CD-PRAYER-Q-35
“சமீபத்திய வாட்ச் டவர் பத்திரிகையை நான் படித்து மகிழ்ந்தேன்” என்று ஒரு சகோதரர் எழுதினார். அதன் விவரம் தொடரும் என்று நான் காண்கிறேன். பொது ஜெபம் தொடர்பாக ஏதாவது சொல்லுங்கள். இந்த விஷயத்தில் இங்குள்ள சகோதரர்கள் ஒரே விதமாக இருக்கவில்லை. கிறிஸ்தவர்கள் ஒருபோதும் பகிரங்கமாக ஜெபிக்கக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.
நம்முடைய ஆண்டவரே. பரிசேயர்களின் வழக்கத்தை கண்டித்தபின், மனுஷர் காணும் படியாகவம். பக்தியள்ளதாக கருதப்படவேண்டும் என்பதற்காகவும். தெரு மூலைகளில் நின்று “நீயோ ஜெபம்பண்ணும்போது. உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி. அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.” (மத்தேயு 6:6) என்று ஜெபித்தார். இதிலிருந்தும், மற்றும் உண்மையில் நம்முடைய ஆண்டவர் தாமே தனிமையில் ஜெபிக்க அடிக்கடி மலைக்கு சென்றதினாலும், தனி ஜெபங்களை தவிர மற்றவைகள் பாவமில்லாதிருந்தால் மறுக்கப்படுவதாக சில ஊக்கமான ஆத்துமாக்கள் முடிவு செய்துள்ளனர் : இதனால் அவர்கள் தங்களை தாங்களே காயப்படுத்தி கொள்கிறார்கள் என நாம் நம்புகிறோம்.
பொதுவில் ஜெபிக்க நம்முடைய கர்த்தரே நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். அடிக்கடி அவரது சீஷர்களின் முன்னிலையில் மட்டுமல்ல. ஒரு முறை லாசருவின் கல்லறையில் அவிசுவாசிகளின் முன்னிலையிலும் அவர் ஜெபித்தார். (யோவான் 11:41,42. லூக்கா 10:21) பொதுவாக “கர்த்தருடைய ஜெபம்” என்று அழைக்கப்படுவது சீஷர்களின் முன்னிலையில் உச்சரிக்கப்படுவது மட்டும் அல்ல, ஒரு கூடுகையில் ஜெபிக்கக்கூடிய ஒரு மாதிரி ஜெபமாகும். இது “என் பிதாவே” என்று துவங்காமல், “எங்கள் பிதாவே” என்று துவங்குகிறது. அது “என்னுடைய பாவங்களுக்காக மன்னிப்பை வேண்டாமல்”. “எங்களுடைய பாவங்களை மன்னியும்” என்றும். மற்றவர்களின் பாவங்களை நான் மன்னிப்பதை போல” என்று சொல்லாமல் “மற்றவர்களின் பாவங்களை நாங்கள் மன்னிப்பதை போல” என்று கூறுகிறது. ஆகவே விசேஷமாக இது கூட்டு ஜெபத்திற்கான ஒரு மாதிரியாகும்.
யோவான் 17ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்ட ஜெபம். ஒரு பொது ஜெபமாக இருந்தது. சீஷர்களுக்கு முன்பாக ஜெபிக்கவில்லையெனில், யோவான் 18:1ல் குறிப்பிட்டுள்ளபடி, அவர்களில் ஒருவர் இதைப் பதிவு செய்திருக்கமுடியாது.
அதே பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலர்கள். பிதாவிடம் இரகசியமாக ஜெபிப்பதோடு, சபைக்கு முன்பாக பகிரங்கமாககூட ஜெபித்து. இதுபோன்ற பொது ஜெபங்கள். சபை ஜெபங்களை பொருத்த வரை கட்டளைகளையும். அறிவுறுத்தல்களையும் கொடுத்தார்கள்.
சபைக் கூடுதல்களின் ஜெபங்களைப் பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. மற்றவர்கள் கேட்கும் படி அவர்கள் ஜெபிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டால் மேலும் அந்த உண்மையான விண்ணப்பத்தின் விவரிப்பு நிரூபிக்கப்படவில்லை என்றால், அவர்கள் தனியாக. இரகசியமாக ஒவ்வொருவரும் ஜெபித்தால், அவர்கள் ஜெபத்திற்காக கூடிவந்தார்கள் என்ற காரியம் நியாயமற்றதாக இருக்கும். இதை தவிர, சில சந்தர்ப்பங்களில் ஏறெடுக்கப்பட்ட ஜெபங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது- அப்போஸ்தலர் 1:14,24; 12:5, 12; 16:13:20:36; 21:5.
சபையில் ஏறெடுக்கப்படும் ஜெபம் மற்றும் நன்றி செலுத்துவதும் கேட்கக்கூடிய குரலிலும் பொதுவான மொழியிலும் செய்யப்பட வேண்டும் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல், கொரிந்து சபைக்கு எழுதும்போது தெளிவாக கற்பிக்கிறார் 1கொரி 14:14- 17 காண்க.
இருப்பினும், சபையில் உண்மையாக உரையாற்றும் போது. தேவனிடம் ஜெபிப்பது போல சிலருடைய வழக்கத்தைக் குறித்து நமக்கு எந்த அக்கரையும் இல்லை. பெரும்பான்மையினர், வெளிப்படுத்தக்கூடியதை விட முழுமையாகவும், மிக சரளமாகவும் அனுதாபத்துடன் இணைந்து, ஜெபிக்கையில் கேட்போர்கள் முழு லாபம் அடையம்படிக்கு. நம்முடைய ஜெபங்கள் பார்வையாளர்களுக்கு தனித்துவமானதாகவும், புத்திசாலித்தனமாகவும் இருந்தாலும், அது மனிதர்களிடம் அல்ல. தேவனிடமே உரையாற்றப்படுகிறது என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அரசியல் மாநாடுகள், மற்றும் சட்டமன்ற கூட்டங்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் விடுதிகளை திறக்கும் போது ஜெபிக்கக்கூடிய வழக்கததை நாம் ஒரு போதும்’ அக் கரைகாட்டுவதில்லை. இவைகளி சபைக்கூட்டங்கள் அல்ல என்பதால், தேவனுடைய அங்கீகாரத்தை பெறுவதில்லை.
ஒரு மாநாடு அல்லது சட்டமன்றம் அல்லது அரசியல் அல்லது கல்லூரி அல்லது பள்ளியில் பணிபுரிபவர்கள் எப்போதும் தேவனை ஜெபத்தின் மூலம் அணுகக்கூடிய கிறிஸ்தவர்களாக இருந்தாலும், தேவனுடைய ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கவும். கேட்கவும் முடியாத இப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் காணப்படக்கூடாது. ஒரு ஆசிரியர் கிறிஸ்தவராக இருந்தால், கிறிஸ்தவர்களாக இருக்கும் மாணவர்கள். ஆமென் என்று சொல்லத்தக்கதாக, சரியாக கற்பிப்பதற்கான ஞானம் மற்றும் கிருபைக்காக, அனைவரும் கேட்க்கும் படியாக ஜெபம் செய்யலாம். இதில் விசேஷமாக முறையற்ற தன்மை காணப்படக்கூடாது. ஆனால் “கர்த்தருடைய ஜெபத்தை” மீண்டும் மீண்டும் செய்யவதற்கு பள்ளி குழந்தைகளுக்கு கற்பிக்கக்கூடாது. இது அத்தகைய நோக்கத்திற்காக வழங்கப்படவில்லை. பலர் கிறிஸ்தவர்கள் அல்லாததினால், ஆசிரியர்களும் பிரார்த்தனை செய்ய தேவையில்லை. அப்போது குழந்தைகள் ? தேவனோடு உடன்படிக்கை செய்த அவருடைய பிள்ளைகளை தவிர, தனிப்பட்ட குற்றங்களுக்கு அறியாதவர்களாக, இன்னும் ஆதாமின் கண்டனத்தின் கீழ் உள்ளவர்கள், விசுவாசத்தின் வழியாகவும். புது உடன்படிக்கையின் விதிமுறைகளின் வழியாகவம் மட்டுமே தேவனை அணுக அனுமதிக்கப்படுகிறார்கள். – 1கொரி 7:14 காண்க. வெளிப்படையான பொதுஜெபத்தின் தீய விளைவுகள் ஒவ்வொரு இடத்திலும் அதிகரித்து வருகிறது. ஒழுங்கற்ற பொதுவெறி ஜெபத்தினுடைய தீய விளைவானது அனைத்து இடங்களிலும் அதிகரித்து வெளிப்பட்டு வருகிறது. ஒரு பெருந்தயவாக செல்வாக்குமிக்க நண்பர்கள் மற்றும் மாபெரும் பகட்டான ஆடை மூலமாக மாத்திரமே தாங்கள் பூமியின் வீரியமிக்கவர்களுடன் ஐக்கியங்கொள்ள முடியும் என்பதை அறிந்த நபர்களே. பின்னர் எவர் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும், எவ்விதமான தனது சுயநீதியின் இழிவான கந்தையுடனும், இராஜாதி இராஜாவின் நீதியான பிரசன்னத்தில் விரைந்து சென்று அவருடன் ஐக்கியங்கொள்ள முடியும் என்கிற எண்ணத்தையும் கொண்டிருக்கின்றனர். மேலும் கிறிஸ்தவர்களும், அமைச்சர்களும், கல்வியாளர்களும் இந்த பூணி படுத்தும் முட்டாளி தனத்தை அனுமதித்துள்ளனர். இதன் விளைவாக. ஆயிரக்கணக்கானோர் உண்மையிலேயே தேவனிடம் வருவதில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் சரியான மற்றும் சராசரி கிறிஸ்தவரைப் போலவே நல்லவர்கள் என்று தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள் உண்மையில் தேவன் நியமித்த வழியில் அவர்கள் வராததினால், சபையிலும், அதற்கு அவர் கொடுத்த விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களிலும் அவர்களுக்கு எந்த பாத்தியமும் இல்லை.
“தேவன் பாவிகளுக்கு செவிகொடார்.” (யோவான் 9:31. யோபு 27:9, நீதி 1:28,29,28:9, சங்கீதம் 66:18. ஏசாயா 1:15) “அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்: என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6) தந்தை ஆதாம் தேவனுடைய குமாரனாகப் படைக்கப்பட்டு, பின்னர் அவருடைய பிதாவோடு தொடர்பு கொண்டிருந்தாலும், அவர் கலகம் செய்தபோது, இந்த உறவும். அதன் சிலாக்கியங்களும் துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டது. அனைத்து உறவும் துண்டிக்கப்பட்டது. அனைத்து உரிமைகளும் சலுகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. உண்மை. தேவன் இரக்கத்துடன் பாவத்திற்கான ஒரு மாபெரும் பலியையும், இரட்சகரின் விலைமதிப்பற்ற இரத்தத்தினால் நல்லிணக்கத்தையும் வழங்கியுள்ளார். மேலும் அவர் மூலமாக ஆதாமில் இழந்த அனைத்து சலுகைகள். ஐக்கியம் மற்றும் இரக்கங்களை திரும்பப்பெறலாம். ஆனால் இந்த ஏற்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. இது எல்லோருக்கும் இல்லை. பாவத்திலிருந்து தப்பி ஓட விரும்புவோருக்கும். இரட்சகரைப் பற்றிய அறிவை பெறுபவர்களுக்கும். புது உடன்படிக்கையின் நிபந்தனைகளின் பேரில் தேவனுடைய தயவை ஏற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு திறந்திருக்கும்.
அவர்கள் தங்கள் சொந்த கந்தலான நீதியை களைந்து போட்டு, விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவின் நீதியை அணிந்துகொண்டவர்களாக, மீட்கப்பட்ட மற்றும் சீரமைக்கப்பட்ட புத்திரர்களாக பிதாவினிடத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஆயத்தப்படுத்தும்படியாக இவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தேவனுடைய குமாரனும், நம்முடைய ஆண்டவருமாகிய கிறிஸ்து இயேசுவின் மரணத்தினால் தேவனோடு சமரசம் செய்யப்பட்டோம். பின்னர். அதுவரைக்கும். அவர்களுடைய ஜெபங்கள் தேவனுக்கு முன்பாக அருவருப்பாக இருப்பதை தவிர வேறொன்றுமில்லை என்று நாம் எதிர்பார்க்க வேண்டும் அல்லவா? புது உடன்படிக்கையையும். இரட்சிக்கப்படுவதற்கு வானத்தின் கீழ் அல்லது மனுஷர்களிடையே கொடுக்கப்பட்ட ஒரே நாமத்தையும் நிராகரிக்கும் எவரும் பிதாவினால் கேட்கப்படவும் மாட்டார்கள். ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டார்கள்.
ஆனால் தங்கள் பாவங்களை உணர்ந்து, அவைகளிலிருந்து மனந்திரும்பி, மீண்டும் புத்திரர்களாகவும், பிதாவோடு ஐக்கியப்படுவதற்கும் மீட்பரையும், புது உடன்படிக்கையையும். ஏற்றுக்கொள்வதே ஒரே வழி என்பவர்களுக்கு அப்போஸ்தலர் பின்வருமாறு கூறுகிறார்-
அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். ஆகையால். நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,” (எபேசி 2:18,19.)
“ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், (எபிரெயர் 10:19-22) “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும். தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” (எபிரெயர் 4:16)
அப்படியானால், இந்த முக்கியமான பாடத்தில், தேவப்பூர்வமாக கூறுபவைகள் பின்வருமாறு. (I) ஜெயம் என்பது தேவனுடைய பிள்ளைகளாக ஒப்புரவான. “விசுவாசிகளுக்கு” மட்டுமே உள்ள சிலாக்கியமாகும். (2) அத்தகைய தேவனுடைய பிள்ளைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும். தனிப்பட்ட முறையிலும் ஜெபிப்பது பொருத்தமானது. (3) தேவனுடைய பிள்ளைகளின் கூட்டத்தில் அவிசுவாசிகள் இருந்தாலும். ஜெபத்தை முறையற்றதாக்காது. ஏனெனில் இது சபையின் கூட்டம் மற்றும் not a meeting of the unregenerate இது அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. (4) கிறிஸ்துவின் சபையின் கூட்டங்கள் அல்லாத அரசியல், சட்டமன்றம், சமூக, கல்வி மற்றும் பிற கூட்டங்களில் ஜெபம் முற்றிலும் முறையற்றது. தேவனுடைய சில regenerated புத்திரர்கள் இருந்தாலும், அந்த கூட்டங்கள் உலகக் கூட்டங்கள். இவைகள் தேவனுடைய வார்த்தை மற்றும் ஆவிக்கு நேரடியான தொடர்புடையது அல்ல. கிறிஸ்தவர்கள் அத்தகைய கூட்டங்களில் கலந்துகொளவது பயனுள்ளது என்று கண்டால், அவர்கள் பரிசுத்தவான்களாக அல்ல. சராசரி குடிமகன்களாக அதில் கலந்துகொள்ளட்டும் அவர்களுடைய ஜெபங்கள் இரகசியமாக வழங்கப்படட்டும்.
“தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு. சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். “(சங்கீதம் 50:16,17)