CD-LOVE-Q-12
R3166[col.1 P4]: –
மற்றும் ஓர் சிந்தனை நம் அனைவரின் மனதிலும் இருக்கவேண்டும். அதாவது, மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட வித்தியாசமான வரங்களைக் கொண்டிருக்கையில், ஆற்றல் அல்லது சேவை அல்லது செல்வத்தின் ஒப்பீட்டளவில் பெரிய அல்லது சிறிய அளவில் தேவனுக்காக பங்களிக்க முடியுமானால், ஆண்டவர் நம்முடைய முயற்சிகளினால் பெற்ற பலன்களின்படி அல்ல, நம்மை இயக்கும் ஆவியின் அறிவின் அடிப்படையில் நம்மை மதிப்பிடுவார். ஒரு ஏழை விதவை இரண்டு காசுகளை போட்ட இந்த சிறிய தாலந்தைப் பற்றி சொல்லப்படுகிறது. பெரிய பரிசைக் காட்டிலும், சிறிய பரிசை ஆண்டவர் மிகவும் பாராட்டினார். இதைக் கருத்தில் கொண்டு, நம்முடைய பலத்தினால், நம் கைகள் செய்யக்கூடிய வேலைகள் மட்டும் அல்ல, நம்முடைய ஒவ்வொரு பலிகளும், ஆண்டவருக்கென்று நம்முடைய காணிக்கைகளையும், முழுமையான அன்பும் பக்தியும் நிறைந்ததாக இருந்தால், நிச்சயமாக ஆண்டவர் அதை அங்கீகரிப்பார். ஏனெனில், வீண் மகிமைக்காக அல்ல, அன்பினால் அவருக்காகவும். அவருடையவைகளுக்காகவும் இவைகள் செய்யப்பட்டது.