CD-PRAYER-Q-28
R3223 [col. 2:5]: –
சாமுயேலின் மேன்மையான வாழ்க்கை, பல்வேறு சூழ்நிலைகளை, கர்த்தருடைய பிள்ளைகள் மாதிரியாக பின்பற்றலாம். நமக்கு நெருக்கமாகவும், அன்பாகவும் இருப்பவர்களுக்கு, நம்முடைய அன்பும் இரக்கமும் அவசியமானது. மேலும் நம்முடைய அன்பான எஜமான் நமக்குக் காட்டியபடி, நம்முடைய எதிரிகளுக்காகவும் ஜெபித்து, அவர்களின் நலனை விரும்பவேண்டும். நம்முடைய எதிரிகளுக்காகவும் நமது ஜெபங்கள் இருக்கவேண்டும் மற்றும் அவர்களுக்குப் புரிதலின் வாய்ப்பினைக் கர்த்தர் தமது பராமரிப்பில் வழங்கவேண்டும் என்றும், தெய்வீக ஞானத்தின் இத்தகைய அனுபவங்கள், கர்த்தருடன் முழுமையாக ஒத்துப்போகவேண்டி அவர்களின் உன்னத நலனுக்காக இருக்கிறது என்றும், இதனால் நம்மிடமும் மற்றவர்களிடமும் அவர்கள் மீண்டும் இணக்கமாக வர வேண்டும் என்றும் நம்முடைய நல்வாழ்த்துக்கள் இருக்கவேண்டும். தங்களுடைய நியாயாதிபதியாகவும், ஆளுனராகவும் இராதபடிக்கு தீர்க்கதரிசி நீக்கம்பட்டிருந்தாலும், தேவனுடைய முன்னேற்பாட்டில் அவர்களுக்கு சேவை செய்ய அவர் அனுமதிக்கும் வரை, அவர்கள் அவரது உதவியை ஏற்றுக்கொள்ளும் வரை, சரியான வழியில் அவர்களை பயிற்றுவிப்பாளாராக இருப்பதிலிருந்து அவர் பின்வாங்க மாட்டார் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
R1842 [col. 2:4]: –
மரணத்திற்கு ஏதுவான பாவம் செய்யாதவர்களின் சார்பாக பரிந்துரைக்கப்பட்ட ஜெபத்தின் மதிப்பின் ஒரு வகை இங்குள்ளது. (1 யோவான் 5:16) இப்படிப்பட்ட அனைவருக்காகவும் ஜெபிக்கக்கூடிய இந்த கடமையையும் சிறப்புரிமையையும் நாம் மனதில் கொள்வோம். மேலும் நம்மை ஊக்குவிக்கும்படியாக, தேவன் அவருடைய பழைய ஏற்பாட்டின் விசுவாசிகளுடன் நடந்துகொண்ட விதத்தை நினைவில்கொள்வோம். மேலும் தேவனுக்கு எதிராக விசுவாசமற்ற காரியங்களை நோக்கி அணுகும் எந்தவொரு விஷயத்திலும் நாம் எச்சரிக்கையாக இருப்போம். அதாவது அவருக்கு எதிராக கலகம் செய்து எகிப்தாகிய உலகத்திற்கு திரும்புவதற்கான எந்தவொரு மனநிலையையும் பெறவேண்டாம். மேலும் விசுவாச குறைவு, கடந்த நாட்களில் தேவன் நம்மை வழிநடத்தினதையும், அவர் செய்த அனைத்து உதவிகளுக்காக அவரை பாராட்டுவதிலும், புகழ்வதிலும் குறைவுப்படுவதை குறிக்கிறது. ஆகவே, இனி வரும் நாட்களில் அவரை விசுவாசிப்பதற்கும் தவறிவிடுவோம்.