CD-LOVE-Q-20
“அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது” (ரோமர் 13:10)
R3180[col.2 P1,2]: –
அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேற்றம் என்று நம்முடைய ஆண்டவரால் நியமிக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின் விரிவான அறிக்கைக்கு அப்போஸ்தலர் நம்முடைய கவனத்தை அழைக்கிறார். எனவே அண்டை வீட்டாரை நேசிப்பதன் மூலம், தேவனுடைய நியாயப் பிரமாணத்தை அவர்களிடம் நிறை வேற்றப்படுகிறது. இருப்பினும், அன்பின் பிரமாணம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுவதை நினைவில் கொள்ள வேண்டும். முதலில் தேவனிடம் அன்பு, இரண்டாவது நம்முடைய சகோதரர்களிடம் அன்பு கூறவேண்டும். நம்முடைய அயல் வீட்டார் மேல் காட்டக்கூடிய அன்பு, தேவன் மேல் செலுத்தக்கூடிய அன்பில் ஒரு பகுதியாக இருக்கும். நம்முடைய அண்டை வீட்டாரை நேசித்து, இன்னும் அவர்களுக்காக நம் ஜீவனை கொடுத்திருந்தாலும், இந்த பிரமாணத்தின் முதல் அம்சத்தை நாம் புறக்கணிக்காதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது நம்முடைய அயல் வீட்டாரை காட்டிலும், நம்மை காட்டிலும், தேவனை அதிகமாக நேசிக்க வேண்டும். எனவே ஒவ்வொரு மனித விருப்பமும், காரியமும், தெய்வீக சித்தத்திற்கு மகிழ்ச்சியோடு பலியிடப்படவேண்டும். அன்பின் பிரமாணத்தின் இரண்டாம் பகுதியின் நிறை வேற்றத்தை பற்றி பேசும் போது – மற்றவர்களிடம் நமக்கு இருக்கும் பொறுப்பைக் குறித்து – கொலை, வேசித்தனம். பொய்ச்சாட்சி, திருட்டு, போன்ற மாம்சத்தின் கிரியைகளுக்கு விரோதமாக – என்ற பிரமாணத்தை அவர் சுருக்கமாக கொடுத்திருக்கிறார். நியாயப் பிரமாணத்தில் “இதை செய்யாதிருப்பீர்களாக” என்று தன்னுடைய அயலகத்தாருக்கு விரோதமான காரியங்களை பிரமாணங்களாக சொல்லப்பட்டது. ஆனால் புதிய அன்பின் பிரமாணம் அதற்கு எதிரிடையாக ” (இதை செய்யுங்கள்)” என்று கூறுகிறது. இப்படியாக பத்து கற்பனைகளில் “செய்ய வேண்டாம்” என்று சொல்லப்பட்ட பல கற்பனைகளுக்கு பதிலாக “உங்கள் அயலகத்தாரை நேசியங்கள்” என்ற ஒரு கற்பனைக் கொடுக்கப்பட்டது. இப்படியாக அன்பின் பிரமாணத்திற்கு கீழ்படிந்து, பிறருடைய நன்மையை விரும்புவர்கள் நிச்சயமாக அவர்களை கொலைச் செய்ய மாட்டார்கள், அவருடைய நற்பெயரை திருடமாட்டார்கள், அவருக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள், அல்லது அவருக்கு விரோதமாய் அவதூறு பேச மாட்டார்கள், அவருடைய நற்பெயரை திருடமாட்டார்கள். அல்லது தீங்குச் செய்ய விரும்ப மாட்டார்கள் அல்லது அவரைப் பற்றி சிந்திக்கும்போது. அன்பில்லாமல் இருக்க மாட்டார்கள்.