CD-KNOWLEDGE-Q-25
ஆமோஸ் 3:7 “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்”
யோவ 16:13 “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்”
B15(P3): –
யூத யுகத்தின் முடிவில் ஓர் அறுவடை காலம் இருந்தது போல, சுவிஷேச யுகத்தின் முடிவில் ஓர் அறுவடை காலம் காணப்படுகிறது. (மத் 9:37, 13:24,30,39) அந்தக் கால அளவை போல, சுவிஷேச யுகத்தின் அறுவடைக் காலமும் 40 வருடமாகும். அறுவடையின் காலத்தில் விஷேசமாக தீர்க்கதரிசனங்களின் சாட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதாவது யூத யுகத்தின் முழு வெளிச்சமும் அறுவடையின் காலத்தில் பிரதிபலிக்கும். அதேபோல சுவிஷேச யுகத்தின் அறுவடையின் போதும் மகிமையான ஒளி பிரகாசிக்கப்படுகிறது. இந்த வெளிச்சத்தில் தேவனுடைய திட்டங்களின் செயல்பாடுகளை அதாவது நடந்தவைகளையும், இனி நடப்பவைகளையும் மிக தெளிவாக காணலாம். அதுமட்டும் அல்ல அவருடைய வாக்குத்தத்தங்களின்படியே வரும் காரியங்களை நமக்கு காட்டுகிறார் (யோவன் 16:13) வரும் ஆட்சியில் அனைவரையும் ஆசீர்வதிக்கும் ஞானமான கோட்பாடுகளை அற்புதமான தரிசனங்களில் காண்கிறோம். சகல காரியங்களும் அதன் மகிமையான சீர்பொருந்துதலையும் காண்கிறோம். இந்த அறுவடையின் காலத்தில் மிக பெரிதும் அற்புதமான சில சம்பவங்கள் மையப்படுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். அதாவது மகா உபவத்திரத்தின் காலத்தில், யோகோவாவின் நாளில் அந்திக்கிறிஸ்து அமைப்பாகிய மகா பாபிலோனின் முழுமையான இறுதி வீழ்ச்சியைக் காணலாம். மீண்டுமாக யூதர்களுக்கு கிருபையின் காலம் துவங்கும். நம்முடைய ஆண்டவரின் இரண்டாம் வருகையும், அவருடைய இராஜ்யத்தின் ஸ்தாபனமும் நடைபெறும் மற்றும் முதலாம் உயித்தெழுதல் நடைபெற்று பரிசுத்தவான்கள் தங்களுடைய பரிசுகளை பெறுவார்கள்.
R2973 (col.2P4)
ஜாமக்காரர்கள் உலகத்தாரை போல வெளிப்புறமான அடையாளங்களை மட்டும் தேடாமல், நம்முடைய இராஜாவினால் முன்னதாகவே அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனமான காரியங்களை வேதாகமத்தில் தொடர்ந்து மிக கவனமாக ஆராய்ந்து வருகிறார்கள். ஏனெனில் முன் குறிக்கப்பட்ட காலங்கள் நிச்சயமாக சம்பவிக்கும் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஏனெனில் இனி வரக்கூடிய காரியங்களுக்கு இவர்கள் “இருளுக்குள் இருப்பவர்கள்” அல்ல, இவர்கள் வருங்காலத்தைக் குறித்த சகலமும் பரிசுத்த ஆவியினால் போதிக்கப்படும் என்ற வாக்குத்தத்தத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே குறித்த காலத்தில் சம்பவிக்கக்கூடிய காரியங்களை உலகம் அறிந்துக்கொள்வதற்கு முன்னதாகவே இவர்கள் உணர்ந்துகொள்வார்கள் (யோவ 16:13). அதே வரைபடம், பூமிக்குரிய அரசியல் சமுதாயம் மற்றும் பொருளாதார அமைப்புகளின் வீழ்ச்சியையும் காட்டுகிறது. அதாவது யேகோவா தேவனின் மிக மகத்துவமான திட்டத்தில் குறிக்கப்பட்ட அந்தச் சரியான நேரத்தில் அவைகள் வீழ்ச்சி அடைந்து, தெரிந்துகொள்ளப்பட்ட சபையின் கைகளில் அவருடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பார். (உலகத்தின் ஆட்சியாளர்களாகவும், மகிமை அடைந்த இராஜரீகமான ஆசாரியர்களாக தங்கள் சிங்காசனத்தில் அமருவார்கள்.) ஒவ்வொரு சிருஷ்டிப்பையும் ஆசீர்வதிப்பதற்காக தேவனுக்கு மகிமையில் இவர்களை உயர்த்துவார்.