Q-3
“வெளி 3:10 – “என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாக பூச்சக்கரத்தின் மேல்லெங்கும் வரபோகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்”.
லூக் 8:15 – “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்து பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.”
R2790 – “அடிப்படைக் குணங்களில் ஒன்றானது பொறுமை”
சபை வரலாற்றில், பிலதெல்பியா சபைக்குச் சொல்லப்பட்ட ஒரு அறிவுரைப்பற்றி நாம் இன்று ஆராய்ச்சி செய்யப்போவதில்லை, மாறாக, இந்த வசனத்தில் உள்ள கோட்பாடுகளை நமக்குப் பொருத்தி, நாம் நம்மை ஆராய்ந்துப்பார்த்து, சுவிசேஷ யுகம் முழுவதிலும் தேவன் இந்தக் கோட்பாட்டுக்கு இசைவாக வழி நடத்தினதை நாம் இப்பொழுது பார்க்கப்போகிறொம். எந்தச் சூழ்நிலையிலும் சபை வரலாற்றில் பிலதெல்பியா சபைக்குக் கொடுத்த அறிவுரைகளை இந்த யுகத்திலும் நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு தேவனை கனப்படுத்தி, அவருக்குப் பிரியமாக நடக்க வேண்டும்.
“பொறுமை” என்ற வார்த்தைக்கு விசேஷமான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. நாம் பார்த்தபடி இந்தப் பதத்தை இரண்டு வித்தியாசமான கிரேக்க வார்த்தைகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. “மாக்குரோத்தூனியா” (எபி 6:12, யாக் 5:12, அப் 26:3) மற்றும் “ஹீப்போமோனீ”, “மாக்குரோத்தூனியா” இந்த வார்த்தையை நம்முடைய பொதுவான வாழ்க்கையில் அடிக்கடி பயன்படுத்ப்படுகிறது. இதற்கு நீடிய பொறுமை என்று பொருள். ஆகவே இந்தக் கிரேக்க வார்த்தை புதிய ஏற்பாட்டில் முழுவதிலும் பயன்படுத்தப்படுகிறது. (ரோமர் 2:4, எபே 4:2, கொலோ 1:11, 3:12, 1 தீமோ 1:16, 2 பேது 3:15) ஆனால் நாம் பார்க்கக்கூடிய வேதப்பகுதியில் இந்த ஒரு வார்த்தை மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. பொதுவாக “ஹீப்போமோனீ” என்ற மற்றொரு வார்த்தையும் புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறது.
“ஹீப்போமோனீ” என்ற வார்த்தை இன்னும் பல ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த அர்த்தம் கொண்டுள்ளது. இது பொறுமையாக இருப்பதை மட்டும் குறிப்பிடாமல், தீமையை சந்தோஷத்தோடும், முழு விருப்பத்துடன் சகிப்பதை வலியுறுத்துகிறது. ஆகவே இது தற்காலிகமான உணர்ச்சிவசப்படக்கூடிய காரியமாக அல்ல, மாறாக, இது பொறுமையாகச் செயலாற்றுவான் – தன்னுடைய வாடிக்கையாளர்களோடு அவர்கள் தொடர்பு கொள்ளும் விதம், அவர்கள் எப்படியிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாவதற்கு, மிக எச்சரிப்போடும் பொறுமையோடும் இருப்பார். ஆனால் நம்முடைய பாடப்பகுதிக்குள் வரும் “பொறுமை” என்ற வார்த்தை இருதயத்திற்குள், குணங்களின் வளர்ச்சி அடைந்து தெய்வீகமான ஞானத்திற்கும், அன்புக்கும், தேவனுடைய சித்தத்திற்கும் எதிராக எந்த சூழ்நிலையிலும் செயல்படாமல், தேவன் குறித்தக் காலத்தில் இன்றைய தீமைகளை அகற்றிவிடுவார் என்ற நம்பிக்கையுடன், அதோடு போராடாமல், அதை பொறுத்துக்கொள்ளும் குணமாகும். நம்முடைய ஆண்டவரே பாராட்டத்தக்கதான இந்த ஒரு குணலட்சணத்தைக் கண்டு பிடித்து, நம்மில் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்பது நலமாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த ஒரு குணத்தை அடிப்படையாக வைத்தே அவரைப் பின்பற்றுபவர்களை அடையாளம் கண்டுகொள்கிறார். ஆகவே இதில் நாம் வளர்ச்சி அடைந்து அவருடைய பூரணமான அங்கீகாரத்தைப் பெறுவோம்.
நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வேத பகுதியில் சொல்லப்பட்ட நீடிய பொறுமை, நம்முடைய ஆண்டவரின் வார்த்தை அல்லது உபதேசமாக இருப்பதினால், எழுதப்பட்ட சுவிசேஷங்களை நாம் சற்றுப் புரட்டி,, அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்க்கலாம். அவர் இரண்டு முறைகள் இந்த வார்த்தையை உச்சரித்தார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது – லூக் 8:15. விதைக்கிறவன் என்ற உவமையில் “ நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள், வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமயுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்” இங்கு பொறுமை என்பது மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை மற்றும் தொடர்ந்து உறுதியோடும் உண்மையோடும் நடப்பதைக் குறிக்கிறது. இந்த வார்த்தை இங்கு சொல்லப்படும் கருத்து என்னவெனில், தேவன் அங்கீகரித்து அவருடைய இராஜ்யத்தில் ஏற்றுக்கொள்ளும் கனி கொடுக்கும் வகுப்பார் இவர்களே. அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வது மட்டும் பொருள் அல்ல, ஏனெனில், பாறையான நிலம் கூட கனி தரும் அளவுக்கு வசனங்களை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், சூரியக் கதிர்களால் உபத்திரவம் எழும்பும்போது அது பட்டுப்போனதாக வாசிக்கிறோம். ஆழமான மண் இல்லாததினால் இப்படி ஆயிற்று. ஆண்டவர் இதைக் குறித்து விவரிக்கும் பொழுது, பாறை மிகுதியாகவும், மண் குறைவாகவும் இருக்கும் இடங்களைக் குறிக்கும் இந்த வகுப்பார், மகிழ்ச்சியுடன் சத்தியத்தைக் கேட்டு உபத்திரவத்தின் காலத்தில் உறுதியாகவும், நீடிய பொறுமையோடும் நிற்க திராணியற்றவர்களாக விழுந்து போகிறவர்கள். எதையும் மேற்கொள்ள பொறுமை இல்லாத இவர்கள், தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்கிறார். “