இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-17

இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

What additional thoughts can be found by consulting the Topical Indexes of the “New Bible” and “Heavenly Manna”?

R1920

“கர்த்தருக்குள் மேன்மைபாராட்டுங்கள்” (3ம் கேள்வி காண்க)

இந்தப் பாக்கியங்களை நாம் பயன்படுத்தும் பட்சத்தில், நமக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் சகல தெய்வீக கிருபைகளையும் நாம் பெற்றுக்கொள்ளலாம். அப்போது உண்மையில் நாம் கர்த்தருக்கு மகிமைப்பாராட்டலாம். இப்படிப்பட்ட ஒரு மேன்மைப் பாராட்டலைக் குறித்துப் பார்ப்போம். “அவரை புரிந்துக்கொண்டு அவரை அறிந்திருப்பதினால் நாம் மேன்மை பாராட்டலாம். “அவரை அறிந்துகொள்வது” என்பதன் பொருள் என்ன ? அவருடைய வார்த்தைகளின் சாட்சிகளின் மேல் நம்முடைய இருதயத்தை வைத்து, ஆண்டவரை நம்முடைய தனிப்பட்ட நண்பராகவும் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும், உதவியாளருமாக இருப்பதை உணர்வதே தேவனை அறிந்துக்கொள்வதாகும். இப்படியாக நாம் அவருடைய ஆவியோடும், ஐக்கியப்பட்டு, அவருடைய கோட்ப்பாடுகளுக்கும், கிரியைகளுக்கும் பரிட்ச்சையமாகி விடுவோம். – அப்போது நாம் அவரை நன்கு புரிந்துக்கொள்ளலாம். அவருடைய வழிநடத்துதலையும், உதவிகளையும் உணர்ந்துக் கொண்டு நித்தமும் அவரோடுக்கூட அவரோடு நடைப்பயிலலாம். இப்படியாக குறித்த காலத்தில் இந்த உலகத்தில் தேவனுடைய நீதி ஸ்தாபிக்கப்படும் முன் நாம் தேவனுடைய நீதியையும், அன்பின் குணங்களையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளலாம். ஆகையால், உண்மையில், தனிப்பட்ட முறையில் நாம் அவரை நன்கு அறிந்து கொண்டவர்களாக இப்போது அவரை மகிமைப்படுத்தலாம்.

இப்படிப்பட்ட தெய்வீக அன்பையும் பராமரிப்பையும் பெற்று, ஆசீர்வதிக்கப்பட்ட நிலையில் “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை” என்று சங்கீதக்காரன் சொன்ன வசனங்களை நாமும் கூறலாம். (சங்கீதம் 34:1-9)

தேவனுடைய பிள்ளைகளுக்கு எவ்வளவு விலையேறப்பெற்ற அனுபவங்கள்! நிச்சயமாக பெருமையுள்ள இருதயங்கள் இந்நிலையை அடைய முடியாது. ஏனெனில் “பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்.” “அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள், நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.” (1பேது 5:5-6) ஐசுவரியத்திலும், வல்லமையிலும், ஞானத்திலும் வல்லவர்களாக இருப்போருக்கு இந்தக் கட்டளையைக் கடைப்பிடிப்பதற்கு மிக கடினம். (மத் 19:24-26) பதவிகளிலும், மேன்மையிலும், மனுஷருடைய புகழ்ச்சியிலும் இருந்த பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இவைகளை பின்பற்றுவதற்கு மிக கடினமாக இருந்தது. ஆபிரகாமின் சந்ததியின் வழிவந்தவர்கள் என்று யூதர்கள் பெருமை கொண்டதினால், முழு இஸ்ரயேல் ஜனங்களும் இதை கடைப்பிடிக்க முடியாமல் போனது. உலக ஞானத்திலும் அறிவிலும் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்த கிரேக்கர்கள் பெருமை கொண்டதினால், இதை கடைப்பிடிக்க முடியவில்லை. ஜாதிகள் மத்தியில் மிகுதியான வல்லமையை பெற்றிருந்த ரோமர்கள் அதில் பெருமை பாராட்டினதினால் இதை கடைப்பிடிக்க முடியவில்லை. அதேபோல இன்றையநாட்களிலும், பெருமையுள்ளவர்கள் இந்தக் கற்பனையை கடைப்பிடிக்க முடியாது. தங்களுடைய மதங்களைப் பற்றிய பெருமையில் இருப்போரும், விஞ்ஞானத்திலும், தத்துவ ஞானத்தில் அதிக ஞானத்தை பெற்றோர், புதிதான காரியங்களை கண்டுப்பிடிப்போர், அவர்களை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று விரும்புவோர்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளில் உள்ள சத்தியங்களைக் காட்டிலும், மனுஷரையும் அவர்களின் மேன்மைகளை மதிப்பவர்கள் தேவனுடைய இந்தக் கட்டளைகளை கடைப்பிடிப்பது கூடாத காரியமாகும். இக்கால வாழ்க்கையில் ஐசுவரியவான்களாக இருப்பவர்களும், ஐசுவரியவான்களாக இருப்பதற்கு விருப்பமுள்ளவர்களும் விசேஷமாக தங்கள் பேரில் நல்ல அபிப்பிராயம் உள்ளவர்கள், தேவனுடைய பலத்த கரங்களுக்குள் அடங்கியிருக்க முடியாது. உண்மையில், ஒவ்வொருவரும் சத்தியத்தின் அறிவை பெறுவதற்கு எதிர்நோக்கும் மிக கடுமையான யுத்தத்தை பற்றி அப்போஸ்தலர் வலியுறுத்துகிறார். “ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள், ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலி 2:12-13)

தேவனுடைய கிருபையே போதுமானது என்று அறிந்துக்கொள்ள கடுமையாக முயற்சித்தவர்கள் மிக சிலராக இருக்கிறார்கள். ஏனெனில் சிலுவையைப் பற்றிய சத்தியம் உலகத்தாருக்கு பயித்தியமாக இருக்கிறது. தங்களுடைய சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு அவர்கள் மனதை செலுத்துவதில்லை.

இதன் காரணத்தினால், “ஞானிகள் அல்லாதவர்களும், வல்லவர்களாக இராதவர்களும், மேன்மையுள்ளவர் இல்லாதவர்களும், தேவனுடைய இராஜ்யத்தில் ஆண்டவருடைய மகிமையில் பங்கெடுப்பதற்காக அழைப்பு பெற்றிருக்கிறோம். இக்காலத்து வாழ்க்கையில் அமிழ்ந்திருப்பவர்கள் ஆண்டவரின் அழைப்பை அசட்டை செய்கிறார்கள். அந்த அழைப்பிற்கு செவிச்சாய்த்து கீழ்ப்படிந்து இடுக்கமான பாதையில் பிரவேசித்து, தேவனுடைய வழிநடத்துதலினால் பலிசெலுத்தும் அளவுக்கு அவர்களால் தங்களை தாழ்த்தி கொள்ள முடியவில்லை. “எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.” (1கொரி 1:26-29) மனத்தாழ்மையுள்ள தேவ ஜனங்களின் கரங்களில் உள்ள வல்லமையான சத்தியங்களைப் பார்த்து ஞானவான்களும் குழப்பமடைகிறார்கள். நூற்றாண்டுகளாக வளர்ச்சி அடைந்த அமைப்புகளில் இப்படிப்பட்டவர்களுக்கு முன்பாக தடுமாறுகிறார்கள். மேலும், “ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர்” (ஏசா 29:14) என்று அனைவருக்கும் அதிகதிகமாக தெளிவாக நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவருடைய பிரமாண்டமான வேலைகளை செய்வதற்கு தேவன் பலவீனமுள்ளவர்களை ஏன் தெரிந்துக்கொண்டார்? திறமையுள்ள நாவைகளையும், ஆயத்தமாக இருக்கக்கூடியவர்களின் பேனாக்களையும், மிக சிறப்பானவர்களையும் தேவன் ஏன் பயன்படுத்தவில்லை என்பதன் சரியான காரணத்தை பவுல் கூறுகிறார் –“மாம்சமான யாவரும் தேவனுக்குமுன் பெருமை பாராட்டதபடிக்கு இப்படிசெய்தார்.” பூமியில் பாவத்தை போக்கி, நீதியை ஸ்தாபிப்பதற்கான மிக சிறப்பான தேவனுடைய வேலையை செய்ய, மனித வல்லமை என்றுமே உதவாது. ஆயினும், அவருடைய விருப்பத்தின்படி செயல்படக்கூடியவர்களின் வழியாக தம்முடைய வல்லமையைச் செயல்படுத்த தேவன் பிரியமுள்ளவராக இருக்கிறார். மனமேட்டிமையும், பெருமையுள்ளவர்களின் வழியாக நம்முடைய ஆவியை கொண்டு தேவன் அற்புதமான காரியங்களை நடப்பித்தால், அவர்களின் பெருமையும், மேட்டிமையும் இன்னும் அதிகரித்து, தேவனுக்கு சேரவேண்டிய மகிமையை அவர்கள் சொந்தமாக்கிகொள்வார்கள். மிக எளிமையான கருவியையும் தேவன் பயன்படுத்துவார் அதாவது மிக குறைவான தாலந்து உள்ளவர்களையும், அவருடைய பணியைச் சிறப்பாக செய்ய தேவன் உயர்த்துவார். அதே நேரத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மை நாம் உயர்த்தும் பட்சத்தில், வீண் மகிமையும் பெருமையும் நமக்கு சாபத்தை வருவிக்கும். இதுவே மனித இயல்பு இந்தப் பலவீனத்தை எதிராளியாகிய சாத்தான் மிக தந்திரமாக பயன்படுத்துகிறான். வசதியில் எளிமையானோர், அறிவிலும் படிப்பிலும் குறைவுள்ளோர், இன்னும் தெய்வீக வார்த்தைகளில் உள்ள கட்டளைகளைப் பெறுவதில் குறைவுப்படுவோரும், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தடுமாறி விழுவதற்கு வாய்ப்புண்டு. “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்” என்ற ஆண்டவரின் வார்த்தைகளை மறந்து விடுகிறார்கள். (லூக் 6:20; மத் 5:3) அறியாமையில் உள்ளவர்களும், நன்கு படித்தவர்களும், வசதியுள்ளவர்களும், எளிமையானவர்களும் “தங்களுடைய மாம்ச சிந்தையில் மேன்மை பாராட்டலாம். தான் ஒன்றும் இல்லாதவனாக இருந்து தன்னை ஒரு பொருட்டாக எண்ணிக் கொண்டு தன்னை தான் வஞ்சித்து கொள்பவனை பார்ப்பதற்கு பரிதாபமாக உள்ளது. (கலா 6:3) மொத்தத்தில் கிறிஸ்துவின் சாயல் இல்லாத எளியோரும் சரி, வசதியானவர்களும் சரி, இருவருமே தாழ்மையிலும், சாந்தத்திலும் வளர்ச்சி அடையவேண்டும். அதே போல சத்தியத்தின் அறிவை அதிகமாக பெற்றிருந்தாலும் அந்த சத்தியத்தினால் நம்மை சுத்திகரித்து தாழ்மைப்படவேண்டும். (எபே 4:2, 11தீமோ 2:25)

எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய சாந்தத்தையும் அமைதலையும் காத்து கொள்ளவேண்டும். நம்முடைய கண்களுக்கு நாம் மிக சிறியவர்களாக தோன்றினால் மட்டுமே நமக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாதபடிக்கு தேவன் நம்மை பயன்படுத்த முடியும். விசுவாசத்தின் ஒவ்வொரு சோதனைகளுக்கும் தேவன் பாதுகாப்பளிப்பதில்லை. ஆகவே இன்று தேவன் உங்களை சற்று உயர்த்தி, அவருடைய ஊழியத்தில் ஒரு சின்ன வெற்றியைக் கொடுத்தால், உங்களுடைய தகுதியற்ற நிலையை உணர்ந்து மனத்தாழ்மையோட அந்த வெற்றியைப் பெற்று கொள்ளுங்கள். நம்மை ஊக்குவிப்பதற்காக தேவன் நமக்கு வெற்றி அளித்தார் என்று எண்ணிக்கொண்டு நாளைய தினம் நீங்கள் பெறப்போகிற வெற்றிக்காக இன்றைய தினத்திலிருந்து, கர்த்தருக்கு முன் தாழ்மைப்படுங்கள். அப்போது உங்கள் குணங்கள் சரியாக வளர்ச்சி அடையும். நேற்றைய தினத்தில் நீங்கள் பெற்ற வெற்றியினால், இன்று நீங்கள் பெருமை கொள்ளாதபடிக்கு எச்சரிப்பாக இருங்கள். நீங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியில் சரியாக வளர்ச்சிக் காட்டவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நாம் எவ்வளவு சத்தியத்தை பெற்றிருந்தாலும் சரி, நம்மில் தாழ்மை இல்லாவிட்டால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆகவே அப்போஸ்தலனாகிய பவுலின் அனுபவங்களை நாமும் பெற்றுக்கொள்வோம். “என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன், தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலி 4:11-13)

தேவன் தம்முடைய ஜனங்களை வழிநடத்துகையில் பெருமை மற்றும் தன்னம்பிக்கை, சுய திருப்தி போன்ற குணங்களுக்கு எதிராக எந்நேரமும் பாதுகாத்திருக்கிறார். இஸ்ரயேலரை தம்முடைய சொந்த ஜனமாக தேர்வு செய்த பின் 400 வருடங்கள் அவர்களை அடிமைகளாக அனுமதித்தார். அதற்குப்பின் அவருடைய பலத்த கரத்தினால் அவர்கள் அனைவரையும் வாக்குத்தத்தம் செய்த தேசத்திற்கு அழைத்து சென்றார். தேர்வு செய்யப்பட்ட இரட்சகராகிய மோசேயும், மிக தாழ்மையுள்ளவராக இருந்தார். அவர் திக்கு வாயனாக இருந்தபடியால் அவருக்கு உதவியாக ஆரோன் அனுப்பட்டார். மேலும் மாம்சத்தில் கொடுக்கப்பட்ட முள்ளிலிருந்து “பவுலை விடுவிக்க தேவனுக்கு மனதில்லாதிருந்தது. மூன்று முறை தேவனை நோக்கி ஜெபித்தாலும் – “என் கிருபை உனக்கு போதும்” என்று தேவன் பதில் அளித்தார். (அபூரணமான பாத்திரத்தின் வழியாக தேவனுடைய வல்லமை செயல்பட்டால், மனுஷருக்கு முன்பாக தேவனுடைய பலம் வெளிப்படுத்தப்படும். அதே நேரத்தில் பூரணமானவர்களின் வழியாக தேவனுடைய வல்லமை செயல்பட்டால் அவருடைய வல்லமை முழுமையாக வெளிப்பட வாய்ப்புகள் இராது.

R2228 [col. 1P3]: (8ம் கேள்வியை காண்க)

ஆவியில் மனத்தாழ்மையுள்ள காரியத்தை நம்முடைய ஆண்டவராகிய இயேசு எவ்வாறு நடைமுறைப்படுத்தினார் என்பதையும் இதனிமித்தம் அவர் எவ்வளவாக உயர்த்தப்பட்டார் என்பதையும் அப்போஸ்தலர் சில வார்த்தைகளில் சுருக்கமாக கூறுகிறார். நம்முடைய பாவங்களை அவர் சுமப்பதற்காக அவர் தன்னை தாழ்த்துவதற்கு முன் “தேவனாக, அல்லது தேவனைப் போல் இருந்தார்.” மகிமையுள்ள ஆவிக்குரிய நிலையில் இருந்தார் இன்னும் அதிக மேன்மையை அடைந்து, சாத்தானைப் போல தனியான ஒரு இராஜ்யத்தை ஸ்தாபிக்க விரும்பாமல், தேவனுக்கு சமமாக இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தேவனுடைய முதல் சிருஷ்டியாக இருந்த அவர் தேவனுடையத் திட்டத்திற்கு இசைவாக, தன்னை தாழ்த்த மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்தார். இப்படிப்பட்ட மனத்தாழ்மையோடும், மனவேதனையோடும் அவமானங்களை சகிக்க தன்னை ஒப்புக்கொடுத்தார். அவர் மனுஷ ரூபம் எடுத்தபின்னும் அதே மனத்தாழ்மையில் தொடர்ந்து வாழ்ந்து, தன்னுடைய மனப்பூர்வமான அர்ப்பணிப்பைத் தெரிவித்தார். வாழும்போது மட்டும் அல்ல, மனுஷனுக்காக அவர் ஈடுபலியை செலுத்தி, தேவ திட்டத்தில் ஒவ்வொரு எழுத்தையும் நிறைவேற்றும் அளவுக்கு அவர் தன்னை தாழ்த்தினார். எல்லா விதத்திலும் அந்த மரணம் மிக கொடுமையாகவும், மிகுதியான அவமானங்கள் நிறைந்ததாகவும் இருக்கவேண்டும் என்று பிதா பிரியப்பட்டார் என்று அவர் அறிந்தபின் – “ஆண்டவரே என்னுடைய சித்தத்தின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று தன்னைத் தாழ்த்தி ஒப்புக்கொடுத்தார்.

இது வரைக்கும் நடந்த சம்பவங்களில் மனத்தாழ்மைக்கும் சாந்தத்திற்கும், கீழ்ப்படிதலுக்கும் இதுவே சிறந்த எடுத்துக்காட்டு என்று பவுல் குறிப்பிடுகிறார். இந்த மாதிரியை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பவுல் கூறுகிறார். “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.”

தாழ்மையின் அடிப்படையில் காட்டப்பட்ட பூரணமான கீழ்ப்படிதலினால் பரலோக பிதா அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, தூதர்களுக்கும் மேலாக உள்ள தெய்வீக சுபாவத்தை கொடுத்தார். “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி?”

(9) தேவன் அவரை எல்லாவற்றிருக்கும் மேலாக உயர்த்தினார்.

நம்முடைய ஆண்டவரின் பரிபூரண தாழ்மையும், கீழ்ப்படிதலும், அவருடைய விசுவாசத்தை மட்டும் வெளிப்படுத்தாமல், அவர் வழியாக பிதாவின் அளவற்ற அன்பும் காணப்பட்டது. ஏனெனில் இந்த மனுக்குலத்தை மீட்கும் பணியில், அவர் பிதாவின் அன்பை பகிர்ந்துக் கொண்டார். இதனால் பூமியில் உள்ள முழு குடும்பங்களையும் ஆசீர்வதிக்கக்கூடிய தெய்வீக அதிகாரத்தைப் பெற தகுதியுள்ளவரானார். இப்படியாக இவர் ஆபிரகாமின் சந்ததிக்குத் தலையானார். ஆகவே, ஏற்ற காலத்தில் தேவன் தம்முடைய தெய்வீக ஆசீர்வாதங்களை இந்த உலகத்தின் மேல் பொழியும் போது அவர்கள் அனைவரும் சத்தியத்தில் அறிவினால் நிரப்பப்பட்டு, மனப்பூர்வமாக தேவனுடைய சித்தத்திற்கு இசைந்து, நித்திய ஜீவனை பெறுவார்கள்.

மனத்தாழ்மைக்கும், சுயக் கட்டுபாட்டிற்கும், மற்றவர்களின் நன்மைக்காக நடப்பிக்கப்படும் கீழ்ப்படிதலுக்கும் மட்டுமே அப்போஸ்தலர் இயேசுவை நமக்கு முன் மாதிரியாக வைக்காமல், அவர் பெற்ற உயர்ந்த நிலையையும் நமக்கு முன் வைக்கிறார். ஆகவே கீழ்ப்படிதலோடு இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினால், அவரோடு கூட மகிமையும் அடைவோம். இக்காலத்து உரிமைகளை தேவனுக்கு பிரியமுண்டாக மனப்பூர்வமாக பலி செலுத்தினால், ஏற்ற காலத்தில் அவருடைய நாமத்தை பெற்றுக்கொண்டு சிங்காசனத்திலும், கிரியைகளிலும் பங்கடைந்து அபிஷேகம் பண்ணப்பட்ட சரீர அங்கத்தினர்களாகவும், முழு சபையாகவும் இயேசுவுக்கு பங்காளிகளாவோம்.

(12-16) வசனங்களில் பிலிப்பு பட்டணத்தில் உள்ள சபையைப் புகழ்கிறார். அவர்கள் முன்னதாக துவங்கின ஓட்டத்தில், மனத்தாழ்மையையும், கீழ்ப்படிதலையும், தங்களுக்குள் தக்கவைத்துக் கொண்டு, தொடர்ந்து ஓடி பயத்தோடும் நடுக்கத்தோடும் தங்கள் மகிமையான இரட்சிப்பையும், கனத்தையும் அழியாமையையும் கிறிஸ்துவுக்குள் பெற்றுக்கொள்ள அவர்களை துரிதப்படுத்துகிறார். நாம் நம்மை நீதிமானாக்குவது இயலாத காரியம். ஆனால் கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் நீதிமான்களாக மாற்றப்பட்டு, பரலோக அழைப்பிற்கு அழைக்கப்பட்டு நம்முடைய தெரிந்துக் கொள்ளுதலை உறுதிப்படுத்திக்கொண்டவர்களாக கிறிஸ்துவுக்குள் அழைக்கப்பட்ட பெரிதான இரட்சிப்பை நிறைவேற்ற வேண்டும். ஆண்டவரின் கட்டளைகளை கைக்கொண்டு. நமக்கு முன் அவர் வைத்திருக்கும் மாதிரியை பின்பற்றவேண்டும். நாம் இந்த மாம்சத்தில் அல்ல, ஆவியிலும், சிந்தையிலும், நோக்கத்திலும் இருதயத்திலும் பூரணப்படுவோம். நம்மால் முடிந்த வரைக்கும் நம்முடைய மாம்சத்தை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் போது அதனுடைய பலவீனங்கள் மற்றும் அபூரண தன்மைகள் பரிசுத்தமான நம்முடைய ஆண்டவரின் நீதியினால் மறைக்கப்படும்.

பாவத்திற்கும், பலவீனங்களுக்கும் எதிரான இந்தப் போராட்டங்கள் நம்முடைய சொந்த போராட்டம் அல்லது, இதற்குத் தேவனே நம்மை அழைத்தினால் அவர் நமக்கு உதவி செய்வார். அவர் நமக்களித்த வாக்குத்தத்தங்களினால் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு நம்மை வழிநடத்தும்போதே அவர் நமக்குள் கிரியை செய்துகொண்டிருக்கிறார். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்போது அவருடைய வார்த்தையின்படி நமக்குள் கிரியை நடப்பித்து தொடர்ந்து வழிநடத்துவார். “சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம்.” தேவனுடைய வல்லமையே நம்மை இரட்சிக்கும்” என்ற சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் “இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.” (11பேது 1:4)

மேலும், நம்முடைய ஆண்டவராம் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, சுவிசேஷத்தில் நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் மிக பெரிய பரிசை பெற்றுக்கொள்ள பயணிக்கும்போது, நெருக்கமான பாதையைக் கண்டு நாம் முறுமுறுக்கவும், பிரச்சனைகளை பெரிதாகிக்கொண்டும் இருக்கக்கூடாது. அதேபோல் சோதனைகளிலிருந்து தப்பித்துகொள்ள தெய்வீக வழிகளை விட்டு விட்டு உலகப்பிரகாரமான வழிகளைத் தேடக் கூடாது. ஏனெனில் கிறிஸ்துவின் பள்ளியில் நாம் சிறப்பாக வளர்ச்சி அடைவதற்கு நாம் எப்படிப்பட்ட பரிட்சைகளுக்கும் உட்படவேண்டும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். இதை உணர்ந்துக் கொண்டு நாம் முடிந்த வரைக்கும் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, நம்முடைய இருதயத்தில் அதிருப்தியையும், வாய் நிறைய தேவனைப் பற்றி குறைகளையும் கொண்டிருந்தால், நாம் நிச்சயமாக அனுதாபத்தை பெறலாமே தவிற, பரிசை பெற முடியாது. ஆகவே, “நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்,” (பிலி 2:14-16) என்று அப்போஸ்தலர் கூறுகிறார்.