பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-EVILSPEAK-Q-33

பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?

What is the relation between “busy-bodying” and evil speaking?

F583 [p1] through F586 – மனசாட்சியுடன் தலையிடுவது (33ம் கேள்வியை காண்க)

“அந்நிய காரியங்களில் தலையிடுவதினால்”, புதுசிருஷ்டியின் புதிய மனங்கள் முற்றிலும் மாறுபடும். அப்போஸ்தலர் இதை கடுமையாகக் கண்டிக்கிறார். (1 தீமோ 5:13, 1 பேது 4:15) மற்றவர்களின் காரியங்களில் துணிகரமாக தலையிடுவது

தேவையற்ற காரியமாக இருக்கிறது. சில நேரங்களில் அந்த காரியத்தைக் குறித்து அறியாத போதிலும் அதில் சம்பந்தம் இல்லாமல் தலையிடுவார்கள். ஆனால், இந்த உலகத்தில் பிள்ளைகள் கூட தற்போதைய வாழ்நாளில் போதுமான அளவு

தெளிந்த புத்தியுள்ளவர்களாக, தன்னுடைய சொந்த அலுவல்களைச் சரியான முறையில் பார்க்கும்படி தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுகிற அளவுக்கு, தங்களுடைய சிந்தையிலே ஞானமுள்ளவர்களாக நடந்து கொள்கிறார்கள். மேலும், அவர்

மற்றவர்களுடைய விஷயங்களில் தலையிடுகிறவராகவும், மற்றவர்களுக்கு புத்திசொல்லும் அளவுக்கு திறமை உள்ளவர்களாகவும் இருப்பதாக காண்பித்துக் கொண்டு, அதன் விளைவாக மற்றவர்களுடைய வியாபாரத்திற்கு போதுமான அளவு

நேரம் ஒதுக்குவாராகில், அவர் நிச்சயமாகவே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தன்னுடைய விஷயங்களை அலட்சியம் பண்ணுகிறவராக இருப்பார். தெளிந்த புத்தியின் ஆவியினால் கர்த்தருக்குள் பிறந்த புதுசிருஷ்டிகள் இந்த உண்மையை அறிந்து

கொள்ள வேண்டும். மேலும், மற்றவர்களுடைய விஷயத்தில் தலையிடுவதற்கு உலகத்தாரைக் காட்டிலும் தனக்கு நேரம் இன்னும் குறைவாக இருக்கிறது என்பதை உணரவேண்டும். ஏனெனில், தங்களுடைய நேரம், தாலந்து, செல்வாக்கு

அனைத்தையும் ஆண்டவருக்கும் அவருடைய ஊழியத்திற்கும் அர்ப்பணித்திருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.

இப்படிப்பட்டவர்கள் இயற்கையாகவே இந்த விஷயத்தில் தெளிந்த புத்தி இல்லாதவர்களாக இருந்தால், வேதாகமத்தில் உள்ள கட்டளைகளால், அவர்களுடைய உடன்படிக்கையின் பலியை நிறைவேற்றுவதற்கான காலம் குறுகியதாக இருக்கிறது

என்ற உணர்வினால் சரியான வழியில் நடக்கும்படி பலவந்தப்படுத்தப்படுவார்கள். மேலும் புது சிருஷ்டிக்குரிய கட்டளையான, பொன்னான கட்டளை அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடுவதை தடுக்கிறது என்பதையும் அவர்கள் உணர

வேண்டும். நிச்சயமாகவே, மற்றவர்கள் தங்கள் விஷயங்களில் தலையிடுவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆகவே, அவர்களும் செய்யாதபடி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். ஆனாலும் பொதுவாக உலகத்தின் ஆவி இதற்கு எதிர்மாறாக

உள்ளது என்று அப்போஸ்தலர் உணர்ந்து, அதன்படி இதைக் குறித்து பரிசுத்தவான்கள் அறிந்து, அப்பியாசப்படுத்திக்கொண்டு, கற்கவேண்டும் என்று அவர்களை எச்சரிக்கிறார். “அமைதலுள்ளவர்களாய் இருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த

அலுவல்களைப் பார்க்கவும்… வேண்டுமென்று புத்தி சொல்லுகிறோம்” (1 தெச 4:12) என்று கூறுகிறார்.

மற்றவர்களுடைய அலுவல்களைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க முற்படுகிற இயற்கையான குணம், அவர்களை திருத்தும்படியாக ஒரு கரம் நீட்டுவதும், ஒருவன் தன் கண்ணிலுள்ள உத்திரத்தை அசட்டை பண்ணிவிட்டு, மற்ற சகோதரனின்

கண்ணிலுள்ள துரும்பை எடுக்க முற்படுவதும், ஆண்டவர் விளக்கமாக கூறுகிறார். (மத் 7:3-5) சில சமயங்களில் புது சிருஷ்டியை ஒரு புதுமையான வழியில் தாக்குகிறது. அவன், புத்திமதி கூறுவதும், விசாரிப்பதும், கடிந்து கொள்ளுவதும்,

கண்டிப்பதும் தன்னுடைய கடமை என்று நினைக்கிறார். விஷயத்தை தன்னுடைய மனதில் எடுத்துக் கொள்ளும்போது, அப்படிச் செய்யாவிடில் அது பாவமாக இருக்கும் என்று தன்னை திருப்திப்படுத்திக் கொள்ளுகிறார். இப்படி, அவன் வீண்

அலுவற்காரன் என்று நாம் சொல்லுகிற அளவுக்கு மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுகிறவனாகி விடுகிறார். இப்படி தவறாக வழி நடத்தப்பட்ட மனசாட்சியினிமித்தம், எதிர்க்கக்கூடியதாகவும் ஆகிவிடுகிறது. அநேக தடவைகளில், பணிவுள்ள

நல்ல ஜனங்கள் உண்மையான புதுசிருஷ்டிகள் ஆண்டவருடைய ஊழியத்தில் அவர்கள் செய்ய முற்படுகிறதெல்லாவற்றிலும், இந்தக் குறைபாட்டினால் தடை பண்ணப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை கட்டுப்படுத்தி, நீதியின்

கொள்கைகளை அப்பியாசப்படுத்தவும், கற்றுக்கொள்ளவும், ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளவைகளை நேசிக்கவும் வேண்டும். அவன் சகோதர கடமைக்கும், மற்றவர்களின் அலுவல்களில் தலையிடுவதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைக்

காணும்படி, தன்னுடைய மனசாட்சிக்கு கற்பிக்க வேண்டும். நாம் பார்த்தபடி, பெரும்பாலான ஆண்டவரின் ஜனங்கள், மாத்திரமல்ல உலகத்தாரும்கூட, நீதி, மற்றும் அன்பின் கொள்கைகள் பொன்னான கற்பனையில் இணைக்கப்பட்டிருப்பதை

விரும்பி வந்தபின்னரும், அதை வாழ்க்கையின் அலுவல்களிலும், மற்றவர்களோடு பழகும்போதும் நடைமுறைப்படுத்தும் வேளையில், கடிந்து கொள்ளுதலும், அதட்டுவதும், தவறு கண்டுபிடிப்பதும், எடுத்துப் போடுவதும் மிகக் குறைவாயிருக்கக்

காண்பார்கள்.

இதே போன்று, எந்த விஷயத்திலும் விசாரிப்பது நல்லது, அது என்னுடைய வேலையா? நாம் உலகத்தாரோடு பழகும்போது, பொதுவாக கவனமாக ஆராய்ந்து பார்க்கும் வேளையில், அவர்களை கடிந்து கொள்ளுவதோ, அல்லது கண்டிப்பதோ,

அல்லது அதட்டுவதோ நம்முடைய வேலையல்ல என்று காண்கிறோம். நம் ஆண்டவரால் அழைக்கப்பட்டிருக்கிறோம். குறுகலான பாதையில் நடக்கும்படியாக உலகத்தின் பாதையிலிருந்து திரும்பியுள்ளோம். அதுவே நம்முடைய வேலை, நாம்

ஆண்டவரை பின்பற்றும்படியாக உலகம் நம்மை தனியே விட்டுவிட வேண்டும் என்று வாஞ்சிக்க வேண்டும். அதே போன்று உலகத்தின் கவலைகளை நாம் தனியே விட்டு விட்டு, நம்மையும் நம்முடைய சுவிசேஷ செய்தியையும் “கேட்கிறதற்கு

காதுள்ளவனிடத்தில்” கூற வேண்டும். உலகமானது, ஆண்டவரால் அழைக்கப்படவில்லை, “இடுக்கமான வாசலுக்குள்” வரவில்லை. ஆகவே அது தன் வழியைத் தெரிந்துகொள்வதற்கும், நாம் அதன் வழியில் குறுக்கிட மாட்டோம் என்று

எதிர்பார்க்கவும் அதற்கு உரிமை உண்டு, ஏனெனில், நாமும் நம்மில் குறுக்கிடுவதை விரும்பமாட்டோம். இது நம்முடைய வெளிச்சம் பிரகாசிப்பதை தடை பண்ணாது, இப்படியாக, நாம் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமலும்,

கண்டிக்காமலும் இருந்தாலும், நாம் மறைமுகமாக உலகத்தின் மேல் தொடர்ச்சியாக செல்வாக்கை அப்பிரியாசப்படுத்திக் கொண்டிருப்போம். விஷயம் வியாபாரத்தைப் பற்றி இருக்கும் போது, அதில் நாம் பணம் சம்பந்தமாக

அக்கறையுள்ளவர்களாக இருக்கும்போது, அப்பொழுது அது மற்றவர்களுடைய விஷயத்தில் தலையிடுவதாகாது. அது நம்முடைய காரியத்தையே பார்ப்பதாகும். அதில் முறைப்படியான கவனம் செலுத்துவதாகும். குடும்பத்திலும் வீட்டிலும்

நடைபெறுகின்ற எல்லா காரியங்களைக் குறித்தும் பெற்றோர்கள் ஓர் அறிவுள்ள வழியைக் காட்டுவது, தலையிடுதல் ஆகாது. இருந்தாலும், இங்கு கூட குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட உரிமைகள் கவனிக்கப்படவேண்டும்,

பாதுகாக்கப்படவேண்டும். புருஷனும் குடும்பத்தின் தகப்பனும் அதன் தலைவராகவும், முழு அதிகாரம் உள்ளவராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கும் போது, அந்த அதிகாரத்தை அன்புடன் கூடிய நிதானத்துடனும், ஞானமுள்ள

சிந்தனையோடும் பயன்படுத்த வேண்டும். மனைவியின் தனித்தன்மையும், அவளுக்கு பிடித்தமானவைகளும், அவனுடைய கவனத்தில் இருக்கவேண்டும். அவளும், அவனுடைய பிரதிநிதியாக அவனுக்கு உதவி செய்யும் துணையாக, வீட்டை

பராமரிக்கிறவளாக, அவளுடைய விசேஷமான வரம்பிற்குட்பட்டு, முழு அதிகாரமும், ஆளுகையும் அவளுக்கு கொடுக்கப்படவேண்டும். மேலும் அவன் இல்லாத வேளையில், குடும்பத்தின் எல்லா காரியங்களைப் பொறுத்தவரையிலும்

அவனுடைய வயதின்படி போதுமான அதிகாரத்தை, பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். பிள்ளைகளுக்கும் கூட, அவர்களுடைய வயதின்படி போதுமான அளவு தனிப்பட்ட முறையில் இடமும், அவர்களுடைய விஷயங்களில்

தனித்தன்மையும் கொடுக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் வீட்டின் ஒழுங்கு, சௌகரியத்தைப் பொறுத்த விஷயங்களில், வீட்டில் உள்ளவர்கள் மனதில், ஒழுக்கத்தில், சரீர பிரகாரமான விஷயங்களில் வளர்ச்சி பெறுவதைக் குறித்து, அவனுடைய

அதிகாரத்தையும் மேற்பார்வையையும் மாத்திரமே அப்பியாசப்படுத்த வேண்டும். பிள்ளைகள் சிறு வயதிலிருந்தே ஒரு குழந்தை மற்ற குழந்தையிடம் குற்றம் கண்டுபிடிக்காமலிருக்கவும், ஆனால் மற்றவர்களுடைய உரிமையை மதிக்கவும்,

பொன்னான கற்பனையின்படி மற்றவர்களுக்கு தயாளத்துடனும், அன்புடனும், உதவவும் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

வீண் அலுவற்காரராய் இருப்பவர்களுக்கு எதிராக உள்ள எச்சரிக்கையை நினைப்பதற்கு சபையைத் தவிர வேறு இடம் கிடையாது. சகோதரர்கள் வசனத்திலிருந்தும், கட்டளையிலிருந்தும், மூப்பர்களின் உதாரணத்திலிருந்தும் சீக்கிரமாக கற்றுக்

கொள்ள வேண்டியதென்னவெனில், மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவதோ, மற்றவர்களைப் பற்றி விவாதிப்பதோ தேவனுடைய சித்தம் கிடையாது என்பதேயாகும். ஆனால் மற்ற இடத்தில் உள்ளது போலவே இங்கேயும் ஒருவரைக்

குறித்தும் பொல்லாங்கு பேசாதே” என்கிற திவ்விய கட்டளை உரியதாக இருக்கிறது. நமக்கு நேரிடையாக அக்கறையில்லாத மற்றவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுதல், பொல்லாப்பு பேசுவதற்கும், புறங்கூறுவதற்கும், கோபம்

அடைவதற்கும், பொறாமை அடைவதற்கும், வெறுப்பு அடைவதற்கும், சண்டையிடுவதற்கும், பல்வேறு மாம்சீகத்தின் காரியங்களிடத்திற்கும், பிசாசினிடத்திற்கு வழி நடத்தும் என்று அப்போஸ்தலர் கூறுகிறார். (கொலோ 3:5-10) இப்படியாக, அநேக

வேளைகளில் அவதூறு பேசும் பழக்கத்தின் சிறிய விதைகள் விதைக்கப்படுகின்றன. கசப்பின் பெரிய வேர்கள் வளருகின்றன, அதன்மூலம் அநேகர் தீட்டுப்படுகிறார்கள். புதிய மனம் உள்ள அனைவரும் இந்தப் பொல்லாங்கின் விஷத்தன்மையை

உணருகிறார்கள். அவர்கள் எல்லாரும் தங்களுடைய வீடுகளிலும் அயலகத்திலும் முன் மாதிரியாக இருக்கவேண்டும். மாம்சீக மனம், கொலை செய்வதும், கொள்ளையடித்தலும் தவறு என்று உணரலாம். ஆனால் திவ்விய பிரமாணத்தின்

ஆவியை பெற்றவர்களுக்கும் இன்னும் ஓர் உயர்வான நீதியின் எண்ணம் அதாவது அவதூறு கூறுவது என்பது ஒருவருடைய குணாதிசயத்தை கொலை செய்வதாகும், மேலும் எந்த வழியிலாவது அயலானின் நல்ல பெயரைத் திருடுவது,

கொள்ளையடிப்பதாகும் என்ற எண்ணம் தேவைப்படுகிறது. உலகப்பிரகாரமான எண்ணம் உடையவர்கள் இந்த விஷயத்தை ஓர் அளவுக்கு கிரகித்துக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய உணர்வுகள் புலவரின் வார்த்தையில் கீழ்க்கண்டவாறு

கொடுக்கப்பட்டுள்ளது – “என்னுடைய பணப்பையைத் திருடுகிறவன் குப்பையைத் திருடுகிறான்……. ஆனால் என்னுடைய நல்ல பெயரைத் திருடுகிறவன் அவனை செழிப்பாக்காத ஒன்றைத் திருடுகிறான், ஆனால் என்னை உண்மையிலேயே

தரித்திரமாக விட்டுவிடுகிறான்.”

F 403 [p1:3]: –

இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நாம் மற்றவர்களின் காரியங்களில் தேவையில்லாமல் தலையிடும் போது அவரவருக்கு சாதகமாக அநேக வெட்டிப் பேச்சுக்களை பேசிவிடுவோம். அப்போது நம்முடைய இருதயத்திற்குள் தேவனுடைய

அன்பும் இரக்கமும் குறைவானதாயும், உலக காரியங்கள் அதிகமாய் இருப்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். நம்முடைய இருதயத்திற்குள் இப்படிப்பட்ட நிலை காணப்படும் பட்சத்தில், உடனடியாக கிருபாசனத்தண்டையில் சென்று தேவனுடைய

ஆவி நமக்குள் நிரப்பப்பட ஜெபிக்க வேண்டும். ஏனெனில், தேவனுடைய நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்களுக்கு தேவ ஆவி கொடுக்கப்படும் என்று நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை இந்த வெட்டிப் பேச்சுகளும் மற்றவர்களை

குறித்து, பேசக்கூடிய காரியங்களும் நமக்கு மகிழ்ச்சியை தந்தால் நம் இருதயத்தின் நிலை இன்னும் மோசமாகிவிடும். கசப்பான பகை, குரோதம், பொறாமை போன்ற காரியங்கள் நிரம்பி வழிய துவங்கும். இவைகள் அனைத்தும் மாம்சத்தின்

கிரியைகள் என்று அப்போஸ்தலர் அறிவிக்கிறார். (கலா 5:19-21) இந்தப் பாடத்தை பொறுத்த வரையில் “புது சிருஷ்டி” விழித்திருந்து எச்சரிப்போடு இருக்க வேண்டும். ஏனெனில், தனக்குள் தேவனுடைய ஆவியை நிரப்பாத பட்சத்தில்

தேவனுடைய நித்தியமான இராஜ்யத்திற்குள் அனுமதி பெற இயலாது.

இப்படிப்பட்ட காரியங்கள் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நடத்துவதற்கு எதிராக நம்மை வழி நடத்தும். “இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களா உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,

ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு

உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன் செய்த பாவங்களறத் தான்

சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண் சொருகிப்போன குருடனாயிருக்கிறான். ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும்

இடறிவிழுவதில்லை.” (11 பேதுரு 1:5-11) என்ற அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறார். “உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு

விரோதமாய்ப் பொய் சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகீக சம்பந்தமானதும், ஜென்ம சுவாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.” (யாக் 3:14,15) என்று யாக்கோபு

கூறுகிறார். வெட்டிப் பேச்சு, கசப்பான ஆவி உடைய ஒருவரும், அன்பின் ஆவி, கிறிஸ்துவின் ஆவி மற்றும் தேவனுடைய பரிசுத்த ஆவிக்கு நேர்விரோதமாக செயல்படுகிறவர்களாக இருப்பார்கள். ஆகவே வெளிச்சத்திற்கு பதிலாக இருளையும்,

அபிஷேகத்திற்கு பதிலாக சாத்தானுடைய ஆவியையும் நிரப்பி, தன்னுடைய தீச்செயல்களுக்கு மேன்மை பாராட்டி தன்னையும், மற்றவர்களையும் வஞ்சிக்கிறவராய் இருக்கலாகாது.

எல்லா நேரங்களிலும் தேவனுடைய ஜனங்கள் இப்படிப்பட்ட அசுத்தங்களினால் மாசுபட்டு குழப்பங்கள் அடைந்து வேதனை படக்கூடிய காரணத்தை அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். “வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே

கலகமும் சகல துர்ச் செய்கைகளுமுண்டு.” (யாக் 3:16) விழுந்து போன மாம்ச நிலைக்கு ஒப்பிடப்படும் இந்தக் களைகள் வளர்வதற்கு அனுமதித்தால் அவைகள் வளர்ந்து, அருமையாக பூத்துக் கொண்டிருக்கும் செடிகளை அடையாளப்படுத்தும்

ஆவியின் கனிகளை நெருக்கி கொன்று போட்டுவிடும்.