CD-FAITH-Q-7
அப்போஸ்தலர் 4:10-12 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரயேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
யோவான் 3:16 “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”
யோவான் 3:36 “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான், குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.”
A 102(P 3)
முழுமையாக ஊழியம் செய்யும் மனப்பான்மையானக் காரியங்களையுடைய வேதாகமத்தில், இரட்சிப்படையக்கூடிய பல வழிகளை (விசுவாசம், கிரியைகள், மற்றும் பேதமை) அது வலியுறுத்துவதில்லை. மேலும், தேவனை மதிக்காமல் இருப்பதின் மூலமாகக் கிடைக்கும் நித்திய அழிவைக்குறித்தும் அதிகமாக போதிப்பதில்லை. மாறாக, மற்ற எல்லா நம்பிக்கையின் கதவுகள் அடைப்பட்டாலும், ஜீவனுக்குப் போகிற ஒரே ஒரு திறந்த வாசலை மட்டும் காட்டுகிறது. அதில் பிரவேசித்து ஜீவனைப் பெறும்படி அழைப்பு கொடுக்கப்படுகிறது. இப்பொழுது இதை காணமுடியாமல், அல்லது அதற்குள் நுழைந்த பின் கிடைக்கும் ஆசீர்வாதங்களின் சிலாக்கியத்தை அறியாதவர்கள் காலப்போக்கில் முழு அறிவினால் நிரப்பப்படுவார்கள் என்று காட்டுகிறது. இந்த முறைமையில் ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் மட்டுமே தேவனைச் சேர முடியும். சிறப்பாக வேலை செய்வதினாலும் அல்ல, அறியாமையினாலும் அல்ல இந்த உலகத்தின் பாவத்தைப் போக்கும், கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் மேலுள்ள விசுவாசத்தினால் மட்டுமே இதை சாதிக்கமுடியும். (1பேது 1:19, யோவ 1:29) “இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி இதுவே.”
R2220 – பாடத்தின் முடிவில் “கிறிஸ்துவுக்குள் விசுவாசம் தேவையா” – என்ற தலைப்பில் காணவும்.