CD-PRAYER-Q-34
F687 [3]: –
சபையில் ஜெபம் என்பது, தேவனுடைய குடும்பம் உலகத்திலிருந்து பிரிந்து தெய்விக பிரசன்னத்தில் “இரகசியமாக நெருங்குவதாகும்.” சபையின் முன்னேற்றம், ஆரோக்கியம், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம். ஜெபத்தை புறக்கணித்தால், வல்லமை, சிலாக்கியம் மற்றும் ஊழியத்தில் நிச்சயமாக இழப்பு நேரிடும் மேலும் அதற்கேற்ப மகிழ்ச்சியையும் இழக்கவேண்டும். நாம் முழுமையாக இரக்கத்தைவிட்டு வெளியேற்றப்படுவோம். எவ்வாறாயினும், பாஸ்டன் செய்தித்தாளில் Boston news paper, பொது ஜெபத்தின் விதத்தைக் குறித்து, ஒரு மதக் கூட்டத்தில் குறிப்பிடும் போது, “ரெவரென்ட் டாக்டர் பாஸ்டன் பார்வையாளர்களுக்கு மிக அழகான மற்றும் நலமிக்க சொற்பொழிவு ஜெபத்தை வழங்கினார்.” தேவனிடம் ஜெபிப்பதற்குப் பதிலாக பார்வையாளர்களிடம் ஜெபிப்பதே அதிகமாக இருந்தது. இந்த வேதவாக்கியங்கள் கர்த்தருடைய ஜனங்களிடையே பொதுவான மற்றும் கேட்கக்கூடிய ஜெபங்களை ஊக்கவிப்பதோடு, ஜெபிப்பவர் தம்முடைய ஊழியத்துடன் தனது பார்வையாளர்களின் தொடர்பை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும். கேட்பவர்கள், “ஆமென்” என்று கேட்குபடியாகவோ, இருதயத்திலோ சொல்லக்கூடியவகையில் அவர் ஜெபிக்கவேண்டும் என்று கேட்டுகொள்ளப்படுகிறது. 1 கொரிந்தியர் 14:13-17.