CD-FAITH-Q-13
1 தீமோத்தேயு 6:12 – “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள், அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய், அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைப் பண்ணினவனுமாயிருக்கிறாய்.”
R2309 – “கிறிஸ்தவர்களின் போராட்டம்” என்ற தலைப்பில் இறுதியில் காணலாம்.
R2312 – விசுவாசத்தின் போராட்டம் – 1தீமோ 6:12 ம் வசனம் – நல்ல போராட்டத்தை, விசுவாசத்தின் நல்ல போராட்டம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்துக் காரியங்களிலும் இது விசுவாசத்தின் போராட்டமாக இருக்கிறது.
(1) இது காணக்கூடாத எதிராளியோடே, தலைவரின் வழிநடத்துதலுக்குக் கீழ் நடக்கும் போராட்டமாக இருக்கிறது – விசுவாசத்தின் கண்களால் மட்டுமே நம்முடைய இரட்சிப்பின் அதிபதியை நாம் காணமுடியும், மேலும், அவருடைய வார்த்தைகளினால் மட்டுமே நம்மை எதிர்க்கும் நம்முடைய எதிராளியை அடையாளம் கண்டுகொள்ளமுடியும்.
(2) நம்முடைய ஒழுக்கமுள்ள பகுத்தறிவினால் நமக்குள் இருக்கும் பாவங்கள் மற்றும் நீதியையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும். விசுவாசத்தினால் தேவனுடைய வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். மேலும், அந்த வார்த்தைகளில் உள்ள விதிமுறைகளின், கீழ் தேவனுடைய பார்வையில் சரியான மற்றும் நீதியான காரியங்களைக் கற்றுகொள்கிறோம். உலகத்தின் பார்வைக்கு சரியாகத் தோன்றும் காரியங்கள் அனைத்தும் தேவனுடைய பார்வையில் தவறு என்று இதன் மூலம் புரிந்து கொள்கிறோம். இப்படியாக அவருடைய வார்த்தைகளின் மேலுள்ள விசுவாசத்தின் மூலம், தேவன் நமக்குத் தந்த வெளிப்பாடுகளின் அடிப்படையில் அனைத்து முடிவுகளையும் ஏற்றுக்கொண்டு, விசுவாசிக்கிறோம்.
(3) நாம் பெறப்போகிற சுயாதீனம் மற்றும் மகிமையை, நாம் பெற்ற அறிவினால் அல்ல விசுவாசத்தினால் மட்டுமே போராடிப் பெற்றுக்கொள்ள முடியும்.
(4) அவரை நேசிப்பவர்களுக்கு தேவன் தாமே மிக மேன்மையான வாக்குத்தத்தங்களையும், விலையுயர்ந்த காரியங்களையும் வாக்களித்திருக்கிறார். இதனிமித்தமாக அவருடைய பணியில் தங்களுடைய ஜீவனையே ஒப்புகொடுக்கும் அளவுக்கு அன்பு எதிர்பார்க்கப்படுகிறது. நாம் விசுவாசத்தின் கண்களினால் மட்டுமே, ஜீவ கீரிடத்தையும், மகிமையடைந்த கர்த்தரையும் காண்கிறோம்.
(5) நம்முடைய மாம்சமான கண்கள் காணக்கூடிய காரியங்கள், நம்முடைய ஓட்டத்திற்கு எதிரிடையான காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது. இந்த பணிக்காக நம்முடைய ஜீவனை முழுமையாக ஒப்புகொடுக்க தடுக்கிறது, சாந்தம், பணிவு, பொறுமை, அன்பு, நிதானம் என்ற குணங்களை நமக்குள் வளர்ப்பதை தடுத்து, சுயநலம், ஆசைகள், பெருமை, பேராசை மற்றும் இந்த உலகத்தின் ஆவியை நமக்குள் நிரப்புகிறது. ஆகவே, தேவனால் ஊக்குவிக்கப்படும் விசுவாசத்தினால் மட்டுமே இவைகளைப் போராடி மேற்கொள்ளமுடியும்.
இந்தக் காரியங்களை நாம் பார்க்கும்பொழுது, விசுவாசம் எவ்வளவு முக்கியமான ஒன்று என்று தெரிகிறது. விசுவாசம் இல்லாமல் நாம் ஒருபோதும் எதையும் ஜெயிக்கவே முடியாது. விசுவாசம் நிலைத்திருக்க கொஞ்சம் அறிவும் தேவைப்படுகிறது, விசுவாசம் வளர்ச்சியடைய சில வாக்குத்தத்தங்கள் அவசியமாக இருக்கிறது. இவையனைத்தும் மிகப்பெரிய அற்புதமான, தெய்வீக வெளிப்பாட்டில் பெற்றிருக்கிறோம். இதை தொடர்ந்து நாம் அவருடைய வார்த்தைகளின்படி போராயுதங்களைத் தரித்துக்கொள்ள வேண்டும். அவர் கொடுத்த சர்வாயுதங்களை அணிவது வேதனையாக இருந்தாலும், அதை அணியவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். இந்தப் போராட்டத்தை நம்முடைய அதிபதியின் வார்த்தைகளின்படி செய்யாவிட்டால், நிச்சயமாக போரில் தோல்வியடைவோம். உண்மையில், நமக்கு தேவைப்பட்ட, தெய்வீகத் திட்டம் மற்றும் தெய்வீக சித்தத்தின் பல்வேறு கோணங்களில் காணப்படுகிற சத்தியத்தின் போதனைகள் நம்முடைய வெற்றிக்கு மிக அவசியமாக இருக்கிறது. இவைகளை கடைப்பிடித்து, சர்வாயுதங்களை தரிக்காமல் போனால் தோல்வி நிச்சயம். ஆகவே மரணபரியந்தம் சர்வாயுதங்களை தரித்துக்கொண்டு, தேவனுடைய வார்த்தைகளின்படி போராடவேண்டும். ஆகவே, நாம் சர்வாயுதங்களை அணிந்து கொள்ளாமல் போருக்குபோவது மற்றும் சர்வாயுதங்களை அணிந்து கொண்டு போருக்கு போகாமல் இருப்பது – இந்த இரண்டு தவறுகளையும் நாம் நம்முடைய வாழ்க்கையில் செய்யாதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.