CD-LOVE-Q-40
“மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து” (எபிரெயர் 10:24)
எவ்வளவு அன்பான மற்றும் அருமையான சிந்தனை இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றவர்கள், தங்கள் சக மனிதர்களை, குற்றம் கண்டுபிடித்து அல்லது சோர்வைடையச்செய்து அல்லது அவர்களின் பெலவீனங்களை தங்களுக்கு சாதகமாக, சுயநலத்துடன் பயன்படுத்த நினைக்கும் போது, புது சிருஷ்டிகள் அதற்கு மாறாக செயல்படுகிறார்கள். ஒருவருடைய மனநிலையை ஒருவர் புண்படுத்தக்கூடிய காரியங்களையோ, கோபத்தைக் கிளறிவிடக்கூடிய காரியங்களையோ சொல்லுவதை, செய்வதை தவிர்த்து, அன்பிற்கும் நல்நடத்தைக்கும் அவர்களை ஏவக்கூடிய கண்ணோட்டத்தில் ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும். ஏன் அப்படிச் செய்யக்கூடாது? முழு உலகத்தினுடையது மாத்திரம் அல்லாது, பொறாமை, சுயநலம், தவறான எண்ணத்துடன் நோக்குவது, வார்த்தையிலும், செயலிலும், சிந்தனையிலும் பாவம் செய்யும் படியாக தூண்டுகின்ற பிசாசின், மாம்சத்தின் நிலையும் அப்படியாக இல்லையா? அப்படியென்றால் கிறிஸ்துவின் சரீரமான சபையின் புது சிருஷ்டிகள் இப்படியான செயல்களிலிருந்து தங்களையும், மற்றவர்களையும் காத்துக் கொள்வதோடு, இதற்கு எதிர்மாறான அன்புக் கேதுவாக, நற்கிரியைகளைச் செய்யும்படியாகத் தூண்டக்கூடாதா அல்லது செயல்படக்கூடாதா? இது நிச்சயமாகவே, தேவனுடைய வார்த்தையிலிருந்து வருகின்ற கண்டித்து உணர்த்துதலையும், புத்திமதியும் நன்மை விளைவிக்கிறதாயும் நல்லதாயும் இருக்கிறது.