம் கொண்டிருக்கும் விசுவாசம் வெகு சீக்கிரத்தில் மரித்து விடும். நாம் விழுந்துப்போன மனுக்குலமாக இருப்பதால், தேவன் நம்மிடத்தில் பூரணமானக் கிரியைகளை எதிர்பார்ப்பதில்லை. ஆனால் நீதிமானாக்கப்பட்ட நிலையில் தேவனுக்கு முன் நிற்பவர், தன்னுடைய விசுவாசத்தின் மூலம் தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கவேண்டும், நாம் பெற்ற விசுவாசத்திற்கு ஏற்றவாறு கிரியைகளைச் செய்யாவிடில், நம்முடைய விசுவாசம் செத்ததாகிவிடும். – “அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்” – யாக் 2:17
நீதிமானாக்கப்பட்ட நிலைமை ஓர் இலவசமான பரிசாக இருக்கிறது – “ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” – கிறிஸ்துவின் ஈடுபலியினால், கிறிஸ்துவின் மூலம் தேவன் நமக்கு கொடுத்தப் பரிசாகும். ஆனால் இந்த வாய்ப்பு, நாம் பரிசுத்தமடைந்து, ஜீவபலி செலுத்த பயன்படுத்தப்பட்டால் மட்டுமே இதன் விளைவுகள் பலனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் நாம் – “தேவனுடைய கிருபையை … விருதாவாய்ப் பெறவில்லை…” என்பதை நிரூபிக்கலாம் – எபே 2:9, 11கொரி 6:1