CD-LOVE-Q-31
“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” 1 யோவான் 4:18
கர்த்தருக்கு பயப்படும் பயம் உண்மையான ஞானத்தின் ஆராம்பம் மட்டும் அல்ல, அது நம் பயணம் முழுமைக்கும் மதிப்புமிக்கதாக உள்ளது. தற்போதுள்ள சத்தியத்தின் ஒளியைப் பெற்றவர்கள், மத்தியில் ஒரு போக்கு காணப்படுகிறது. மற்றும் தெய்வீக குணம் மற்றும் திட்டத்தைப் பற்றிய தவறான விளக்கங்களால், தூண்டப்பட்டு கொடூரமான மற்றும் அடிமைத்தனமான பயத்தை போக்குகிறார்கள் அல்லது இழக்கிறார்கள். மேலும், நமது தற்போதைய அபூரண நிலைமைகளின் கீழ் தீவிரமான உரிமை அனுமதியளிப்பது, வேதப்பகுதியின்படி மிகவும் ஆபத்தானதாகும்.
“பூரண அன்பு பயத்தை புறம்பேப் போக்கும்” என்பது உண்மைதான். ஆனால், இந்த பூமியில் பரிசுத்தவான்களின் மத்தியிலும், பூரணமான அன்பு அரிதானது என்பதும் உண்மை. எனவே,”…. அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.” (எபிரெயர் 4:1) என்று அப்போஸ்தலர் வலியுருத்துகிறார். “ஒரு கண்ணியை உண்டாக்கும் மனிதனின் பயத்தை” நாம் முழுமையாக இழக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தேவனைப் பற்றிய பயத்தை இழந்தவர்கள், தங்களுக்கு முன் தேவன் வைத்திருக்கும் மகத்தான பந்தயப் பொருளையும் இழக்கக்கூடிய பயத்தில் இருக்கிறார்கள். இது ஒரு அபாயகரமான தன்னறிவுடையவராகவும் நிலை. அவர் சுய திருப்தி அடைபவராகவும் பெரும்பாலும் மாறி, அவர் நம்பாத நிலைக்கு அதாவது பாவிகளுக்கு எதிரான நியாயத்தீர்ப்பான இரண்டாம் மரணத்திற்கு கூட உடனடியாக வழுவிப்போய் விடுகிறார். அதாவது, கர்த்தருடைய வார்த்தைகளிலுள்ள நியமங்களுடனான கடுமையான ஒழுங்கமைப்பில் அவரது சொந்த வார்த்தைகளையும் எண்ணங்களையும் செயல்களையும் கடைப்பிடிப்பதில் அவர் அக்கறையற்றவராக இருந்திருப்பார். ஆண்டவர் மேலுள்ள பயத்தை இழந்ததினால், ஆண்டவரின் வார்ததைகளை மதிக்கும். பொறுப்பை விரைவாக இழப்பார். மேலும், தன்னுடைய சொந்த புரிந்துக் கொள்ளுதலின் அதிகதிகமாக நம்பி, தனது சொந்த தவறுகளுக்கு குருடாக்கப்படுகிறார். வேதாகமத்தில் பயத்தை கூடுதலாக ஊக்குவிக்கும் பகுதிகளை கவனமாக காணலாம். இவைகளில் சிலவற்று, பின்வருமாறு – “கர்த்தருடய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்”, “கர்த்தருக்கு பயப்படுகிறவர்களே அவரைத் துதியுங்கள்..”, “அவர் கிருபை என்றுமுள்ளதென்று காத்தருக்கு பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக..”, “..தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறது போல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.”, “கர்த்தருடைய கிருபை அவருக்கு பயந்தவர்கள் மேலும்…. என்றென்றைக்கும் உள்ளது”, அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து…”, “தமக்கு பயந்து, தனது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
(சங்கீதம் 34:9,22,23. 118:4, 103:13,17. 145:19, 147:11). “ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (லூக்கா 12:5) என்று ஆண்டவர் கூறுகிறார். “மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு.” (ரோமர் 11:4, எபிரெயர் 4:1) பவுல் கூறுகிறார். “எல்லாரையும் கனம் பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்” “எந்த ஜனத்திலாயினும் அவருக்குப்பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.” (1 பேதுரு 2:17, அப்போஸ்தலர் 10:35) என்று பேதுரு கூறுகிறார். “அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.” “என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்” (மல்கியா 3:16, 4:2) நம்முடைய அருமை இரட்சகரும் தேவனுக்கு பயந்தார் என்று பதிவுகள் கூறுகிறது. “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,” (எபிரெயர் 5:7) இந்த ஏராளமான வசனங்களில் உள்ள பாடம் என்னவெனில், தேவனைப் பற்றிய பயத்தை இழந்து, அதாவது கிருபையாக தேவன் நாம் அடையக்கூடிய பெரும் சாத்தியமான காரியங்களை இழந்துவிடுமோ என்ற பயம் அல்லது அவருடைய அதிருப்தியினால் ஏற்படும் பயம், ஒரு மிகபெரிய இழப்பாக இருக்கும். அநேகமாக நம் நித்திய ஜீவனை ஒருவேளை இழக்கவும் நேரிடலாம். இந்த பயத்தை இழந்தவர்கள், தங்கள் ஆளுநர்களை இழந்த நீராவி – இரயில் வண்டிகள் போல இருக்கிறார்கள். அதிகபட்சமான சுயாதீனத்தோடு சுய அழிவை நோக்கி ஓடி, ஊழியத்திற்கு தகுதியற்றவர்களாக இருக்க பொருத்த மானவர்களாக இருக்கிறார்கள். இதனால், பரலோக தேசத்தை தேடக் கூடியவர்களுக்கு “…நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டு வருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்து கொள்ளுங்கள்.” (1 பேதுரு 1:17) என்று அப்போஸ்தலர் மீண்டும் கூறுகிறார். கருத்தின்மையோ, உலகத்தின் அற்பமான காரியங்களோ, உணர்ச்சி வசப்படுவதிலோ, நிலத்திலோ. பணத்திலோ, கவனக்குறைவிலோ, அல்லது இன்னும் சோம்பேறிதனத்தினாலோ அல்ல, எந்த ஒரு வார்த்தையையும், செயலையும் கர்த்தரைப் பிரியப்படுத்துவதற்கு கவனமாக விழிப்புடன் இருந்து, அவருடைய சாயலை அணிந்துக் கொள்வதற்கும். இவ்வாறாக அவருடைய இராஜ்யம் வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் ஸ்தாபிக்கப்படும் போது, நம்முடைய அழைப்பையும், தெரிந்துக் கொள்ளுதலையும் அதில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.