CD-FAITH-Q-21
எபி 10:22 – துர்மனசாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
எபி 6:11- நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து……
விசுவாசத்தின் முழு நிச்சயமும், நம்பிக்கையின் முழு நிச்சயமும், சரியான நிலையில் உள்ள ஆண்டவரின் ஜனங்களுக்குரியதாக இருக்கிறது என்று பரிசுத்தவானாகிய பவுல் குறிப்பிடுகிறார். இதே கருத்தை நம்முடைய தீர்க்கதரிசியும் குறிப்பிட்டிருக்கிறார் – “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி…” – பிலி 1:5. இதை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, சில கிறிஸ்தவர்கள் இந்த விசுவாசத்தின் நிச்சயம் முழுமையாக அவர்களிடம் உள்ளதாக நம்புவது எப்படி? சந்தேகமில்லாமல், என்னுடைய வாழ்க்கை முழுவதும் அவருடைய கிருபையும், நன்மையும் என்னைத் தொடரும் என்றும், இறுதியில் தேவனுடைய கிருபையால் பரலோக இராஜ்யத்தில் பிரவேசித்து, அவரை நேசிப்பவர்கள் தேவன் தரவிருக்கும் மகிமையைப் பெற்றுக்கொள்வோம் என்று எப்படிக் கூறுகிறார்கள்? இவ்வண்ணமாகக் கோரும் அப்போஸ்தலரும், தீர்க்கதரிசியும், தேவனுடைய இரக்கத்தை முழுமையாகப் பெற்று, மற்றவர்கள் பெற்றிராத அளவுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், ஆசீர்வாதங்களையும், இருதயத்திற்குள் மேலான அமைதியையும் பெற்றிருக்கிறார்கள். இப்படியாக, விசுவாசத்தின் இளைப்பாறுதலுக்குள் எண்ணிக்கையில் குறைவானவர்கள் மட்டுமே பிரவேசித்திருப்பதின் காரணம் என்ன என்று நாம் ஆராய்ந்து பார்ப்போம். இந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க மற்றவர்களுக்கு இருக்கும் தடைகள் என்னவென்றும், அவைகளை நீக்க என்ன செய்யவேண்டும் என்றும் அதற்குள் அநேகர் பிரவேசித்து வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வழிகளைப்பற்றி சற்று தியானிப்போம்.