Q-16
R2355 [col.2 P2]
இந்த நிதானமான குணத்தை, ஒரு முறை அடைந்துவிட்டால், இரக்கமும், பொறுமையும் வெளிப்படும். கயத்தை கட்டுப்படுத்த வளர்த்துக் கொண்ட ஒரு கிறிஸ்தவர், மற்றவர்களின் விருப்பமற்ற அல்லது அறியாமல் செய்த தவறுகள் மற்றும் பலவீனங்களில் மிகவும் பொறுமையாக இருப்பார். அவர் சோதனைக்கு ஆவாகாதபடி தன்னையும் நினைவில் வைத்துக்கொண்டு, மனந்திரும்புபவர்களை மீட்டெடுக்க தயாராக இருப்பார். எல்லாவற்றிலும் இந்த சாந்தகுணம் வெளிப்படுவதைக் குறித்து அப்போஸ்தலர் குறிப்பிடும்போது, “உங்கள் சாந்த குணம் அனைவருக்கும் தெரிந்திருப்பதாக.” ஆண்டவருக்கு பிரியமாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் சரியான நிலைப்பாட்டில் இருந்து இந்த சாந்தமான குணத்தை வளர்ப்பது, அவருக்குள் முழு இணக்கத்துடன் இரக்கத்தையும் அனுதாபத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் தனது சொந்த பலவீனங்கள் தொல்லைகள், சிரமங்கள் மற்றும் ஆசைகள் எவ்வளவு என்பதைக் கண்டறிவதன் மூலம், அத்தகைய ஒருவர், தவித்து கொண்டிருக்கும் முழு சிருஷ்டிப்பின் மீது அதிக அளவு அனுதாபத்தைக் கொள்ளமுடியும். உங்கள் சாந்த குணம் எல்லா மனுஷருக்கு முன்பாக” இதன் விளைவாக, இந்த சாந்த குணம், இருதயத்தின் கனிவான தன்மையால் ஈர்க்கப்பட்டு, பேச்சிலும், தோற்றத்திலும், செயலிலும் கனிவாக செயல்படும்.
R2037 [col.1 P7]
இந்த அறிவு, ஒரு நல்ல மற்றும் நேர்மையான இருதயத்தில் பெறப்பட்டால், “சுயக்கட்டுப்பாடு” (பொதுவான பதிப்பு – நிதானம்) எனப்படும் குணத்தின் பலனை அல்லது ஆவியின் கனியை வெளிப்படுத்தும். வேறொரு இடத்தில் கூறப்பட்டுள்ளபடி “அவருக்குள் இந்த நம்பிக்கையை வைத்திருப்பவர், தன்னை தான் தூய்மைப்படுத்தி, கட்டுப்படுத்தி, மேலும் மேலும் பழைய பளிப்பை வெளியேற்றுவார்” அத்தகைய சுயக்கட்டுப்பாட்டைப் பின்பற்றும்போது, அதனுடன் இணைந்திருக்கும் பொறுமை வந்துவிடும். ஏனெனில் மற்றவர்களிடம் அனுதாபம் மற்றும் பொறுமையாக இருப்பதன் அவசியத்தை தன்னம்பிக்கை கற்பிக்கும். இந்த பொறுமையானது குறிப்பிடப்பட்ட அடுத்த குணத்திற்கு வழிநடத்தி, வளர்ப்பது – பக்தி. இந்நிலையில் தேவனுடைய அன்பு இருதயத்தில் இருந்து வெளிப்படும்போது, அனைத்து எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் சகோதர அன்பு வளர்க்கிறது – நீதி, சத்தியம் மற்றும் தேவன் நிமித்தமாக, சகோதரர்கள் மற்றம் சக தோழர்கள் அனைவரையும் நேசிப்பது, மேலும் சகோதர சிநேகத்தால் இன்னும் விரிவான, ஆழமான அனுபவத்திற்குள் வழிநடத்தப்பட்டு, குணங்களில் முதன்மையானதாகக் குறிப்பிடப்படும். அதாவது அன்பு, தேவன் மீதான அன்பு சகோதரர்கள் மீதான அன்பு தீயதை நினைக்காத, பெருமை பாராட்டாத – ஆழமான, தூய்மையான, உண்மையான அன்பாகும். மேலும் எளிதில் புண்படாத, எப்போதும் சத்தியத்தில் மகிழ்ச்சியடைகிற, அக்கிரமத்தில் ஒருபோதும் மகிழ்ச்சியடையாத, தற்போதைய வாழ்க்கையில் கிறிஸ்தவ குணத்தின் உச்சக்கட்டத்தை அடைவதிலே மகிழ்ச்சி அடையும். ஒருபோதும் மங்காததும், புதிய உயிர்த்தெழுதலில் சரீரத்தில் பூரணமாக நாம் பெறக்கூடிய ஆவியின் கனிகளின் அனைத்து கனிகளையும் பெறுவோம்.