Q-12
“மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள், கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.” – (எபே 5:22-24)
F500 [P2]
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் – “நான் தேவனுடைய தெய்வீக பிரமாணங்களை மீறினேன். நான் என் புருஷனை மதிக்காததின் நிமித்தம் வெட்கப்படுகிறேன். சகலத்திற்கும் பொறுப்பாளியாக இருக்கவேண்டிய நான் என்னுடைய பங்கை உணர்ந்துவிட்டேன். இனி நான் விசுவாசத்தோடு என் கடமைகளை செய்வேன். என் புருஷன் குறைவுப்படக்கூடிய விஷயத்தில், அவரை ஒரு சிறந்த மனிதனாக நிறுத்தவும், அவருடைய தாலந்துகளைச் சிறப்பாக பயன்படுத்தவும், கர்த்தரிடத்தில் ஜெபிப்பேன். அவரிடத்தில் நான் அதிகமாக அன்பு கூரவும் மரியாதை கொடுக்கவும் முயற்சிப்பேன். என்னுடைய திருமண உடன்படிக்கையின் கீழ், நான் என் கடமையைச் செய்து, விசுவாசத்தோடு தேவனுக்குள் செயல்படுவேன். அவருடைய பலவீனங்களினாலும் குறைவான நியாயத்தீர்ப்பினாலும், இவைகளை நான் மற்றவர்களிடமிருந்து, மறைத்துக்கொள்வேன். இவைகளை என் கணவரிடம் எடுத்துரைக்கையில் என்னுடைய மேன்மையான திறமைகளைக் குறிப்பிடமாட்டேன். குறித்த காலத்தில் அவர் அடையும் தோல்விகளே அவரை சீர்ப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். ஆயினும் நான் எந்த காரியத்தையும் கட்டாயப்படுத்தாமல், முடிந்த வரைக்கும் ஒரு நல்ல துணைக் காரியங்களை எடுத்துச் சொல்லுவேன். கால போக்கில் அவர் என்னுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையின் எல்லா காரியங்களிலும் தேவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கிறிஸ்துவும் சபையும் ஐக்கியப்பட்டிருப்பதைபோல நாங்களும் இசைந்து வாழ்வோம் என்று எதிர்பார்க்கிறேன். தெய்வீக ஏற்பாட்டில் மனத்தாழ்மையையும், சாந்தத்தையும் எனக்குள் வளர்த்துக்கொள்வதில் நான் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மனைவியாக இருப்பேன். என்னுடைய முயற்சினால் என்னுடைய கணவர் ஆசீர்வதிக்கப்பட்ட உயர்ந்த நிலையை பெறுவார். இப்படியாக தேவனுடைய கிருபையினால் அவருடைய வார்த்தைகளில் உள்ள கட்டளைகளைப் பின்பற்றி, அப்போஸ்தலர்கள் முன் வைத்த தெய்வீக நிலைக்கு எங்களை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளில் நாங்கள் நெருங்குகிறோம்” என்று ஒரு மனைவி தனக்குள்ளே சொல்லவேண்டும்.