CD-EVILSPEAK-Q-4
யாக் 3:6
“நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!”
“ஆகையால், (முக்கியம்) நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது.”
ஒரு தீமையான நாவினால் ஏற்படும் மிக கொடிய பாதிப்புகளை உறுதியான அடையாள மொழியில் அப்போஸ்தலர் இங்கு குறிப்பிடுகிறார். “நரக (அடையாளம்) அக்கினியால் (அடையாளம்) கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது” ஒரு நாவு அக்கினியைப் போல கொளுத்தி விடுகிறது என்றால், தவறான காரியங்களைப் பிடிவாதமாக செய்யக்கூடிய மனோபாவம், சுய விருப்பம், சுயநலம், பகை, குரோதம் இவைகள் அனைத்தையும், அறிவையும் வாய்ப்பையும் பயன்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சீர்திருத்தாவிட்டால், இவர்கள் நித்தியமாக அழிக்கப்படுவதற்கு தகுதி பெறுவார்கள் – அதாவது இரண்டாம் மரணத்தை (கெஹன்னா – நரக அக்கினி) அடையக்கூடிய வகுப்பாராக இருப்பார்கள் என்று யாக்கோபு உபதேசிக்கிறார். நெருப்பைப் பற்றவைப்பது போல ஒருவர் சந்திக்கக்கூடிய அனைவரிடமும் ஒருவரைப் பற்றி தீயக் காரியங்களை நாவினால் கூறிக் கொண்டிருக்கையில், ஆயுள் சக்கரத்தை கொளுத்திவிடும். ஒரு பேச்சாளரைப் பற்றின, விரோதமான சில வார்த்தைகளை, அவருடைய சகல தீயக் காரியங்களையும் தீவிரமாக பரப்பிவிடும். அதுபோல மற்றவர்களுக்கும் ஏற்படும். இப்படியாக, இப்படிப்பட்ட காரியங்களைத் தொடர்ந்து செய்தால், இறுதியில் அவதூறு பேசக்கூடிய அந்த நபர் முற்றிலுமாக கெட்டுப்போய், இனி ஜீவிப்பதற்கான உரிமையை இழந்துவிடுவார்.