CD-KNOWLEDGE-Q-12
1 தெச 1:4,5 “எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள் நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.”
E229 through E 230: –
ஒரு மனிதனுடைய வார்த்தைகளையும், நடத்தைகளையும் வைத்து அவனுடைய ஆவியை அல்லது அவனுடைய சிந்தையை அறிந்து கொள்ளலாம். அது போல் தேவனுடைய வார்த்தைகளையும் அவருடைய செயல்பாடுகளையும் வைத்து அவருடைய சிந்தையைப்பற்றியும், ஆவியைப்பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அவரிடம் வருகிறவர்களை (செத்த கிரியைகளை விட்டுவிட்டு, துர்க்கிரியைகளிலிருந்து மனந்திரும்பி, இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தினால்) அவருக்குள் ஏற்றுக்கொள்வார் என்பதே அவருடைய வார்த்தைகளின் சாட்சியாக இருக்கிறது. (எபி 7:25) ஆகவே தங்களுடைய புத்திர சுவிகாரத்தைக் குறித்து தேவனுடைய ஆவிக்குரிய சாட்சியைப் பெற விரும்பும் யாவரும் – “நான் இயேசுவை என்னுடைய இரட்சகராகவும், அவருடைய நீதியினால் மட்டுமே நான் பரலோகப் பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியும் என்பதை உணர்ந்திருப்பதாகவும், நான் கிறிஸ்துவிடம் அழைக்கப்பட்டேனா?” என்ற கேள்விகளை தங்களுக்குள்ளே கேட்க வேண்டும். இதற்கு “ஆம்” என்ற பதிலை சொல்ல முடிந்தால் – “நான் இதுவரைக்கும முழுமையாக என்னை அற்பணித்திருக்கிறேனா? என்னுடைய நேரம், தாலந்துகள், செல்வாக்கு,, என்னுடைய ஜீவன் மற்றும் என்னுடைய எல்லாவற்றையும் முழுமையாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேனா? என்ற அடுத்த கேள்வியை நமக்குள் கேட்க வேண்டும். இந்த கேள்விக்கும் “ஆம்” என்ற பதிலை உறுதியாக சொன்னால், பிதாவாகிய தேவன் அவரை தம்முடைய நேசிக்கப்பட்ட குமாரனாக ஏற்றுக்கொண்டார் என்று நிச்சயமாக உறுதியளிக்கலாம்.
மேலும் தன்னுடைய இருதயத்தின் சிந்தனைகளை ஆழ்ந்து பரிசோதிக்கும்போது, அதில் இயேசுவின் ஈடுபலியின் நன்மைகளும், தேவனுடைய சித்தத்தை செய்யக்கூடிய மனநிலை நிறைந்ததுமாக காணப்பட்டால், எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்தை தேவன் அவர்களுக்கு அனுமதிப்பார். நம்முடைய சொந்த அனுபவங்களினால் அறிந்து கொண்ட உண்மைகள், கிறிஸ்துவுக்காக நாம் பெற்ற உறுதியான தேவகிருபை நமக்குள் மாறாத குணங்களாக, தேவனுடைய வார்த்தையினால் கட்டப்பட்டுகிறது. நழுவிச்செல்லும் மணலின் மேல் கட்டப்பட்ட கட்டிடம் போல் இந்த சிந்தனைகள் இருப்பதில்லை. ஒருவேளை இருள் சூழ்ந்த சில நேரங்களில் பயங்களும், சந்தேகங்களும் தோன்றினால், நாம் தேவனுடைய வார்த்தையாகிய விளக்கை கையில் பிடித்தவர்களாக உண்மைகளையும் அதன் அஸ்திபாரங்களையும் கவனித்துப் பார்க்கவேண்டும். நம்முடைய இருதயம் தேவன் பேரில் உள்ள விசுவாசத்தில் நிலைத்திருக்குமேயானால் மகிழ்ச்சியும் சமாதானமும் நம்மிடத்தில் உடனடியாக வந்துசேரும். “விலையேறப்பெற்ற இரத்தத்தின்” மேல் உள்ள விசுவாசம் நிலை குலைந்து, நம்முடைய உடன்படிக்கை தடுமாறிக்கொண்டிருப்பதை நாம் உணர்ந்தால், உடனடியாக தக்க நடவடடிக்கைகளை எடுத்து, நம்முடைய விசுவாசத்தை செப்பனிட்டு, – “விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடு” (எபி 10:22) மீண்டுமாக நம்மை நிலைவரப்படுத்தலாம். ஆனால் இந்த உறுதியைப்பெற்ற ஒவ்வொருவரும் “தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்” (யோவ 3:33) நம்முடைய ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதை உணரவேண்டும். ஆகவே தேவனுடைய கிருபையைப் பெற்ற அவருடைய ஜனங்கள், இந்த உறுதியில் இளைப்பாறலாம். அவர்கள் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து, அவருடைய சித்தத்தை செய்ய விரும்பி, தேவனுடைய தெய்வீக கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து, தேவனிடத்திலும், மனிதர்களிடத்திலும் அன்பு செலுத்தும் வரைக்கும் இந்த இளைப்பாறுதலில் இவர்கள் நீடித்திருப்பார்கள். (எபி 11:6, 13:8)
மேல் கூறப்பட்ட படிகளை கடந்தவர்கள், தேவனுடைய வார்த்தைகளின்படி “சாட்சிகள்” என்றும், அவர்கள் தேவனுடைய “புத்திரர்” என்றும், இந்த சுவிசேஷ யுகத்தில் உண்மையான “திராட்சைச் செடியின் கொடிகள்” என்றும் உண்மையான சபையின் பயிற்சி பெறும் அங்கத்தினர்கள் என்றும் உறுதி பெறுகிறார்கள் (யோவ 15:1). இப்படிப்பட்டவர்கள் கிறிஸ்துவின் சரீரமாகிய உண்மையான சபையில் இணைக்கப்பட்டார்கள் என்று தேவனுடைய வார்த்தையின்படி சாட்சி பெறுகிறார்கள். இந்த சாட்சி தேவனுடைய ஆவி, அவருடைய வார்த்தையினால் சாட்சி கொடுக்கிறது. பயிற்சி காலத்தில் அவர்களின் இருதயம் தொடர்ந்து தேவன் மேல் விசுவாசமாக இருக்கும் பட்சத்தில் – அவர்கள் அனுதினமும் தங்களுடைய ஆண்டவரின் அடிசுவடுகளைப் பின்பற்றினால் வெகு சீக்கித்தில் பயிற்சி பெற்று கிறிஸ்துவின் சபையில் நிரந்தர அங்கத்தினர்களாவார்கள், என்ற சாட்சியை சத்தியத்தின் அதே ஆவி சாட்சிக்கொடுக்கிறது. இவர்கள் ஓட்டத்தை முடித்தபின், முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெற்று இயேசுவுக்கு பங்காளிகளாவார்கள். – (பிலி 3:10)
F191(P1): –
நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்றும், ஆவியினாலே ஜெநிக்கப்பட்டு, வெகு சீக்கிரத்தில் பூரணப்படுவோம் என்றும் அநேக அடையாளங்களினால் உறுதிப்படுத்திக்கொண்டோம். – தேவனுடைய சித்தம் அவர்களுக்குள் நிறைவேற்றப்பட, அவருடைய வல்லமை அவர்களுக்குள் கிரியை செய்கிறது. இது தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு பரிசுத்த ஆவியும், அதிக உறுதியும் தருகிறது. இதற்குப்பதிலாக எந்தச் சூழ்நிலையிலும், அவர்கள் தேவனுடைய வார்த்தையை அறிவிக்க ஆயத்தமாகிறார்கள்.