CD-PRAYER-Q-4
R2004 [Col. 2:8]: –
ஜெபம் வெறுமனே ஒரு சலுகையல்ல. அது ஒரு அத்தியவசிய தேவையாகவும் இருக்கிறது – கிறிஸ்தவ வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒரு கட்டளையாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. (ரோமார் 12:9-13. 1 தெசலோனிக்கேயர் 5:17) இரக்கங்களை உடைய பிதாவோடு ஐக்கியப்படுவதற்கும், ஆராதிப்பதற்கும், நன்றிகளை ஏறெடுப்பதற்கும் விருப்பத்தை இழக்கும் எவரும், புத்திர சுவிகாரத்தின் ஆவியை இழந்துவிட்டார் என்று உறுதியளிக்கலாம். மேலும் உலகம், மாம்சம் அல்லது பிசாசு ஆகிய தடைகளை கண்டுபிடித்து நீக்க, துரிதமாக முயற்சிக்க வேண்டும். தேவனுடைய நற்குணங்கள் அவருடைய திட்டத்தினை நமக்கு படிபடியாக வெளிப்படுவதே, நமக்குள்ளிருக்கும் தேவ நம்பிக்கைக்கு ஒவ்வொரு கூடுதலான சான்றுகளும் ஆதாரம். இதுவரை, குறைந்து கொண்டிருக்கும் ஜெபங்களையும். ஆராதனைகளையும் நாம் பெறுக்கிகொள்ள வேண்டும். நம்முடைய இருதயங்கள் நல்ல நிலமாக இருந்தால், மிகுதியாக பலனளிக்கும்.
R2502 [Col.1:1]: –
இந்த கோணத்தில், எதிராளியின் தாக்கம், நிச்சயமாக கேடு விளைவிக்கும். தேவனுடைய ஜனங்கள் இந்த ஜீவனைப் பற்றிக் கவலைப்படும் போது. தங்களுடைய ஆபத்தை உணர்ந்து வாழ்க்கையின் விவகாரங்களை வித்தியசமான கோணத்தில் தேவனுடைய உதவியை நாடுவதற்கு பதிலாக, அவர்கள் ஜெபிக்க மிகவும் சோர்வாக இருக்கிறார்கள் என்றும் சாதகமான மற்றொரு நேரத்தில் ஜெபிக்கலாம் என்றும் அல்லது அவர்கள் முழுமையாக தேவனிடம் பயபக்தியும் ஒப்புதலும் கொண்டுள்ளதையும். ஒவ்வொரு நல்ல மற்றும் பரிபூரணமான ஈவும், தேவனிடம் இருந்து வருவதை முற்றிலும் மறந்து, அல்லது பாவம் வாசற்படியில் படுத்திருப்பதையும் மற்றும் ஆண்டவரைப் பற்றி சிந்திப்பதை தேடாமல் கிருபாசனத்தை தவிர்க்கவும், அல்லது ஒருவேளை சற்று வேறு சில காரணங்களினால் குளிர்ந்து, தேவனை விட்டு வெகு தூரம் சென்று, ஜெபம் வெறும் சம்பிரதாயமாகி, நாள் செல்ல செல்ல அது கைவிடப்படுகிறது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இருதயத்தில் சரியான நிலையை கொண்ட தேவனுடைய பிள்ளை, அவருடைய சிருஷ்டிகரோடு பேச விரும்புவார் அவருடைய வார்த்தைகளை கேட்பதோடு மட்டும் அல்ல, தன்னுடைய இயற்கையான சரீரம் ஜீவனோடிருப்பதற்கு இயல்பாகவே புசித்து குடிப்பதை விரும்புவதை போல நிச்சயமாக தேவனுக்கு நன்றிகளை ஏறெடுக்கவும், அவரை ஆராதிக்கவும் விரும்புவார். இந்த அனுபவத்தை பெறாதவர்கள் அதை தேடவேண்டும். நம்முடைய ஆண்டவர் வாக்களித்தபடி, அவரை தேடுபவர்கள் கண்டடைவார்கள், தட்டுபவர்களுக்கு திறக்கப்படும்.
R2692 [Col. 1:1]: –
ஜெபம் நல்லது, கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இது முற்றிலும் இன்றியமையானது. இது ஜீவனுள்ள விசுவாசம் மட்டுமல்ல, வளர்ச்சியடையும் விசுவாசம் என்றும் பொருள்படுகிறது. தனிப்பட்ட ஜெபம் (மத்தேயு 6:6) அல்லது தேவனுடைய ஜனங்களோடு சபையில் ஜெபத்தின் புறக்கணிப்பு (அப்போஸ்தலர் 12:12; 1:14; 16:13. 1 கொரி 11:4,5; 14:13,14) ஆத்துமாவின் தளர்ச்சிக்கும், ஆவிக்குரிய காரிங்களில் வெதுவெதுப்பான நிலைக்கும் நிச்சயமாக வழி நடத்தும் என்று அனுபவங்கள் நிரூபிக்கும் – அவிசுவாசம். குளிர்ந்த நிலை, மரணம். இதற்கு எதிராக, ஜெபத்தின் வழியாக தேவனுடைய தொடர்பு. நம்முடைய விஷயங்களில், அவருடைய மேற்பார்வை பற்றிய நம்பிக்கை அதிகரிக்கும். அவருடைய வார்த்தையின். மிக அருமையானதும் விலையேற பெற்றதுமான சகல வாக்குத்தத் தங்களிலும் விசுவாசத்தை அதிகரிக்கும். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் அவருடைய வழி நடத்துதலின் உணர்வை அதிகரிக்கும் கிறிஸ்துவின் சகல சகோதரர்கள் மேலுள்ள அன்பு அதிகரிக்கும் மற்றும் அவர்களின் நலனுக்காகவும், ஆன்மீக முன்னேற்றத்திற்கான அக்கறையும் அதிகரிக்கும். இவ்வாறாக ஜெபம் தேவனிடத்திலும், சகோதரர்களிடத்திலும் மற்றும் எல்லா மனுஷரிடத்திலும் ஆவிக்குரிய காரியங்களின் முன்னேற்றத்திலும், ஆவியின் கனிகளின் வளர்ச்சியிலும் தீவிரமான அடையாளம் காணப்படுகிறது.
ஜூலை 24. மன்னா நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. யாக்கோபு (யாக்கோபு 5:16) ஜெபத்தின் வழியாக தேவனுடைய தொடர்பு. நம்முடைய விஷயங்களில், அவருடைய மேற்பார்வை பற்றிய நம்பிக்கை அதிகரிக்கும். அவருடைய வார்த்தையின் மிக அருமையானதும் விலையேறபெற்றதுமான சகல வாக்குத்தத் தங்களிலும் விசுவாசத்தை அதிகரிக்கும். கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் அவருடைய வழிநடத்துதலின் உணர்வை அதிகரிக்கும். கிறிஸ்துவின் சகல சகோதரர்கள் மேலுள்ள அன்பு அதிகரிக்கும் மற்றும் அவர்களின் நலனுக்காகவும். ஆன்மீக முன்னேற்றத்திற்கான அக்கறையும் அதிகரிக்கும். இவ்வாறாக ஜெபம், தேவனிடத்திலும் சகோதரர்களிடத்திலும் மற்றும் எல்லா மனுஷரிடத்திலும் ஆவிக்குரிய காரியங்களின் முன்னேற்றத்திலும் ஆவியின் கனிகளின் வளர்ச்சியிலும் தீவிரமான அடையாளம் காணப்படுகிறது.
R3640 (Col.1:4): –
இது தொடர்பான மற்றொரு சிந்தனை. ஜெபத்திற்கான தகுதியுடைமை மற்றும் தேவை, சில சந்தர்ப்பங்களில் பெயர் கிறிஸ்தவர்கள், ஜெபத்தின் பொருத்தமற்ற தன்மையை வலியுறுத்துவதை கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். அதாவது வாழ்க்கையே ஜெபமாக இருக்கவேண்டும். ஆண்டவருக்கு நன்றிகளை ஏறெடுப்பதற்கும், அவரை ஆராதிப்பதற்கும் முறையான முழங்காலில் நிற்கவேண்டாம். இதுபோன்ற கருத்துக்கள் எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது இதனுடைய தாக்கம் புரிந்துக்கொள்ள முடியவில்லை. உண்மையில் நாம் இடைவிடாமல் ஜெபம் பண்ணவேண்டும். நம்முடைய முழு வாழ்க்கையும் தேவனுக்காகவும், அவருடைய சித்தத்திற்காகவும் அர்ப்பணிக்கப்படவேண்டும். மேலும் நம்முடைய சிந்தை அவருடைய நன்மைகளினால் நிரம்பியிருக்க வேண்டும். மேலும் ஒவ் வொரு காரியங்களிலும் அவருடைய சித்தம் நம்முடைய சிந்தையில் எப்போதும் இருக்கும்படியாக. நாம் அவருக்குள் வைத்திருக்கும் விசுவாசம் நிலையாகவும், மிகுந்த பிரகாசமாகவும் இருக்கவேண்டும். ஆனால் எந்த கிறிஸ்தவருமே முழங்காலில் நின்று, கூடுமானால் தனிமையில் இப்படியாக ஜெபிக்காவிட்டால், தன்னுடைய இருதயத்தின் நோக்கங்களை சரியாக வைத்துக்கொள்ள முடியாது என்று நாம் நம்புகிறோம் – “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து.. அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவைநோக்கி ஜெபம்பண்ணு” (மத்தேயு 6:6)