CD-PRAYER-Q-37
F314 [P5]: –
தேவனுடைய ஜனங்களின் கூடுகைகளில், பக்தியுள்ள ஆராதனைகள் மட்டுமே நடத்தப்படாமல், அதோடு கூட சகோதரர்கள் பேசுவதை கேட்டு, அவர்கள் வாயினால் அறிக்கையிட்டு, அதாவது தேவன் மேல் அவர் கொண்ட பக்தியை ஜெபத்திலோ அல்லது சாட்சி கொடுப்பதிலோ ஒவ்வொருவர் பெற்ற நன்மைகளுக்கான அனுபவங்கள் காண்பிக்கப்படவேண்டும்.
F319 [P1] through F322
அறிவின் வளர்ச்சி பக்தியிலிருந்து விலக செய்வதற்கு மிகவும் ஏதுவானதாக இருக்கிறது. இது விசித்திரமாக தோன்றலாம். நம்முடைய திறன் மிகச் சிறயதாகவும். மத சம்மந்தமான விஷயங்களுக்கான நமது நேரம் மிகவும் குறைவாகவும் இருப்பதைக் காண்கிறோம். ஒரு வழியில் கவனத்தை உற்சாகமாக செலுத்தினால், அது மற்ற திசைகளில் குன்றிபோக வழிவகுக்கும். கிறிஸ்தவர் முற்றும் அறிந்தவராய் இருதய அன்பில்லாமலும் முழு இருதய அன்போடிருப்பவராய் அறிவில்லாமலும் இருக்கக்கூடாது. “ஒரு நல்ல மனிதனின் ஆவி” சகலவிதமான நற்கனிகளையும், கிருபைகளையும் வளர்த்துக்கொண்டு, பரிபூரணமான குணத்தை பெறும்படிக்கு வழிநடத்தும். நாம் இதில் சிறப்பாக வளர்வதற்கு நம்முடைய நாட்களின் இயல்புகள் எல்லா விஷயங்களிலும் நம்முடைய நாட்களின் இயல்புகள் எதிர் திசையில் உள்ளது. ஒரு தொழிலாளி இந்த பகுதியை செய்கிறார். மற்றவர் அந்த பகுதியை செய்கிறார். எனவே இப்போது மிகச் சில தொழிலாளர்கள் முந்தைய காலங்களைப் போலவே ஒரு வர்த்தகத்தை முழுமையாக புரிந்துகொள்கிறார்கள். புது சிருஷ்டிகள் இந்த இயல்பை எதிர்க்க வேண்டும். மேலும் அதற்கேற்ப, “அவருடைய கால்களுக்கு நேரான பாதைகளை உருவாக்க வேண்டும்”. ஆவியின் கனிகள் ஒன்றை வளர்த்துக் கொள்ளும்போது, தேவன் கொடுத்த மற்றொரு சிலாக்கித்தை சரியாக பயிற்சி செய்யாததினால் அவர் ஆபத்தில் சிக்கிவிடும் அபாயம் உள்ளது. எல்லா மனிதர்களிடமும் பக்தியின் தரங்கள் அதிகமான அல்லது குறைவான அளவில் வளர்ச்சி காணப்படுகின்றன. இந்த மனதின் குணங்கள் ஆவிக்குரியவைகள் என்று அழைக்கப்படுகிறது. மேலும் அவை மனசாட்சி. நம்பிக்கை. இசை போன்ற உறுப்புகளை அவற்றின் உதவிக்கு அழைக்கின்றன. இவை புறக்கணிக்கப்பட்டால். இதன் விளைவாக சத்தியத்தின் மீதான ஆர்வமும் அன்பும் சிதைந்துவிடும். ஆகவே, நம்முடைய இருதயங்கள் கர்த தருடைய அன்பை அதிகமாக புரிந்துகொள்வதோடு, அவரை சேவிக்கவும், கனம் பண்ணவும், பிரியமாக நடந்துகொள்வதற்கு பதிலாக, சிறிய உறுப்பினர்கள் உயர்ந்தவற்றின் இடங்களை எடுத்துக்கொண்டு. சர்ச்சையில் அதிக அளவில் சேருவதை காணலாம். மேலும் விசாரணைகள் மன தத்துவங்களின் வெளிச்சத்தில் அதிகமாக நடைபெரும். அதில் பகை, அழிவு, லட்சியம், சண்டை மற்றும் வீண் பெருமை அதிகமாக இடம் பெறும். எனவே, புது சிருஷ்டிகள். ஒவ்வொரு சபை கூடுதலிலும், பக்தி ஆராதனை. ஜெயம், துதி செலுத்துதலை ஒரு பகுதியாக கொண்டு. ஐக்கியப்படுவதோடு. வாரத்திற்கு ஒரு முறை ஒரு வகையான பக்தியுள்ள சிறப்பு கூட்டம் தேவை என்று நாம் நம்புகிறோம். அதில் கிறிஸ்தவ அனுபவங்களின் சாட்சியங்களுககான வாய்ப்பகள் கொடுக்கப்படவேண்டும். – அதாவது வழக்கமாக முதல் சம்பாஷணைகளையோ அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்ததையோ அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு முன் நடந்ததையோ அல்ல மாறாக, கடந்த வாரத்தில் நடந்தவைகளில், ஒரு புதுப்பித்த சாட்சியம். இந்த நேரத்தில் இருதயத்தின் நிலையை குறிப்பாக குறிக்கக்கூடிய சாட்சிகளாக இருக்கவேண்டும். இதுபோன்ற புதிதான சாட்சியங்கள், கேட்பவர்களுக்கு உதவியாக இருக்கும். சில நேரங்களில் சாதகமான அனுபவங்களை கேட்பதினால். அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். சில நேரங்களில் சோதனைகள், சிரமங்கள், குழப்பங்கள் போன்றவற்றின் கதைகளால் அவர்கள் ஆறுதல்படுத்தப்படுகிறார்கள்.
ஏனெனில், அவர்கள் இப்படிப்பட்ட அனுபவங்களை அனுபவிப்பதில் தனியாக இல்லை என்பதையும். சில நேரங்களில் தோல்விகள் இருப்பதையும் அவர்கள் புரிந்துகொள்வார்கள்.” பிரியமானவர்களே. உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,” (1பேதுரு4:12) என்ற அப்போஸ்தலரின் வார்த்தைகளின் இன்னும் முழுமையான அர்த்தத்தை கற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தருடைய ஜனங்கள் அனைவருக்கும் சோதனைகள் மற்றும் சிரமங்கள் இருப்பதை அவர்கள் காண்கிறார்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் அனுதாபம் கொள்ள கற்றுக்கொள்கிறார்கள். இந்த அனுதாபத்தின் பிணைப்பு வளரும் போது உதவி செய்யக்கூடிய ஆவியும். அன்பின் ஆவியும் வளர்கிறது — பரிசுத்த ஆவி. அனுகூலமாக இருப்பதற்கு. இதுபோன்ற வார கூட்டங்களுக்கான ஒரு தலைப்பை அதற்கு முந்தய ஞாயிற்றுக்கிழமையில் பரிந்துரைக்கப்படலாம். மேலும் இந்த தலைப்பு முதன்மையாக இருப்பதால். வாழ்க்கையில் நடக்கும் அனுபவங்களைக் குறிக்க ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்கும். மற்றும் வாரத்தின் குறிப்பிட்ட தலைப்புக்கு ஏற்ற வரிசையில் அவற்றை குறிப்பிடவேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் ஒவ்வொரு வாரமும் பல்வேறு பாடங்களும். வாழ்ககையின் படிப்பினைகளையம் அனுபவங்களையும் குறிப்பிடுவதற்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பெரும்பான்மையானவர்கள், சிந்திக்காமல், கவனிக்காமல், இந்த மதிப்புமிக்க படிப்பினைகளை அடையளம் காண முடியாமல் கடந்து செல்ல அனுமதிக்கின்றனர். மேலும் கர்த்தருடைய அன்றாட பரிவர்த்தனைகளை அவருடைய ஏற்பாடுகளை கவனிப்பதன் மூலம் அவர்கள் சிறப்பாகக் கற்றுக்கொள்ளக்கூடியவைகளை காட்டிலும். முக்கியமாக வாழ்க்கையின் பெரிதும், கசப்புமான அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக: “எல்லா புத்திக்கும் மேலான சமாதானம் உங்கள் இருதயங்களை ஆளக்கடவது” என்ற வேத பகுதியிலிருந்து “தேவ சமாதானம்” என்பது வாரத்திற்கான தலைப்பு என்று வைத்துக்கொள்வோம். (பிலிப்பியர் 4:7) ஒவ்வொரு சகோதரர்களும் இந்த வாரத்தில் இந்த வசனம் தனது சொந்த வாழ்க்கையில் எந்த அளவிற்கு நிறைவேறியது என்பதையும், மேலும் இந்த ஆளும் சமாதானத்தைத் தடுத்து நிறுத்தி அமைதியின்மையையும், அதிருப்தியையும் கொண்டுவரக்கூடிய விஷயங்கள் என்னவென்றும் நாம் கவனிக்கவேண்டும். இந்த அனுபவங்களும் அவைகளிடம் இருந்து பெறப்பட்ட பாடங்களும், குழுவில் உள்ள வல்லுநர்களால் கூறப்பட்டவை, மேலும் குறைந்த அனுபவங்கள் உள்ளவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை மட்டும் முன் கவனத்திற்கு கொண்டுவருவதோடு, பின்னர் தங்கள் சொந்த அனுபவங்களோடு. மற்றவர்களின் அனுபவங்களையும். படிப்பினைகளையும் சேர்த்து, அவர்களின் அனுதாபங்களை விரிவுப்படுத்துவதோடு. மோதல்களுக்கு பதிலாக சமாதானத்தின் அழகுகளை அறிந்துகொள்ள அவர்களை மேலும் மேலும் வழிநடத்துவார்கள்.- நமக்கு எந்த விதத்திலும் கட்டுப்படாத கொந்தளிப்பு மற்றும் குழப்பம் அல்லது துன்பகரமான நிலைமைகளால் சூழப்பட்டிருந்தாலும் கூட இருதயத்தில் தேவனுடைய சமாதானத்தின் ஆசீர்வாதத்தை பெறுவது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை உணரவேண்டும்.
இந்த கூட்டங்களின் பக்தி அம்சம் அவர்களின் நலன்களை அதிகரிக்கும். தன்னுடைய குறைபாடுகளை அதிகரிக்கும். தன்னுடைய குறைபாடுகளை மிகுந்த ஆர்வத்துடன் உணர்ந்தவர். ஆவியின் கிருபையில் வளர மிகவும் ஆர்வத்துடன் பாடுபடுவர். தேவனுடனான பக்தியிலும். அவரைப் பிரியப்படுத்துவதிலும், மற்றும் அதிகதிகமாக பரிசுத்த ஆவியை பயன்படுத்துவார். தேவனிடம் பக்தியாக இருப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டக்கூடியவராக இருப்பார். இந்த கூட்டங்களில், மற்ற அனைவரையும் போலவே, ஒழுங்கைப் பாதுகாப்பதன் மூலமே மிகப் பெரிய நன்மையைச் செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. கூட்டத்தின் ஜீவனையும் சுதந்திரத்தையும் அழிக்கும் அளவிற்கு இல்லை. ஆனால் எந்த அராஜகம் அல்லது ஒழுங்கின்மை இன்றி ஞானமாகவும் அன்பாகவும் மேன்மையான கட்டுப்பாட்டின் கீழ், சரியான அளவிற்கும் அதன் சுதந்திரத்தை சிறப்பாக பாதுகாக்கவேண்டும். உதாரணமாக: கூட்டத்தின் தன்மையை முன்கூட்டியே புரிந்துகொள்ள வேண்டும். மேலும் நியாயமாகவும். அன்புடனும். குறிப்பிடப்பட்ட மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட நோக்கத்திற்காக அந்த கூட்டத்தை கட்டுபாடுடன் நடத்தும் தலைவரே பொறுப்புள்ளவர். இவை பொதுவான கேள்வி கூட்டங்கள், அல்லது கலந்துரையாடலுக் கான கூட்டங்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மேலும் இக்கூட்டம் மற்ற கூட்டங்களை போல பிரசங்கிப்பதற்கும் அல்ல, விரும்புவோர் அவற்றில் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் இந்த கூட்டங்களுக்கு வரையறுக்கப்பட்ட நோக்கம் உண்டு. கூட்டத்தை ஒழுங்காக நடத்துவதற்கும். தனிப்பட்ட விவாதங்களை தவிர்ப்பதற்கும், அல்லது ஒரு நபர் மற்ற தனிநபருடன் விவாதம் அல்லது பதில் அளிப்பதை தவிர்ப்பதற்கும், அனைவருக்கும் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் ஒருவர் மட்டுமே. மற்றவர்களுக்கு பதில் அளிக்கவோ அல்லது விமர்சிக்கவோ வேண்டும் — அதுவும் அவசியப்பட்டால். சில சாட்சியங்கள் நீண்டதாகவும், கடினமானதாக இருந்தால், அவைகள் மற்றவர்களுடைய வாய்ப்பை தடைச் செய்யாமல் பார்த்து கொள்வதும் அவருடைய கடமையாகும். மேலும் நியாயமான ஒப்புக்கொள்ளப்பட்ட நேரத்திற்கு அப்பால் கூட்டம் நீடிக்கப்படக்கூடாது. இந்த விஷயங்கள் அனைத்தும் தலைவரின் பொறுப்பில் உள்ளதால், அவர் சபையின் மூப்பராக இருக்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது. போதிய அனுபவம் இல்லாத ஒரு புதியவர் பொருத்தமாக இருக்க முடியாது. சிறந்த நோக்கங்கள் இருந்தாலும், கூட. அத்தகைய சந்தர்ப்பத்திற்கு கொள்கைகளைப் பயன்படுத்துவதில் மிகவும் தளர்வானவராகவோ அல்லது மிகவும் கடினமானவராகவோ இருக்கலாம். அவர் மிகுந்த மென்மையுடன் கூட்டங்களை நடத்தி அதை சீர்குலைக்கலாம் அல்லது புத்தி இல்லாத விதமாக திருத்தங்களை வெளிப்படுத்தியும், சரியான விதிகளைப் பயன்படுத்தாமலும், சில சகோதரர் அல்லது சகோதரியை புண்படுத்தலாம். மேலும் அவர் தேவனுடைய வார்த்தையைப் பற்றி போதுமான அறிவைப் பெற்றவரும். பல்வேறு சாட்சியங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஊக்கமான வார்த்தை அல்லது ஆலோசனை அல்லது பயனுள்ள அறிவுரை வழங்கக்கூடிய கருணை மற்றும் கற்பிக்கும் திறன் ஆகியவற்றில் அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும் என்பதால், அத்தகைய கூட்டத்தின் தலைவர் ஒரு மூப்பராக இருக்கவேண்டும் அல்லது சபையில் ஒரு மூப்பரின் பதவியை வகிக்க தகுதியானவராக இருக்கவேண்டும். ஏனென்றால், ” மனுஷனுக்குத் தன் வாய் மொழியினால் மகிழ்ச் சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!’ – மற்ற நிலைமைகளின் கீழ் ஒரு முழு சொற்பொழிவை விட இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும். நீதிமொழிகள் 15:23