சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-17

சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

Longer citations for some questions follow.

R3145 [col. 1 P2 to end] (see question #2)

ஒரு மரத்தின் அல்லது கல்லின் உருவம், தேவனல்ல என்ற அறிவு சபையின் பெரும்பான்மையானவர்களுக்கு இருந்ததாக அப்போஸ்தலன் தெரிவிக்கிறார், ஆனால் இந்த அறிவு ஆவிக்குரிய ஒரு பெரிய வளர்ச்சியைக் குறிக்கக்கூடியதில்லை. சோப்பின் ஒரு சிறிய சொட்டு மிக பெரிய காற்று குமிழியை உருவாக்கும். அதுபோல சிறிய அளவிலான அறிவை பெற்ற ஒருவருக்கு அது மிக பெரியதாக தோன்றினாலும் அவரிடத்தில் எந்த உறுதியான தன்மையும் இருக்காது. வெறும் அறிவின் வளர்ச்சியைக் காட்டிலும், அன்பின் வளர்ச்சியின் மூலம் ஒருவரை அளவிடுதல் நன்மையை அவர் சுட்டிக்காட்டுகிறார் – இருப்பினும், அறிவு மற்றும் அன்பு இரண்டுமே சிறந்து விளங்கினாலும், அன்பே சிறந்த நிலையில் உள்ளது. (1 கொரிந்தியர் 13:2) அதே பாடத்தை அப்போஸ்தலன் மேலும் வலியுறுத்துகிறார். “சகல அறிவை அறிந்தாலும்… அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றும் இல்லை” அன்பு இல்லாத அறிவு ஒரு கெடுதியாக இருக்கும். மேலும் அதை வேறு விதமாக கருதினால், உண்மையான அறிவு இனினும் பெறப்படவில்லை என்பதைக் குறிக்கும். ஆனால் இதற்கு நேர்மாறாக அப்போஸ்தலர் கூறுகிறார் – “எந்த மனுஷனும் தேவனை நேசித்தால், தேவன் அவரை நேசிப்பதை, அந்த மனுஷனும் அறிந்திருப்பார்.” நமக்கு நிறைய அறிவு இருக்கலாம், ஆனால் தேவனை அறியாமல் இருக்கலாம், அவரால் அறியப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால் ஒருவர் தனிப்பட்ட முறையில் தேவனை அறியாமலும், அவருடன் ஐக்கியப்பட்டு, அன்பின் ஆவியைப் பெறாமலும் எந்த ஒரு மனிதனும் அவரது குணத்தில் உண்மையான அன்பின் பெரிய வளர்ச்சியைப் பெற முடியாது. எனவே, அன்பைப் பெறுவது என்றால், சாந்தம், கனிவு, பொறுமை, நீடிய பொறுமை, சகோதர அன்பு, அறிவு, பரத்தில் இருந்து வரும் ஞானம், நல்ல சிந்தை, உள்ளிட்ட ஆவியின் அனைத்துப் பல்வேறு ஆவியின் கனிகள் கணிசமான அளவு (பெருமையின் தாக்கத்தை தவிர்த்து) நம்மைக் கட்டியெழுப்புவது உறுதி. இந்த முன்மாதிரியை வகுத்த பின்னர், சிலைகள் உணவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது உண்மையாக இருந்தாலும், கிறிஸ்தவ அன்பு இந்த விஷயத்தில் இறுதியாக வைக்கப்படுவதை காட்டுவதற்கு, அப்போஸ்தலர் அங்கு தனது வாதத்தை தொடர்கிறார். அன்பு, அறிவையும் சுயாதீனத்தையும் பெற்ற பின், சுயாதீனத்தைப் பயன்படுத்துவது மற்றவர்கள் மீது என்ன விளைவை ஏறிபடுத்தும் என்பதைப் பார்க்கவேண்டும். மன வலிமை, உணர்தல், பகுத்தறிவு திறன்கள் போன்றவற்றின் மாறுபட்ட நிலைமைகளின் காரணமாக, அறிவு மற்றும் கொள்கைளைப் ஒரே மாதிரியாக அனைவரும் புரிந்து பாராட்ட முடியாது என்பதை உணரமுடியும்.

அறிவு மற்றும் சுயாதீனத்தின் பயன்பாடு மற்றொருவருக்கு காயம் விளைவிக்கும் என்று அன்பு உணர்ந்தால், அவைகளை தவிர்த்துவிடும். உண்மையில், ஒரே தேவன் இருக்கிறார். எனவே விக்கிரகங்கள் தேவன் இல்லை. ஆனால் விக்கிரகங்களை தேவனாக மதிக்கும் எண்ணம் பலருடைய சிந்தனையில் ஆழமாக பதிந்துவிட்டதால், விக்கிரகங்களுக்கான மரியாதையை அவர்களால் முழுமையாக விலக்குவது சாத்தியமற்றதாகிவிடுகிறது. எனவே, விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட மாம்சத்தை சாப்பிட்டால் ஏதோ ஒரு வகையில் தவறு செய்துவிட்டோம் என்ற உணர்வு அசுத்தமான ஐக்கியங்களால் மாசுபடுத்தப்பட்டது போல எண்ணுகிறர்கள். சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள், தேவனாக வணங்கப்படுகையில், அவைகளுக்கு வழங்கப்படும் உணவை பொருத்தவரையில், இது உண்மையாகவே இருக்கும். அறிவு நன்மை பயக்கும் – “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது, அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு, அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். “இந்த விஷயத்தை தெளிவாக அறிந்துகொள்ள உதவும்.

அறிவு நிச்சயமாக நன்மை பயக்கும். ஆனால் சில அன்பான சகோதரர்கள் இந்த முன்மாதிரியிலிருந்த தெளிவாகப் பகுத்தரியம் திறனைக் கொண்டிருப்பதில்லை, மேலும் அவர்கள் தங்கள் பலமுள்ள சகோதரர்களிடம் அன்பின் பிரமாணத்தின் கீழ் உரிமைக்கோரினர். 6ம் வசனத்தின் கருத்தை பொறுத்தவரையில் நமக்கு ஒரு நிறுத்தம் தோவை. அப்போஸ்தலரின் மொழி தெளிவற்றதாக இருக்கிறது என்பதற்காக அல்ல மாறாக, எதிரி தொடர்ந்து வேத வசனங்களை குதர்க்கமாகவும், தெளிவான போதனைகளை தவறாக சித்தரிக்கவும், இதனால் தேவனுடைய மந்தையை தவறாக வழிநடத்தவும் முயல்கிறான். இன்று நாம் வெளிநாட்டில் உள்ள பொய்யான போதனையை குறிப்பிடுகிறோம், “எல்லாம் யாருடையது” என்ற இந்த கூற்று – உலகின் அனைத்து பாவங்களும், எல்லா பொல்லாத செயல்களும் தேவனிடமிருந்து வந்தவை என்பதைக் குறிப்பிடுகிறது என்றும், அவரது நேரடிப்படைப்புகள், அவற்றின் ஆசிரியர் அல்லது அவரைக் கண்டறியப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. தேவனுடைய நல்ல வார்த்தையை ருசித்து, பரிசுத்த ஆவியின் பங்காளியாக ஆக்கப்பட்ட எவருக்கும் இது ஒரு வகையான தேவ தூஷனமாகும். இவ்வாறு, வேதாகமத்தின் மூலம் ஒரே மாதிரியாகக் கண்டனம் செய்யப்பட்டுள்ள பல்வேறு தீமைகளுக்கு காரணமாக இருக்கிறார் என்று சொல்லப்படும் தேவனானவர் குறித்த நேரத்தில் அவைகளை அழிப்பேன் என்று அறிவிக்கிறார்!. “தேவனுடைய எல்லா வேலைகளும் பரிபூரணமானது” என்று வேதவசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. “தேவன் குழப்பத்தை ஏற்படுத்துபவர் அல்ல”, “தேவன் எந்த மனிதனையும் சோதிப்பவரும் அல்ல” மேலும் நல்ல பலன்களைப் பெறுவதற்கு, தீமை செய்யப்படலாம் என்பதற்கான எந்த ஆலோசனைகளுக்கு அவர் இணங்குவதில்லை. (உபாகமம் 32:4; ரோமர் 3:8; 1 கொரிந்தியர் 1:13; யாக்கோபு 1:13; 1 பேதுரு 3:11). “அவருடைய எல்லா வேலைகளும் பூரணமானது” என்ற பிரகடனத்துடனும், முழு உடன்பாட்டினாலும், சாத்தானை ஒரு பரிபூரண ஜீவியாக சிருஷ்டித்தார் மேலும் ஒரு பரிபூரணமான இனமாக ஆதாமையும் சிருஷ்டித்தார். தம்முடைய கட்டளைகளை மீறி பாவத்தின் போக்கை மேற்கொள்ளும்போது, தேவன் அவர்களுக்கு தந்த சுயாதீனத்தில் குறுக்கிடவில்லை. இந்த தீமையின் மேல் இரக்கம் காண்பிக்காதவர்களுக்கு இறுதியில் இந்த தீமைகளிலிருந்து ஒரு ஆசீர்வாதத்தை தேவனுடைய ஞானமும் வல்லமையும் கொண்டு வரும். ஆனால் தீமையானவர்களையோ அவர் அழிப்பார் சங்கீதம் 145:20.

நாம் உண்ணும் உணவோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட உணவையும் நாம் தவிர்ப்பதோ நம்மை தேவனுக்கு ஏற்புடையவர்களாக ஆக்குவதில்லை என்று அப்போஸ்தலர் தனது வாதத்தைத் தொடருகிறார். தேவலுடனான நமது தொடர்பு, புது சிருஷ்டியே, இது இருதயத்தோடுள்ள தொடர்பு. கர்த்தர் நமக்குக் கொடுக்கும் ஆசீர்வாதம் புதிதாக ஜெநிப்பிக்கப்பட்ட குழந்தைகளைப்போன்றது. இது மாம்சத்திற்குரியது அல்ல, மாறாக ஆவிக்குரிய வளர்ச்சியாகும், இது இறுதியில் உயிர்த்தெழுதலில் பூரணப்படுத்தப்படும் உண்மையில், “குமாரன் யாரை விடுதலையாக்குகிறாரோ அவர் உண்மையில் சுதந்திரமானவர்”. மேலும் நாம் அனைவரும் “கிறிஸ்துவுடன் விடுதலையாக்கும் சுதந்திரத்தில் நிலைத்திருக்க நாட வேண்டும்.” ஆனால், நம்மை விட பலவீனமான பிறரைத் தடுமாறச் செய்யும் வகையில் நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதும் உண்மைதான், கிறிஸ்துவின் சுதந்திரத்தை பாரபட்சமாக பயன்படுத்திடக்கூடாது. கிறிஸ்துவுடன் விடுதலையை தரும் சுதந்திரத்தை இரண்டு நிலைகளிலிருந்து பார்க்கலாம். யூதர்கள் சாப்பிட சுதந்திரம் இல்லாத போது கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடும் சுதந்திரத்தை அது நமக்கு அளித்தால், சாப்பிடாமல் இருக்கவும் நமக்கு சுதந்திரம் அளிக்கிறது. கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டவர் மற்றும் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்ற முயல்பவர், அவருடைய சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்காக தேவனிடம் ஏற்கனவே உடன்படிக்கை செய்துள்ளார், அவருடைய மாம்ச விருப்பங்கள், இலட்சியங்கள் மற்றும் ஆசைகளுக்காக அல்ல, மாறாக சுயத்தை பலிசெலுத்தி, எஜமானரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, சகோதரர்கள் சார்பாக கூட, அவர்களின் உதவிக்காக தனது ஜீவனைக் கொடுக்க முற்படுகிறார்கள்.

சுயாதீனத்தின் இந்த இரண்டு பயன்பாடுகளும் எவ்வளவு வித்தியாசமானது அதன் சுயநலமான பயன்பாடுகள் மற்றவர்களின் நலன்களைப் பொருட்படுத்தாமல், சுய திருப்தியைக் குறிக்கும், அதன் அன்பான பயன்பாடு மற்றவர்களின் நலன்களுக்காக சுய தியாகம் செய்ய தூண்டும். ஆனால் ஏன்? மனசாட்சி தெளிவாக இருக்கும் ஒருவரின் மனசாட்சி, மற்றவரின் மனசாட்சியை கருத்தில் கொள்ளவேண்டிய கடமை என்ன? பலலினமான மனசாட்சி உள்ள நபர் தனது சொந்த மனசாட்சியைக் கவனித்துக் கொள்ள ஏன் அனுமதிக்கக்கூடாது. மேலும் அவர் விரும்புவதைப் போல சாப்பிடவோ அல்லது சாப்பிடுவதைத் தவிர்க்கக்கூடாதா? இது சாத்தியமானால் எல்லாம் சரியாகிவிடும் என்று அப்போஸ்தலன் விளக்குகிறார். ஆனால், பலவீனமான மனதுடன், பகுத்தறியும் திறன் கொண்டவர், எல்லா வகையிலும் பலவீனமானவராகவும், அதனால் மற்றவர்களின் வழிநடத்துதல்களினால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவராகவும் இருக்கலாம் – அவரது பலவீனமான பகுத்தறியும் திறன் காரணமாக அல்லது அவரது தாழ்ந்த அறிவின் காரணமாக மனசாட்சி அங்கீகரிக்க முடியாத பாதைகளில் செல்ல அவர் தயங்கலாம். ஒருவர் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட மாம்சத்தை உண்ணலாம் அல்லது விக்கிரக கோவிலில் விருந்து உண்ணலாம். ஆனால் மற்றவர்களின் பார்வையில் இது தவறாக தோன்றி, தனது வலிமையான சகோதரரின் முன்மாதிரியைப் பின்பற்ற முயற்சி செய்யலாம். இதனால் அவரது மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட்டால், அது அவருக்குப் பாவமாகிவிடும். மனசாட்சிக்கு விரோதமாக செய்யும் ஒவ்வொரு மீறலும், அது சரியோ அல்லது தவறோ, துணிகரமான பாவத்திற்கு செல்லும் ஒரு படியாகும் – இது ஒரு கீழ்நோக்கிய போக்காகும், இது தேவனுடனான ஒற்றுமை மற்றும் கூட்டுறவு ஆகியவற்றிலிருந்து மேலும் மேலும் விலகி மொத்தமாக விலகி செல்கிறது, கூடுமானால், இது இரண்டாம் மரணத்திற்கு வழிவகுக்கும். இவ்வாறு அப்போஸ்தலர் விஷயத்தை முன்வைக்கிறார்: “பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.” விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட மாம்சத்தை உண்பது பாவமாகுமா எனபது கேள்வியல்ல. ஆனால் நம் சகோதரனுக்கு, இடறலுக்கான காரணத்தை நியாயமாக நிரூபிக்கக்கூடிய எதையும் செய்வது, புது சிருஷ்டியின் பிரமாணமான அன்பின் ஆவிக்கு, எதிரான பாவமாக இருக்கும்.

இது சபையில் கிறிஸ்துவுக்குள்ளான சகோதரர்களுக்கு மட்டும் அல்ல, மாம்சத்தின்படி ஒரு சக மனுஷருக்கும் கூட நாம் இதை செய்யக்கூடாது – ஏனெனில் கிறிஸ்து இந்த முழு உலகத்தின் பாவத்திற்காக மரித்தாரே. அன்பின் பிரமாணத்திற்கு எதிராகவும், தேவனுடைய கட்டளைக்கு எதிராகவும் தனது சகோதரர்களில் ஒருவரை இடறலடையச் செய்வது மிகவும் கடுமையான குற்றம். (ரோமர் 14:13,21, மத்தேயு 18:6) மற்றவர்களை இடறலடையச் செய்வதும், அவர்கள் சகோதரர்களாக மாறுவதைத் தடுப்பதும், அவர் பார்வையில் குற்றமாகவே இருக்கும். எனவே, அறிவு நம் மனசாட்சியின் அனைத்துத் தடைகளையும், நமது சுதந்திரத்தின் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கினாலும், நாம் சுயாதீனத்தைப் பயன்படுத்துவதற்கு முன், அன்பு முதலில் அதை அங்கீகரிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. “உங்கள் முழு இருதயத்தோடு தேவனிடத்தில் அன்பு கூறுங்கள், உங்களை நேசிப்பது போல பிறனை நேசியுங்கள்” என்று அன்பு நம்மீது உறுதியான கட்டளையிடுகிறது. முதலில், அறிவோ, சுயாதீனமோ அல்ல, அன்பே இறுதியாக ஒவ்வொரு கேள்வியையும் தீர்மானிக்க வேண்டும். நாம் ஆண்டவரோடு அவருடைய நிலைப்பாட்டில் நிற்போம், மற்றவர்களுக்குக் காயம் விளைவிக்கும் வகையில் நமது கவாதீனத்தைப் பயன்படுத்தாமல், அவற்றைப் பயன்படுத்த மறுப்போம் என்பதைத் தீர்மானிக்கவேண்டும். மேலும் மற்றவர்களின் நலனுக்காக அவர்கள் தங்கள் சுயாதீனத்தை பலிசெலுத்துவார்கள்.

நம்முடைய ஆண்டவர், நம்முடைய மீட்பராக, தம்மிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தார். இந்தப் பாடத்தின் கடைசி வசனத்தில் உள்ள அப்போஸ்தலரின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, ஒரு சகோதரனைக் காயப்படுத்தும் எந்தவொரு காரியத்தையும் நாம் செய்யமாட்டோம் என்று தீர்மானிப்போம் நம்முடைய எந்த கதந்திரமும், எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், அது நம் சகோதரரைக் காயப்படுத்துமானால், அந்த சுதந்திரத்தை நாம் பயன்படுத்த மாட்டோம். அந்த சுதந்திரத்தை அவருடைய நலன் கருதி அதை நாம் அர்ப்பணித்து, பலி செலுத்துவோம். இன்னும் தேவைப்பட்டால், அவருக்காக நம் ஜீவனையும் கொடுப்போம். ஒருவேளை, இந்த கொள்கையை தவறாகப் பயன்படுத்துவதற்கான ஆபத்தும் வரலாம். உதாரணமாக, “மாம்சம் புசிப்பது எந்த வகையிலும் தவறு என்றும் விலங்குகளின் தோலைக் காலணியாகப் பயன்படுத்துவதும் தவறு என்றும்” டக்கோபொர்ஸ் (Doukhobars) நம்மிடம் கூறலாம். மேலும் இந்த விடியத்தில் எங்கள் பலவீனமான மனசாட்சிக்கு நீங்கள் இணங்க வேண்டும் மற்றும் மாம்சம் சாப்பிடவோ அல்லது காலணிகள் அணியவோ கூடாது. நாம் நம்முடைய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அப்போஸ்தலர் விளக்கிய கேள்விக்கு ஒத்த கேள்வி இல்லை என்று நாம் பதிலளிக்கிறோம். இதற்கு மாறாக, தேவனுடைய வார்த்தை மற்றும் சமூகத்தின் பழக்கவழக்கங்கள் அனைத்தும் இந்த குழப்பமான ஜனங்களுக்கு எதிரானவை, மேலும் இந்த கேள்வியில் அவர்களின் மனம் சமநிலையின்மைக்கு அடிபணிவது தவறான திசையில் அவர்களுக்கு உதவுவதாகும். மாமிசம் உண்பதையோ அல்லது காலணிகள் அணிவதையோ நாம் தவிர்ப்பது அவர்களுக்கு எந்த அர்த்தத்திலும் சிறந்த பார்வையாக இருக்காது. அல்லது நாம் மாம்சம் உண்பது அல்லது தோல் உடுத்துவது அவர்களின் மனசாட்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஜனங்கள் கூடும் இடங்களை உஷ்ணமாகவும், வசதியான இருக்கைகள் வழங்குவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கையில், மற்ற சகோதரர்கள் தேவனை ஆராதிப்பதற்கு இசை கருவிகளை பயன்படுத்துவதை எதிர்க்கிறார்கள்.

இவை சில சமயங்களில் அப்போஸ்தலரின் வாதத்தை துஷ்பிரயோகம் செய்யலாம், சகோதரர்களின் சுதந்திரத்தால் தங்கள் மனசாட்சி காயமடைகிறது என்று கூறலாம் அவர்களின் நலன் கருதி அத்தகைய சுதந்திரங்கள் குறைக்கப்படவேண்டும். அவர்களுக்கு தமது பதிலும் – அவர்கள் அப்போஸ்தலரின் வாதத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதாக இருக்கவேண்டும். சுபைக்கு பொதுவான பாதிப்புகளை ஏற்படுத்தும் விதத்தில் தேவனுடைய ஜனங்கள் ஒருவரையொருவர் மனக்கவலைகளுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. சபையில் மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கக்கூடாது. அதன் காரணமாக ஆவிக்குரிய நன்மைகள் மற்றும் சுயாதீனங்கள் பலி செலுத்தப்படக்கூடாது. எப்போதும், கர்த்தருடைய ஜனங்களின் எல்லா காரியங்களிலும் அன்பு எப்போதும் குரல் கொடுக்க வேண்டும். தங்கள் சகோதரர்கள் மீது பலவீனத்தின் மதிப்பெண்ணில் தவறுதலாக சுமத்துவது, போன்றவையும் கூட அன்புடன் நடத்தப்படவேண்டும். மேலும் அவர்களின் ஆட்சேபணைகள் போன்றவைகளை நியாயமாக விசாரிக்கப்படவேண்டும். கர்த்தர் தங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கும் அனைத்தையும் செய்ய அவர்களுக்கு முழு சுதந்திரம் இருப்பதையும், தீமையின் ஒவ்வொரு தோற்றத்திலிருந்தும் விலகியிருப்பதையும், தங்கள் சகோதரர்களுக்கும் அதே சலுகைகள் வழங்கப்படுவதையும் அவர்கள் பார்க்க வேண்டும். அவர்களால் மனசாட்சியின்படி இசைக்கருவியுடன் பாடவோ அல்லது கீர்த்தனைகளைப் பாடவோ முடியாவிட்டால், அவர்கள் அமைதியாக இருக்கட்டும், அல்லது வீட்டில் தங்கள் பாடலை பாடட்டும், இசை கருவிகளைக் கொண்டு தேவனைத் துதிப்பதற்கும், விக்கிரக கோவிலில் சாப்பிடுவதற்கும் மிக பெரிய வித்தியாசமுண்டு. அப்போஸ்தலர் முடிவு செய்த இந்த கேள்விக்கு ஒத்த கேள்வி இன்று நம் முன் வரலாம், அதாவது பெயரளவிலான சபைகளில், “புசை பலி” அல்லது “புனிதப்படுத்தல்”, புரோட்டஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்க சபைகளில் பொது வழிபாட்டில் காணப்படுகிறது. அத்தகைய கேள்விக்கு, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் மனதில் முழுவதுமாக வழிநடத்தப்பட வேண்டும். மேலும் அவரவர் மனசாட்சியின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்.

நம்முடைய தீர்ப்பில், ரோமன் கத்தோலிக்க, கிரேக்க கத்தோலிக்க அல்லது உயர் எபிஸ்கோபல் சபைகளில் பூசை பலிகளில் பங்கேற்பது, விக்கிரக கோவிலில் அமர்ந்து விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவை புசிப்பதை விட மிகவும் கடுமையான குற்றமாகும். ஏனெனில் பூசை பலி குறிப்பாக தேவனுக்கு முன் அருவருப்பானது. (எபிரெயர் 7:25; 10:14) பெரும்பான்மையான புராட்டஸ்டன்டுகளால் அனுசரிக்கப்படும் கர்த்தரின் இராபோஜனத்தில் பங்கேற்பதைப் பொறுத்தவரை: நாம் அதில் எந்தத் தீங்கும் பார்க்க முடிகிறதில்லை. வேதவசனங்களின்படி, அத்தகைய அனுசரிப்பின் பொருத்தமற்ற தன்மையை உணர்ந்தாலும், பங்கேற்பவர்கள் ஞானமாக தேவனிடத்தில் பயபக்தியாக ஆராதிக்கிறார்கள். எவ்வாறாயினும், மகா பாபிலோனின் சேவைகளில் தவறாமல் பங்கேற்பது மற்றும் கர்த்தரின் இராப்போஜனத்தைப் பற்றிய தவறான விளக்கம் கண்டனத்திற்குரியது. இது நமது சொந்த ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு தீங்கு விளைவிக்கும், மேலும் சில பலவீனமானவர்களின் பகுத்தறிவுகளில் தடுமாறுவதற்கும் காரணமாகிவிடும். எனவே நம்முடைய அறிவுரை என்னவென்றால், ஒருபுறம், ஒரு பிரசங்கத்தை கேட்க, ஒரு பெயரளவிலான சபை கட்டிடத்திற்குள் நுழைவதற்கான பயமுள்ள ஒரு கட்டுப்பாட்டை நாம் உணரவேண்டாம், மறுபுறம், தொடர்ச்சியாக அவர்களின் காரியங்களில் பங்கேற்பதன் மூலம் அவர்களின் தவறுகளுக்கு நாம் நம்முடைய ஒப்புதலையும் வழங்க வேண்டாம். அத்தகைய கூட்டங்களில் இவைகளை தவிர, சத்தியத்தை முன்வைப்பதற்கான முழு வாய்ப்பை நமக்கு கொடுத்தால் சரி நம் காலத்தில் இந்த கொள்கையின் மற்றொரு எடுத்துக்காட்டு, மதுபானத்தைப் பற்றிய கேள்வியில் காணப்படுகிறது. எந்த ஒரு மனிதனும் குடித்து, தன் சுயநினைவை இழந்து, மற்றவர்களுக்கு பிரச்சனைகளை விளைவிப்பதற்கும் தன்னைத்தானே பொறுப்பாக்கிக் கொண்டவர் எந்த விவாதமும் இல்லாமல், அவனுடைய சிருஷ்டிகரை அவமதிக்கிறார் என்பதில் தவறே இல்லை. தேவனை அவமதிக்காமலும், மற்றவர்களுக்கும், தனக்கும் தீங்கு விளைவிக்காமலும், மதுபானங்களைப் பயன்படுத்துவதைப் பொறுத்தவரை சுதந்திரத்தைப் பற்றிய கேவ்வி எழும்புகிறது. போதை தரும் மதுபானங்கள் பொதுவாக உலகிற்கு ஒரு ஆபத்தான சோதனை என்ற உண்மையை அனைவரும் உணர்ந்துள்ளனர், மற்றும் மதுபானங்களைப் பயன்படுத்துவதில் முழு சுயக்கட்டுப்பாட்டின் அதிகாரம் இருப்பதாக உணரும் சகோதரர்கள், இந்த பாடத்தில் அப்போஸ்தருடைய வாதத்தை பயன்படுத்தவேண்டும் என்பதே நம்முடைய ஆலோசனை.

அவர்கள் தேவனை அதிகமாக மதிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவும், தங்களை விட பலவீனமானவர்களுக்கு உதவும்படியாக, பூரண மதுவிலக்கின் திசையில் தங்களுடைய சுயாதீனத்தை பயன்படுத்தலாம் அதாவது மிதமாக மது அருந்துவதை காட்டிலும் முற்றிலுமாக அந்த உரிமையை தியாகம் செய்யலாம், நம்மால் அறிய முடிந்த வரையில், போதை என்பது தற்காலத்தில் நம் இனத்தை வாட்டி வதைக்கும் மிகக் கொடிய தீமைகளில் ஒன்றாகும். வீழ்ச்சியினாலும், பரம்பரையினாலும் பலர் மிகவும் பலவீனமாக இருப்பதால், ஒரு முறை போதைப் பொருளுக்கு அடிபணிந்தால், போதைப்பொருட்களின் கட்டுப்பாட்டை அவர்களால் முழுமையாக எதிர்க்க முடிவதில்லை. தேவனுக்காகவும், நீதிக்காகவும், இதனால் சகோதரர்களின் நலனுக்காகவும், பொதுவாக உலக நலனுக்காகவும் சில சுதந்திரங்களையும் சலுகைகளையும் வழங்குவதற்காகவும், பிறரின் ஆசீர்வாதத்திற்காகவும், தங்கள் ஜீவனை அர்ப்பணித்தவர்கள், இந்த விஷயத்தில் அவர்கள் இதை மறுக்க வேண்டும் என்று கேட்பது மிகையாகுமா? புகையிலை, சீட்டாட்டம், மற்றும் சில மனுக்குலத்தை பாவத்தில் ஈர்ப்பதற்காக எதிராளி பயன்படுத்தும் பல்வேறு கருவிகளின் பயன்பாட்டை குறித்தும் இதே போன்ற வாதங்கள் வலியுறுத்தப்படலாம். முழுமையாக, அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய கர்த்தருடைய கிருபையிலும், அவருடைய அன்பின் ஆவியிலும் நாம் வளர்ச்சி அடையும் போது, நம்முடைய சொந்த நலனுக்காக நம்முடைய மாம்சத்தின் எல்லா அசுத்தங்களை நீக்குவதற்காக மட்டும் அல்ல, கர்த்தரைப் போலவும் நாம் இருப்பதற்காகவும் மகிழ்ச்சி அடையவோம். ஆனாலும் கூட, அன்பின் உதாரணத்தில், மற்றவர்கள் மீது தீய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்தையும் நம்மிடமிருந்து விலக்கி வைக்க விரும்பவேண்டும். நம்முடைய பொன்னான வேத பகுதி இங்கே உள்ளது – இது கிறிஸ்து இயேகவுக்குள் புது சிருஷ்டிகளாக மாறிய அனைவரிடமும் முறையிடுகிறது. எனவே, – மற்றவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், நம்முடைய சொந்த ஆசீர்வாதத்திற்காகவும், கிறிஸ்துவில் புது சிருஷ்டிகளாக அவருடைய சரீர அங்கங்களாக நாம் கட்டியெழுப்பப்படுவதற்காகவும்”நாம் சமாதானத்தை உண்டாக்கும் விஷயங்களைப் பின்பற்றுவோம்”.

F289 through F292 சபையின் ஒழுக்கம் (11ம் கேள்வி காண்க)

ஒழுங்கை நிர்வகிப்பது மூப்பர்களின் செயல்பாடு மட்டுமல்ல, அது முழு சபையின் செயல்பாடாகும். ஒருவர் தவறிலோ அல்லது பாவத்திலோ இருப்பதாகத் தோன்றினால், அவரால் காயப்பட்டவர் மட்டுமே அல்லது அவருடைய தவறை முதலில் கண்டறியும் அங்கத்தினர் மட்டுமே அவரது தவறை சுட்டிக்காட்டவேண்டும். கடிந்துகொள்ளப்பட்டவர் தன்னைத் திருத்திக்கொள்ள தவறி, அந்த பாவத்தை தொடர்ந்தால், எந்தவிதமான தப்பெண்ணம் இல்லாமல் இரண்டு அல்லது மூன்று சகோதரர்கள், அந்த விஷயத்தைக் கேட்டு, தகராறு செய்யவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். (அவர்கள் மூப்பர்களாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அவர்களின் மூப்பர் என்ற அந்தஸ்து வழக்கில் எந்த அதிகாரத்தையும் வல்லமையையும் சேர்க்கக்கூடாது.) இந்தக் குழு எந்தக் கட்சியுடன் ஒருமனதாக முடிவெடுத்தால், மற்றொரு கட்சி அதை ஒப்புக்கொள்ள வேண்டும் மற்றும் அந்த விஷயத்தை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – திருத்தம் அல்லது சீரமைப்பு, முடிந்தவரை, உடனடியாக இவைகளை செயல்படுத்தவேண்டும். தகராறு செய்தவர்களில் ஒருவர் இன்னும் தவறான போக்கில் தொடர்ந்தால், முதலில் பிரச்சினையை கொண்டுவந்தவர் அல்லது குழுவில் அழைக்கப்பட்டவர்களில் ஒருவர், பின்னர் இந்த விஷயத்தை சரீரமாகிய சபைக்கு முன் கொண்டுவரும் தங்களுடைய சிலாக்கியத்தை பயன்படுத்தலாம். ஆனால் விரைவாக அல்ல. இவ்வாறாக, மூப்பர்கள் எந்த விதத்திலும் அங்கத்தினர்களின் நியாயாதிபதிகளாக இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. விசாரணை மற்றும் தீர்ப்பு சபையினிடத்திற்கு விடப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு அடிப்படையான படிநிலைகள் எடுக்கப்பட்ட பிறகு, மூப்பர்களுக்கு உண்மைகள் அறிவிக்கப்பட்டபின், வழக்கையும் அதன் அனைத்து விவரங்களை கேட்கவும், பயபக்திக்குரிய தலைமையில் முடிவை வழங்கும்படியாக, ஒரு நீதி மன்றமாக, அர்ப்பணிக்கப்பட்ட சரீர அங்கமாகிய சபையை கூட்டவேண்டும். எடுக்கப்பட்ட முடிவு ஒருமனதாகவும் அல்லது கிட்டத்தட்ட அப்படியாக இருக்கும்படிக்கு, எல்லா விஷயமும் மிக தெளிவாக இருக்கவேண்டும். மேலும் கண்டனம் செய்யப்பட்டவர்கள் உயர் பண்புடன் நடத்தப்படவேண்டும். இதனால் சரீர அங்கத்தினர்களுக்குள் அமைதியும் ஒற்றுமையும் பாதுகாக்கப்படவேண்டும். சபையின் கண்டனத்தின் தருணம் வரை கூட மனந்திரும்புதல் சாத்தியமாகும். மனந்திரும்புதல் மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கைகளின் ஒவ்வொரு படிநிலையின் நோக்கமாகும் அத்து மீறுபவர்களை தண்டிப்பதற்காக அல்ல அவர்களை மீட்டெடுப்பதே பொருள். தண்டிப்பது நம்முடையது அல்ல அது தேவனுடையது. “பழிவாங்குதல் எனக்குரியது. நானே பதில் செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ரோமன் 12:19) இந்த நடவடிக்கையின் எந்தப் படியிலும் தவறு செய்பவர் மனந்திருப்பினால், இது கர்த்தருடைய ஆவியைப் பெற்ற அனைவருக்கும் நன்றி மற்றும் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கவேண்டும். (ரோமர் 8:9)

உண்மையில், தவறு செய்தவர், முழு சபையின் முடிவைக் கேட்க (கீழ்படிய) மறுத்தாலும், எந்த தண்டனை விதிக்கப்படவோ, அல்லது முயற்சிக்கவோ கூடாது. பிறகு நடப்பவை என்ன? சபை அவரிடமிருந்து அதன் ஐக்கியத்தை மற்றும் சகோதரத்துவத்தின் அனைத்து அடையாளங்களையும் வெளிப்பாடுகளையும் விலகி கொள்ளவேண்டும். அப்போதிருந்து அந்த குற்றவாளியைப் “பொதுவானவராகவும், அந்நியனாகவும் நடத்தவேண்டும்.” (மத்தேயு 18:17)

இந்த நடவடிக்கைகளில் எந்த நேரத்திலும் குற்றவாளியின் தவறுகள் அல்லது தோல்விகள் பொதுச் சொத்தாக்கப்படாது. இது அவரையும் சபையையும், சபையின் தலையாகிய நம்முடைய கர்த்தரையும் அவதூறு செய்வதாகும். புறஜாதிகளுக்கும், ஆயக்காரர்களுக்கும் எதிராக நாம் குறை கூறக்கூடாது அல்லது எதிராக குற்றம் சாட்டக்கூடாதது போல, பிரிந்து போன பின் அவரைக் கடுமையாகப் பேசக்கூடாது. “எந்த மனுஷரையும் குறித்து தீமை பேசாமல்”, “எல்லாருக்கும் நன்மை செய்யவேண்டும்.” (தீத்து 3:2; கலாத்தியர் 6:10) “எல்லா மனுஷருக்கும்” இந்த கடைசி இரண்டு தேவைகளுக்குக் கண்டிப்பாகக் கீழ்ப்படிவதை வலியுறுத்தும் குணம் அன்பு கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் சக உறுப்பினரான “சகோதரர்” தவறான அல்லது குழப்பமான அறிக்கைகளால் காயப்படக்கூடாது என்று எவ்வளவு அதிகமாக அன்பு வலியுறுத்தினாலும், அவருடைய பலவீனங்கள் அல்லது தவறுகள் அல்லது பாவங்கள் இரக்கமற்ற உலகத்திலிருந்து மட்டுமல்ல, “விசுவாச வீட்டாரிடமிருந்தும்”, சபையினிடமிருந்தும் கூட கவனமாக மறைக்கப்பட வேண்டும். அதாவது “சபைக்கு சொல்லும்” இறுதி சுற்று வரையில் அது முற்றிலும் மறைக்கப்படவேண்டியது அவசியம். ஒவ்வொரு அடியிலும் தவறு செய்பவர் சில தவறான புரிதல்களின் கீழ் அவதிப்படுகிறார் என்று அன்பின் ஆவி நம்பும். மேலும் ஒரு பாவியை அவரது வழியின் பிழையிலிருந்து மாற்ற ஞானத்திற்காகவும், கிருபைக்காகவும் ஜெபிப்பார். இதனால் ஒருவேளை ஒரு ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றுவார்! (யாக்கோபு 5:20)

அன்பின் ஆவியான பரிசுத்த ஆவி, சபையின் ஒவ்வொரு அங்கத்தினரிடமும் மிக அதிகமாக வாசம் செய்வதினால், யாரை பற்றியும், குறிப்பாக ஒரு சக உறுப்பினரைப் பற்றி அவதூறான கதைகளைக் கேட்பது வேதனையைக் கொடுக்கும்! இது ஒரே நேரத்தில் ஒரு பாதி பிரச்சினைகளை அல்லது அதற்கு மேற்பட்டவைகளை நீக்கும். நம்முடைய கர்த்தரால் வரிசைப்படுத்தப்பட்ட மேற்கூறிய நடைமுறைகளின் பின்வருபவை, அடிக்கடி சபையை சோதனைக்குக்குள் வழிவகுக்காது. மாறாக, அதே நேரத்தில் பகைமைகளுக்கான அடித்தளத்தை அகற்றும் போது, சபையின் தீர்ப்பு, கர்த்தருடைய தீர்ப்பு என்று மதிக்கப்படும். மேலும் சபையின் குரல் கேட்கப்பட்டு அதன்படி கீழ்ப்படிந்திருக்கும். கூடுதலாக, ஒழுங்கும். அன்பும் மேலோங்குவதால், ஒவ்வொருவரும் முடிந்தவரை “தனது சொந்த விடியத்தை மனதில் கொள்ள வேண்டும்”. எந்த விஷயத்திலும் தன்னை அல்லது சபை அல்லது சத்தியத்தைப் பொருத்தவரை சில முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் மட்டுமே தனது சகோதரனைக் கண்டிக்கவோ அல்லது அவரைத் திருத்தவோ முயற்சிக்கவோ அல்லது ஒரு குழுவாக சபைக்கு முன் விஷயத்தை கொண்டு வரவோ முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் இவைகளை தவிர்ப்பதில் உறுதியாக இருக்கவேண்டும், சந்தேகத்திற்கு இடமின்றி, சபை பிரச்சினைகளில் பெரும்பாலானவை (சமுதாயம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் போன்றவை) தவறான விருப்பத்தில் இருந்தோ அல்லது தற்செயலாக செய்த தவறுகளிலிருந்தோ அல்ல, மாறாக தவறான புரிதலினாலும், குறைந்தபட்சம் உள்நோக்கங்கள் அல்லது எண்ணங்களின் தவறான விளக்கங்களினால் ஏற்படக்கூடியதாக உள்ளது. நாக்கு பொதுவாக தவறுகளின் தலைவன், மேலும் இது ஒரு நல்ல மனதின் ஒரு பகுதியாகும். எனவே உதடுகளுக்கும் இருதயத்திற்கும் காவல் வைப்பது அவசியம். ஏனெனில், அதில் இருந்து கிருபையற்ற வார்த்தைகள் புறப்படும், உதடுகளின் வெளிப்பாடு தீய எண்ணங்களை கொளுத்தி விட்டு பலரை காயப்படுத்தும்.

இந்த முக்கியமான விஷயத்தில் கர்த்தரும், ஆண்டவருமாக இருப்பவரிடமிருந்து கடுமையான அறிவுறுத்தல்களை புது சிருஷ்டிகளாகிய சபை பெற்றுள்ளது. எந்த விதமான முந்தைய சம்பாஷணைகள் இல்லாமலும், யாருடனும் பேசாமல், காயமடைந்த நபரிடம் தனியாக, தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு செல்லும் நபரிடம், தேவனுடைய அன்பு நிரப்ப வேண்டும். அவர்கள் காயப்பட்டவரின் நடத்தையை வெட்கப்படுத்தவோ, அவரைத் துன்புறுத்தவோ அல்லது வேறுவிதமாக தண்டிக்கவோ கூடாது. அதற்கு பதிலாக தவறை நிறுத்துவதற்கும், முடிந்தால் ஏற்கனவே பெற்ற காயத்திற்கு சில இழப்பீட்டைச் செய்யலாம். முதலில் அல்லது பின்னர், அந்த தவறுகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வது இரக்கமற்ற மற்றும் அன்பற்ற செயலாகும் – இது நம்முடைய தலையாகிய ஆண்டவரின் வார்த்தைக்கும் ஆவிக்கும் எதிரானது. இந்த விஷயத்தை சொல்லலாமா? என்ற அறிவுரையும் கூட கேட்கக்கூடாது. இதைப் பற்றிய ஆண்டவரின் அறிவுரை நம்மிடம் உள்ளது, அதைப் பின்பற்ற வேண்டும். வழக்கு விசித்திரமானதாக இருந்தால், உண்மையான பிரச்சினை மற்றும் தவறு செய்தவரை வெளிப்படுத்தாமல், அதை ஒரு கற்பனையான வழக்காக சொல்லி, ஞானமுள்ள முத்தவர்களிடம் அறிவுரைகளை கேட்கவேண்டும். பிரச்சினை தீவிரமானதாக இல்லாவிட்டால், அனைவரின் நன்மைக்காக தவறு செய்தவரிடம் தனிப்பட்டமுறையீடு செய்வதோடு அவர் கேட்டாலும், கேட்க முன்வந்தாலும் சரி, அந்த விஷயத்தை நிறுத்தவேண்டும். ஆனால் இரண்டாவது படி அவசியமாகக் கருதப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டினவர் முன்னிலையில் அவர்கள் கூடும் வரை பிரச்சினையைப் பற்றி எந்த விளக்கமும் அளிக்கப்படக்கூடாது. இதனால் அவதூறான “பேச்சுக்கள்” தவிர்க்கப்படும் மற்றும் பாரபட்சமின்றி வழக்கு விசாரணைக்கு சகோதரர்களின் குழு வரும். மேலும் இரு தரப்பினரும் புத்திசாலித்தனமாக ஆலோசனை வழங்குவதில் சிறப்பாக செயல்படுவர். ஏனெனில், பிரச்சினை இரு தரப்பிலும் இருக்கலாம், அல்லது முழுவதுமாக குற்றம் சாட்டுபவர் பக்கத்திலும் இருக்கலாம். எல்லா நிகழ்வுகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர் அத்தகைய நியாயமான கையாளுதலினால் சாதகமாக ஈர்க்கப்படுவார், மேலும் அவரது போக்கு தவறானது என்று அவர்களுக்குத் தோன்றினால் அத்தகைய ஆலோசகர்களுக்கு அடிபணிய வாய்ப்பு அதிகம், ஆனால் குழுவால் தவறாகக் கருதப்படும் ஒருவர் ஒப்புக்கொள்வாரோ இல்லையோ, முழு விஷயமும் கண்டிப்பாக மறைக்கப்பட்டிருக்கவேண்டும். ஒருவேளை அது போதுமான முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டால், கடைசியாக அது சபைக்கு முன் கொண்டு வரப்படும் வரை அதைப் பற்றி யாருக்கும் அறிவிக்கக்கூடாது. பின்பு இது முதன் முறையாக அது பரிசுத்தவான்களுக்கு மட்டுமே பொதுவான காரியமாக இருக்கும், மேலும் அவர்கள் பரிசுத்தவான்களாக இருப்பதால், எந்தவொரு சரீர பலவீனம் அல்லது பாவங்களைப் பற்றி எவரிடமும் தேவைக்கு மேல் எதுவும் சொல்ல விரும்பமாட்டார்கள்.

சபையாகிய நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகளை நிறைவேற்றுவது, ஒவ்வொரு தனிநபரையும் சார்ந்தது. எனவே, ஒவ்வொருவரும் அவரவர் தீர்ப்பின் நியாயத்தை பகுத்தறிய வேண்டும். ஐக்கியத்தை திரும்பப் பெறுவதற்கான அபராதம், நீதியில் ஒரு திருத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்டவரின் பரிந்துரையாகும். அன்பின் ஆவி இல்லாமல், ஒழுங்கற்ற முறையில் நடப்பவர்களை பிரிப்பது, சபையின் பாதுகாப்பிற்காக செய்யும் சேவையாகும். இது ஒரு நிரந்தரமான பிரிவினையாகக் கருதப்படக்கூடாது, ஆனால் கண்டிக்கப்பட்டவர் தனது தவறை உணர்ந்து ஒப்புக்கொண்டு, அவரது திறமைக்கு ஏற்ப திருத்தம் செய்யும் வரை அவர் பிரிந்திருக்க வேண்டும்.