CD-EVILSPEAK-Q-26
R3595 (col.p7,8): –
ஒருவர் உங்களிடம் மற்றவர்களை குறித்து தவறான செய்தியை சொல்ல துவங்கும் போது மிக அன்போடு அதிக உறுதியோடும் உடனடியாக தடை செய்ய வேண்டும். “கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள்.” அவர்களுடைய எந்தச் செய்தியையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டாம். நம் ஆண்டவரின் கற்பனைக்குக் கீழ்ப்படியாமல், அப்படிப் பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில் சபைகளில் மிகப் பெரிய குழப்பத்தை உண்டுபண்ணும். ஒரு வேளை அந்த நபர் ஆவிக்குரிய காரியங்களில் வளர்ச்சியடையாத குழந்தையாய் இருந்தால் முறைப்படி அவர் வளர்வதற்கு இந்தப் பாடத்திற்கு ஏற்ற தேவனுடைய வார்த்தைகளை எடுத்துக் காட்ட வேண்டும். (மத் 18:15, 1 தீமோ 5:19) ஒரு வேளை இந்தச் சம்பாஷனை நேரடியாக உங்களிடம் வரலாம். உங்கள் காதுகளில் மட்டும் விழுந்தால், அந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் உடனடியாக அந்த இடத்தில் இருந்து சென்று விடுங்கள்.
ஒரு வேளை ஆண்டவருடைய கற்பனைக்குச் செவி சாய்ப்பதற்கு அழைப்பு பெற்றும் தொடர்ந்து தவறான காரியங்களைப் பேசுவார்களானால் – “நான் உன் செய்தியை கேட்க மாட்டேன், ஒரு வேளை நாம் கேட்டால் ஆண்டவரின் பிரமாணத்தை மீறக்கூடிய குற்றவாளியாவேன்.” என்று சொல்லி அவரை கண்டிப்போடு எச்சரிக்க வேண்டும். மேலும் நாம் அந்தக் காரியங்களை நம்பினால், நம் ஆண்டவரின் வார்த்தைகளை மதியாத கிறிஸ்தவர்களாகி விடுவோம். ஏனெனில், ஆண்டவரின் கற்பனைகளைக் கைக் கொள்ளாதவர்கள் சகோதர ஐக்கியத்தின் மத்தியில் அவர்களுக்கு உள்ள காரியங்களை மாற்றி கூறுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை. ஒருவேளை நாம் இப்படிப்பட்ட சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்தால் இந்தப் பாவத்திற்கும், அதன் விளைவுகளுக்கும் நாமும் பங்காளிகளாவோம். இந்தக் கசப்பான வேர் நமக்குள் வளர்ச்சியடைந்தால், நாம் தேவனுடைய கிருபையை இழந்துவிடுவோம். (எபி 12:15)