CD-FAITH-Q-9
எபிரேயர் 12:1,2 – “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம், அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.”
R1830 (col. 1P1)
அவருடைய மாதிரியினாலும், போதனைகளினாலும், எவர் ஒருவர் விசுவாசத்தில் ஊக்குவிக்கப்படுகிறாரோ, அவர் தொடர்ந்து இயேசுவைப் பின்பற்றி, ஓட்டத்தை நிறைவுசெய்து, அது பூரணப்படும் பட்சத்தில், அசைக்கமுடியாத அளவுக்கு உறுதிபெற்று, இறுதியில் “மகிமையுள்ள சபையாக” கறைதிரையற்றவராக, தன்னை ஸ்தாபிப்பார். இவர் இன்று பெறும் அனுபவங்களினால், “இராஜரீகமான ஆசாரியத்துவத்திற்கு” அவரைத் தகுதிப்படுத்துவார். ஏனெனில் “அநேக உபத்திரவங்களின் மூலம்” இந்தப் பொறுப்புக்கேற்றபடி பூரணப்படுத்தப்படுகிறார்.