Q-3
“சங் 25:9 – “சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.”
F97[P2]
பரத்திலிருந்து வரும் ஞானத்தை பெற்றுக்கொள்வதற்கு, கேட்கிற காதுகள் மிக அவசியம், ஆனால் அப்படிப்பட்ட காதுகளை பெறுவதற்கு, இருதயத்தில் தகுதி பெற வேண்டும். தேவையான சாந்த குணம் மிக அவசியம். ஒருவேளை நாம் மிகவும் மேன்மையுள்ளவர்கள் என்று எண்ணினால், தெய்வீக பார்வையிலிருந்து நம்முடைய பலவீனங்களையும் அபாத்திரமான நிலையையும் உணருவதற்கு தவறிவிடுவோம். நாம் உண்மையில் யார் – என்பதை மனத்தாழ்மையோடு ஒப்புக்கொள்ள, நேர்மையான இருதயம் தேவைப்படுகிறது. இந்தக் கோணத்திலிருந்து நாம் பார்க்கும்போது நீதியின் மேல் வாஞ்சையுள்ளவர்களாக தேவனோடு ஐக்கியப்பட விரும்புவோருக்கு, ஆண்டவராம் இயேசு இரட்சகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆயினும், துவக்கத்தில் இதை அநேகர் புரிந்துக்கொள்வதில்லை. முதலில் நாம் அனைவரும் கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்தோம் என்பதை அறிந்துக்கொள்ளவேண்டும். கிறிஸ்துவின் நீதியான பலியை தேவன் நமக்காக ஏற்றுக்கொண்டார். இப்படியாக, அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம், அவருடைய கீழ்படிதலினால் பிதாவாகிய தேவன் நம்மை ஏற்றுக்கொண்டார். நம்முடைய பாவங்களை அவர் சுமந்ததினால், நாம் நீதியின் வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டோம். இவ்வாறாக, இயேசு நமக்காக ஞானமும், நீதியும் மீட்புமானார். நாம் இந்த அறிவை பயன்படுத்துவதற்குமுன், தேவனுக்கு முன்பாக மனதார கிறிஸ்துவின் ஈடுபலியினால் நாம் நீதிமானாக்கப்பட்டு, அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சுத்திகரிக்கப்படவேண்டும். தொடர்ந்து நாம் வளர்ச்சியடையும்போது, நாம் முழுமையாக மீட்கப்பட்டு மகிமையடைவோம். இப்படியாக, நாம் வளர்ச்சியடையும் பட்சத்தில் எந்த நிலையிலும் இயேசுவின் ஞானம் நம்மைவிட்டு விலக முடியாது. நம்முடைய ஓட்டத்தின் இறுதி வரைக்கும் அவர் நம்முடைய ஆலோசனை கர்த்தராக இருக்கவேண்டும். அவருடைய வழிநடத்துதலின் கீழ் நாம் நம்மை முழுமையாக தத்தம் செய்வதற்கும், அதற்குப்பின் அந்த ஞானத்தின் மூலம் நாம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு தேவனுடைய சித்தத்தைச் செய்யவேண்டும். பரலோக பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முக்கியமாக பரத்திலிருந்து வரும் ஞானத்தை நாம் பயன்படுத்துகிறோம். “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும் மாயமற்றதாயுமிருக்கிறது” என்று யாக்கோபு அந்த ஞானத்தை குறித்து விவரிக்கிறார். (யாக் 3:17) உலக ஞானம் சுயநலத்திற்காகவும், சுயசித்தத்திற்காகவும், சுயநீதிக்காகவும், சுயமேன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இவைகள் கசப்பான பொறாமையையும், பகையையும் வருவிக்கும் என்று அப்போஸ்தலன் குறிப்பிடுகிறார். ஏனெனில் இது உலகத்திலிருக்கும் சாத்தானால் உண்டானவைகள். ஆனால் பரத்திலிருந்து வரும் ஞானமோ இதற்கு எதிரிடையானது. தெய்வீக அன்பை கொண்டதும், சுயநலமற்றதும், பெருமைக்கொள்ளாததும், அநீதியில் மகிழாமல், சத்தியத்தில் மகிழக்கூடியதாகவும் இருக்கிறது.
R2250 [col. 2 P 2]
“நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் திருப்தியடைவார்கள்” ஆசீர்வதிக்கப்பட்ட இந்த வசனம் யாருக்கு பொருந்தக்கூடியதாக இருக்கிறது? நிச்சயமாக தெரிந்துக்கொள்ளப்பட்ட சபை வகுப்பாரை தவிர வேறு யாருக்கும் இது குறிப்பிடப்படவில்லை. சபை மட்டுமே இக்காலத்தில் “ஆவியில் எளிமையுள்ளவர்களாகவும்”, “சாந்த குணமுடையவர்களாகவும்” இருக்கிறார்கள். இக்காலத்தில் இவர்கள் மட்டுமே நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களும், ஒவ்வொரு பாடத்திலும் உள்ள தெய்வீக வெளிப்படுத்துதலை ஆர்வத்துடன் தேடுபவர்களாகவும் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு ஏதோ நீதியின் மேல் கொஞ்சம் தாகம் இருக்கலாம். ஆனால் இவர்கள் வெகு சீக்கிரத்தில் திருப்தியடைகிறார்கள். விசேஷமாக, பிரபலமில்லாத சத்தியங்கள் மிகவும் சுவையுள்ளதாக இருந்தாலும், அதற்குப் பின் வரும் உபத்திரவங்களும், சாதகமற்ற உலக நிலைகளும் அவர்களால் மேற்கொள்ள முடிவதில்லை. துவக்கத்தில் இவைகளை பெற்றுக்கொள்ள போதுமான அளவு நேர்மையும் உண்மையும் இருந்தால் போதும். அதே சமயத்தில் இதனிமித்தமாக வரும் உபத்திரவங்களையும் துன்பங்களையும் இவர்களால் சகிக்கமுடியாத பட்சத்தில் அவர்கள் இருக்கும் நிலையில் இருந்துவிடுவார்கள். ஆனால் சிறு மந்தை மட்டுமே இவைகளை ஜெயித்து, முடிவு பரியந்தமும் நிலைத்து நிற்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் மட்டுமே முழுமையாக திருப்தியடைவார்கள். வெகு சீக்கிரத்தில் முதலாம் உயிர்த்தெழுதலில் அழிவுள்ள மனுஷன் அழியாமையை தரித்துக்கொள்ளும் போது அதாவது மாம்ச சரீரம் ஆவிக்குரிய சரீரமாக மாற்றப்படும் போது இவர்கள் முழுமையாக திருப்தியடைவார்கள். அதுவரையில் குறைவாக பெற்றிருந்த ஞானமும், நீதியும், பரிபூரணப்படும். ஆனால் இக்காலத்திலும் இந்த வகுப்பார் அபரிவிதமான சத்திய ஞானத்திலும், அதிகபட்சமான ஆசீர்வாதங்களையும் அனுபவித்து மகிழ்கிறார்கள். மற்ற எந்த வகுப்பாருக்கும் இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை.
R2860 [col. 2 P 1]
சாந்தத்தை பொறுத்தவரையில், ஆண்டவரோடு உடன்படிக்கை செய்த ஜனங்களுக்கு ஒரு பாடம் அமைந்துள்ளது. நாம் சாந்தமான மனநிலையில் இருந்தால் மட்டுமே தெய்வீகத் திட்டத்தின் ஆழத்தையும், அகலத்தையும், நீளத்தையும் உயரத்தையும் அறிந்துக்கொள்ளமுடியும். ஆகவே பெருமையுள்ளவர்களை தேவன் எதிர்க்கிறார் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார். எனவே, நாம் தராசில் ஒட்டியிருக்கும் தூசி என்பதை மறந்துவிடக்கூடாது. “என்னுடைய மேன்மையான இடம், என்னுடைய இரட்சகரின் பாதமே, அவருடைய பணியை தவிர வேறு எந்தக் காரியமும் என் வாழ்க்கையில் சந்தோஷத்தை தருவதில்லை.” என்ற சிந்தை நமக்குள் இருக்கவேண்டும்.
R3511[col.1P6]
மனத்தாழ்மையுள்ளவர்களும், சாந்தகுணமுடையவர்களும், தன்னடக்கமுள்ளவர்களும் பாக்கியவான்கள். இவர்கள் இராஜ்யத்தைக் குறித்த நன்மையான காரியங்களை பெறுவதற்கு மட்டும் தகுதி பெறாமல், ஆண்டவரின் அடிச்சுவடுகளை பின்பற்றி இராஜ்யத்தில் நல்ல பங்கை பெறுவதற்கும் ஆயத்தப்படுகிறார்கள். பொதுவாக பெருமை தவறானதாக இருந்துகொண்டு, சத்தியத்தோடு அடிக்கடி மோதுகிறது. “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற ஆண்டவரின் வார்த்தைகளில் எந்தக் குற்றமும் இல்லை. இந்த வார்த்தைகளில் உள்ள சத்தியத்தின் வல்லமையே விடுதலையை அளிக்கும் மாறாக, கடுமையான வார்த்தைகளோ, கேட்ப்போரை நடுங்க வைக்கும் பிரசங்கங்களோ என்றுமே விடுதலை கொடுக்காது.