CD-LOVE-Q-22
“சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்” யாக்கோபு 1:25
புதுசிருஷ்டியானது சரியான கட்டுப்பாடுகள், சட்டங்கள் இல்லாமல் ஆண்டவரால் அதிக சுயாதீனமாக விடப்பட்டிருக்கிறது என்று யாராவது நினைக்க முற்படுவார்களானால், அன்பு என்று ஒரே வார்த்தையில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட, இந்த தேவப்பிரமாணத்தின் நீளம், அகலம், பொதுவான விசாலத்தையும் காணும்போது, நிச்சயமாகவே அவர்கள் ஒரு மனமாற்றத்தைக் காண்பார்கள், அப்போஸ்தலர் அதை “சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப்பிரமாணம்” (யாக்கோபு 1:25) என்று அழைக்கிறார். இது மற்றவர்களுக்கு அல்ல, தேவன் அவருடைய ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட புது சிருஷ்டிக்கு மாத்திரமே இந்தப் பிரமாணத்தை பயனுள்ளதாக்குகிறார். ஏனெனில், மற்றவர்கள் இன்னமும் மோசேயினுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களாய், பணிவிடைக்காரர்களாய் “கிறிஸ்து விடுதலையாக்குகின்ற சுயாதீனத்திற்குத்” தகுதியில்லாதவர்களாய், குமாரர்களென்னப்படாதவர்களாகவும், இல்லையெனில் அவர்கள் ஆதியில் கொடுக்கப்பட்ட பிரமாணத்தின்படி மரண ஆக்கினைக்குட்பட்டிருக்கிறார்கள். ஆக்கினைக்குட்படுத்தப்பட்ட பாவிகள் இன்னும் புறம்பானவர்களாய், அந்நியராய், நம்பிக்கை இல்லாதவர்களாய், தேவனற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் பொதுவான முறையில் முடிவாக உலகத்திற்கு இரட்சிப்பைக் கொண்டு வருகின்ற தேவனின் கிருபையைக் குறித்து அறியாதவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் இது வெகு சிலருக்கே தற்காலத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெரும் திரளான ஜனக்கூட்டம் திவ்விய அன்பின், மீட்பின் செய்தியை கேட்கக்கூடாதபடிக்கு சத்துரு தடைப்பண்ணி இருக்கிறான். அவன் (சாத்தான்) தப்பறையான உபதேசத்தினால் மனுக்குலத்தின் பெரும்பாலானோரின் மனதைக் குருடாக்கி, அவர்களது செவிகளை அடைத்து வைத்திருக்கிறான் (2 கொரிந்தியர் 4:4, 1 தீமோத்தேயு 4:1) சுயாதீனம் என்பது பொல்லாதவர்களுக்கல்ல. அது அவர்களை சிறைப்படுத்துவதை சமுதாயம் காண்கிறது. ஆகவே பரிபூரண சுயாதீனப்பிரமாணம் என்பது பொல்லாதவர்களுக்கானது அல்ல. ஆனால் அது நல்லவர்களுக்கும், பரிபூரணமானவர்களுக்கும் உரியதாகும். ஆயிரம் வருட யுகத்தில் உலகமானது ஒரு அன்பின் பிரமாணத்திற்குள் விடப்படமாட்டாது. ஆனால் கீழ்ப்படிகிற ஒரு பிரமாணத்திற்கு உட்பட்டு, நீதியாகவும் கிருபையுடனும் ஆட்சி செய்யப்படும். இராஜ்யத்தின் முடிவு வரும்வரை (மனப்பூர்வமாய் தீங்குசெய்கிறவர்கள் இரண்டாம் மரணத்தில் வேரற்றுப் போகும் வரை) மனுக்குலம் திவ்விய திட்டத்திற்கு முற்றிலுமாக ஒத்துப்போனவர்கள், பரிபூரணமானவர்கள் என்று நிரூபிக்கப்படும் வரை, சுயாதீனப் பிரமாணமாகிய அன்பின் கீழாக, அதன் பொன்னான கற்பனைக்குக் கீழாக வைக்கப்படமாட்டார்கள். அவர்கள் சிறுவர்களாக இருக்கும் வரை அவர்கள் பணிவிடைக் காரர்களைப் போல எண்ணப்படுவார்கள். (எபிரெயர் 13:17) புது சிருஷ்டியானது இப்போது சுயாதீனப் பிரமாணத்திற்குக் கீழாக இருக்கிறது. அது அவ்விதமாகவே நடத்தப்படுகிறது, ஏனென்றால், “பழையவைகளெல்லாம் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. “இப்போது அவர்கள் பாவத்தை வெறுக்கிறார்கள், நீதியை நேசிக்கிறார்கள். இப்போது அவர்கள் அவர்களுடைய சுயாதீனத்தை, மாம்சத்தை திருப்திப்படுத்துவதற்குக் கிடைத்த தருணமாக உபயோகிக்கவில்லை. ஆனால் அதை அழிப்பதற்கும், பாவத்தில் சந்தோஷப்படாமல், பாவத்தை அப்புறப்படுத்தவும். உலகத்தை அதிலிருந்தும், அதன் சம்பளமாகிய மரணத்திலிருந்தும் விடுவிக்கவும் ஆண்டவரோடு இணைந்து செயல்படும்படியாக தங்களுடைய பூமிக்குரிய வாஞ்சைகளைப் பலியாகச் செலுத்த ஒரு தருணமாக உபயோகிக்கிறார்கள், தேவ ஆவியாகிய இந்தப் புதிய ஆவிக்குள் மறுபடியும் பிறந்து, மேலும் கிறிஸ்துவின் பள்ளியில் மாணாக்கர்களாகச் சேர்ந்து, அவரைக் குறித்து கற்றறிந்து அவருடைய பாதப்படியில் நடக்கிற இவர்கள், இவர்கள் மாத்திரமே. சுயாதீனப் பிரமாணத்திற்குக் கீழாக வைக்கப்பட முடியும். அவர்கள் தங்கள் புத்திர சுவிகாரத்தின் ஆவியை இழந்து போவார்கள் என்றால், அவர்கள் புத்திரராய் இருக்கமாட்டார்கள். இந்த சுயாதீனப் பிரமாணத்திற்குக் கீழாக இருப்பதில்லை. கிறிஸ்து விடுதலையாக்குகிற இந்த சுயாதீனத்தை இப்போது உபயோகிக்கக் கற்றுக்கொள்பவர்கள், இந்தப் பரிபூரண அன்பின் பிரமாணத்தின் கீழாக அர்ப்பணிப்பின் மூலமாக வருகிறவர்கள், இதற்குக் கீழாக இருக்கும் போது தங்களுடைய ஜீவனையே சகோதரருக்காகவும், சத்தியத்திற்காகவும். நீதிக்காவும் அளிக்கிறவர்கள், இப்படிப்பட்ட உண்மையுள்ளவர்கள், உலகத்தை ஆசீர்வதிக்கிற பெரிய வேலையில், தேவனுடைய பிரியமான குமாரனோடு, அவருடைய பிரிநிதிகளாகவும், உடன் சுதந்திரராயும் இருக்கத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணப்படுவார்கள். அவர்களுடைய வேலைக்கு இந்தத் தகுதி எவ்வளவாய் தேவைப்படுகிறது. போதகர்களாகவும், உதவிக்காரர்களாகவும். நியாயம் தீர்க்கிறவர்களாகவும், உலகத்தை ஆளுகிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்கு இந்தத் தகுதி மிகவும் அவசியம் என்பது தெளிவாகிறது. இப்படியாக ஆயிரம் வருட யுகத்தின் போது பூமியிலுள்ள எல்லா குடும்பங்களையும் ஆசீர்வதிப்பதற்கு இது மிகவும் தேவைப்படுகின்றது. அதாவது இரக்கமும் உண்மையுள்ள இராஜரீக ஆசாரியராக இருக்கும்படி இவர்கள் அதிகமாக வளர்ச்சியடைய வேண்டும். மேலும் அன்புக்குரிய தகுதியில் சோதிக்கப்பட வேண்டும்.
R2440[col.1 P2-5]: –
தேவனுடைய வார்த்தையாக இருக்கும் விளக்கின், சத்திய ஒளியின் பொதுவான தாக்கத்தினால், மூடநம்பிக்கையின் நிலைக்குறைகளை தகர்த்து, ஜனங்களை விடுதலைச் செய்கிறது. ஆனால் இந்த விளைவுகள், கிறிஸ்துவின் பள்ளியில் இராதவர்களுக்கு இலாபமாக இருக்குமா என்பது கேள்விக்குரியது. மற்றவர்களுக்கு, சுயாதீனம், அறிவின் வெளிச்சம், எந்த அளவுக்கு ஆசீர்வாதங்களை கொண்டுவருமோ, அந்த அளவுக்கு கேட்டின் கருமூலமாக இருக்கவும் வாய்ப்புண்டு. இது அடிக்கடி, சுயநலம், ஒழுக்கக்கேடு. தற்பெருமை, சண்டை மனபான்மை, அதிருப்தி மற்றும் பொதுவான சந்தோஷம் இழந்த நிலைக்கு வழிநடத்தும். சில விதங்களில் மட்டுமே விடுவிக்கப்பட்டு, மற்றவைகளில் கட்டப்பட்டவர்களாக இருப்பவர்களின் மேல் இந்த தீய விளைவுகள் வரும். மற்றும் இன்றைய நாகரீக உலகில், பெரும்பான்மையான பெயர் சபைகள் உட்பட, இது பொதுவாக வளர்ந்து வரும் நிலையில் உள்ளது. ஆனால் உண்மையான சீஷர்கள், பெரிய போதகரின் வார்த்தைக்கு செவிசாய்த்து, எல்லாவற்றிலும் தொடர்ந்து அவருடைய மாணவர்களாக இருப்பவர்கள், மூடநம்பிக்கைகள் மற்றும் அறியாமைகளிலிருந்து மட்டுமல்லாமல், பாவ ஊழியத்திலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். மற்றும் அவர்களின் சொந்த பலவீனங்களை மற்றும் கறைகள் மற்றும் தெய்வீக சிந்தையாகிய சத்தியத்தின் சரியான புரிந்துக்கொள்ளுதலைப் பெறுவார்கள். இதன் விளைவாக, அவர்களின் சுயாதீனம், அவர்களை காயப்படுத்துவதற்குப் பதிலாக ஆசீர்வதிக்கும். தற்பெருமை மற்றும் பெருமைக்கு பதிலாக மனத்தாழ்மையைக் கொண்டுவரும், கோபத்திற்கு பதிலாக பெருந்தன்மையும் இரக்கத்தையும் கொண்டுவரும், ஆத்துமாவின் அதிருப்தி மற்றும் கசப்புக்கு பதிலாக சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருகிறது. உண்மையாகவே. குமாரன் மட்டுமே நம்மை விடுதலையாக்க முடியும். எனினும், நம்முடைய விடுதலை மாம்சத்திற்குரியதல்ல, மாறாக, இது புதுசிருஷ்டியின் இருதயம், சிந்தை, சித்தத்திற் கான விடுதலை, என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்த பொக்கிஷத்தை நாம் மண்பாண்டத்தில் பெற்றிருக்கும் வரையில், இந்த விடுதலை அவசியம் நிறைவுபெறாது. ஆகவே இந்த புது சிருஷ்டி இந்த அபூரணமான மாம்ச சரீரத்தை அதனுடைய கருவியாகவும். மாதிரியாகவும் பயன்படுத்த வேண்டும். கிறிஸ்துவுக்குள் இந்த “சகோதரர்கள்”, “உன்னதமானவரின் புத்திரர்கள்”, அவர்களின் முதலாம் உயிர்த்தெழுதலில், பங்கடையும்போது, முற்றிலுமாக விடுதலை பெறுவார்கள்,- “நான் எழுந்திருக்கும் போது உமது சாயலில் திருப்தியாவேன்.” பாவம் செய்பவர்கள் பாவத்திற்கு ஊழியர்களாக இருப்பதினால், விடுதலை யாவதில்லை, என்பதை நம்முடைய ஆண்டவர் சுட்டிக்காட்டுகிறார். “பாவஞ் செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” என்று அப்போஸ்தலர் அறிவிக்கிறார். மேலும், “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது” (1 யோவான் 3:8, 1:8)” என்றும் கூறுகிறார். அப்படியானால், “பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, நீங்கள் நீதிக்கு அடிமைகளானீர்கள்” (ரோம 6:18) என்ற இந்த எதிர்த்தரப்பு அறிக்கைகளை நாம் எவ்வாறு சமரசப்படுத்துவது?
R3145 [col.2P2 to end]
“குமாரன் ஒருவரை விடுதலையாக்கினால் அவர் உண்மையில் விடுதலையாவார்.” என்பது உண்மையே. மேலும், நாம் அனைவரும் கிறிஸ்து நமக்கு அளித்த விடுதலையில், சுயாதீனத்தோடு உறுதியாக நிற்க நாடவேண்டும். அதேநேரத்தில் நம்மை காட்டிலும் பலவீனமுள்ளவர்கள் இடறல் அடையும்படிக்கு நம்முடைய சுயாதீனத்தை பயன்படுத்தாதபடிக்கு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதும் உண்மையாகும். வேறுபாடுகள் உள்ள கிறிஸ்துவின் சுயாதீனத்தை நாம் பயன்படுத்த இயலாது. நம்மை விடுதலையாக்கின கிறிஸ்துவுக்குள்ளான சுயாதீனம், இரண்டு நோக்கு நிலையிலிருந்து காணலாம் – யூதர்கள் புசிப்பதற்கு சுதந்திரம் பெறாதது போல இராமல், நமக்கு எந்த கட்டுபாடின்றி புசிப்பதற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருதால், புசிப்பதை தவிர்பதற்கும் நமக்கு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. – மேலும் கிறிஸ்துவின் ஆவியை உடையவர்கள் மற்றும் அவருடைய அடிசுவடுகளை பின்பற்ற விரும்பும் யாரானாலும் சரி, அவர்கள் பெற்ற சுதந்திரத்தை ஆண்டவருக்கென்று பயன்படுத்துவதற்கு, முன்னதாகவே உடன்படிக்கை செய்துவிட்டார்கள். மாம்சத்தின் விருப்பங்கள், இலக்குகள் மற்றும் இன்சுவை அருந்துவதில் முன்னேற்றம் அடையவதற்காக அல்ல மாறாக, சுயத்தை பலிசெலுத்துவதிலும், ஆண்டவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றி அவருக்காகவும், சகோதரகளுக்காகவும் அவர்களின் உதவிக்காகவும் தங்களுடைய ஜீவனையே கொடுப்பதற்காகவே நாம் பெற்ற சுதந்திரத்தை பயன்படுத்தவேண்டும். சுயாதீனத்தின், இந்த இரண்டு பயன்பாடுகளில் ஏற்றளவு வேறுபாடுகள், சுயநலமான அதன் பயன்பாடு, சுய திருப்தி (மனநிறைவு) மற்றவர்களின் ஆர்வங்களை பொருட்ப்படுத்தாமை என்று பொருள்படும். அதன் அன்பார்ந்த பயன்பாடு, மற்றவர்களின் அதன் விருப்பங்களுக்காக, சுயத்தை பலி செலுத்துவதற்கு நம்மை தூண்டும் அல்லது ஊக்குவிக்கும்.
ஆனால் காரணம் என்ன ? – ஒருவர் மற்றொருவருடைய உள்ளத்தை தெளிவாக புரிந்துகொள்ளும், பொறுப்பை பெறுவதற்கு எந்த கொள்கையை நினைவில் வைக்க வேண்டும்? பலவீனமானவர்கள் தன்னுடைய சொந்த உள்ளத்தை பாதுகாத்து, தன்னுடைய நடைமுறை ஒழுகிற்கு ஏற்றவாறு புசிக்கலாம் அல்லது அதை தவிற்கலாம் அல்லவா? கூடுமானால், இது சரியாக இருக்கும் என்று அப்போஸ்தலர் விவரிக்கிறார். ஆனால் பலவீனமான சிந்தையுள்ள நபர், சீர் தூக்கி பார்க்கும் வல்லமையில் ஆற்றலற்றவராக இருப்பவர், எல்லா கோணங்களிலும் பலவீனமாக இருப்பது போல தோன்றலாம். இதனால் மற்றவர்களின் வழி நடத்துதலிலும் பாதிக்கப்படக் கூடிய அளவுக்கு அவருடைய சொந்த மனசாட்சியே அங்கீகரிக்காதபடிக்கு அவருடைய பலவீனமான தாழ்வு நிலையிலான அறிவு அல்லது சீர் தூக்கி பார்க்கும் வல்லமையில் ஆற்றலற்ற நிலை காரணமாக உள்ளது. ஒருவர் தன்னுடைய மனசாட்சியில் பாதிப்புகள் ஏற்படாதபடிக்கு விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவை புசிக்கலாம் அல்லது தன்னுடைய மனசாட்சி காயப்படாமல், விக்கிரகங்கள் உள்ள ஆலயத்தில் அமர்ந்து விருந்துண்ணலாம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு காரியம் செய்வது தவறு என்று மற்றவர் உணர்ந்து, உறுதியான அவருடைய சகோதரனின் எடுத்துக்காட்டை பின்பற்றுவதற்கு கடும் முயற்சிகளை எடுத்து அது அவருக்கு ஒரு பாவமாக ஏற்படும்படிக்கு தன்னுடைய மனசாட்சியை மீற செய்யும். மனசாட்சியின் எப்படிப்பட்ட மீறுதலும், அந்த காரியம் தன்னிலே தவறாக இருந்தாலும், சரியாக இருந்தாலும், மனப்பூர்வமான பாவத்தின் திசையை நோக்கி எடுத்து வைக்கக்கூடிய ஒரு படியாகும். இது ஆண்டவருடைய ஐக்கியத்திலுமிருந்தும் தோழமையிலிருந்தும் நம்மை தொலைவில் வழிநடத்தக்கூடிய கீழ் நோக்கி செல்லும் பாதையாகும். மேலும் மொத்தமாக மனசாட்சிக்கு மீறி நடந்து, கூடுமானால் இரண்டாம் மரணத்திற்கும் வழிநடத்தும். – “எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக் கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?” (1 கொரிந்தியர் 8:11) என்று அப்போஸ்தலர் இந்த காரியத்தை குறித்து முன்னிலைப்படுத்துகிறார்.
விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிப்பது பாவமா? என்பது கேள்வி அல்ல. ஆனால் நம்முடைய சகோதரன் சபையாக இருக்கும் கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரனுக்கு மட்டும் அல்ல, மாம்சத்தின்படி ஒரு சக மனுஷருக்கும் கூட இடறல் உண்டாக்கும் எந்த காரியத்தை செய்தாலும், அது புது சிருஷ்டியின் பிரமாணமாகிய அன்பின் ஆவிக்கு விரோதமான பாவமாக இருக்குமா? – ஏனெனில் கிறிஸ்து முழு உலகத்தின் பாவங்களுக்காக மரித்தாரே. ஒரு சகோதரனுக்கு இடறல் உண்டாக்குவது, அன்பின் பிரமாணத்திற்கும், ஆண்டவரின் கட்டாயமான உத்தரவுக்கும் எதிரான, கொடிய குற்றமாகும். (ரோமர் 14: 13,21, மத்தேயு 18:6) ஆனால், அவருடைய பார்வையில் – சகோதரர்களாகவும், விசுவாச வீட்டாராக மாறுவதற்கும் தடை செய்யக்கூடிய தடுக்கல்களாக இருப்பதும் குற்றமாக இருக்கும். நம்முடைய மனசாட்சியின் சகலவிதமான தடையுத்தரவுகளையும் அறிவு களைந்து போட்டாலும், நம்முடைய சுதந்திரத்தை முழுமையாக அடக்கிவைத்தாலும், அன்பே முதலாக பிரவேசித்து, நாம் செயலாற்றவதற்கு முன்னதாக நம்முடைய சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” என்று கூறி அன்பு நம் மேல் ஒரு உறுதியான கற்பனையை வைக்கிறது. ஆகவே, ஒவ்வொரு கேள்வியையும் தீர்மானிக்க வேண்டியது அன்பு மட்டுமே. அறிவோ, சுதந்திரமோ (சுயா தீனமோ) அல்ல.
இப்போது நாம் ஆண்டவரோடு நிற்கக்கூடிய நிலையை எடுத்துக்கொண்டும், நம்முடைய சுயாதீனத்தை பயன்படுத்துவதில் எந்த விதத்திலாவது மற்றவர்களை காயப்படுத்துவதின் நிமித்தம் அவைகளை பயன்படுத்துவதை மறுத்து, அவர்களின் நலனுக்காக பலிசெலுத்துவதை தேர்ந்தெடுப்போம் என்று தீர்மானிக்கலாம் நம்முடைய எஜமானனும், நம்முடைய இரட்சகரும் அவருக்குண்டான எல்லாவற்றையும் கொடுத்தது போல இந்த பாடத்தின் கடைசி வசனத்தில், அப்போஸ்தலனுடைய வார்த்தைகளை ஏற்றுகொண்டு ஒரு சகோதரனை காயப்படுத்தும் எந்த கிரியைகளையும் இனி ஒரு போதும் செய்ய வேண்டாம் என்று தீர்மானிக்கலாம் – நம்முடைய எந்த சுயாதீனமானாலும் சரி, அது தன்னில் தான் எவ்வளவு நியாயமாக இருந்தாலும் சரி, ஒரு சகோதரனுக்கு காயத்தை ஏற்படுத்துமேயானால், அந்த சுயாதீனத்தை நாம் பயன்படுத்தாமல், அதை அவருடைய விருப்பத்திற்கு விட்டுகொடுப்போம். அவருடைய சார்பாக, நம்முடைய ஜீவனையே அவருக்கு கொடுக்கும் அளவுக்கு அதை நாம் அவருக்காக பலி செலுத்துவோம்.
இது, ஒருவேளை சில சந்தர்ப்பங்களில், இந்த கொள்கை, தவறாக பயன்ப்படுத்தக்கூடிய அபாயமும் நேரிடலாம். எடுத்துகாட்டாக, மாம்சம் புசிப்பது தவறு மற்றும் மிருகங்களின் தோல்களை காலணிகளாக பயன்படுத்துவதும் தவறு என்று ரசியாவிலிருந்து கனடாவுக்கு குடியேறிய சமயப்பிரிவினர் கூறலாம். அப்போது இந்த விஷயத்தில் உங்களுடைய பலவீமான மனசாட்சிக்கு நீங்கள் உடன்பட்டு, நீங்கள் மாம்சமும் புசிக்கக்கூடாது, மிருகங்களின் தோல்களினால் செய்யப்பட்ட காலணிகனளயும் அணியக்கூடாது. நம்முடைய சுயாதீனத்தை விட்டுகொடுக்க வேண்டும் என்று அப்போஸ்தலன் விவரித்த காரியங்கள் இப்படிப்பட்ட கேள்விக்கு அல்ல என்று நாம் அறிந்திருக்கிறோம். சமுதாயத்தின் வழக்கமும் இந்த மனங்குழம்பிய ஜனங்களுக்கு முரண்பட்டதாக உள்ளது. மேலும், இந்த கேள்வியை பொருத்த வரையில், அவர்களின் சமசீரற்ற மனநிலைக்கு இணங்குவது, அவர்களின் தவறான வழியில் நடத்துவதற்கு உதவுவதாகும். நாம் மாம்சம் புசிப்பதை தவிர்ப்பது அல்லது தோலினால் செய்த காலனிகளை அணியாமல் இருப்பது, அந்த விதமான வார்தையிலும் மேம்பட்ட நோக்கத்தில் காணும்படிக்கு அவர்களுக்கு உதவியாக இராது. அல்லது நாம் மாம்சம் புசிப்பது அல்லது தோல் காலணிகளை அணிவது, அவர்களின் மனசாட்சியை எந்த விதத்திலும் குறுக்கிடாது. அணல் மூட்டும் இடங்களில் சபை கூடுவது மற்றும் சௌகரியமான இருக்கைகள் கொடுக்கப்படுவதை சில ஜனங்கள் தடைசெய்ததுபோல தேவனை ஆராதிக்கும் போது இசை கருவிகளை பயன்படுத்துவதில் மற்ற சகோதரர்கள் இயல்பான வெறுப்புகள் இருக்கலாம். சகோதரர்களின் சுயாதீனத்தினால் அவர்கள் மனசாட்சி காயப்பட்டதென்றும், அவர்களின் விருப்பத்திற்கேற்ப, இப்படிப்படட் சுதந்திரங்களை அடக்கவேண்டும் என்று கோருவதால் இவைகள் சில நேரங்களில், அப்போஸதலரின் சான்றுகளை பழிகூறலாம். இவர்கள் அப்போஸ்தலர்களின் சான்றுகளை தவறாகச் செயற்படுத்துகிறார்கள் – என்பதே நம்முடைய பதிலாகவும் உள்ளது. சபையில் பொதுவான தீயசெயல் ஏற்படும் விதத்தில், ஒவ்வொருவருடைய மனதில் திடீரென மாறும் மனப்பாங்குக்கு இசைவாக கர்த்தருடைய ஜனம் இருக்க வேண்டும என்பது பொருள் அல்ல. மூட நம்பிக்கைகள் சபையில் ஊக்கவிக்கப்பட கூடாது. அல்லது அதன் ஆவிக்குரிய நன்மைகளும். சுயாதீனமும் அவைகளின் காரணத்திற்காக பலி செலுத்திவிடப்படக்கூடாது. இருப்பினும், கர்த்தருடைய ஜனங்களின் அனைத்து நிகழ்வுகளிலும் அன்பு என்பது ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். மற்றும் அந்த ஜனங்கள் தவறுதலாக சகோதரர்கள் மீது அவர்கள் பெலவீனத்தின் மீது பழி சுமத்தும் போதும் கூட, அன்போடு நடத்தப்பட வேண்டும் மற்றும் அவர்களின் எதிர்ப்புகள் முதலியான பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். தீமையாக தோன்றும் சகலத்தையும் தவிர்த்து, தங்களுடைய சகோதரர்களும் இதே சிலாக்கியத்தை பெற்றவர்களாக, கர்த்தர் அவர்களிடத்தில் எதிர்ப்பார்க்கக்கூடிய எல்லாவற்றையும் எதுவானாலும் அவைகளை செய்ய முழு சுந்ததிரம் பெற்றிருக்கிறார்களா என்பதை பார்க்கவேண்டும். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு. பாடல்களை கருவியோடு அல்லது இராகத்தோடு பாட முடியவில்லை என்றால் அவர்கள் அமைதியாக இருக்கக்கடவர்கள் அல்லது வீடுகளில் அவர்கள் பாடிக்கொள்ளட்டும். இசை கருவிகளோடு தேவனை ஆராதிப்பதும் விக்கிரக கோவில்களில் புசிப்பதும் முற்றிலும் ஒரு வேறுப்பட்ட காரியமாகும்.
ஏறக்குறைய இதே போல ஒரு கேள்விக்கு அதாவது பெயர் சபைகளில் புரோடெஸ்டன்ட்டு அல்லது கத்தோலிக்கர்களின் பொதுவான ஆராதனையில் கலந்து கொள்வததைப்பற்றி அப்போஸதலரின் முடிவு, இன்று நமக்கு முன்வரலாம். பூசை பலியில் கலந்துகொள்வது, இந்த கேள்வியை பொருத்த வரையில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுயாதீனம் உண்டு. ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த சிந்தையில் முழுமையாக இணங்கி, சொந்த மனசாட்சியின் வழிநடத்துதலை பின்பற்ற வேண்டும். நம்முடைய தீர்ப்பின்படி, விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை புசிப்பதைகாட்டிலும் ரோம கத்தோலிக்க, கிரேக்க கத்தோலிக்க, அல்லது உயர்ந்த மேற்றாண ஸ்தலத்தில் பூசை பலியில் கலந்து கொள்வது மிக பெரிய குற்றமாகவும், ஏனெனில் இது கர்த்தருக்கு அருவருப்பான காரியமாக உள்ளது. (எபிரெயர் 7:25, 10:14) கர்த்தருடைய போஜனத்தில் பங்கு பெறுவதை பொருத்தமட்டில், பெரும்பாலான புரோட்டஸ்டண்டு மதத்தினரிடம், அதில் எந்த தீமையும் நாம் கண்டதில்லை. வேத வசனத்தின்படி இப்படிப்பட்ட ஒரு அனுசரிப்பு பொருத்தமற்றதாக இருப்பதை உணர்ந்தாலும் அதில் பங்கெடுப்பவர்களின் பயபக்தியுள்ள தேவாராதனை அறிவாற்றுலுடன் இருக்கலாம். ஆயினும், பாபிலோனின் ஆராதனைகளிலும் ஆண்டவரின் இராபோஜனத்தை குறித்து தவறான பொருள்கொள்ளும், அவளுடைய பந்தியில் தவறாமல் பங்குகொள்ளுதல், கண்டனத்திற்குரியதாகும் – நம்முடைய சொந்த ஆவிக்குரிய முன்னேற்றத்தின் இழப்புக்கும் இன்னும் சிலருடைய புரிந்துகொள்ளுதலில் பலவீனமாக இருப்பவர்கள் இடறுவதற்கான அபாயம் ஏற்படலாம். ஆகவே நம்முடைய ஆலோசனை என்னவெனில், ஒரு பக்கத்தில் ஒரு பெயர் சபையின் கட்டிடத்திற்குள் அவர்களின் ஆராதனையை கேட்பதற்காக நுழைவதற்கு நம்மை கட்டுப்படுத்திகொள்ள வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் தொடர்ந்து அவர்களின் ஆராதனையில் கலந்து கொண்டு அவர்களின் தவறுகளுக்கு இணங்குதலை நாம் தெரிவிக்க வேண்டியதும் இல்லை – விதிவிலக்காக இப்படிப்பட்ட சபை கூட்டங்களில் சத்தியத்தை அறிவிப்பதற்கு முழு வாய்ப்பை நமக்கு கொடுக்கப்பட்டால் மட்டுமே, அவைகளில் கலந்து கொள்ளலாம்.
நம்முடைய காலத்தில் இந்த கொள்கையின் மற்றொரு எடுத்துக்காட்டு, மதுபானத்தை குறித்த கேள்வியில் காணப்படுகிறது. ஒரு மனுஷன் குடித்து தன்னுடைய சுயநினைவை இழந்து தனக்கும் கூடுதலாக மற்றவர்களுக்கும் தீங்கு விளைவித்து சிருஷ்டிகருக்கு அவமதிப்பை ஏற்படுத்தாமல் மதுபானம் அருந்தும் வரையில் விவாதங்களுக்கு இடம் இல்லை. தேவனுக்கு அவமதிப்பை ஏற்படுத்தாமல், மற்றவர்களுக்கோ தமக்கோ எந்த கேடும் விளைவிக்காமல், மதுபானத்தை பயன்படுத்துவதை பொருத்த வரையில் சுயாதீனத்திற்கான கேள்வி இங்கு எழும்புகிறது. பொதுவாக உலகத்திற்கு வெறியூட்டும் போதையான மதுபானங்கள் ஒரு கொடிய அபாயத்தை விளைவிக்கும் சோதனை என்ற உண்மையை அனைவரும் கண்டறிந்திருக்கிறார்கள். மது அருந்துவதில் சுய கட்டுப்பாட்டின் முழு ஆற்றல் பெற்றிருக்கிறோம் என்று, என்னும் சகோதரர்களுக்கு நமது ஆலோசனை என்னவெனில், இப்பாடத்திற்கு அப்போஸ்தலர் கூறும் வாதத்தை பொருத்திப்பார்க்க வேண்டும் மற்றும் கர்த்தரை மேலும் மகிமைபடுத்த தம்மை விட பெலவீனமானவர்களின் சுதந்திரத்தை, மிதமாக அருந்த உபயோகிக்காமல், முழுவதுமாக விட்டொழித்தல், (அ) உரிமைகளின் தியாகம் என்னும் திசையில் உபயோகிக்கலாம் என்பதை தீர்மானிக்கவேண்டும்.
இது வரையில் நாம் அறிந்திருக்கிறபடி. இக்காலத்தில் நம்முடைய இனத்தை அழிக்கும் போதை பொருட்கள் மிக கொடூரமான கொள்ளை நோய்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பலர் மிகவும் பலவீனர்களாக இருப்பதினால் மரபு வழியில் அதில் விழுபவர்கள், ஒரு முறை அதற்கு இணங்கிவிட்டால் மொத்தத்தில் அந்த போதை வஸ்துவின் கட்டுபாட்டை எதிர்க்க முடியாமல் போய்விடுகிறது. நீதிக்கும் மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்கும் கர்த்தரிடத்தில் தங்களுடைய ஜீவனை. இந்த விஷயத்தில் தங்களை வெறுத்து, இப்படிப்பட்ட சுதந்திரங்களையும், சிலாக்கியங்களையும் சகோதரர்களின் விருப்பத்திற்கு மற்றும் பொதுவாக இந்த உலகத்தின் விருப்பத்தையும் விட்டு கொடுக்க வேண்டும் என்று கேட்பது அதிகபட்சமானதாகும்.
இதேபோல, மனுக்குலத்தை பாவத்திற்குள் வழி நடத்துவதற்கு சாத்தான் பயன்படுத்தும் பல கவர்ச்சியான வஞ்சனைகளாகிய சீட்டு விளையாட்டு, புகையிலை பயண்படுத்தல் போன்ற காரியங்களுக்கு இப்படிப்பட்ட வாதங்கள் தூண்டி விடப்படலாம். முழுமையாக, குறிப்பிட்டிருக்கும்படி இது அன்பின் சான்றாக உள்ளது. நாம் கர்த்தருடைய கிருபையில் வளர்ச்சி அடைந்தால், அதற்கேற்படி அவருடைய அன்பின் ஆவியில் வளர்ச்சி அடையும் போது, நாம் மகிழ்ச்சி அடைந்து, நம்முடைய சொந்த நலனுக்காக மாம்சத்தின் சகல அசுத்தங்களையும் புறம்பே அகற்றுவதோடு மட்டும் அல்லாமல், நம்முடைய கர்த்தரை போலவும் மாறுவோம். ஆனால் அன்பின் எடுத்துக்காட்டாக, மற்றவர்களிடம் ஏற்படுத்தும் தீங்கான தாக்கங்களை ஏற்படுத்தும் ஏதுவானாலும் சரி, அவர்களை பொருத்த வரையில் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரமாக இருந்தாலும் சரி அனைத்தையும் நம்மை விட்டு அப்புறப்படுத்துவதற்கு விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும்.
நம்முடைய பொன்னான விரிவுரை இங்கு இடம் பெற்றுள்ளது – கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டிகளாக இருக்கும் அனைவரும் இதை கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் – “ஆகவே நாம், மற்றவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும், நாமும் ஆசீர்வாதங்களை பொறுவதற்கும், கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக அவருக்குள் சிருஷ்டிகளாக கட்டியெழுப்பப்படுவதற்கும் சமாதானத்தை” ஏற்படுத்தும் காரியங்களை பின் தொடரலாம்.