CD-PRAYER-Q-6
R2252 [col. 1:3]: –
பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே” என்று “உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு.” என்று நம்முடைய ஆண்டவர் கட்டளையிடுகிறார். ஆனால் “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுப்பார்” (யோவான் 15:16; 16:23) என்ற இந்த அறிவுரையோடு மேற்கூறப்பட்ட கட்டளை இணைக்கப்படவேண்டும்.” என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) இது யூதர்களையும், முஹமதியர்களையும், புற இணத்தவர்களையும் மற்றும் கிறிஸ்துவைப் பற்றிய அறிவு பெறாதவர்களையும், அவரை ஒரு இரட்சகராக விசுவாசிக்காதவர்களையும் உள்ளடக்குவதில்லை. கிறிஸ்துவை ஏற்றுகொண்ட விசுவாசிகள் மட்டுமே ஜெபத்தின் வழியாக தேவனிடத்தில் சேர்ந்து, அவரை “அப்பா” என்று அழைக்க முடியும். அதே நேரத்தில் மற்றவர்கள் வேண்டுகோள் விடுக்கலாம். ஆனால் அவர்கள் பதில்களை எதிர்பார்க்க முடியாது. நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய இரத்தத்தினால், பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்ற விசுவாசத்தினால் மட்டுமே. “நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவின் வழியாக புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கும்.” (எபிரெயர் 10:19,20) புதிய உடன்படிக்கையின் கீழ் நாம் அனுபவிக்கும் இந்த சலுகைகள், இயேசுவின் இரத்தத்தினால் முத்திரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது நிழலான மாம்ச இஸ்ரயேல் மற்றும் காளைகளின் இரத்தத்தினாலும், வெள்ளாட்டுக் கடாக்களின் இரத்தத்தினாலும் முத்திரிக்கப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு ஒத்திருக்கிறது. ஆகையால், யூதர்கள் அவர்களின் உடன்படிக்கைக்கு உட்பட்ட ஜனங்களாக இருந்ததினால், அவர்கள் ஜெபத்தினால் தேவனிடம் அணுக அனுமதிக்கப்பட்டனர் – ஆயினும் நாம் புதிய உடன்படிக்கைக்கு நெருக்கமாகவும், அருகாமையிலும் இருப்பது போல அவர்கள் இல்லை.
E457 [P2, கடைசி இரண்டு வரிகள்]: –
கிறிஸ்து இயேசுவுக்காக நிச்சயிக்கப்பட்ட மணவாட்டி, தன்னுடைய நேசிக்கப்பட்ட மணவாளன் இன்றி தந்தையிடம் நெருங்கமுடியாது. அவளுடைய விண்ணப்பங்கள் மணவாளனுடைய நாமத்தினாலும், அவருடைய புண்ணியத்தினாலும் ஏறெடுக்கப்படுகிறது. மேலும் அவள் பூரணப்பட்டு, மகிமைக்குள் பிரவேசித்து – முதலாம் உயிர்த்தெழுதல் வழியாக தேவனுடைய புத்திரர்களாக முழு சுதந்திரத்தை அடையும் வரையில் அவள் இவ்வாறு தொடரவேண்டும்.