CD-PRAYER-Q-39
R2837 [col. 2 4] through R2838 [col. 13]: –
தேவனுடைய ஜனங்களை பொருத்தவரையில் ஜெபத்திற்கு பதில் அளிக்கும்படியாக அற்புதமான சுகத்தை எதிர்ப்பார்க்கக்கூடாது அல்லது அதற்காக ஜெபிக்கவும் கூடாது என்று நாம் எண்ணுகிறோம். தேவனுடைய ஜனங்கள் அனைவரும் நிச்சயமாக கிருபாசனத்தண்டைக்கு வரவேற்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் அனைத்து சுமைகளையும் கவலைகளையும் அங்கு கொண்டுவரவும், தேவைப்படும் ஒவ்வொரு நேரத்திலும் தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும் உதவியாகப்பெற அழைக்கப்படுகிறார்கள். ஆனால் பரிசுத்தவான்கள் ஒருபோதும் தங்கள் உடல்ரீதியான குணப்படுதலுக்காக ஜெபிக்க அழைக்கப்படுவதில்லை. எவ்வாறாயினும், தந்தையிடம் பரிசுத்த ஆவியை கேட்பவர்களுக்கு, அதை கொடுப்பதே அவருடைய மனமகிழ்ச்சி என்று உறுதியளிக்கப்படுகிறது. உடல் ரீதியான வியாதிகள், துக்கங்கள் மற்றும் வேதனைகள், தேவனுடைய ஜனங்களால் சரியாகப் பெறப்பட்டு நீடிய பொறுமையோடு சகித்துகொள்ளப்பட்டால், ஆவியின் கனிகளும், கிருபைகளும் அதன் விளைவாக பெறலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இப்படியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆண்டவர் பவுலிடம் கூறியச் செய்தி “அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன். ” (2 கொரி 12:7-10)
அப்போஸ்தலரின் இந்த ஒரு ஜெபம், மீண்டும், மீண்டுமாக மூன்று முறை ஏறெடுக்கப்பட்டதாக வேதபதிவு நமக்கு காண்பிக்கிறது. இந்த ஒரு அப்போஸ்தலரை தவிர வேறு எந்த அப்போஸ்தலரும் உடல் ரீதியான குணப்படுத்தலுக்கு ஜெபிக்கவில்லை. பரம அழைப்பு – உடல் நலம், செல்வம், பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் இன்பங்கள் அல்ல என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பு, அப்போஸ்தலரின் அனுபவத்தின் ஆரம்பத்தில் இது வழங்கப்பட்டது. ஆனால் இவை அனைத்தையும் பலி செலுத்தி, கிறிஸ்துவின் பாடுகளுக்கு உடன் பங்காளியாகி, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் காலபோக்கில் பெற்றுகொள்ளலாம் என்று அறிந்துகொண்டார். இவ்வாறாக, நம்முடைய அன்பான இரட்சகர் கூட தனக்காக பூமிக்குரிய எந்த விதமான ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்கவும் இல்லை. அவருடைய வல்லமைகளை சுயத்திற்காக பயன்படுத்தவும் இல்லை. அவர் கல்லுகளை அப்பமாக மாற கட்டளையிட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், நாற்பது நாட்கள் உபவாசித்தார். அவரை துன்புறுத்தியவர்களிடமிருந்து, பாதுகாக்க, பன்னிரண்டு லேகியோன் தேவதூதர்களை அவர் வருவதற்கு கட்டளையிட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல், அதற்கு பதிலாக. பிதா தனது பாத்திரத்தில் ஊற்றின கசப்பான அனுபவத்தை சகித்துக்கொண்டு, இயல்பாக மனுக்குலத்திற்கு அனுமதிக்கப்பட்ட பொதுவான ஆசீர்வாதங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டார். களைப்படைந்தபோது அவர் ஓய்வெடுத்தார். தன்னுடைய சிலுவையைச் சுமக்க முடியாத அளவுக்கு பலவீனமடைந்து, அதன் கீழ் விழுந்தார். ஆனாலும் அவர் பலத்திற்காக ஜெபிக்கவில்லை. இது அவருடைய உடன்படிக்கையை அல்லது மரணத்திற்கு அவர் தன்னை தத்தம் செய்ததற்கு எதிராகவும், மரணத்தை தவிர்ப்பதற்கு அவர் தெய்வீக உதவியை நாடுவதாகவும் இருந்திருக்கும்.
ஆனால் சரீர ரீதியான பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு அப்போஸ்தலர்கள் ஜெபித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் (மேலே குறிப்பிட்ட ஒரு நிகழ்வைத் தவிர) அவர்களின் வியாதிகள் மற்றும் அவர்கள் நேசித்த மற்றவர்களின் வியாதியைப் பற்றிய பதிவுகள் நம்மிடம் உள்ளது. “அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார். அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார்.” (பிலிப்பியர் 2:27) என்று ஒரு சந்தர்ப்பத்தில் அப்போஸ்தலன் எப்பிபிராத்தாவைப்பற்றி கூறினார். அவர் குணமடைந்தது அற்புதமாக இருந்திருந்தால், அது தேவனுடைய மகிமைக்கு என்று அறிவிக்கப்பட்டிருப்பதை நாம் சந்தேகிக்க முடியுமா? அப்படியானால், ஜெபத்தினால் அல்ல வசனம் கூறியது போல் தெய்வீக இரக்கத்தினாலே அவர் சொஸ்தமானார் என்பது தெளிவாக தெரிகிறது. அதுபோல இப்போது நமக்கும் நடக்கிறது – “உங்களுக்கு இன்னது தேவை என்பதை உங்கள் பரம பிதா அறிந்திருக்கிறார்.” மேலும்… அவருடைய நோக்கத்திற்காக அழைக்கப்பட்டவர்களும் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்படிக்கு, அன்பு மற்றும் இரக்கத்தின் வாக்குத்தத்தங்களை அவர் நிறைவேற்றும்படியாக சகல காரியங்களையும், நோய் போன்றவற்றையும் கூட தேவன் அனுமதிக்கிறார்.
யாக்கோபு 5:14-16 ம் வசனங்களில் சொல்லப்பட்டதை தவிர வேதாகமத்தில் விவரித்துள்ளபடி, பரிசுத்தவான்களுக்கு அல்ல, பொது ஜனங்களுக்கு மட்டுமே உடல் ரீதியான குணப்படுத்தல் ஜெபத்தின் முலமாக கொடுக்கப்பட்டது. பரிசுத்தவான்கள் பாவத்தில் விழுந்ததினால், அதற்குரிய சிச்சையாக வியாதியில் அகப்பட்டு, தனக்காக ஜெபிப்பதற்கு தேவனிடம் அவர் செல்ல முடியாதபோது, அவர்கள் சபையின் மூப்பர்களை வரவழைத்து, அவருடைய பாவங்களுக்கு மன்னிப்பை வழங்கும்படி ஜெபிக்கவேண்டும். “அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், கர்த்தர் அவனை எழுப்புவார் அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.”
நாம் காலவரிசைப்படி ஆயிரமாண்டின் விடியலில் இருந்தாலும், தெரிந்துக்கொள்ளப்பட்ட இராஜரிக ஆசாரியக்கூட்டமான சுவிசேஷ யுக சபையானது நிறைவடைந்து மகிமைப்படுத்தப்படும் வரை ஏதோவொரு விசேஷித்த திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்களானது உலகிற்கு வழங்கப்படும் என்றால் அது சந்தேகம்! ஏனெனில் இது சபையின் வேலையாகும்.
F636 [1] through F637 [1]: –
இதை இயேசு எப்படி செய்தார்? அவருடைய அப்போஸ்தலர்கள் அவருடைய அடிச்சுவட்டை பின்பற்றுவதற்கு என்ன வழியைப் பின்பற்றினார்கள்? இயேசுவோ அல்லது அப்போஸ்தலர்களோ சபை வகுப்பாருக்கு எந்த ஒரு குணப்படுத்துதலை நிகழ்த்தியதாக பதிவுகள் இல்லை என்று நாம் பதில் அளிக்கிறோம். இந்த விஜயத்தில் நோயுற்றவர்களை தேவன் குணப்படுத்துவது, தெய்வீக சித்தத்தை குறிப்பிடுவதாக வலியுறுத்தப்படுகிறதா? குணமடைந்தவர்கள் அல்ல. ஆனால் குணப்படுத்துபவர்களின் முறையை நாம் பின்பற்றுகிறோம் என்று பதில் அளிக்கிறோம். நம்முடைய ஆண்டவர் அற்புதமாக திரளான ஜனங்களுக்கு உணவளித்தார். அதுபோல நாமும் அற்புதமாக போஷிக்கப்படவேண்டும் என்று எதிர்ப்பார்க்கவேண்டுமா? இல்லை – இதற்கு மாறாக புது சிருஷ்டியின் தலைவர் தனது தனிப்பட்ட வசதிக்காக தெய்வீக வல்லமையைப் பயன்படுத்த மறுத்ததைபோல நாமும் இருக்கவேண்டும். (மத்தேயு 4:2-4; 26:53) அவர் பசியோடு இருந்தபோது. அப்பம் வாங்கி வர தம்முடைய சீஷர்களை அனுப்பினார். அவர் களைப்படைந்தபோது அவர் கிணற்றண்டையிலோ வேறு இடத்திலோ ஓய்வெடுத்தார். அவரை “தொடும்போது” அவர் வல்லமையை இழக்கும்போதும், அதை பலிசெலுத்தும் போதும், இந்த இயற்கையான தொல்லைகளிலிருந்து விடுபட அவர் ஒருபோதும் ஜெபிக்கவில்லை. ஆனால் அவைகள் அவருடைய பலியின் ஒரு பகுதியாக, மகிழ்ச்சியோடு சகித்தார் – அதுபோல நாமும் இருக்கவேண்டும்.
இதை விட, இதுபோன்ற தற்காலிகமான தேவைகளுக்கும், நிவாரணத்திற்கும் பரிசுத்த ஆவியின் உதவியை பயன்படுத்துவது, அவருடைய வல்லமையை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய பாவமாகும். ஏனெனில் அந்த வல்லமை வேறு நோக்கத்திற்காக அவர் வசம் உள்ளது. தேவனுடைய ஜனங்கள் பலியினால் உடன்படிக்கையை செய்திருப்பதால், இறக்கும் செயல்முறைகளின் எந்தப் பகுதியிலிருந்தும், அவரது மீட்பு அல்லது பாதுகாப்பிற்காக தெய்வீக வல்லமையை கோருவது பாவமாக இருக்கும். மேலும் அதன் விளைவுகளுக்காக எந்தவொரு முறையீடும், நம்முடைய உடன்படிக்கையிலிருந்து பின்வாங்குவதாக இருக்கும். “பின்வாங்கி போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாக இராது.” எபிரெயர் 10:38, மத்தேயு 26:53.
நாம் நம்முடைய அதிபதியை பின்பற்றுவதினால், இந்த காரியம் சபைக்கும் துல்லியமாக பொருந்தும். மரணத்திற்காக நாம் அர்ப்பணித்த நம்முடைய மரணத்திற்குரிய சரீரங்களுக்காக தெய்விக உதவியை கோருவது, நம்முடைய உடன்படிக்கையை மீறுவதாக இருக்கும். ஏனெனில் “கனம், மகிமை மற்றும் அழியாமை” ஆகிய மாபெரும் பரிசை பெறக்கூடிய சிலாக்கியத்தை புது சிஷ்டிகளாக ஓடுவதற்கான வாய்ப்புக்கு பதிலாக மனுஷனுக்குரிய உரிமைகளையும் (விலைமதிப்பற்ற இரத்தத்தால் வாங்கப்பட்டு மறுசீரமைப்பு சலுகைகளில்) நம்முடைய பூமிக்குரிய நன்மைகளையும் கொடுத்துவிட்டோம். நாம் தத்தம் செய்ததை மீண்டும் கேட்பது பலியை திரும்ப பெற்று, உடன்படிக்கையை ரத்து செய்து, புது சிருஷ்டிகளாக நம் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கவும் விரும்புகிறதை இது அர்த்தப்படுத்துகிறது. பூமிக்குரிய விஷயங்களுக்கான ஜெபத்தைப்பற்றிய இந்த பார்வை சிலருக்குப் புதிதாக இருக்கும். மேலும் சிலர் இக்காரியத்தை அறியாமல் செய்தும் தேவன் அந்த ஜெபத்திற்கு பதில் அளித்தார் என்பதை பிரதிபலிக்கும்போது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பரிசைப் பெறுவதற்கான ஓட்டத்திலிருந்து அவர்கள் நிராகரிக்கப்பட்டார்கள் என்று இதற்கு அர்த்தமா? நிச்சயமாக இல்லை. பூமிக்குரிய ஒரு பெற்றோர் தனது அறியாத சிறு பிள்ளையை நீண்டகாலமாக சகித்துகொள்வது போல, ஆண்டவரும் அவருடைய ஜனங்கள் தற்செயலாக செய்யும் பிழைகளை மன்னித்து அவர்களின் வெறும் வார்த்தைகளை அல்ல, அவர்களின் உள்நோத்தையே கணக்கில் எடுத்துகொண்டு அவர்களை பொருத்துகொள்வார் என்று நாம் நம்புகிறோம். ஒரு பெற்றோர் தனது சிறிய குழந்தைகளின் முறையற்ற வேண்டுகோளை வழங்குவதைப் போல, ஆண்டவரும் தம்முடைய ஜனங்களின் முறையற்ற விண்ணப்பங்களை அடிக்கடி வழங்கி, அவர்களின் விசுவாசத்தை கனப்படுத்தினார் என்று நம்புகிறோம். ஆனால் நாம் அறிவிலும், கிருபையிலும் வளரும்போது இது வேறுப்படுகிறது. அதற்கு பின் அது பாவமாகிறது. மேலும் தெய்வீக கிருபையை விட்டு திரும்பி உடன்படிக்கையை நிராகரிப்பது என்று பொருள்படும்.
F644 [1] through F654 #39 கேள்வி காண்க)
உலகில் உள்ள அனைத்து நோய்களும் மரணங்களும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ, நேரடியான நிலையில் மிக பெரிய எதிராளியால் ஏற்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மனிதனை கெடுக்கவும். அவனை செயலிழக்க செய்யவும். இவன் வழியாகவே பாவம் மனுஷனுடைய மனதுக்குள் புகுத்தப்பட்டது. ஆயினும் கூட, உலகம் மற்றும் புது சிருஷ்டியின் காரியத்திலும் கூட மனிதனுடைய படிப்பினைக்கும் கற்பித்தலுக்கும் தேவனானவர். பாவத்தின் காரணமாக மனுக்குலத்தின் மீது வந்துள்ள சாபத்தின் பல்வேறு கூறுகளை நீக்கிவிடுகிறார். உலகைப் பொறுத்தவரை, ஒரு போதுவான அர்த்தத்தில், முழுமையாக வேதனையில் இருக்கும் சிருஷ்டிப்பு. அதிகளவிலான பாவம் மற்றும் அதன் விரும்பத்தகாத தன்மையைப் பற்றியும் ஏதோ கற்றுகொண்டிருக்கிறது. சபையைப் பொறுத்தவரை. புது சிருஷ்டி கிறிஸ்துவின் துன்பங்களில் பங்கெடுப்பதற்கான அவரது அனுமதி. மனித குலத்தின் எஞ்சியவர்களுக்கு பொதுவானதாக இருக்கும் அந்த துன்பங்களில் ஒரு பங்கை உள்ளடக்கி உள்ளது. நம்முடைய ஆண்டவரின் விஜயத்தில் அவர் மனுக்குலத்திற்கான சிறந்த பிரதான ஆசாரியராக இருக்கிறார் என்றும் நம்முடைய பலவீனங்களை உணரக்கூடியவராக இருக்கிறார் என்றும் நமக்கு குறிப்பாக அறிவிக்கப்படுகிறது. மேலும் ஆசாரியரின் சரீர அங்கமாக இருக்கும் ஒவ்வொரும். தலையாகிய நம்முடைய ஆண்டவரை போலவே மற்றவர்களுடைய பலவீனங்களை உணரக்கூடியவர்களாக இருக்கவேண்டும். கிறிஸ்துவின் முழு சரீரத்திலும் இரக்கமற்ற உறுப்பினர் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அனைவரும் இப்படிப்பட்ட அனுபவங்களைப் பெற்று, வருங்கால யுகத்தின் இந்த பரிதாபமான உலகத்தை மறுசீரமைப்பதற்கான நேரம் வரும்போது, அவர்களை எவ்வாறு முழுமையான இரக்கத்தோடு திருத்தி. கீழ்ப்படிதலின் கீழ் அவர்களை சோதித்து. பரிட்சித்து நியாயந்தீர்ப்பது என்று அவர்கள் முழுமையாக அறிந்திருப்பார்கள். மாம்சத்தில் பரிபூரணமாக இருந்த நம்முடைய ஆண்டவர். நோய்ப்பட்டவர்களால் தொடப்பட்டதால், அவர்களைக் குணப்படுத்துவதில் தனது வல்லமையை (உயிர்ச்சக்தி) செலவழிக்க முடிந்தது. இதனால் அவர் தாமே அவருடைய வல்லமைக்கு பதிலாக குணமாக்கப்பட்டவர்களின் பலவீனங்ங்கள் மற்றும் உபத்திரவங்களை அனுபவங்களாகப் பெற்றார். ஆகையால்,” அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று. ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.” (மத்தேயு 8:17) என்று அவர் அறிவித்தார். கிறிஸ்துவின் சரீரத்திற்கு அங்கத்தினர்களாக அழைக்கப்படுபவர்களுக்கு பொதுவாக ஒரு அதிசயமான முறையில் விட்டுக்கொடுப்பதற்கு எந்த வல்லமையும் இல்லை. ஆனால் உலகின் பொதுவான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் அவர்களின் பொதுவான துயரத்தில் முழுமையாக அனுதாபம் கொள்ள அவர்களுக்கு உதவியாக, அவர்களின் சொந்த அபூரணமான நிலையில் மனித இனத்தின் உணர்வுகளை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
கிறிஸ்துவின் சரீரம் உலகின் சோதனைகள். சரீரம். சமுதாயம் மற்றும் பொருளாதார கஷ்டங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று சிலர் எதிர்ப்பார்க்கும் சிந்தனைக்கு நாம் எந்தவிதத்திலும் ஏற்றுகொள்ள இயலாது. உண்மையில், மாம்ச இஸ்ரயேலர்களின் நிலை இவ்வாறாக இருந்தது. தேவனுக்கும் அவருடைய நியாயப்பிரமாணத்திற்கும் உண்மையுள்ளவர்களாக இருப்பதற்கு அவர்கள் துன்பத்திலிருந்தும். சோதனைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலையை வெகுமதியாகப் பெற்றார்கள். ஆனால் புது சிருஷ்டிகளின் விஷயத்தில் இது முற்றிலும் தலைகீழானது. ஏனென்றால் அவர்கள் மாம்சத்தின்படி அல்ல. ஆபிரகாமின் ஆவிக்குரிய வித்தாகிய ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள். நிழலான மாம்ச இஸ்ரயேலர்களின் ஆசீர்வாதங்கள், புது சிருஷ்டியின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கு அடையாளமாக உள்ளது. சகலமும் அவர்களின் ஆவிக்குரிய நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது. கிறிஸ்துவக்குள் விசுவாசத்திலும், கீழ்ப்படிதலிலும் நிலைத்திருக்கும் வரை தேவனுடைய ஆசீர்வாதத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் வாசம் செய்யும் இடத்திற்கு எந்த தீமையும் அனுகாது. அவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படாதபடிக்கு எல்லாவற்றிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு அவர்கள் மறைவில் வைக்கப்படுகிறார்கள். பூமிக்குரிய பலிகள் முழுமையாக நிறைவடைவதன் விளைவாக அவர்கள் புது சிருஷ்டிகளாக பூரணப்பட்டு. அதிக அளவிலான ஆவிக்குரிய நன்மைகளை அனுபவிக்கவும். மாம்சத்திற்குரிய ஆசீர்வாதங்களுக்கு மேலாக ஆவிக்குரியவைகளைப் பற்றி அவர்கள் புரிந்திருக்கிறார்களா என்பதையும், அவர்கள் இந்த ஆவிக்குரிய ஐக்கியத்திற்கு பாத்திரவான்களாக இருக்கிறார்களா என்பதை நிரூபிக்கும்படி, தொடர்ந்து சோதிக்கப்படுகிறார்கள்.
ஆகையால் கிறிஸ்து இயேசுவில் உள்ள புது சிருஷ்டிகள் தங்களுக்கு ஏராளமான அவமானங்களும், சோதனைகளும் இருப்பதைக் கண்டறிந்தாலும், இவைகள் எவ்வழிகளில் வந்தாலும் சரி, அவைகள் தங்கள் விசுவாசத்தின் சான்றுகளாக அவைகளை அங்கீகரிக்க வேண்டும். தேவன் அவருடைய புத்திரர்களாக கருதுவதற்கான சான்றுகளாகவும், தொடர்ந்து வரக்கூடிய மகிமையில் பூரணப்படுவதற்கு பொருத்தமாக ஆயத்தமாகும்படி அவர்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையின் படியும் சோதிக்கப்படுகிறார். ஆகையால் இப்படிப்பட்டவர்கள் மேல் பேரழிவுகள் வரும்படி தேவன் அனுமதித்தால், அவை உலகிற்கு நேர்ந்தது போன்றவை என்று நாம் கருதப்படக்கூடாது. இந்த உலகம் மரண தண்டனையின் கீழ், பல்வேறு விபத்துக்கள் மற்றும் பிறழ்வுகளுக்கு உட்பட்டது. பதினெட்டு பேரின் மேல் சிலோவாம் கோபுரம் விழுந்ததைப் பற்றியும், பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்ததைப் பற்றியும் நம்முடைய ஆண்டவர் விளக்கியபோது. இவர்கள் தெய்வீக புறக்கணிப்பினால் குற்றவாளிகள் என்ற காரணத்தினால் இவர்கள் அழிக்கப்படவில்லை என்று நம்முடைய கர்த்தர் அறிவித்தது போல இதற்கு ஆண்டவர் எதுவும் செய்யவதில்லை. (லூக்கா 13:1-5) இந்த உலக மனுக்குலத்திற்கு தொடர்பாக, மனிதர்கள் மற்றும் சாத்தானின் கோபத்தை, சில வரம்புகளுக்குள் தேவன் அனுமதிக்கிறார். ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சபையைப் பொறுத்தவரை இது வேறுப்படுகிறது. அவர்களுக்கு நேரிடும் எதுவும் தற்செயலானது அல்ல. “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.” பிதாவின் சித்தமில்லாமல், அவர்களின் தலையில் உள்ள முடிக்கூட கீழே விழாது. சங்கீதம் 116:15, மத்தேயு 10:30) “எனக்கு எல்லா அதிகாரமும் உண்டென்றும் உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்று உனக்குத் தெரியாதா” என்று பிலாத்து இயேசுவிடம் சொன்னபோது, “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால். என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது..” என்று நம்முடைய ஆண்டவர் பதில் அளித்தார். (யோவான் 19:10,11) மேலும் கிறிஸ்துவின் சரீர அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும். புது சிருஷ்டிகளாக ஜெநிப்பிக்கப்பட்ட அந்நேரத்திலிருந்து இது உண்மையாக பொருந்தும். ஆம். இதை நம்புவதற்கு நமக்கு அனைத்து காரணங்களும் உண்டு. ஒரு விதத்தில் தெய்விக உறுதிப்பாடு புது சிருஷ்டிகளுக்கும் அப்பால் செயல்படுகிறது. Yea, we have every reason to believe that in some measure divine providence extends even beyond the New Creation to those whose lives and interests are closely linked to theirs. புது சிருஷ்டிகள் கடுமையான சோதனைகளை அனுபவிக்கும்போது. அவைகள் விசித்திரமானவை என்று நினைக்காமலம், கிறிஸ்துவின் சரீரத்தின் தலை தொடங்கி அனைத்து உறுப்பினர்களும் அதாவது பாத வகுப்பாரில் கடைசி அங்கத்தினர் வரைக்கும் சோதிக்கப்பட்டு. மெருகூட்டப்பட்டு. ஏற்றுக்கொள்ளப்பட்டு, மகிமைப்படுத்தப்படும் வரை இதுபோன்ற சோதனைகள் நடக்கும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அப்படியானால், இவை வீட்டிலுள்ள எதிர்ப்புகள் மற்றும் துன்புறுத்தல்கள் அல்லது முன்னாள் நண்பர்கள் அல்லது அயலவர்களிடமிருந்தோ. அல்லது பெயர் சபை ஜனங்களிடமிருந்தோ அல்லது நிதி பேரழிவு மற்றும் வறுமையிலோ அல்லது அவை இயற்கையாக வரும் நோய்.வலி, விபத்துகள். போன்றவை… எப்படி இருந்தாலும் சரி தேவனுடைய ஜனங்கள் தங்களுடைய ஒவ்வொரு காரியங்களை பொறுத்தவரை, தந்தையின் அன்பு மற்றும் தெய்வீக பராமரிப்பில் திருப்தியடைய வேண்டும். இதில் முழு நம்பிக்கை வைத்திருப்பது விசுவாசத்தின் சோதனையின் ஒரு பகுதியாகும். நாம் தேவனுடைய பிள்ளைகளும். சுதந்தரவாளிகளும் என்று உறுதியளிக் கப்பட்டதில் முழு நம்பிக்கை பெற்றிருக்கவேண்டும். தேவனுடைய மேற்பார்வையைப் பற்றியும். அதே நேரத்தில் காண்பதினால் அல்ல. காணாமல் விசுவாசிப்பவர்களுக்கு தேவைப்படும் விசுவாசத்தின் கடுமையான சோதனைகள் மற்றும் இன்னல்களை அனுபவிக்க அனுமதிக்கப்படுவதையும் பற்றி அறிவிக்கப்படவேண்டும்.
அப்படியானால், என்ன நன்மையையோ அல்லது எந்த விதமான தொல்லைகளோ எதுவானாலும். தேவனுடைய தெய்வீக ஏற்பாட்டை நாம் எப்போதும் நம்பிக்கையோடும், அன்போடும் பெற்றுகொண்டு. அதனால் பாடங்களை கற்றுகொண்டு, நன்மை அடைவோம். வாழ்க்கையின் அனைத்து நலன்களிலும். பூமிக்குரிய மற்றும் பரலோகத்திற்குரிய தெய்விக கவனிப்பை உணர்ந்துகொள்தல், நமது தற்காலிக விவகாரங்களில் அலட்சியத்திற்கு இட்டுச் செல்லக்கூடாது. மாறாக, நாம் பெற்ற சலுகைகள். வாய்ப்புகள். பொறுப்புகள். சமூகம். நிதி மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாம் காரியதரிசிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால், ஏற்படக்கூடிய எந்தவொரு சமுக மீறல்களையும் சரிச் செய்வதற்கு நம்மால் முடிந்ததைச் செய்வது நமது கடமையாகிறது. நம்முடைய நோக்கங்கள் மற்றும் செயல்களை தவறாக புரிந்துகொள்வதைத் தடுக்க. நம்முடைய வல்லமையில் நியாயமான முறையில் அனைத்திற்கும் நாம் விளக்கங்கள் சொல்வதில் தயவுள்ளவர்களாகவும், அக்கறையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். முடநம்பிக்கை மற்றும் வெறித்தனமாகத் தோன்றும் எல்லாவற்றையும் தவிர்ப்பதற்கு நாம் புத்திசாலித்தனமாக முயல வேண்டும். இதனால் நம் தேவனையும். அவருடைய குணத்தையும். அவருடைய புத்தகத்தையும் அவருடைய சபையையும் மற்றவர்களையும் குறித்து பாராட்டவேண்டும். இவ்வழியில் நாம் நமது ஒளியை பிரகாசிக்கவேண்டும். நிதி விஷயங்களில் நாம் விவேகமாகவும், சிக்கனமாகவும் இருக்கவேண்டும். தொழிலில் சோம்பலாக இருக்கக்கூடாது. நாம் தேவன் இல்லாதவர்களைப் போலவும். ஒவ்வொன்றும் நம்முடைய சொந்த உழைப்பைச் சார்ந்திருப்பது போலவும். இருந்தபோதிலும், நம்முடைய நலன்கள் அனைத்தும் தேவனுடைய பாதுகாப்பின் கீழ் இருப்பதால், நம்முடைய இருதயங்களிலும் விசுவாச வீட்டிலுள்ள விஷயங்களைப் பற்றிய விவாதங்களிலும் நாம் தேவன் மேல் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தவேண்டும். அப்படியானால், நம்முடைய சிறந்த ஞானம், விவேகம் போன்றவற்றை செயலாற்றினாலும், வறுமை அல்லது நிதி இழப்பு ஏற்பட்டால், இது போன்ற அனுபவங்கள் நமக்கு செழிப்பைக் காட்டிலும் புது சிருஷ்டிகளாக நமக்கு சிறந்ததாக இருக்கும் என்பதை நம்முடைய பரலோகத் தந்தை கண்டிக்கிறார் என்பதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். தேவனுடைய வழிநடத்துதல்கள் மற்றும் நம்முடைய அனுபவங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நம்முடைய எல்லா காரியங்களிலும் அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட மேற்பார்வையை அங்கீகரிக்க வேண்டும். இதேபோல் உடல் நல விஷயத்திலும்: -நம்மீது நோய் வந்தால், இந்த மரண சரீரத்திற்கு நம்முடைய சரியான உக்கிராணத்துவம், நம்முடைய அறிவு மற்றும் நியாயத்தைப் பொருத்தவரையில், அதற்கான தீர்வை காண்பதற்கு சரியான ஆற்றலை பயன்படுத்தவேண்டும் என்று கோருகிறது. முயற்சிகள் வெற்றிகரமாக இருந்தால், நம்முடைய இருதயம் வெறும் மருந்தை அல்ல. தேவனே காரணம் என பதை ஒப்புக்கொள்ளவேண்டும். அவை தோல்வியுற்றால் தேவனுடைய வல்லமையை நாம் சந்தேகிக்காமல். அதற்கு பதிலாக, மேற்கொள்ளப்படுகிற சோதனைகளை வருங்காலத்தில் இன்னும் அதிகமாக வரும் ஆசீர்வாதங்களுக்கு தொடர்புள்ளதாக காணவேண்டும். உண்மையில். புது சிருஷ்டிகளின் ஒவ்வொரு துயரங்கள் அல்லது பேரழிவுகளை, விடாமுயற்சியோடு சரி செய்வதற்கு முயற்சிக்கும் போது, இந்த அனுபவங்களிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம் என்ற முழு விருப்பத்துடனும். நம்பிக்கையுடனும், விசுவாசத்துடனும் நம்முடைய இருதயங்களை தேவனிடம் உயர்த்த வேண்டும். மேலும் இந்த படிப்பினைகள். தவறான செயல்களுக்கு தண்டனையாக உள்ளதா என்றும் அல்லது மேய்ப்பரின் அடிச்சுவடுகளிலிருந்து விலகி, தவறான திசையில் வழிநடந்த ஆடுகளை மீண்டும் கொண்ட வர வடிவமைக்கப்பட்ட கோலும். தடியுமா என்பதை கண்டறிய வேண்டும். “உமது கோலும் தடியும் என்னை தேற்றும்” தேவனுடைய ஜனங்கள் தாங்கள் பெற்றிருக்கும் சராசரி உடல் நலம், நிதி மற்றும் சமூக செழிப்பு ஆகியவற்றைக் கொண்டிருப்பதன் மூலம் பெறும் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் ஆறுதலை சார்ந்திருப்பதில்லை. ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் நிலைமைகளிலும் தேவனுடைய சமாதானத்தில் சந்தோஷப்படும். மேலும் மேய்ப்பனின் கோலும் தடியும் அவர்கள் மனதார மகிழ்ச்சி அடைய அவர்களை இயக்கும். “நான் துன்பப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்” என்று பூர்வகாலத்துத் தீர்க்கதரிசியோடு பல புது சிருஷ்டிகளும் சேர்ந்துச் சொல்லாம். துன்பங்களுடன் தொடர்புடைய பெரிய ஆசிர்வாதங்கள் உள்ளன என்று அவர்களில் பலர் அறிந்திருக்கிறார்கள்.
“உன் நோய்களை எல்லாம் குணமாக்குவார்.” (சங்கீதம் 103:3) என்று சபையைப் பற்றியும், அதன் மேலுள்ள தேவனுடைய கவனிப்பைப் பற்றியும் தீர்க்கதரிசனமாக எழுதப்பட்டுள்ளது. சரீர நிலைமைகளைப் பொறுத்தவரையில் சுவிசேஷ திருச்சபைக்கு இதனைப் பயன்படுத்த யாதொரு முயற்சியும் எடுத்திருந்தால், அது அவசியமாக முடமாகவும் பலவீனமாகவுமே இருந்திருக்க முடியும். சபையின் தலை முதல் கடைசி “பாத” அங்கத்தினர் வரை அவர்களின் உடல் நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துவதில் தேவன் மகிழ்ச்சி அடைவார் என்று யாருக்கு தெரியாதிருக்கும்! பரிசுத்தவான்களில் பலர் தங்களது சரீரப் பிணியினால் மரித்து போனார்கள் என்பது யாருக்குத் தெரியாது! மருத்துவ அறிவியலின் படி நம்முடைய நேசமீட்பர். சரீர ரீதியாக பரிபூரணமானவர் என்றாலும். கெத்செமனேவில் இரத்தத்தின் பெருந்துளியாய் வியர்வைதனைச் சொட்டிய போது. விஞ்ஞானிகளுக்குத் தெரிந்த ஒரு நோயால் தாக்கப்பட்டார். அதே விஞ்ஞானத்தின்படி மற்றும் உண்மைகளுக்கு இணங்க, மாம்சத்தில் பூரணமாக இருந்தவர். அவர் சிலுவையில் அறையப்பட்டதினால் வந்த நோயின் காரணமாக அவரது இருதயம் வெடித்தது. இந்த இரண்டு முக்கிய காரணங்களினால் மிக விரைவாக மரித்தார். அப்போஸ்தலராகிய பவுல் மரிக்கும் நாள் வரைக்கும் “மாம்சத்தில் உள்ள முள்” ஒன்றை எடுத்துச் சென்றார் என்பதையும், அதை அகற்ற தேவன் மறுத்துவிட்டார் என்பதையும். அதை தாங்கி கொள்வதினால், அதற்கு ஈடாக அதிகமான கிருபையின் ஆசீர்வாதத்தை பெறுவார் என்பதையும் அவருக்கு உறுதியளிக்கப்பட்டதை யார் அறியாதிருப்பார் ? இந்த யுகம் முழுவதும், தேவனுடைய மிக உன்னதமான பரிசுத்தவான்கள் பலர் நோய்களினால் துன்பப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்களின் நோய்கள் அனைத்தும் குணமடையாமலே மரித்துவிட்டார்கள் என்று யாருக்கு தெரியாமல் இருக்கிறது? உடல் சார்ந்த நோய்களுக்கு இந்த வேதத்தைப் பயன்படுத்துவது பொருந்தாத ஒரு காரியமாகும். ஆனால் புது சிருஷ்டியின் ஆவிக்குரிய நிலைக்கு. வசனங்களின் தீர்க்கதரிசனமான பயன்பாடு உண்மையில் மிகவும் பொருத்தமானது. புது சிருஷ்டி ஆவிக்குரிய குறைபாடுகளுடனும், நோய்களுடனும் போராடுகிறது. மேலும் தேவ வசனங்களில் உள்ள அவருடைய வார்த்தையில் பிணைக்கப்பட்டுள்ள. மிக உயர்ந்ததும் விலைமதிபற்ற வாக்குத்தத்தங்கள் இந்த ஒவ்வொரு நோயும் கிலேயாத்தின் பிசின் தைலத்தால் குணமடைவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆகவே. மனிதனால் கொடுக்கவோ. பறிக்கவோ முடியாத அமைதி மற்றும் மகிழ்ச்சியால் ஈடுசெய்யவும் அந்த இருதய நோய். அமைதியின்மை இனி உருவாகாமல். அதற்கு பதிலாக பரிசுத்த ஆவியின் அன்பும், மகிழ்ச்சியும். சமாதானமும் நிலைத்திருந்து ஆட்சி செய்யும்.
மாற்கு 16:9-20 இடையில் சேர்க்கப்பட்ட வசனங்கள்.
இந்த வசனங்கள் அனைத்தும் இடையில் சேர்க்கப்பட்டவைகள் என்று அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆரம்பகால கிரேக்க பிரதிகளில் காணப்படவில்லை மற்றும் இவைகள் நிச்சயமாக உண்மையானவைகளும் அல்ல. ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் அனைவரும் விஷத்தை குடிக்கலாம் என்றும் விஷ பாம்புகள் தொற்று நோய்கள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டாலும் அது அவைகளை சேதப்படுத்தாது என்பது உண்மை அல்ல. மேலும் நோய்களைக் குணப்படுத்துவதற்கும் பிசாசுகளை விரட்டுவதற்கும் அனைவருக்கும் வல்லமையும் இல்லை. திருத்தப்பட்ட வேத பதிப்புகளிலும், அனைத்து புதிய பதிப்புகளிலும் இந்த பத்தி விடுப்பட்டுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.
எனவே. அதைப் பெறுவது அல்லது வேதவசனமாக மேற்கோள் காட்டுவது. தேவனுடைய வார்த்தையில் சேர்ப்பதும், மற்றும் ஒரு முக்கியமான பாடத்தில குழப்பத்தை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மற்றும் பிற உயிரின வசதிகளைப் பொறுத்தவரை (உலகத்தை விட) தேவனுடைய ஜனங்கள் விசேஷமாக இரக்கம் பெறக்கூடும் என்ற எண்ணம் மாயையானதும், ஒரு கண்ணியாகவும் இருக்கும். மற்றும் புது சிருஷ்டியின் அனைத்து சரியான எதிர்பார்ப்புகளுக்கு மேலே காட்டப்பட்டவைகளுக்கு எதிரானது. கூக்குரலிடும் சிருஷ்டிகளைத் தாக்கும் பொதுவான உபத்திரவங்களிலிருந்து விடுபடுவதை எதிர்பார்ப்பதற்கு பதிலாக. அவர்களின் துன்பங்களில் பங்கெடுத்து, மனித பலவீனங்களின் உணர்வை பெறுவதற்கே நம்முடைய ஆண்டவரும் அப்போஸ்தலர்களும் தங்களை அர்ப்பணித்து, நமக்கு ஒரு நல்ல மாதிரியை முன்வைத்தார்கள். நம்முடைய ஆண்டவர் வனாந்தரத்தில் நாற்பது நாட்கள் புசியாமல் இருந்தபோது தனது பசிக்காக தெய்வீக வல்லமையைப் பயன்படுத்தும்படிக்கு எதிராளியினால் சோதனையாக கொடுக்கப்பட்ட ஒரு ஆலோசனையை அவர் நிராகரித்தார். (மத்தேயு 4:3,4) சோர்வுற்றபோது அவர் சமாரியாவின் கிணற்று அண்டையில் ஓய்வெடுத்தார். அதே நேரத்தில் அவருடைய சீஷர்கள் உணவு வாங்கச் சென்றபோது. அவருடைய வல்லமையை மீட்டெடுக்க தெய்வீக சக்தியை அவர் பயன்படுத்தியிருக்கலாம். (யோவான் 4:6) இந்த நிகழ்வுகளில், பசியின் வேதனைகளுக்கு உணவும். சோர்வுக்கு ஓய்வெடுப்பதுமே சரியான மருந்தாக இருந்தது. நம்முடைய ஆண்டவர் இவைகளைப் பயன்படுத்தினார். அவருக்கு ஏதேனும் நாள்பட்ட குறைபாடுகள் இருந்ததாக நமக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் தேவையான நேரங்களில் உணவும். ஓய்வும் பயன்படுத்தியதைப் போல் எந்தவொரு வேர்கள் அல்லது மூலிகைகள் அல்லது பிற வைத்தியங்களை சுதந்திரமாகப் பயன்படுத்திருப்பார் என்பதில் நமக்கு சந்தேகம் இல்லை. இரத்தமான வியர்வையை ஏற்படுத்தும் நரம்புகளில் உள்ள குறைபாடு. மற்றும் இருதய சிதைவு அவரது ஊழியத்தின் முடிவில் வந்தது. தனது நேரம் வந்துவிட்டது என்று அவர் அறிந்திருந்தார். பாதுகாப்பிற்காக பரலோகத்தின் வல்லமையான தேவதூதர்களை அழைக்கவும் மறுத்துவிட்டார். (மத்தேயு 26:53) மற்றும் அவரது பசியைப் பூர்த்தி செய்யவும் அவரது சோர்வு நீக்கவும் அதே வல்லமையை அழைக்க மறுத்தார். ஆனால் இந்த வல்லமையை அவரது சீஷர்களின் நலன்களுக்காக அழைப்பதற்கு பூரண சுயாதீனம் பெற்றிருந்தார். உதாரணமாக. ஏராளமான ஜனங்களுக்கு உணவளிப்பதில், மற்றும் சூறாவளியை அமைதிப்படுத்துவதில் மற்றும் வரிகளை கொடுப்பதிலும் அவர் அதிகமாக ஆர்வம் காட்டினார். மத்தேயு 14:15-21. மாற்கு 4:36-41. மத்தேயு 17:24-27
இதேபோல், அப்போஸ்தலர்களின் தற்காலிக நோய்கள் மற்றும் தேவைகளின் நிவாரணத்திற்காக அவர்கள் தங்களுக்கு இருந்த சிறப்பு சலுகைகளையும். ஆசீர்வாதங்களையும் பயன்படுத்தவில்லை என்பதைக் காண்கிறோம். பலவீனமான கண்களையுடைய பவுலைத் தவிர பன்னிரண்டு பேரில் மற்றவர்களின் நோய்களைப் பற்றி நமக்கு எதுவம் கொடுக்கப்படவில்லை. பவுல் இதற்காக வேண்டின போதும், விடுதலை அளிப்பதற்கு தேவன் விரும்பாமல், பொறுமை, மனத்தாழ்மை போன்றவற்றை வளர்ச்சி அடையச் செய்யும் இது, சாத்தானின் தூதன் என்பதை அவர் உறுதியளித்தார். இதற்கு “என் கிருபை உனக்கு போதும்” என்றார். (2கொரி12:7-9) அப்போஸ்தலரின் நம்பிக்கையும். தேவன் மீதான நம்பிக்கையும் அந்த காலத்திலிருந்து இன்று வரை குறுகிய பாதையில் நடக்கும் அனைவருக்கும் ஆறுதலளிக்கிறது. ஆனால் அவர் இவற்றில் சிலவற்றைப் போல, தற்காலிக நல்ல விஷயங்கள், பணம் வீடுகள், நிலங்கள், உணவு, வஸ்திரம் போன்றவைகளுக்காக ஆண்டவரிடம் கோரிக்கைகள் வைக்கவில்லை.சில சமயங்களில் அவருடைய தேவைகளுக்காக தன்னுடைய சொந்த கைகளில் வேலைச் செய்தார். அவர் படகோட்டினார் மற்றும் கூடாரம் தயாரிக்கும் தொழில் செய்தார் என்பதை அவருடைய சொந்த வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். பரிசுத்தத்திலும் ஆண்டவரோடு நெருங்கி இருப்பதிலும் அவரைவிட மிகக் குறைவானவர்கள். மிகவும் இழிவான (வெறுக்கத்தககதான) தொழிலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் வேலை இல்லாமல் வாழ்வது “விசுவாசத்தினால் வாழ்வது” அதாவது வேலை இல்லாமல் வாழ்வதற்கு சிலர் முற்படுகிறார்கள். இதை குறித்து அப்போஸ்தலன் மிகவும் தீர்மானமாக கண்டிக்கிறார். எபேசியர் 4:28. “திருடுகிறவன் இனித் திருடாமல். குறைச்சலுள்ளவனுக்குக கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். 2தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.” (எபேசியர் 4:28, 2தெசலோனிக்கேயர் 3:10) விசுவாசத்தினால் வாழ வேண்டும் என்பது தெய்வீக சித்தம் என்றும் அதேநேரத்தில் வேறு சிலர் வேலை செய்து வாழக்கூடியவர்கள் அவர்களை ஆதரிக்கவேண்டும் என்று தவறாக நினைக்கும் பலர், பெரும்பாலும் பணம் உணவு உடை போன்றவற்றிற்காக வேலை செய்யாமல், ஜெபிக்க தைரியம் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் அனைவரும் பொல்லாதவர்கள் என்று நாம் சொல்லவில்லை. தவறான போதனைகள் மற்றும் தெய்விக பரிவர்த்தனைகளில் உள்ள தவறான புரிதல் மற்றும் அவர்கள் அழைப்பின் தன்மை ஆகியவற்றின் காரணமாக தேவனுடைய ஜனங்களில் சிலர் இந்த தவறான மனப்பான்மையில் உள்ளனர் என்று நாம் நம்புகிறோம். அந்த ஜெபங்கள் தெய்வீக சித்தத்துடன் முழுமையான இசைவில்லாதபோதும் கூட தேவன் சில சமயங்களில் ஜெபங்களைக் கேட்டு பதிலளிப்பார் என்பதில் நமக்கு எந்த வாதமும் இல்லை. நம்முடைய ஆண்டவர் மற்றும் அப்போஸ்தலர்களின் அறிவுறுத்தல்களையும் நடைமுறைகளையும் பின்பற்றுகிறதே புது சிருஷ்டிகளுக்கான சரியான வழியும். தேவனுக்கு மிகவும் பிரியமானதென்றும் நாம் நம்புகிறோம். புது சிருஷ்டிகளாக எண்ணப்படுவதினால், பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் சிருஷ்டிகருடன் இணக்கமாக உள்ள இயல்பான மனுஷனுக்கே உரியது என்ற உண்மையை அவர்கள் அங்கீகரிப்பார்கள் என்பதை பொருள்படுத்துகிறது. ஆகவே, கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் வழியாக தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்பட்ட அனைவரும் அவருக்கு சொந்தமானவர்கள். மேலும் இந்த சுவிசேஷ யுகத்தில், அழைக்கப்படும் இந்த விசுவாசிகள். புது சிருஷ்டிகளுக்குரிய பரலோக ஆவிக்குரிய மேலான ஆசீர்வாதங்கள் மற்றும் சலுகைகளுக்கு பதிலாக தங்களுடைய மனித உரிமைகளை பலிபீடத்தின் மேல் அர்ப்பணித்து தங்களையே தத்தம் செய்கிறார்கள். ஆவிகுரிய சலுகைகள். நம்பிக்கைகள் போன்றவைகளுக்கு. பதிலாக இந்த பூமிக்குரிய உரிமைகள் இவ்வாறாக தேவனுககு அர்ப்பணிக்கப்பட்டிருந்தால். ஏற்கெனவே அர்ப்பணிக்கப்பட்ட பூமிக்குரிய இந்த ஆசீர்வாதங்களை புது சிருஷ்டிகள் எந்த அடிப்படையின் கீழ் கோரமுடியும்? தேவனுடைய ஞானத்தில் நமக்கு தேவைப்படும் தற்காலிகமான ஆசீர்வாதங்களில் சிறந்தவைகளை கேட்பது முற்றிலும் மற்றொரு விஷயமாகும். அதேபோல், ஆவியின்படி அல்ல. மாம்சத்தின்படி நம்முடைய அன்பானவர்கள் உட்பட மற்றவர்களுக்கான ஆசீர்வாதங்களை கேட்பது மற்றொரு காரியமாகும். ஆயினும்கூட நம்முடைய எல்லா வேண்டுதல்களிலும், தேவனுடைய அன்பும். ஞானமும், நம்முடையவைகளை காட்டிலும் உயர்ந்ததாக அங்கீகரிக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு விஷயத்திலும் நம்முடைய சித்தம் அவருடைய சித்தத்தில் சமர்ப்பிக்கப்படுவதை முழுமையாக உணரப்படுவதோடு. ஒவ்வொரு விண்ணப்பங்களிலும் அவைகளை வெளிப்படுத்தவேண்டும். புது சிருஷ்டிகள். தேவனுடைய வார்த்தையினால் சரியாக அறிவுறுத்தப்பட்டு, அதன் உபதேசத்தை புரிந்து பாராட்டுவதோடு. எந்தவொரு தற்காலிக நலனுக்கும் அப்பாற்பட்ட அதன் ஆவிக்குரிய நலன்களின் மதிப்பை உணரவேண்டும், இராஜ்யத்திற்கான ஆயத்தம் மற்றும் புதிய இயற்கையின் வளர்ச்சிக்கு மிகவும் இலாபகரமாக இருக்கும். மாம்சத்தின் அனுபவங்களை மட்டும். நிச்சயமாக விரும்பவேண்டும்.
புதிய ஏற்பாடானது ஒன்றிணைந்த மற்றனைத்து அப்போஸ்தலர்களைவிடவும் யூதாஸ் இழந்து போன இடத்தைப் பெற்றுக்கொள்வதற்காகக் கர்த்தாரால் தெரிந்துக்கொள்ளப்பட்டு, தமஸ்குவிற்குச் செல்லும் வழியில் கிறிஸ்துவை தான் ஏற்றுக்கொண்ட நேரந்துவக்கி, அப்போஸ்தலரின் அனுபவங்களைப் பற்றியே அதிகளவில் பேசுகின்றது.
அதிகபட்சமாக. நமது கர்த்தருடைய மாதிரி ஜெபமானது. அன்றாட ஆகார மார்க்கத்தில் கர்த்தர் தாமே தங்களுக்கு எது சிறந்தது என்று அறிந்திருப்பதால் அவரிடமே கேட்பதற்கு உத்திரவாதம் அளிக்கின்றது. மேலும் தமஸ்குவுக்கு செல்லும் வழியில் கிறிஸ்துவை அவர் ஏற்றுக்கொண்ட நேரத்திலிருந்து தொடங்கியது. அவரது பலவிதமான அனுபவங்களைப் பார்க்கும்போது, சபையில், பின்னர் சத்தியத்திற்குள் வருபவர்களின் மீதுபல சந்தர்ப்பங்களில் அற்புதங்களின் வரத்தை அவர் பயன்படுத்தினார் என்பதை நாம் உணரலாம். ஆனால் இதுவரை பதிவுகள் காண்பிக்கிறபடி, இந்த குணப்படுத்தும் வல்லமை ஒருபோதும் அவரது சொந்த நிவாரணத்திற்காகவோ, அல்லது பரிசுத்தவான்களாக தங்களை முழுமையாக அர்ப்பணிதவர்களாக நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள எவருடைய நிவாரணத்திறகாகவோ பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில் அக்கால பரிசுத்தவான்கள் நோயிலிருந்து விடுப்பட்டிருந்தார்கள் என்பதாக இல்லை. மாறாக, தீமோத்தேயுவுக்கு தீராத வயிற்று வலி இருந்ததை நாம் அறிவோம். மேலும் எப்பாப்பிரோதீத்து, வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்ததையும் நாம் அறிவோம். ஆனால், அவர் பாவத்தின் நிமித்தம் அல்ல, கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தமே மரணத்திற்குச் சமீபமாயிருந்தார் என்று பவுல் விளக்கம் அளிக்கிறார். (பிலிப்பியர் 2:25-30) இக்காரியத்தில் எப்படிப்பட்ட சிறப்பு உணவுகள் அல்லது மருந்துகளை கொடுத்து தேவன் இரக்கம் காண்பித்தர் என்று நமக்கு தெரியாது. ஆனால் தீமோத்தேயுவின் விஷயத்தில், அவருடைய நோயை குணப்படுத்த அப்போஸ்தலர் ஜெபிக்கவும் இல்லை அல்லது ஒரு கைக்குட்டை அல்லது துணியையோ அனுப்பவும் இல்லை. அதற்கு பதிலாக, ” நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள். “(| தீமோத்தேயு 5:23) என்று எழுதினார். அவர் பரிந்துரைத்த திராட்சை ரசம் மது பானமாகவோ அல்லது போதைப்பொருளாகவோ அல்ல. முற்றிலும் ஒரு மருந்தாக பயன்படுத்தும்படி கூறினார். குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால். இதுவரை நமக்கு அறிவித்திருக்கிறபடி, இந்த இரண்டு அர்ப்பணிக்கப்பட்ட சகோதரர்களின் சார்பாகவும் தெய்வீக வல்லமை செயல்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. அவர்கள் தங்கள் குறைபாடுகளையும் துன்பங்களையும் தாங்கி. அவர்கள் பெற்ற அறிவினால் மிகவும் பொருத்தமான உணவுகளையும் தீர்வுகளையும் பயன்படுத்தி. அவைகளிலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள். அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து புது சிருஷ்டிகளும் பின்பற்ற வேண்டிய போக்கின் சரியான எடுத்துக்காட்டு என்று நாம் நம்புகிறோம். அவர்கள் உடல் ரீதியான சுகத்திற்கும். ஆடம்பரமான வாழ்க்கைக்கும்… போன்றவற்றைக் கேட்கக்கூடாது. அதிகபட்சமாக, நம்முடைய ஆண்டவர் கற்பித்த மாதிரி விண்ணப்பத்தில் அன்றாட உணவிற்குரிய வழியில் ஆண்டவர் மிகச் சிறந்ததை கொடுப்பதற்கு உத்திரவாதம் அளிக்கிறது. அன்றாட உணவுக்காக ஜெபிக்கும்போது கூட அவர்கள் தங்கள் கைகளின் உழைப்பை முன்வைத்து. அனுபவங்களின் வழியாக நற்குணங்களின் வளர்ச்சி அடைவதற்கு தேவனுடைய ஞானத்திற்கு ஏற்ப ஆசீரிவாதங்களை எதிர்பார்க்கவேண்டும். உணவு மற்றும் ஆடைகளின் மிக அவசியமானவைகளை மட்டுமே வழங்குவதற்கு அவர்கள் தகுதிப்பெற்றவர்கள் என்று தேவன் கண்டால், அது அவர்களுடைய அன்பு. பொறுமை மற்றும் அவர் மீதான நம்பிக்கைக்கு ஒரு சோதனையாக இருக்கும். அவர்களுக்கு ஏராளமாக வழங்கினால், எதிர் திசையில், அது அவர்களுக்கு அதே நம்பிக்கை மற்றும் அன்பு மற்றும் பக்திக்கான சோதனையாக இருக்கும். அதாவது அவர்கள் தேவனுக்கென்றும். அவருடைய சகோதரர்களுக்கு செய்யும் ஊழியத்திற்கும். மனப்பூர்வமாக தாங்கள் பெற்ற நல்ல ஈவுகளை எந்த விகிதத்தில் பலி செலுத்துகிறார்கள் என்று சோதனைக்கு உட்படுவார்கள். அதேபோல், வலுவான ஆரோக்கியத்தையும், வீரியத்தையும் தெய்வீக ஞானம் கொடுத்தால். தேவனுக்காக இவைகளை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு அன்பும், பக்தியும் பலிசெலுத்தப்படுமா அல்லது சுயநல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுமா என்ற விசுவாசத்தின் சோதனை முன் வைக்கப்படும். அல்லது, மறுபுறம், தேவன் தனது ஏற்பாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு ஆரோக்கியத்தையும், வீரியத்தையும் வழங்கினால். அன்பு. கீழ்ப்படிதல், அர்ப்பணிப்பு மற்றும் பொறுமையை நிரூபிக்கவும். மற்றும் சிறிய வாய்ப்புகள் தேடப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தப்படும் வைராக்கியத்தையும் நிரூபிக்கவும் விசுவாசம் மற்றும் பக்தியின் பரீட்சை எதிர் நிலைப்பாட்டில் இருக்கும்.
நம்முடைய ஆண்டவரின் ஜெபங்கள். அவருடைய எல்லா செயல்கள் மற்றும் போதனைகள் தன்னலமற்றவைகளுக்கு நல்ல மாதிரிகளாக உள்ளது. ஆகையால் நாம் பிதாவிடம் எதையும் கேட்பதற்கு முன் “நான் இதை ஏன் விரும்புகிறேன்?” என்ற கேள்வியை கவனமாக பரிசீலிக்க வேண்டும். அர்ப்பணிக்கப்பட்ட ஒருவர் நோய்வாய்ப்பட்ட எவரையும் குணப்படுத்த விரும்பி தேவனிடம் வேண்டுதல் செய்தால், அது அவருடைய சொந்த மகிமைக்காகவோ. அல்லது அவருடைய சொந்த சௌகரியத்திற்காகவோ. அல்லது தனக்காக எந்த வகையிலும் இருக்கக்கூடாது. அத்தகைய வேண்டுகோள்கள் சுயநலமானவைகளும், மரண பரியந்தம் செய்திருக்கும் உடன்படிக்கைக்கு இசைவில்லாததாக இருக்கும். நம்முடைய ஆண்டவர் மற்றும் அப்போஸ்தலர்களின் போக்கை நினைவில் வைக்கவேண்டும். நம்முடைய ஆண்டவர் தெய்வீக வல்லமையைப் பயன்படுத்தி. தேவைகளின் காரணமாக திரளானோருக்கும் உணவளித்து. பிதாவை மகிமைப்படுத்தினார். ஆனால் அவர் தாமே நாற்பது நாட்கள் உணவு இல்லாமல் இருந்தபோது. அதே வல்லமையை பயன்படுத்தி கற்களை அப்பமாக மாற்றி தம்முடைய பசியை போக்கவில்லை. இது அவருடைய பணிக்கு முரணாக இருந்தது. ஏனென்றால் அவர் தனக்குத்தானே ஊழியம் செய்ய வராமல், மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவந்தார். அவருடைய ஜீவனை காத்துக்கொள்ள அல்ல. மாறாக அதை மற்றவர்களின் ஊழியத்திற்காக பலி செலுத்த வந்தார். அவர் தனக்காகவோ அல்லது சீஷர்களுக்காகவோ அல்ல திரளான ஜனங்களுக்காக உணவை உருவாக்கி. எப்போது தேவைப்பட்டாலும் அதே வல்லமையை பயன்படுத்தி அவர்களுக்கு உணவளிக்கமுடியும் என்பதற்கு சான்றாக இந்த அற்புதத்தைக் குறிப்பிட்டாலும் தமது ஜனங்களுக்கு இயற்கையான வழிமுறைகளை வழங்குவதே தந்தையின் திட்டமாக தெரிகிறது. ஏனென்றால் அவர்கள் சார்பாக இதுபோன்ற ஒரு அற்புதம் தேவை என்ற பதிவு எதுவும் இல்லை. அப்பம் மற்றும் மீன் தயாரிக்கப்பட்ட பின்னர் மீதமுள்ள துண்டுகளில் ஆண்டவரும் அவருடைய சீஷர்களும் பங்கெடுத்தார்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால் தங்களுடைய சொந்த பசிக்காக அல்ல. திரளான ஜனங்களின் பசிக்காக அந்த அற்புதம் நடத்தப்பட்டதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். (மத்தேயு 15:32:16:5-12) தேவனை மகிமைப்படுத்தும் படியாக அவர் முடவரையும், பக்கவாதக்காரரையும் அற்புதமாக குணப்படுத்தினார். ஆனால் அவர் கலைப்படைந்திருக்கும்போது, அவர் ஓய்வெடுப்பதற்கு “கிணற்றின் அருகில் அமர்ந்தார்.” அதாவது இயற்கையான வழியை பயன்படுத்தினார். அவர் அடிக்கடி பிதாவிடம் ஜெபம் செய்தபோதும், அவர் எப்பொழுதும் கேட்கப்படுவதை அறிந்திருந்தும். சில சமயங்களில் கெத்செமனேவில் நடந்ததுபோல, கடும் துக்கமும் வேதனைகள் இருந்தபோதும் கூட தந்தையின் சித்தத்தைச் செய்வதற்கும். அவர் செய்ய வந்த வேலையை முடிப்பதற்கு, கிருபையும் பலமும் கேட்டு ஜெபித்தார். அவர் கேட்பதன் மூலம். அவரை பாதுகாக்க “பன்னிரெண்டு லேகியோன் தேவதூதர்கள்” அனுப்பப்படுவார்கள் என்றாலும், அவர் அதை கேட்காமல். தன்னையே “மீட்கும் பொருளாக” அனைவருக்கும் கொடுக்கவேண்டும் என்ற பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதையே அவர் விரும்பினார். அவருடைய இந்த சிறப்பியல்பை அவருடைய எதிரிகள் கூட கவனித்திருந்தார்கள். “மற்றவர்களை இரட்சித்த( நோய் போன்றவற்றிலிருந்து) இவன் தன்னை தான் இரட்சிக்க முடியவில்லை” என்று கூறினார்கள். அவர் தன்னை ஜீவ பலியாக செலுத்துவதை அவர்களால் புரிந்து பாராட்ட முடியவில்லை. ஆகவே, “தொலைந்ததை” மீட்டெடுக்கும் வேலை மற்றும் வரக்கூடிய ஆசீர்வாதத்தின் புகழ்பெற்ற வேலையிலும் பங்கு பெறுவதற்கு. கிறிஸ்துவுடன் பாடுகளிலும். பலியிலும் பங்கு பெற விரும்புவோரின் நோக்கங்களையும். நடத்தைகளையும் இன்று பெயரளவிலான பல கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதை நாம் நியாயமாக எதிர்பார்க்கலாம்.
தன்னலமற்ற முறையில் அப்போஸ்தலரின் வரங்கள் பயன்படுத்தப்பட்டது.
இதில் அப்போஸ்தலர்களையும் கவனிக்கவேண்டும். அவர்களுக்கு குணப்படுத்தும் வரங்களும், ஜெபத்தின் சிலாக்கியமும் இருந்தது. ஆனால் அவர்களி அதை சுயநலமாக பயன்படுத்தவில்லை. எந்த அப்போஸ்தலர்கள் அல்லது சபை வகுப்பினரின் சார்பாக குணப்படுத்தும் வரம் பயன்படுத்தப்பட்டதாக எந்த உதாரணத்தையும். எந்த பதிவுகளிலும் நாம் காண்பதில்லை. மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் பவுலை தவிர. அவர்களில் யாராவது அவர்களுக்காகவோ, அல்லது ஒருவருக்கொருவர் உடல் நலம். அல்லது பிற பூமிக்குரிய ஆடம்பரங்களுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டதாக எந்தவொரு பதிவும் நம்மிடம் இல்லை. (2கொரிந்தியர் 12:7-9) அவருடைய கோரிக்கை வழங்கப்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக அவருக்கு ஈடுசெய்ய அந்த உபத்திரவத்தை பொறுமையாக தாங்கி கொள்வதற்கு தேவையான கிருபை கொடுக்கப்படும் என்று அவரிடம் கூறப்பட்டது. இது அனைவரின் கவனத்திலும் தலைமையாக இருக்கவேண்டும்.
பவுல் தனக்காக செய்த வேண்டுகோள் மறுக்கப்பட்ட போதிலும், பலவீனமான கண்களினால் அவருடைய துன்பம். தெய்வீக மகிமைக்காவும். அவருடைய சொந்த நன்மைக்காகவும் செயல்படும் என்பதை தேவன் கண்டார். ஆனாலும் மற்றவர்களைக் குணப்படுத்த அவர் பெற்ற வரம் அற்புதமானது ” அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன.” (அப்போஸ்தலர் 19:12) ஆரம்பகால சீஷர்களிடையே நோய்வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்தியதாக எந்த பதிவுகளும் இல்லை என்ற உண்மையை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் ஒருபோதும் நோய்வாய்ப்படவில்லை என்பதற்காக அல்ல. ஏனெனில் அவர்களின் பல நோய்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. “..துரோப்பிமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டு வந்தேன்..” (2தீமோத்தேயு4-20) என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார். மீண்டுமாக அவர் தீமோத்தேயுவுக்கு எழுதும் போது, “நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும் உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காவும். கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்” (1தீமோத்தேயு 5:23) என்று அவர் பரிந்துரைத்த திரட்சை ரசம் மது பானமாகவோ, அல்லது போதைப் பொருளாகவோ அல்ல. முற்றிலும் ஒரு மருந்தாக பயன்படுத்தும்படி கூறினார். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பவுல் தன்னிடமிருந்து கைக்குட்டைகளையோ அல்லது உருமால்களையோ அனுப்பவில்லை அல்லது அவர்கள் குணமடைய ஜெபிப்பதாக குறிப்பிடவும் இல்லை அல்லது அவர்கள் ஜெபிக்கும்படி கட்டளையிடவும் இல்லை. குணப்படுத்துவற்கான வரங்கள். நோயுற்றவர்களை மீட்பதற்கான ஜெபங்கள், பரிசுத்தவான்களுக்காக அல்ல. மாறாக அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பயன்படுத்தப்பட்டதன் நோக்கம் என்னவெனில். அப்போஸ்தலர்களிடமும். அவர்களின் சுவிசேஷம் தேவனால் அங்கீகரிப்பை பெற்றுள்ளதை அனைவரும் கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்தையே இந்த ஒவ்வொரு நிகழ்வுகளில் இருந்தும் வெளிப்படையாக நாம் கற்றுகொடுக்கவேண்டும்.
நாம் முன்னதாகவே அறிவித்தபடி பரிசுத்தவான்கள் தங்கள் ஆரோக்கியத்திற்காகவோ, பூமிக்குரிய ஆடம்பரத்திற்காகவோ சரியாக ஜெபிக்க முடியாததற்கான காரணங்கள் உண்டு. அவர்கள் தங்களுடைய ஆண்டவரை போலவே, தங்களை அர்ப்பணித்து, இனிவரக்கூடிய பரலோக இரக்கங்கள் மற்றும் மகிமைக்கு பதிலாக அனைத்து பூமிக்குரிய சலுகைகளையும் இன்று தேவனுக்கு தத்தம் செய்வதாக உறுதியளித்துவிட்டார்கள். பூமிக்குரிய ஆசீர்வாதங்களை விட உற்சாகமானதும். புத்துணர்வோடும். ஆறுதலோடும். ஆசீர்வதிக்கும் மிக உயர்ந்த மற்றும் விலையேற பெற்ற பரலோக வாக்குத்தத்தங்களை, ஒரு முன் ருசியாக இப்போது அனுபவிக்கிறார்கள். இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டு. தற்போதைய நம்பிக்கைகள் மற்றும் ஆவிக்குரிய சந்தோஷங்களுடன் வருங்காலப் பரலோக மகிமைகளிலுள்ள தனது சுதந்திரத்தை யார்தான் கைவிடுவார்கள். அல்லது. தன்னால் முடிந்தால் எதிர்கால பூமிக்குரிய திரும்பக்கொடுத்தல் மற்றும் அதனுடைய தற்போதைய முன் நுகர்தல்களுக்காக அம்மகிமையை மீண்டும் கொடுத்து யார்தான் பரிமாறிக்கொள்வார்கள்?
R3588 [col. 2:1-4]: – BOLD
தேவன் எசேக்கியாவிடம் இரக்கமுள்ளவராக இருந்தார். அவருடைய ஜெபத்தைக் கேட்டு பதிலளித்தார். தேவன் அவருடைய ஜெபத்தை கேட்டார் என்றும், அவருடைய கண்ணீரை கண்டார் என்றும் அவருக்கு பதினைந்து ஆண்டுகள் சேர்த்து தந்தார் என்பதையும், அவர் சொஸ்தமாவதற்கு, தீர்க்கதரிசயின் மூலம் அத்திப் பழ அடையினால் பத்து போடவேண்டும் என்றும் தேவனிடத்திலிருந்து செய்தி வரும்வரையில் ஏசாயா தீர்க்கதரிசி இராஜாவின் முற்றத்தைவிட்டு செல்லவில்லை. இங்கு ஒரு பாடம் உள்ளது. நம்முடைய கஷ்டங்கள் மற்றும் வியாதிகளுக்கு நாம் ஒருபோதும் தீர்வு காண்பதற்கான காரியங்களை பயன்படுத்தக்கூடாது என்பது அல்ல, மாறாக இந்த தீர்வுக்கு பின்னால் தேவனுடைய சித்தம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளவேண்டும். தெய்வீக வல்லமையின், தெய்விக குறுக்கிடுதல் இல்லாமல். வெறும் அத்திபழ அடையின் பத்து அவருக்கு சுகம் அளித்திருக்காது, ஆனால் மறுபுறம் தெய்வீக வல்லமை, அத்திபழ அடைகளை பயன்படுத்துவதன் வழியாக செயல்பட விரும்பியது. நம்முடைய ஆசீர்வாதங்கள் எவ்வாறு வர வேண்டும் என்று தேவனிடம் ஆணையிடுவது நம்முடையது அல்ல. ஆனால் நம்மையம், நம்முடைய துன்பங்களை பொருத்தவரையில் தேவனுடைய சித்தம் என்ன என்பதை இவைகளிலிருந்தும், பிற எடுத்துக்காட்டுகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள முற்படவேண்டும்.
எசேக்கியாவின் ஜெபத்தினால், தேவன் அவருடைய திட்டத்தையும். ஒழுங்கையும் மாற்றிவிட்டாரா என்றும், மேலும் ஒரு ஜெபத்திற்கு பதிலளிக்கும் போதெல்லாம் அவர் அவ்வாறு செய்கிறாரா என்றும் கேள்வி எழும்புகிறது. சில விஷயங்களில், தேவன் தனது பொதுத் திட்டங்களுக்கு எந்தவித குறுக்கிடும் இல்லாமல், அவற்றை வேறு வழியில் ஏற்பாடு செய்வது அவருக்கு எளிதானது என்று நாம் பதில் அளிக்கிறோம். எசேக்கியா ஜெபிக்காவிட்டால் அவர் இறந்திருப்பார் என்று நாம் புரிந்துகொள்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் எசேக்கியாவின் விஷயத்தில் இயல்பான விளைவு என்னவாக இருக்கும் என்பதை தேவன் அவருக்கு அறிவித்தார். மேலும் அவர் விசுவாசத்தோடு ஜெபித்து குணமடைவதற்கு ஒரு வாய்ப்பை கொடுப்பதற்கான நோக்கத்திற்காகவே தேவன் அவருக்கு இக்காரியத்தை தெரிவித்தார். இவ்வாறு தேவன் அவரிடம் இரக்கம் காண்பிக்க காத்திருந்தார்.
இதுபோன்ற சூழ்நிலையில் நம்முடைய அல்லது நம்முடைய அன்புக்குரியவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, அவர்களின் வாழ்க்கை நீடிப்பதற்கும், அவர்களின் நோயிலிருந்து மீளவும் நாம் விசேஷித்த விண்ணப்பங்களை ஏறெடுக்காதபடிக்கு எசேக்கியாவின் ஜெபம் மற்றும் அவருடைய நடத்தையின் எடுத்துக்காட்டு தேவனுடைய ஜனங்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று நாம் விரும்பவில்லை. நம்முடைய நிலைக்கும் தேவனோடு நாம் கொண்டுள்ள தொடர்புக்கும், எசேக்கியாவின் நிலைக்கும் அவர் தேவனோடு கொண்டிருந்த தொடர்புக்கும் வித்தியாசம் உள்ளது. அந்த இராஜா ஒரு நல்ல மனிதராக இருந்தாலும் அவர் சுவிசேஷ யுக அழைப்பு தொடங்குவதற்கு முன்பு வாழ்ந்தவர். அவர் ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுவதற்கு. பரிசுத்த ஆவி அப்போது கொடுக்கப்படவில்லை. ஏனெனில் அப்போது இயேசு உபத்திரவப்படவும் இல்லை. அவர் மகிமை அடையவும் இல்லை. (யோவான் 7:39. 1 பேதுரு 1:11 இப்போது கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களாகிய “பரிசுத்தவான்கள்”, தேவனோடு ஒரு புதிய விசேஷித்த ஐக்கியத்திற்குள் பிரவேசித்ததை உணரவேண்டும். மற்ற மனிதர்களிடமிருந்து இவர்கள் வேறுப்பட்டவர்கள். இவர்கள் பூமிக்குரிய வாழ்க்கையையும், பூமிக்குரிய சகலவிதமான நலன்களையும் தத்தம் செய்வதற்கு பதிலாக விசேஷித்த ஆவிக்குரிய இரக்கங்களையும். சிலாக்கியங்களையும், பாதுகாப்பையும் அவர்கள் பெறுவார்கள் என்று தேவன் அவர்களிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த நிலைப்பாட்டில் இருந்து, எந்த விதமான பூமிக்குரிய சலுகைகளையும் நன்மைகளையும் தேவனிடம் கேட்பது ஞானமற்ற காரியமாகும். ஏனென்றால் இது புது சிருஷ்டிகளுக்கு தீமைக்கு ஏதுவான வேலைகளை செய்யும். இதற்கு பதிலாக நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளை நினைவில் வைக்கவேண்டும். அதாவது முழு மனுக்குலமும் பூமிக்குரிய காரியங்களை நாடி தேடுகிறார்கள். ஆனால் நம்முடைய பிதாவை நோக்கி நாம் வேண்டிக்கொள்கிறதற்கு முன்னமே நமக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். ஆகவே, “ஓ என் தேவனே, என்னுடைய உயர் நலன்களுக்காவும். என்னுடைய ஆவிக்குரிய நலனுக்காகவும் என்ன செய்யவேண்டும் என்று என்னைவிட நீர் நன்கு அறிந்திருக்கிறீர். நான் உம்முடையவனாக இருப்பதாலும், உம்முடைய நோக்கத்திற்கேற்ப நான் அழைக்கப்பட்டதினாலும், சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் என்று நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் மிகச் சிறந்ததை உங்களுக்குக் கொடுக்கும்படி நான் உங்களிடம் மன்றாடுகிறேன். உங்களுக்கு சிறந்ததாகத்தோன்றும் அனைத்தையும் எடுத்துகொள்ளுங்கள் “உம்முடைய சித்தம் மட்டுமே நிறைவேறட்டும்” என்பதே தேவனிடத்தில் அர்ப்பணித்த ஜனங்களின் இருதயத்தின் குறிப்பிடத்தகுந்த நோக்கமாக இருக்கவேண்டும். தேவனிடத்தில் அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் தங்கள் விவகாரங்களுக்காக யேகோவா தேவனின் கையை நகர்த்துவது, அவரது கைகளில் இருந்து சுக்கானை எடுப்பதற்கு ஒப்பாக இருக்கும் அவருடைய சித்தம் நம்மில் செய்யப்படுவதற்காக மரிப்போம் என்று நாம் அளித்த உறுதிக்கு பதிலாக நம்முடைய சுய விருப்பத்தை நிறைவேற்றுவதாகும்.
R3668 [col. 1 P5, 6]: –
கேள்வி – அறுவடை வேலையில் அதிக ஊழியஞ்செய்ய முடியும் என்று நாம் உறுதியாக உணரும்போது, நாம் ஏன் சரீர ரீதியான சொஸ்த மாக்குதலுக்காக ஜெபிக்கக்கூடாது?
பதில் – நாம் நம்முடைய எண்ணங்களை பகுத்தறிய வேண்டும். மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக அவை வஞ்சகமானவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சில சமயங்களில் அவைகளின் உண்மையான நோக்கங்களுக்காக நம்மை ஏமாற்ற முயற்சிக்கலாம். ஏதோ ஒரு அதிசயம் செய்யப்படுவதைக் காண வேண்டும் என்ற ஒரு விருப்பம் கணிசமாக இருப்பதினால். நாம் அனைவரும் உடல்ரீதியான சுகத்திற்காக ஏங்குகிறோம் – இது முழுமையாக விசுவாசத்தினால் அல்ல, கண்டு நடக்கவேண்டும் என்ற ஆசையாகும். மறுபுறம், சுவிசேஷ யுகத்தில் உள்ள நாம் கண்டு அல்ல, முழுமையாக விசுவாசத்தினால் நடக்கவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஆகவே யுகத்தின் ஆரம்பத்தில் சபை ஸ்தாபிப்பதற்கான அறிகுறிகள் அனுமதிக்கப்பட்டது. பின்னர் அந்த சபை கர்த்தருடைய வார்த்தையால் நிறுவப்பட வேண்டும் என்றும். முழுமையான விசுவாசத்தினால் நடக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அற்புதமாக குணப்படுத்துதலுக்காக ஏங்குவதற்கு உதவியாக இருக்கும் மற்றொரு சிந்தனை – வலியிருந்து நிவாரணம் அளிப்பதற்கு, ஆனால் இது இயல்பாகவே ஒரு சுயநல விருப்பமாகும். மேலும் தேவன் வலியிருந்து விடுதலை அளித்தால், அது நோயிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான ஒரு படியாக இருக்கும். மேலும் நோய் ஒழிக்கப்பட்டால். வீடு இல்லாதவர்களுக்காகவும், மோசமான மனநிலைகள் உள்ளவர்களுக்கும் ஏன் ஜெபிக்கக்கூடாது? ஒரு வார்த்தையில், எங்களை மீண்டும் புதுப்பியும் என்று நாம் ஏன் தேவனிடம் கேட்கக்கூடாது? இது ஒரு மறுசீரமைப்பாக இருப்பதினால், இது தெய்விக ஒழுங்காக இருக்காது. ஏனெனில் இது அடுத்த யுகத்திற்கான தேவனுடைய ஏற்பாடாகும். நாம் பார்த்தபடி இந்த யுகத்தில் சபை அழைக்கப்பட்டதன் நோக்கம் பலிசெலுத்துவதாகும். மேலும் புது சிருஷ்டி அல்ல, பழைய சிருஷ்டியே பலிசெலுத்தப்படவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் புது சிருஷ்டி நாளுக்கு நாள் புதுப்பிக்கப்பட வேண்டும். அதனுடைய எல்லா நோய்களையும் தேவன் குணப்படுத்துகிறார். அதாவது ஆவிக்குரிய குறைபாடுகளை குணப்படுத்த அவர் நம்மோடு ஒத்துழைக்கிறார். மேலும் ஆவிக்குரிய சரீரத்தின் உயிர்த்தெழுதலின் வேலையை முழுமையாக முடிப்பதாக உறுதியளிக்கிறார். மறுசீரமைப்பின் பூமிக்குரிய உரிமைகளை ஒப்புக்கொடுப்பதற்கு ஈடாக இதுவே நமக்கு கிடைக்கும் பலன். உண்மையில் நாம் ஆண்டவரிடத்திற்கு வந்து, விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டு, ஏற்கனவே மரித்து கொண்டிருக்கும் நம்முடைய பாவமான பழைய சரீரங்கள் மரணத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்பதிலும், நாம் செலுத்தும் பலி சிறிதாக இருந்தாலும், முழுமையாக செலுத்தப்பட்டதாக எண்ணப்படுவதினாலும் நாம் மகிழ்ச்சிடைய வேண்டும். மாறாக நாம் உடல் ரீதியான பரிபூரணத்திற்கு மீட்டெடுக்கப்பட்டால், நம்முடைய மரணத்தை எதிர்பார்ப்பதற்கு முன் அதிகதிகமான பலிகளை செலுத்த வேண்டும் என்று பொருளாகும். ஆகவே, நம்முடைய சரீரங்களை பரிபூரணமாக கருதி, அதற்கு பின்னர் பலிசெலுத்தப்படுவது நமக்கும் மிகவும் சாதகமானதாகும். ஏனெனில் நாம் குறைவானதை செலுத்தினாலும், அவைகள் நிறைவாக அங்கீகரிக்கப்படுகிறது.