CD-PRAYER-Q-5
R2005 [Col. 2:5, 6]: –
அப்படியாக. உண்மையான விசுவாசம். கர்த்தருடைய வார்த்தையை ஜாக்கிரதையாக கவனித்து. அதன் தரத்தை உறுதிப்படுத்துகிறது. பின்னர், அந்த வார்த்தையின்படி கேட்டு, அதன் பலன்களின் மேல் நம்பிக்கை கொண்டு, ஜெபத்தோடு, விழிப்புடன் விடாமுயற்சியோடும் பொறுமையோடும் காத்திருக்கும், நம்முடைய கர்த்தர் அடிக்கடி கட்டளையிட்டது போல, “பெற்றுகொள்வோம் என்ற நம்பிக்கையோடு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.” ஒரு ஏழை விதவையின் வற்புறுத்தலால். அவளுக்கு நியாயம் செய்யும்படி ஒரு அநீதியான நியாயாதிபதி தூண்டப்பட்டார் என்ற ஒரு உவமையை அவர் கூறினார். அதன்பின் உண்மையான நீதிபதியாகிய தேவன் சரியான நேரத்தில் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைக்கு செவி கொடுக்க மாட்டாரா என்றும், அவர் “குறித்த காலம்” வரும் வரையில், நீண்ட காலமாக காத்திருந்தாலும். அவர்களின் நியாயமான காரணத்திற்கு பழி வாங்காமல் இருப்பாரா என்றும், விசாரித்தார். சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ண வேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் இந்த உவமையை சொன்னார் என்று நமக்கு சொல்லப்படுகிறது – லூக்கா 18:1
ஜெபத்தின் உறுதி மற்றும் நிச்சயத்தை குறித்த நம்முடைய மனோபாவங்கள் என்னவாக இருந்தாலும் சரி, வேத வசனங்களிலிருந்து கட்டளைகளை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். நம்முடைய இயற்கையான விருப்பங்களை மீறி, “சிறு பிள்ளைகள்” மற்றும் “அன்பான பிள்ளைகள்” போல மேலிருந்து வரும் கட்டளைகளுக்கு. நம்முடைய கண்ணோக்கத்தையும், நடத்தையையும் இணங்கச் செய்யவேண்டும்.” (யோவான் 16:24) என்ற வார்த்தைகளை நாம் அனைவரும் நினைவில் கொள்ளுவோம். தேவன் அவருக்கு கீழ்ப்படிந்தவர்களுக்கும். அவருடைய இரக்கங்களையும். ஆசீர்வாதங்களையும் மற்றும் முன்னேற்பாடுகளையும் விரும்பி கேட்கக்கூடிய விசுவாசமுள்ள பிள்ளைகளுக்கு அவைகளை திரளாக வைத்திருக்கிறார்.
R2865 [col. 2:3]: –
இந்த சூழ்நிலையில் ஆவிக்குரிய இஸ்ரயேலுக்கு உண்டான பாடமானது. “மனுஷர் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ண வேண்டும்” என்ற நம்முடைய ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு இசைவாக உள்ளது. தேவன் நம்மை உறுதியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். மேலும் நம்முடைய இந்த உறுதித் தன்மை, நம்முடைய விருப்பத்தின் ஆழத்தை அளவிட்டுகாட்டுகிறது. நம்முடைய ஜெபத்திற்கான பதில் (ஆசீர்வாதம்) கேட்கும் தருணத்தில் வரவில்லை என்றால், நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். அதை பெற்று கொள்வதில் அதிக ஆர்வம் காட்டவேண்டும் என்று எண்ணி, தேவன் ஒரு கால அவகாசத்தை வைத்திருந்தாலும், அவர் வாக்களித்த ஆசீர்வாதங்களை கொடுக்க அவர் முழு விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்ற விசுவாசத்தோடு அவரை முழுமையாக நம்பி. தேவன் குறித்த காலத்திற்கு நாம் பொறுமையோடு காத்திருக்கவேண்டும்.
R3662 [Col.2:4,5] ஜெபத்தின் முக்கியத்துவம்
நம்முடைய பாடம் பிரதானமாக, யூதேயாவின் நிலைமையை கேள்விப்பட்டபின் நெகேமியா ஏறெடுத்த ஜெபத்தோடு தொடர்புடையதாக உள்ளது. அவருடைய ஜெபம், தேவனுடைய ஆசீர்வாதங்களையும், வழிநடத்துதலை பெறவும். பரிசுத்த நகரத்தை பொருத்தவரை, ஆண்டவருடைய நல்ல வாக்குறுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணங்களை கொண்டிருந்தது. நெகேமியா, அவருடைய ஜெபத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் அனைத்தையும் நமக்கு கொடுக்கவில்லை. ஏனெனில் அதற்கான பதில் கிடைப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னிருந்தே இப்படியாக ஜெபித்து வந்தார் என்று நாம் மற்ற பகுதிகளை பார்க்கும்போது அறிந்துக்கொள்ளலாம். எனவே, அந்த நான்கு மாதங்களிலும், வெவ்வேறு காலங்களில் பல்வேறு வடிவங்களில் அவர் வெளிப்படுத்திய உணர்வுகளின் பொதுவான வெளிப்பாட்டையே இங்கு நாம் வாசிக்கிறோம். நிச்சயமாக இந்த நேரத்தில் அவர் தனது கடமைகளை செய்திருக்கவேண்டும். ஆனால் இந்த ஜெபம் எப்போதும் அவருடைய இருதயத்தில் இருந்தது. எல்லா திட்டங்களும். ஒழுங்குகளும் அவருடைய சிந்தையில் ஏதோ ஒரு வகையில் அதற்கு தொடர்புடையதாக இருந்தது.
இவ்வாறாக, ஆண்டவரின் ஜனமாகிய ஆவிக்குரிய இஸ்ரயேலரும் இருக்கவேண்டும். நமக்கு குறைந்த விருப்பமுள்ள காரியங்களுக்காக ஒரு முறை அல்லது இரண்டு முறை கிருபாசனத் தண்டைக்கு செல்லுவோம், ஆனால் நம்முடைய இருதயத்திற்கு அருகாமையில் இருக்கும் காரியங்களுக்கு ஜெபம் தொடருகிறது. நம்முடைய மனதில், சகல பொறுப்புகளும், நலன்களும் தொடர்புடையதாக இருந்தாலும், நாம் கர்த்தரிடத்தில் விரும்பியதை, நம்முடைய இருதயம் தொடர்ந்து ஈர்க்கிறது. நாம் விண்ணப்பிக்கக்கூடிய காரியங்கள் அவருடைய வாக்குத்தத்தங்களுக்கு இசைவாக இருப்பதை உறுதி செய்துகொண்டு, பொருத்தமான வாய்ப்புகளில் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இத்தகையான ஜெபத்தையே ஆண்டவர் பரிந்துரைக்கிறார். “சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்” – ஆண்டவருடைய ஜனங்கள் சரியான காரியங்களுக்காக தொடர்ந்து, ஓரளவுக்கு விடா முயற்சியுடன் ஜெபிக்கவேண்டும். விசுவாசமற்றவர்களாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் மனதில் சோர்ந்து போகக்கூடாது.