CD-PRAYER-Q-46
R3306 [col. 1:8, 9]:
அதிகதிகமான கிருபை ஞானம், ஆவிக்குரிய கனிகள் மற்றும் ஆண்டவரையும், சகோதரர்களையும் சேவிக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் தேவனுடைய நேசிக்கப்பட்ட குமாரனின் சாயலுக்கு மேலும் மேலும் வளர்ச்சி அடைவதற்கே நம்முடைய விண்ணப்பங்கள் இருக்கவேண்டும். இந்த சூழ்நிலையில், “எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம்” உங்கள் இருதயங்களையும், சிந்தைகளையும் ஆளக்கடவது என்ற வாக்குத்தத்தத்தை யாரால் சந்தேகிக்கமுடியும்? இந்த சமாதானம் பலரின் இருதயங்களை பாதிக்கும் பெரிய தீமைகளில் ஒன்றை அகற்றும். நன்றியுணர்வால் நிறைந்த இருதயத்தில் சுயநலமும், பேராசைகளும் குறைவான இடத்தைப் பிடிக்கும். அத்தகைய இருதயத்தை ஆட்சி செய்யும் தேவ சமாதானம், ஆசை இச்சைகளையம் ஆற்றல்களையும் கட்டுப்படுத்துகிறது. இந்த உலகின் கவலைகளையும், கொந்தளிப்புகளையும் தடுத்து நிறுத்தி, சுற்றியிருக்கும் இந்த சாதகமற்ற சூழ்நிலைகளையும், இன்னும் வஞ்சகமான முகவர்களின் வழியாக எதிராளி தாமே ஏற்படுத்தும் ஏற்பாடுகளிலிருந்தும், தெய்வீக சமாதானம் நம்முடைய இருதயங்களில் வாசம் செய்து அவைகளை ஆளும்.
F685 [P1] through F686 [P1]:
கிறிஸ்து இயேசுவுக்குள்ளிருக்கும் புது சிருஷ்டிகள் மேற்கண்ட உரையில் அறிவுறுத்தப்பட்டபடி, – என்னத்தை உண்போம். என்னத்தை குடிப்போம் என்னத்தை உடுப்போம் என்று உலகில் காரியங்களை தேடாமல், கவலைப்படாமல், அவைகளுக்காக ஜெபிக்காமல், எல்லா விஷயங்களையும் பிதாவின் ஞானம் மற்றும் அன்பின் மேலும் நம்பிக்கை கொள்ளவேண்டும். பிதா மிகவும் மகிழ்ச்சிடையும்படிக்கு ஒரு காரியத்தைக் குறித்து ஜெபிக்கும்படிக்கு கட்டளை உள்ளது. இதை குறித்து அவர்களின் விண்ணப்பங்களுக்கு பெருமளவில் பதிலளிப்பதில் அவர் மகிழ்ச்சியடைவார். நாம் விசேஷமாக தேடி, ஜெபிக்கக்கூடிய அந்த ஒரு விஷயம் பரிசுத்த ஆவியே -பரிசுத்தத்தின் ஆவி, தேவனுடைய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, சத்தியத்தின் ஆவி, நல்ல சிந்தையின் ஆவி, அன்பின் ஆவி, “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.” (லூக்கா 11:13) என்று நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகள் கூறப்படுகிறது. அப்படியானால், நமக்கு பதில் அளிக்கப்படும்படியாக, நம்முடைய அனைத்து விண்ணப்பங்களின் அடிப்படையாக இருக்கவேண்டிய விஷயத்தைப்பற்றி தனித்துவமான தகவல்கள் நம்மிடம் உள்ளது. இவ்வாறு நாம் ஜெபிக்கும்போது தகாத விதமாக கேட்கக்கூடாது. நம்முடைய பாசங்கள் பூமிக்குரிய காரியத்தை நோக்கி அல்ல. கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரம் மற்றும் நம்முடைய வருங்கால மகிமையான வஸ்திரம், அப்போது நாம் அவரை காணும்போது, அவரை போல நாமும் இருப்போம் என்ற மேலுள்ள விஷயங்களை நோக்கியே அமைந்திருக்கவேண்டும். நம்முடைய வாஞ்சை ஆவிக்குரிய உணவாகிய வானத்திலிருந்து இறங்கிய அப்பத்தின் மீதும், கிறிஸ்துவை மையமாகவும் பொருளாகவும் கொண்ட தேவனுடைய விலைமதிப்பற்ற வாக்குத்தத்தங்கள் அனைத்தின் மேலும் இருக்கவேண்டும். இவைகளை நாம் தேட வேண்டும். இவைகளே நம்முடைய ஜெபத்தின் பொருளாக இருப்பது, மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இவ்வாறு நம்முடைய கவனம், ஜெபம் மற்றும் அநுதின தேடல் இதற்கு இசைவாகவே இருக்கவேண்டும். மேலும், தெய்விக ஏற்பாட்டின் நீளம், அகலம், உயரங்கள் மற்றும் ஆழங்களை நாம் கற்றுக்கொள்ளும் காலத்திலிருந்து, நன்றி செலுத்துதல் விண்ணப்பங்களில் பெரும்பாலும் இடம் பெற வேண்டும். புது சிருஷ்டிகளுக்கும். மாம்சத்தின்படி நம்முடைய நேசிக்கப்பட்டவர்கள் மற்றும் பூமியின் அனைத்து குடும்பங்களுக்கும் இது பொருந்தும். தேவன் ஏற்கனவே வாக்களித்ததை விட அதிகமாகவோ அல்லது சிறப்பாகவோ நாம் என்ன கேட்க முடியும்? நிச்சயமாக, புது சிருஷ்டியின் எதிர்கால மகிமையை பொருத்தவரையில் வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டதைத் தவிர வேறு எதையும் நாம் கேட்க முடியாது. அதுவுமல்லாமல் அதே வகுப்பினர் தற்போதைய சந்தோஷங்களைக் குறித்தும் எதையும் கேட்க முடியாது. காரணத்தை கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு ஏற்பாடும், ஒவ்வொரு விருப்பமும், ஒவ்வொரு தேவையும், எதிர்பார்க்கப்பட்ட நமக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது எடுத்துகொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த தெய்வீக எற்பாடுகளை எவ்வாறு எடுத்துக்கொள்வது, எவ்வாறு அதன் விதிகளை பொருத்திப்பார்ப்பது என்பதில் குறையுள்ள ஞானத்தை பெற்றுள்ளோம். ஆகவே நன்றி செலுத்துவதன் மூலம், ஞானத்திலும், கிருபையிலும் பங்கெடுப்பதினால், நம்முடைய சந்தோஷம் நிறைந்திருக்கும்படி அவைகளையே நாம் கேட்கிறோம். ஆகவே, நம்முடைய வேண்டுகோள்கள், பரத்திலிருந்து வரும் ஞானமாகிய பரிசுத்த ஆவியினால் அதிகதிகமாக நிரம்பப்படுவதற்காகவே இருக்கவேண்டும்.
“பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.” (லூக்கா 11:13) “எல்லாமே குமாரனால்” செய்யப்பட்டாலும், பிதாவே எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றும் காரணருமாக இருக்கிறார் என்று ஒவ்வொரு இடத்திலும் பிதாவுக்கே மகிமையையும், கனத்தையும் செலுத்துகிறார். மீட்பின் மற்றும் மறுசீரமைப்பின் முழு வேலையும் தேவனுடைய வேலை – குமாரனின் மூலம், மேலும் தேவனுடைய பரிசுத்தத்தின் ஆவியை அதிகதிகமாக நாம் பெற்றிருப்பதே பிதாவுக்கு மகிழ்ச்சி என்று நம்முடைய ஆண்டவர் அறிவிக்கிறார். மிக உன்னதமான ஆசீர்வாதமாக இதை தேடவும், கேட்கவும் அவர் நமக்கு கட்டளையிடுகிறார். ஏனெனில், பூமிக்குரிய ஆசீர்வாதங்களைப் பொறுத்தவரை, நமக்குத் என்ன தேவை என்பதை பரலோக தந்தை அறிந்திருக்கிறார் அதாவது நம்முடைய பூமிக்குரிய ஆசீர்வாதங்களில் எது உதவியாக இருக்கும் என்றும் எது தீங்கை விளைவிக்கும் என்றும் நாம் அறிவதை விட அவர் நன்கு அறிந்திருக்கிறார் என்று நம்முடைய இரட்சகர் கூறுகிறார். ஆகையால், அபூரணரும், புறஜாதியாரும் செய்வது போல, பூமிக்குரிய ஆசீர்வாதங்களைப் பற்றி சிந்தித்து அதற்காக ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, புத்திரர்கள் என்ற உறவுக்குள் வந்தவர்களாக, தேவனுடைய முன்னேற்பாடுகளில் முழு நம்பிக்கை கொண்டவர்களாக, சிறந்தவைகளை நமக்கு கொடுப்பார் என்று எதிர்பார்த்து. அவர் தந்திருக்கும் வாக்குத்தத்தங்களிலும், விசுவாசத்திலும் நாம் இளைப்பாறலாம். நாம் அதிகதிகமாக பரிசுத்த ஆவிக்காக விரும்பி வேண்டுவதில் பரலோகபிதா மகிழ்ச்சியாக இருக்கிறார். அதாவது அவருடைய ஆவியுடன் அதிகதிகமாக இசைந்திருக்கும் மனநிலையை அவர் விரும்புகிறார். இவைகளை விரும்பி, கேட்டு, தேடும் அனைவரும் தங்கள் நல்விருப்பங்களைப் பெறுவார்கள். இந்த பரிசுத்த ஆவிக்கு தடையாக இருக்கும் விஷயங்கள். அதாவது அவர்களுக்குள் இருந்தாலும் சரி, அவர்களை சுற்றியிருந்தாலும் சரி, தேவனுடைய ஆவியினால் அவர்கள் நிரப்பப்படும்படிக்கு, அவருடைய அன்பான ஆவி அவர்களுக்குள் பெருகும்படி, தடைகளை அகற்றுவார். ஆனால் இதில் பரிசுத்த ஆவியின் புதிய ஞானஸ்நானம் பற்றி எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை. ஞானஸ்நானம் ஆரம்பத்தில் வந்தது. இப்போது செய்ய வேண்டியது எல்லாம், ஒவ்வொரு திசையிலுள்ள மதகுகளை திறக்கவேண்டும். அப்பொழுது அன்பு மற்றும் சத்தியத்தின் பரிசுத்த ஆவி நம்முடைய ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும் சிந்தனையிலும் ஊடுருவி வெளிப்படவேண்டும். தடைகளை அகற்றுவதிலும். தேவையற்றவைகளை தடை செய்வதிலும், தேவனுடைய ஞானம் மற்றும் ஏற்பாடுகளின் செயல்பாட்டை உணர்வதற்கு நமக்கு தெய்வீக உதவி தேவை. பரிசுத்தத்தின் ஆவியை ஒருவர் ஆவலுடன் விரும்பி, ஜெபத்தினாலும். முயற்சியினாலும் தேடினால் மட்டுமே அதை அதிகதிகமாக பெற்றுகொள்ள முடியும். பரிசுத்த ஆவியினால் நம்முடைய சிந்தையும் அதன் தாக்கங்களும் நிரப்படுவதற்கு நம்முடைய இருதயங்களில் இருக்கும் உலகின் ஆவி அல்லது சிந்தை விரட்டப்படவேண்டும். கய சித்தமும் இதற்கு இடம் கொடுக்கவேண்டும். அதாவது இவைகளை நாம் முழு விருப்பத்தோடு செய்யவேண்டும். தேவனுடைய பரிபூரணத்தை பெறுவதற்கு ஆயத்தமாக இருப்பதற்கு ஏற்றவாறு சகலத்தையும் நாம் அகற்றிவிட்டதினாலும், நாம் மற்ற எல்லா மாறுப்பட்ட செல்வாக்கையும் விருப்பத்தையும் அழிக்க ஆர்வமுள்ளவர்களாக இருப்பதினாலும் தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்புவதற்கு ஆவலுடன் இருக்கிறார். இதே கருத்தை எபேசு சபைக்காக அப்போஸ்தலர் செய்த ஜெபத்தில் காணலாம். “அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகலபரிபூரணத்தாலும் நிறையப்படவும். அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.” (எபேசியர் 3:19) கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்பட்டு அவர் வெளிப்படுத்திய அன்பை முழுமையாக புரிந்துகொண்டவர், தந்தையின் ஆவியை முழுமையாக பெறுவார்.