CD-PRAYER-Q-7
மத்தேயு 6:5-9 அன்றியும் நீ ஜெபம்பண்ணும் போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம் பண்ணும் போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது. அஞ்ஞானிகளைப் போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
யோவான் 17:1-26 – இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர் மேலும் நீர் அவருக்கு அதிகாரங் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப் படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன், பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன். பிதாவே. உலகம் உண்டாகிறதற்குமுன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப் படுத்தும். நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக்கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு. நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். நான் இனி உலகத்திலிரேன். இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன். நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். நீர் என்னை உலகத்தில் அனுப்பினது போல. நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன். நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறது போல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். பிதாவே. உலகத் தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை. நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும். நானும் அவர்களிலிருக்கும்படிக்கும். உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்: இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
யோவான் 11:41-42. அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவி கொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும் படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.
மத்தேயு 18:19 அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 3:21 ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம் பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;
யோவான் 12:27-29, இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப் படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்க முண்டாயிற்று என்றார்கள். வேறு சிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
மத்தேயு 27:46 ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
அப்போஸ்தலர் 12:12 அவன் இப்படி நிச்சயித்துக் கொண்டு, மாற்கு என்னும் பேர் கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அப்போஸ்தலர் 1:14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும். அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
1கொரிந்தியர் 11:4,5 ஜெபம் பண்ணுகிற போதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது. தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான். ஜெபம் பண்ணுகிறபோதாவது. தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது. தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. கொரிந்தியர் 14:13,14 அந்தப்படி அந்நிய பாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம் பண்ணினால், என் ஆவி விண்ணப்பம் பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.
தேவனுடைய பிள்ளைகளாக ஜெபத்தில் அவரிடம் நெருங்குபவர்கள் மத்தியில், ஆராதிக்கும் முறைமைகள், வெவ்வேறு சூழ்நிலைகள் மற்றும் நிபந்தனைகள் வேறுபடும். பூமிக்குரிய கண் காணாமலும், பூமிக்குரிய காது கேளாமலும், சில நேரங்களில் அவர்கள் ஒழுங்காக சென்று, மறைவாக பிதாவுடன் தொடர்பை பற்றிக்கொள்கிறார்கள். இந்த சிலாக்கியத்திற்கு நம்முடைய கர்த்தரின் முன்மாதிரியே சிறந்த எடுத்துக்காட்டாகும். அவர் தனித்து ஜெபம் பண்ணும்படியாக. தம்முடைய சீஷர்களிடமிருந்து அடிக்கடி பிரிந்து சென்றார் என்றும், சில நேரங்களில் முழு இரவும் தனித்து ஜெபித்தார் என்றும் அவரை குறித்தும் எழுதியிருப்பதை நாம் நினைவுகூறலாம்.
மற்ற நேரங்களில் ஜெபம் ஒழுங்காகவும். லாபகரமாகவும் சக விசுவாசிகளின் முன்னிலையில் சத்தமாகவும் ஏறெடுக்கப்படுகிறது. இதில் அனைவரும் ஆர்வத்தோடு இணைந்து, அனைவருக்கும் ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகிறது. இதற்கான எடுத்துக்காட்டும் நம்முடைய ஆண்டவரின் எடுத்துக்காட்டிலிருந்து காணலாம். உதாரணமாக, அவருடைய ஜெபங்கள் யோவான 11:41,42;17, மத்தேயு 11:25,26, லூக்கா 10:21; 11:1வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போஸ்தலர்கள் கேட்காவிட்டால் இந்த ஜெபங்கள் பதிவு செய்யப்பட்டிருக்காது. மேலும், அவர்களின் முன்னிலையில் ஜெபம் ஏறெடுக்கப்பட்டதன் முக்கிய நோக்கம், அவர்களுக்காகவும், அது முதல் விசுவாச வீட்டாரின் ஆசீர்வாதங்களுக்காகவும். நன்மைகளுக்காகவுமே என்பது வெளிப்படையாக உள்ளது. மோசே, சாலோமோன், தாவீது, எரேமியா, எசேக்கியேல் மற்றும் தானியேலின் ஜெபங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, குறைந்த பட்சம், தேவனுடைய ஜனங்களுக்கு முன்பாக சொல்லப்பட்டது. ஆதி சபையின் பதிவுகளை, பொறுத்தவரையில் அவர்கள் ஒரே குடும்பமாக சந்தித்தார்கள் என்றும். அவர்களின் ஜெபங்கள், பாடல்கள் அனைத்தும் அங்கு கூடியிருந்த அனைவரின் நலனுக்காக பொதுவாக ஏறெடுக்கப்பட்டதாக தோன்றுகிறது. “அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும் அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.” என்று அப்போஸ்தலர் 1:14ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் இது குறிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அப்போஸ்தலர் 1:24ல் அவர்களது ஜெபங்களில் ஒன்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும். சபையில் நன்றி ஏறெடுத்தலான ஜெபங்களுக்கும், விண்ணப்பங்களுக்கும் அனைவரும் “ஆமென்” என்று சொல்லத்தக்கதாக அனைவராலும் புரிந்துக்கொள்ளப்படும் மொழியில் சத்தமாக சொல்லப்பட வேண்டும் என்று 1 கொரிந்தியர் 14:16 ல் அப்போஸ்தலர் காண்பிக்கிறார்.
சில நேரங்களில் விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் கலந்திருக்கும் கூட்டங்களுக்கு முன்பாக தேவனுக்கு நன்றி செலுத்துவது தவறானதாக இராது. இதற்கான உதாரணத்தை நம்முடைய ஆண்டவரின் சொந்த நடைமுறையில் காணலாம் யோர்தானில், அவருடைய ஞானஸ்நானத்தின் போது, அவருடைய ஜெபம், திரளானவர்களால் தெளிவாக காணமுடிந்தது. (லூக்கா 3:21) மீண்டும் நம்முடைய ஆண்டவர் லாசரின் கல்லறையில், பல ஜனங்கள் கூடியிருக்கையில் பொதுவாக ஜெபித்தார். மீண்டும் நம்முடைய ஆண்டவரின் ஊழியத்தின் முடிவில், “பிதாவே. இந்த வேளையினின்று என்னை இரட்சியும்”. “பிதாவே உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக” என்று அவர் ஜெபித்தபோது, யோவான் 12:29ல் கூறப்பட்டுள்ளபடி சுற்றியுள்ள ஜனங்கள் தெளிவாகக் கேட்டிருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு விதத்தில் அந்த ஜெபத்தை அறிந்திருக்கவேண்டும். மீண்டும். சிலுவையின் மேல் நம்முடைய ஆண்டவரின் இறுதி ஜெபம், அவருடைய எதிரிகளால் கூட கேட்கப்பட்டது. – மத்தேயு 27:46,50.
“நீயோ ஜெபம் பண்ணும்போது. உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி…” என்ற ஆண்டவரின் வார்த்தைக்கு அவர் எண்ணியிருந்த காரியத்தைவிட அதிகமாக முக்கியத்துவம் கொடுத்த சில தேவனுடைய அன்புள்ள ஜனங்கள். இந்த வசனத்தின்படி, மற்றவர்களின் முன்னிலையில், அதாவது சபையிலாவது உலகத்திலாவது ஜெபிப்பது பாவம் அல்லது தவறு என்ற பிழையில் விழுந்திருப்பதினால், இந்த பாடத்தை பொறுத்தவரையில் நாம் விவரமான ஆதாரங்களுக்குள் சென்றோம். நாம் அவரின் சொந்த செயலிலிருந்து காண்பித்தபடியே “அவர் பாவஞ்செய்யவில்லை. அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை.” என்ற அவருடைய உபதேசத்தின் ஆவிக்கு மேற்கூறப்பட்டவைகள் நிச்சயமாக, சிறந்த உதாரணமாக இருக்கிறது. பெரும்பான்மையான கிறிஸ்தவர்களுக்குள் பொதுவாக காணப்படும் எந்த பழக்கங்களையும் நாம் ஆதரிப்பதில்லை. சொல்ல போனால், வரம்பு மீறுகிறவர்களுக்கு பிரசங்கிப்பது மேலும் தேவனுக்கு ஏறெடுக்கும் ஜெபங்களில் அவர்களை மேம்போக்காக காயப்படுத்துவது… இந்த பொதுவான மனப்பாங்கு மற்றவர்களால் கண்டுபிடிக்கப்படுகிறது. இது கீழ்காணும் வாக்கியத்தில் மிக சரியாக எடுத்துக்காட்டம்படுகிறது. “போஸ்டன் பார்வையாளர்களுக்கு எப்போதும் வழங்கப்பட்ட ஜெபங்களில் இதுவே மிக சிறந்த ஜெபமாகும் “என்று அந்த நகரத்தின் மிக பிரபலமான மந்திரியின் உரையாடலில் ஒரு சாதகமான கருத்தை வெளியிட்டார். சர்வவல்லமையுள்ளவரைக் காட்டிலும் கேட்கும் சபைகளுக்கு வழங்கப்படும் பல ஜெபங்கள் அதிகம் என்று நம்புவதற்கு உண்மையில் வலுவான காரணங்கள் உள்ளது. இது தேவனுடைய பிள்கைளுக்கு அளிக்கப்பட்ட ஜெபத்தின் அற்புதமான சிலாக்கியத்தின், மொத்தமான விரயமாகும். மேலும் “இவ்வாறு ஜெபிப்பவர்கள் மாயக்காரர்களாக இருக்கிறார்கள். மனுஷர் (புகழவேண்டும்) காணவேண்டும் என்று ஜெபிக்கிறார்கள் என்றும். அவர்கள் தேடும் பலனை அடைந்தார்கள்” என்றும் சொல்லி, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நாளில், இந்த பாசாங்குதனத்தை குறித்து அவர் தம்முடைய சீஷர்களை எச்சரித்தார்.
இன்றுவரை, தூர கிழக்கில் பயணிப்பவர் எல்லா திசைகளில் இருந்து வரும் ஜெபங்களை கண்டும் கேட்டும் இருக்கிறார்கள். அவற்றில் சில, தவறாக வழிநடத்தப்பட்ட ஆற்றல் மற்றும் மனசாட்சியின் விளைவாக இருக்கலாம். ஆனால் அவற்றில் பல சந்தேகத்திற்கு இடமின்றி, நம்முடைய தேவனால் அறிவிக்கப்பட்டபடி, இவைகள் ஆவிக்குரிய பெருமை மற்றும் பக்தியுள்ளவர்களாக கருதப்படுவதற்கான விருப்பத்தின் விளைவுகளாகும். “அதிகாலையில் நாம் ஜெபத்தின் சத்தத்தினால் விழித்தெழுந்தேன், அது தேவனால் கேட்கப்பட்டதோ இல்லையோ. அது மனிதர்கள் கேட்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ஏறெடுக்கப்பட்டதென்று தெளிவாக தெரிந்தது. அது நீண்டதாகவும் மிக சுறுசுறுப்பாகவும், அவ்வப்போது குரல் எழும்பி, மிக ஆழ்ந்த நித்திரையில் இருப்போரையும் எழுப்பியது. இப்படியாக ஜெபித்த இவர், காலை வந்தனம் செய்தவுடன், “காலையில் என்னுடைய ஜெபத்தை கேட்டீர்களா? என்று என்னிடமாக கேட்டார். ஆம் என்று நான் பதில் அளித்தேன். பின்னர் அவர் ஜெபத்தின் மேலுள்ள தனது வைராக்கியம் மற்றும் ஆர்வத்தையும் பற்றி என்னிடம் கூறினார். “என்று கிழக்கு பயணி ஒருவர் எழுதினார். கிறிஸ்தவ மண்டலத்தில் பழக்கங்கள் வேறுப்படுகிறது. ஆயினும், பரலோக தகப்பனிடம் தொடர்ப,கொளவதற்கு பதிலாக. தேவபக்தியுள்ளவர்களைப் போல காண்பிக்கக்கூடிய மேலான நோக்கம், அனைவரிடமும் ஒரு நல்லெண்ணம் உருவாக்கவேண்டும் என்ற முயற்சி போன்ற ஒரே ஆவியினுடைய ஆதாரத்தை எத்திசையிலும் நாம் காணலாம். பிதாவோடும் நம்முடைய ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் உள்ள ஐக்கியத்தை தேடி மகிழக்கூடிய அனைவருக்கும் எதிராக இப்படிப்பட்ட பாசாங்குத்தனம் மிக வலுவாக நிற்க இயலாது.