CD-PRAYER-Q-13
R1865 [col. 1:3 through col. 2:7] (#13 கேள்வியை காண்க)
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தன்னுடனான இந்த ஒற்றுமை எவ்வளவு அவசியம் என்பதை ஆண்டவர் அறிந்திருந்தார். சூறாவளி தூக்கி எரிந்தது. நம்முடைய தந்தையின் பிரசன்னத்தில் அவருடைய பராமரிப்பும். ஆறுதலும், தேற்றுதலும் நமக்கு அளிக்கப்பட்டது. சாந்த குணமுள்ளவர்களும், இருதயத்தில் குற்றவுணர்வு பெற்ற அனைவரும். அவ்வப்போது கவனத்துடன் வாக்குத்தத்தங்களை கேட்பதோடு, நம்முடைய பிதாவாகிய தேவனும் மற்றும் அவருடைய குமாரனாகிய நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் பிரசன்னத்தில் நிலைத்திருக்கிறார்கள் அல்லவா? என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான். என்னிடத்தில அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.” (யோவான் 14:21-23) என்று இயேசு கூறினார்.
பிதா மற்றும் குமாரனின் சிந்தனை பராமரிப்பு ஆர்வமும் தொடர்ந்து நம்மீது இருக்கும் என்பதையும், எந்த நேரத்திலும் அவர்கள் இருவரின் சிறப்பு கவனத்தை நாம் பெறலாம் என்ற சிந்தனையை, பிதாவிலும் குமாரனிலும் நிலைத்திருப்பதைப் பற்றிய இந்த வாக்குறுதி நமக்கு தெரிவிக்கிறது. இதே கருத்தை அப்போஸ்தலன் பேதுருவின் வார்த்தைகளிலும் தெரிவிக்கப்படுகிறது. (1 பேதுரு3:12) – “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமை செய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.” மேலும், “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.” “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள்”. “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்”, “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறது போல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார். நாம் மண்ணென்று.” நினைவுகூருகிறார்.” “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள் மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும். கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.” “கர்த்தருடைய கிருபையோ அவருக்கும் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.” ரோமர் 12:12, லூக்கா 18:1. 1தெசலோ 5:17. சங்கீதம் 103:13,14,11,12,17,18.
பிதா மற்றும் குமாரனின் பிரசன்னத்தை கோர முடியாதவர்கள். பரலோக கிருபாசனத்தண்டைக்கு அடிக்கடி வரமுடியாது, அவரை நேசிப்பவர்களாகவும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களாகவும், இருப்பவர்கள் கர்த்தராகிய இயேசுவே பிதாவை அணுகுவதற்கான ஒரே வழி என்று அங்கீகரிப்பார்கள். மேலும் “ஒருவன் பாவஞ் செய்வானானால், அவர் கர்த்தரை நேசிக்கவில்லை என்று அவருடைய வெளிப்புற நடத்தையிலிருந்து நியாயந்தீர்க்கப்படுவார். ஆயினும், அவர் மனம் வருந்தினால். “நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.” என்றும் “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்திற கிருபாதாரபலி அவரே” என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். அதற்கு பின் “தேவன் தெரிந்துகொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறவர். அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர். நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.” 1 யோவான் 2:1-2; ரோமர் 8:33-34.
ஆகையால், “வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கட கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிரக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், எற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங்கிருபையை அடையவும். தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக் கடவோம்”. என்று அப்போஸ்தலர் வலியுருத்துகிறார். –எபிரெயர் 4:14-16.
இத்தகைய அவசர மற்றும் அன்பான அழைப்பிதழ்களால், தேவனுடைய எந்த பிள்ளையும், அடிக்கடி அவரிடம் வரவோ அல்லது அவருடன் ஐக்கியப்படவோ அல்லது நீண்ட நேரம் தொடர்பு கொள்ளவோ, தங்கவோ தயங்க வேண்டாம். அறைவீட்டிற்குள் பிரவேசித்து. கதவுகளை பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற பிதாவை நோக்கி ஜெபம்பண்ணும்போது. அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா வெளியரங்மாய் பலனளிப்பார் என்ற மாபெரும் சிலாக்கியத்தை நாம் பெற்றுள்ளோம். (மத்தேயு 6:6) அது மட்டுமல்ல, அந்த நாளின் எல்லா வியாபாரங்களிலும், அவசரங்களிலும், குழப்பங்களிலும் அவர் நம்மோடிருப்பார். மேலும் கவலைகள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் எந்த நேரத்திலும் நம்முடைய ஜெப சிந்தைகளை, ஞானத்திற்காகவும். பலத்திற்காகவும், கிறிஸ்தவ வலிமைக்காகவும், அல்லது ஆறுதலுக்காகவும். அல்லது நமக்காகவோ, மற்றவர்களுக்காகவோ தேறுதலுக்காகவும் தேவனிடம் திருப்பலாம். எந்தவொரு பதிலளிக்கும் குரலையும் நாம் கேட்காவிட்டாலும், அவருடைய முன்னேற்பாட்டின் போக்கை நாம் கவனத்திருந்தால், இது போன்ற ஜெபங்களுக்கு விடையளிக்கும் விதமாக நிகழ்வுகளையும் சூழ்நிலைகளையும் நம்முடைய நன்மைக்காகவும், மற்றவர்களின் நன்மைக்காகவும் தேவன் வடிவமைப்பதைக் காணலாம். பிரியமானவர்களே, இந்த உண்மை பல முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது அல்லவா ?– குழப்பங்களிலும், உபத்திரவங்களிலும், இன்னல்களிலும், துன் பங்களிலும், துன்பறுத்தல்களிலும் சோதனைகளிலும், வேதனைகளிலும்?
தேவனிடத்தில் வருவதில், எந்த தயக்கமும் வேண்டாம். அவர் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பிற விஷயங்களில் மிகவும் மும்முரமாக இருக்கிறாரோ, அல்லது சிறிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுடன் மீண்டும் மீண்டும் அவரிடம் வருவதில் அவர் சோர்வடைவாரோ என்பதில் நமக்கு எந்த பயமும் வேண்டாம். இந்த காரியத்தை நமக்கு உறுதியளிப்பதற்காகவே, ஓயாமல் தொந்தரவு செய்த ஒரு விதவைக்கு. அவளுடைய குறைகள் கேட்கப்பட்டு, உடனடியாக பதில் அளிக்கப்பட்ட ஒரு உவமையைப் பற்றி நம்முடைய ஆண்டவர் கூறினார். அவ்வாறு செய்யும் போது, நம்முடைய உற்சாகமான விருப்பங்கள் மற்றும் நம்முடைய ஜெபங்கள் பதில் அளிக்கப்படும். விசுவாசம் மற்றும் பக்தி வைராக்கியத்தின் குறைவினால் நாம் சோர்ந்துபோனால் ஜெபங்களுக்கான பதில் தாமதிக்கப்படும். ஏனெனில், தேவனுடைய வேலைகளில், நேரம் ஒரு முக்கிய காரணமாக தேவைப்படுகிறது.
“என்னை ஆசீர்வதிக்காவிட்டால் நான் உம்மை விடமாட்டேன்” என்ற சொல்லி இரவு முழுவதும், விடியம் வரை யாக்கோபு, ஜெபத்தில் போராடிக்கொண்டிருந்தார். “என் கிருபை உனக்கு” போதும் என்று ஆண்டவர் சொல்லும் வரை பவுல் மூன்று முறை அவரிடம் வேண்டினார். கர்த்தர் தாமே பல நேரங்களில் இரா முழுவதும் ஜெபித்தார். அவர் பலத்த கண்ணீரோடும் சத்தத்தோடும் ஜெபித்தார். (லூக்கா 6:12, மத்தேயு 14:23. மாற்கு 6:46; 1:35. லூக்கா :5:16, எபிரெயர் 5:7) “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்” என்று அப்போஸ்தலர் கூறுகிறார்.- பிலிப்பியர் 4:6.
அப்போஸ்தலனாகிய பவுல் ஆவிக்குரிய வழிநடத்துதலின் கீழ் ஒரு குறிப்பிட்ட வேலையை பாதுக்காப்போடு செய்வதற்காக, ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று…” அவர் தாமே இந்த கொள்கையில் செயல்பட்டார். – ரோமர் 15:28-32
“எல்லாவற்றிலும்,”- நம்முடைய பரலோகத் தகப்பன் நம்முடைய மற்றும் நம்முடையவர்களுக்கும் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்டவர் என்பதை இது குறிக்கிறது. நம்முடைய தலைகளின் முடிகளையும் கூட எண்ணி வைத்திருக்கும் அவருக்கு, இதைவிட மிக சிறிய விஷயம் ஏதாகிலும் இருக்குமா? இன்றைய வீட்டின் காரியங்கள் அல்லது தொழில் சார்ந்த காரியங்களில், அவருடைய அன்பான அனுதாபமும் உதவியும் நமக்கு இருக்கலாம். கட்டுக்கு அடங்காத மற்றும் அளவுக்கு மீறிய தன் நம்பிக்கை கொண்ட ஒரு வாலிபனின் போக்கை சரியாக வழிநடத்தி. கட்டுப்படுத்துவதற்கு ஒரு தாயின் ஆலோசனையும், ஒரு தந்தையின் ஞானமும் போதாதா ? அவர்கள் தங்கள் பயங்களையும் அச்சங்களையும் தேவனிடம் கொண்டுவரக்கூடும். மேலும் உலகின் சோதனையைச் சந்திக்க குழந்தைகள் வாசலைக் கடக்கும்போது, இறுதியில் அவர்கள் உறுதியான பாதுகாப்பான வழியையும் மற்றும் யாரையும் பின்தொடர்வதற்கான முட்டாள்தனம் ஆகியவற்றைக் காண்பிக்கும்படிக்கு அவருடைய ஞானம் மற்றும் முன்னேற்பாடும், சூழ்நிலைகளையும், சுற்றுப்புறங்களையும் வடிவமைக்கும்.
தொழில் சார்ந்த காரியங்களில் குழப்பம் உண்டா? அல்லது தொந்தரவு செய்கிறதா? “உங்கள் இருதயங்கள்…. லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கு… எச்சரிக்கையாயிருங்கள்” (லூக்கா:21;34)என்ற கர்த்தருடைய எச்சரிக்கையை நினைவில் வையுங்கள். மேலும் “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், இன்னும் பல முட்டாள் தனமான புண்படுத்தும் காமங்களில் விழுகிறார்கள். இவைகள் மனுஷரை கேட்டிலும், முற்றிலுமான அழிவிலும் முழ்கடிக்கும்.” என்று அப்போஸ்தலர் எச்சரிக்கிறார். மேலும் பண ஆசை எல்லா தீமைக்கும் வேராக இருப்பதால், சிலர் அதை இச்சித்து பின் செல்லும்போது, அவர்கள் விசுவாசத்தைவிட்டு விலகி, பல வேதனைகளால் தங்களை உருவ குத்திக்கொள்கிறார்கள். ஆனால், “நீயோ. தேவனுடைய மனுஷனே. இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்” மேலும், இந்த விஷயங்களை நினைவில் வைத்துக்கொண்டு. நம்முடைய தற்காலிகமான காரியங்களுக்காக அதிகமாக கவலைப்படாதபடிக்கும். அவைகளை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை அறிந்தவர்களாக ஞானத்தைப் பெறவும். வழிடத்துதலுக்காகவும் பரலோக கிருபாசனத் தண்டைக்கு செல்லவேண்டும். (ரோமர் 12:11) மேலும் கர்த்தருடைய ஊழியத்தில் இத்தகைய உலக கவலைகளை நடைமுறைபடுத்தும்போது. ஆனால் அது தேவனுடைய ஐக்கியத்தையும், மனதின் சமாதானத்தையும் குறுக்கிடும் மிதமிஞ்சிய. அழிவுக்குரிய பராமரிப்பாக இருக்கும். அதை நாம் தவிர்க்கவேண்டும்.
வறுமையின் கொடுமை கவலையான சிந்தனையை ஏற்படுத்துகிறதா ? அதையும் கர்த்தரிடம் ஜெபத்தில் எடுத்துச் செல்லுங்கள். அதற்குபின், கையில் உள்ள வழிமுறைகளை விடாமுயற்சியுடன் பயன்படுத்தி. ஒழுக்கமான மற்றும் நேர்மையான விஷயங்களை வழங்க. பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் காத்திருங்கள். மேலும் தேவனுடைய முன்னேற்பாடுகளின் குறிப்புகளை கவனியுங்கள். விதைக்காமலும், அறுக்காமலும், களஞ்சியங்களில் சேர்த்துவைக்காமலும் இருக்கிற ஆகாயத்துப் பட்சிகளை போஷிக்கிறவரும், இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லை உடுத துவிப்பவர். உங்களையம். உங்களுடையவர்களையும் உடுத்துவிப்பதும், போஷிப்பதும் எவ்வளவு சாத்தியமான காரியம்.
எனவே, பூமியின் சோதனைகள் மற்றும் கவலைகள். அதன் விருப்பங்கள் மற்றும் துயரங்கள். அதன் இறப்புகள், ஏமாற்றங்கள், பேரழிவுகள். துயரங்கள், அதன் தோல்விகள் மற்றும் குறைபாடுகள் மற்றும் பாவங்கள் மற்றும் தவறுகள் ஆகியவற்றை நாம் தேவனிடம் ஜெபத்தில் எடுத்துச் சென்று, நம்முடைய தேவைக்கு ஏற்றபடி உதவியையும், ஆறுதலையும், அனுதாபத்தையும் பெறலாம். நம்முடன் இருப்பதாக வாக்குறுதியளித்த பிதா மற்றும் குமாரனுடைய பிரசன்னத்தில் நாம் வாழ்வோம். இது நம் நாட்களை இனிமையாககி நம்முடைய இரவ,களை ஆறுதல்படுத்துவதோடு, நம்முடைய சுமைகளை இலகுவாக்கும். அதோடு நம்முடைய கவலைகளை எளிதாக்கி, நம்முடைய நம்பிக்கையை பிரகாசமாக்கும். மேலும் ஒரே வார்த்தையில் சொல்லபோனால், அது உலகத்திற்கும் மேலாக, ஒரு தூய்மையான சூழ்நிலைக்கு நம்மை உயர்த்தும். நம்மைப் பற்றிய பரலோகத்தின் சித்தம் இதுதான், இந்த ஒரு பாக்கியத்தை நாம் புரிந்துக் கொண்டு. பயன்படுத்திக்கொள்வோம்.