CD-KNOWLEDGE-Q-19
2 பேது 1:5 “இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்….”
கேள்வி- 2பேது 1:5ம் வசனத்தில் “கினோசிஸ்” என்ற ஆங்கில வார்த்தை அறிவு என்பதற்கு “ஆழமான ஆராய்ச்சி” என்று பொருள்படுவதாக கூறுகின்றார்கள். நம்முடைய விசுவாசத்தை இப்படிப்பட்ட ஆழமான ஆராய்ச்சிகளின் வழியாக உறுதிப்படுத்திபடுத்த வேண்டியது மிக அவசியம் என்று நம்முடைய அப்போஸ்தலர் வலியுறுத்துகிறாரா?
பதில்- விசுவாசத்தை பலப்படுத்துவதற்கு இப்படிப்பட்ட ஆழமான ஆய்வுகள் தேவையில்லை என்பதை – 1கொரி 8:1, 2கொரி 4:6, எபே 3:19, 2பேது 3:18 வசனங்கள் குறிப்பிடுகின்றன.
“உங்களுடைய விசுவாசத்தை இப்படிப்பட்ட ஆழமான ஆராய்ச்சியின் மூலம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அப்போஸ்தலர் பொருள்படுத்தாமல், விசுவாசத்திற்கு தேவையான அறிவை பெற்று, அதற்கேற்ற நற்கிரியைகளை நடப்பிக்கும் போது அந்த விசுவாசம் ஸ்திரப்படும். மேலும் எதிராளி நம்மை தாக்கும்போது, நாம் விசுவாசத்தினால் நடப்பிக்கக்கூடிய நற்கிரியைகள் நமக்குள் சகிப்பு தன்மைகளும், பொறுமையும் அதிகரித்து, இரக்கமுள்ள குணலட்சணங்கள் வெளிப்படும். மேலும் “உங்கள் ஞானத்தோடு தைரியத்தையும் கூட்டுங்கள்” என்று சொல்லும் போது – நாம் விசுவாசத்தில் உறுதியோடிருந்து, ஆவிக்குரிய வழி நடத்துதலின் கீழ் நம்முடைய குணங்களில் வளர்ச்சி அடையும்போது இன்னும் அதிகமான அளவில் அறிவை பெற்றுக்கொள்வார்கள் என்று அப்போஸ்தலர் இங்கு குறிப்பிட்டிருக்க வேண்டும் (2பேது 3:18). விசுவாசமுள்ளவர்கள் அறிவிலும் கிருபையிலும் வளர்ச்சி அடைந்து, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுவதின் வழியாக தேவனால் இவ்விதமாக கொடுக்கப்பட்டவைகளையும், கிறிஸ்துவின் பள்ளியில் நாம் பெறும் அனுபவத்தின் மூலம் நாம் அடிப்படை அறிவை அடையவும் தேவனுடைய ஆழமான காரியங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட அறிவு அடிப்படை சத்தியத்தின் மூலமாக பெறப்படுவதில்லை, ஆனால் உணர்வுள்ள உள்ளத்தோடு, தேவனோடு இசைந்திருப்பதினால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். “அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்”. (பிலி 3:8) என்று பவுல் கூறுகிறார்.
உண்மையும், உத்தமமும் நேர்மையுமான இருதயத்தில் பெறப்படும் இந்த அறிவு “சுயக்கட்டுப்பாடு” என்ற முக்கியமான குணத்தை நமக்குள் வளரச்செய்யும். இந்தக் குணம் உடையவர்கள் தன்னில் தான் சுத்திகரிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. தன்னைத் தான் கட்டுப்படுத்துபவன் தனக்குள் இருக்கும் புளிப்பை அதிகதிகமாக வெளியேற்றுவான். ஏனெனில் தன்னில் சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்பவர்கள் பொறுமையில் வளர்ச்சி அடைகிறார்கள். ஏனெனில் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்கள் மற்றவர்களிடம் பொறுமையாகவும், பரிவுடனும் நடந்து கொள்ளவும், பயிற்சி பெறுகிறார்கள். இப்படியாக பொறுமையில் வளர்ச்சி அடைபவர்கள் பரிவு அல்லது இரக்கத்தில் வளர்ச்சி அடைய வழி நடத்தப்படுகிறார்கள். இந்நிலையில் தேவனுடைய அன்பு இருதயத்தை நிரப்பி, நம்முடைய சகல கிரியைகளிலும், வார்த்தைகளிலும் அதை வெளிப்படுத்தும். இப்படிப்பட்ட நிலை சகோதர அன்பை நமக்குள் வளர்க்கும். தேவனால் நீதியிலும், சத்தியத்திலும் நடக்கும் ஒவ்வொரு சகோதரர்களையும் அன்பு செலுத்த வழிவகுக்கும். இப்படிப்பட்ட சகோதர அன்பு, ஆவியின் கனிகள் அனைத்திலும் பூரணமடைவார்கள். விசேஷமாக தேவன் பேரில் வைக்கும் ஆழமான அன்பு, உண்மையும் பரிசுத்தமானதும், தீமைக்குறித்து சிந்திக்காமல், சுய பெருமையைத் தேடாமல், மற்றவர்களை குற்றப்படுத்தாமல் சத்தியத்தில் களிகூர்ந்து, இன்றைய கிறிஸ்தவ வாழ்க்கையில் உச்சக்கட்டத்தை அடைந்து, சகல நற்குணங்களிலும் தேறி, முதல் உயிர்த்தெழுதலின் போது அழியாமையைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக பூரணப்படுவார்கள்.