Q-2
பொறுமையோடிருப்பவர்களின் உண்மையான பண்புகளும் குணங்களும் –
a. வேதனை, துன்பங்கள் மற்றும் தொல்லைகள் அனைத்தையும் சகிக்க வேண்டும்.
b. பரிவு, இரக்கம் காட்டுதல், மற்றவர்களை புரிந்துகொள்ளுதல்.
c. தொடர்ந்து விடாமுயற்சியோடிருப்பது.
d. எந்த ஒரு பதில் அல்லது முடிவுக்கும் பதற்றமின்றி பொறுமையோடு காத்திருப்பது.
R2790 (col.2 P6)
பொறுமை என்ற வார்தையின் மேல் விசேஷித்த அழுத்தம் கொடுக்கப்படுவதைக் காண்கிறோம். இந்த வார்தையை நாம் ஆராய்ந்துப் பார்த்தல் இரண்டு வித்தியாசமான கிரேக்க வார்த்தைகள், பொறுமை என்ற ஒரே வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டில் “மாக்குரோத்தூனியா” என்ற வார்த்தை (எபிரேயர் 6:12, யாக்கோபு 5:10, அப்போஸ்தலர் 26:3) பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வசனங்கள் பொறுமைக்குப் பொதுவான அர்த்ததைக் கொடுக்கிறது. ஏறக்குறைய புதிய ஏற்பாட்டில் முழுவதுமே இந்த வார்த்தை (மாக்குரோத்தூனியா) பயன்படுத்தப்படிருக்கிறது. (ரோமர் 2:4, 9:22, எபே 4:2, கொலோ 1:11, 3:12, 1 தீமோத்தேயு 1:16, 2 பேது 3:15) ஆனால் நம்முடைய பாடத்திற்கு இந்தப் பதம் பயன்படுத்தப்படவில்லை. அதாவது வேதத்தில் பொதுவாக “பொறுமை” என்று பயன்படுத்தப்படும் வார்த்தையை இந்தப் பாடத்தில் நாம் எடுத்துக்கொள்வதில்லை. மாறாக “ஹீப்போனீ” என்ற மற்றொரு வார்த்தையை நாம் பாடத்திற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளுகிறோம். “