CD-EVILSPEAK-Q-13
R1938 (col.1 p4 through col.2p2): –
நாம் அபூரணமாக இருப்பதால் வார்த்தையிலும், கிரியைகளிலும் பூரணமாக இருக்க இயலாது. நாம் எவ்வளவு கடுமையாக முயற்சித்தாலும் நம்முடைய திறமையான வார்த்தைகளும் விசுவாசமான முயற்சிகள் கண்காணிப்போடும் காரியங்களை நடத்தினாலும், வார்த்தையிலும், செயலிலும் குற்றங்கள் ஏற்படுகிறது. ஆனால் கேடுண்டாக்கக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக்கு நம்முடைய நியாயத்தீர்ப்பின் நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனின் அன்றாடக் கடமையின்படி நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆழ்ந்து சோதிக்கையில் தேவனை கனவீனப்படுத்திய வார்த்தைகளை நாம் நினைவில் கொண்டவர்களாக “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.” (1 யோவா 2:1) நமக்காக பரிந்துபேசுபவர் மூலமாக கிருபாசனத்திற்குச் சென்று நம்முடைய தப்பிதங்களை உணர்ந்ததை விவரித்து, தேவனுடைய நாமத்தையும், அவருடைய பரிசுத்தமான செயல்களையும் கனப்படுத்துவதற்குத் தவறியதால் அடையும் மனம் வருந்துதலை அவரிடம் அறிக்கையிட்டு அந்த பாவங்களை அவருடைய கிருபையின் மூலமாக கிறிஸ்துவின் வழியாகவும் மனத்தாழ்மையோடு, கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தில் நம்முடைய நம்பிக்கையும், விசுவாசத்தையும் நிலைப்படுத்திக்கொண்டு பாவமன்னிப்பை கேட்கவேண்டும்.
இப்படியாக நம்முடைய ஒவ்வொரு தகாத வார்த்தைகளுக்கும் கணக்கு கொடுக்க வேண்டும். மேலும் நம்முடைய மனம் வருந்துதலை வார்த்தைகளினாலும் விசுவாசத்தினால் கிறிஸ்துவின் மூலம் பெற்ற நன்மைகளையும் மன்னிப்பை பெற்றுக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் தேவனை மகிமைப்படுத்த தவறின தகாத வார்த்தைகள் நமக்கு எதிராக நம்மேல் குற்றம் சாட்டும், அதற்கேற்ற பலனை நாம் கட்டாயமாக அனுபவிக்கவேண்டியதாகும். இதில் முதலில் நம்மை நாம் படுகாயப்படுத்திக்கொண்டு, ஒவ்வொரு வார்த்தைகளும் நம்முடைய தேவையற்ற குணங்களை உறுதிப்படுத்திக் கொண்டு, அநீதியின் வழியில் நம்மை சாய்த்துவிடும். அடுத்து மற்றவர்களுக்கு இது ஒரு மோசமான எடுத்துக்காட்டாகும், அவர்களுக்குள்ளும் இந்தத் தீமையான காரியங்கள் நுழையத்துவங்கும். “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.” (நீதி 15:1) இப்படியாக, ஞானமற்ற அல்லது இரக்கமற்ற வார்த்தைகளை நாம் கேட்பதன் விளைவாக, நமக்குள் அநேக கஷ்டங்களை உருவாக்கி, சுய கட்டுப்பாடு, மற்றவர்களை பற்றின இரக்கம் பரிவு உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய நீதியுள்ள பாடங்களை நாம் கற்றுக்கொள்வோம். பொதுவாக எல்லா காரியங்களிலும் தங்களுடைய சொந்த தவறுகளினால் ஏற்படும் சோதனைகளை ஆண்டவரை (அல்லது சாத்தான்) குற்றம் சாட்டுவது வழக்கமாக இருக்கிறது.
மேலும் உபத்திரவகளின் காரணத்தை கண்டுபிடிக்க தவறினவர்கள் (தங்களுக்குள்ளே) தேவனுடைய வார்த்தைகளை கீழ்ப்படிவதன் மூலமும், வைராக்கியமான சுய ஒழுக்கத்தின் வழியாகவும் தாங்களே அகற்ற வேண்டிய காரியங்களை அந்தப் பிரச்சனையை அற்புதமாகத் தீர்க்கவேண்டும் என்று வீணாக ஜெபிக்கிறார்கள். “நாம் நம்மையே நியாயந்தீர்த்தால்… நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். ஆகையால் என் சகோதரரே, நீங்கள் போஜனம் பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.” (1 கொரி 11:31,32) மேலும் வரும் அனைத்து கஷ்டங்களுக்கும் தேவனாலோ அல்லது பிசாசினாலோ நேரடியாக ஏற்படுவதில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். “அவனவன் தன் தன் இச்சையினால் இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்படுகிறான்….” பொதுவாக எந்தப் பழியையும் மற்றவர்கள் மேல் சுமத்துவதே பழக்கமாயிற்று. நாம் பொறுமையை இழந்து, வெறுப்பான வார்த்தைகளை பேசி, தவறுகள் செய்வதற்கு வெகு எளிதாக மற்றவர்களை காரணம் காட்டிவிடுகிறோம். “என்னை போல நீதியான மனதை அனைவரும் பெற்றிருந்தால் (குடும்பம், சபை, சமுதாயம்.) வானத்திலிருக்கும் பரலோகம் இந்த பூமியின் மேல் வந்தது போல் தோன்றுமே….” என்ற சிந்தையில் எத்தனை பேர் தங்களையே வஞ்சித்துக்கொண்டு தங்களை ஊக்குவித்து கொள்கிறார்களோ என்று தெரியவில்லை.
அருமையானவர்களே நம்மை நாம் சோதித்துப் பார்க்கலாம். தாழ்மையாக இருக்கலாம். நம்மை நியாயந்தீர்க்கும் நம்முடைய இருதயத்தில் சிந்திக்கக்கூடிய சுய திருப்தியில் மற்றும் சுய புகழ்ச்சிக்குரிய வார்த்தைகளை குறைத்துக்கொள்வோம். “உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள். விடுதலை பண்ணுங்கள், அப்பொழுது விடுதலை பண்ணப்படுவீர்கள். கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.” (லூக் 6:33-38) நீடிய பொறுமையோடிருந்து, நன்மைக்காக துன்பப்படுவதையே தேவனுக்கு சுகந்த வாசனையான பலியாக அவர் அங்கிகரித்துக் கொள்வார். “ஏனெனில், தேவன் மேல் பற்றுதலாயிருக்கிற மனசாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால், அதுவே பிரீதியாயிருக்கும். நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும் போது பொறுமையோடே சகித்தால், அதினாலே என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப் போனார்.” (1 பேது 2:19-21) ஆகவே அன்பார்ந்தவர்களே நாம் நீதிக்காக மட்டுமே துன்பப்பட்டு, அதற்காக நம்முடைய தேவனையோ, அயலகத்தாரையோ, பழி சொல்லாமல், அதன் விளைவாக நாம் பெற்ற அனுபவங்களும் அதனால் நாம் பெறும் நல்ல குணங்களையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
“நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷனும், தன் சரீர முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக் கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.” (யாக் 3:2) ஆனால் அப்படிப்பட்ட ஒரு மனுஷன் ஒருவரும் இல்லை. நமக்காக பரிந்து பேசுகிறவரும், நம்முடைய இரட்சகரின் நன்மைகளுக்காக நாம் அனைவரும் நித்தமும் தொடர்ந்து மன்றாட வேண்டும். இதை செய்து கொண்டு நம்முடைய அனைத்து நினைவுகளையும் கிறிஸ்துவின் சிந்தைக்கு அடிமைப்படுத்தினால், தேவபக்தியோடு பரிபூரணமான பரிசுத்தத்தில் வளர்ச்சி அடைய வேண்டும்.
இந்த உண்மையை காணும் போது, தேவ ஜனங்கள் யாவரும் இவைகளை நன்கு உணர்ந்து கொள்ள முயற்சிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். அதாவது நாம் இப்போது நியாயத்தீர்ப்புக்கு முன் நின்று கொண்டிருக்கிறோம். இதைக் குறித்த பேதுருவின் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்போம். “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவ பக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!” (2பேது 3:11) தேவ சாயலை அணிவோர் எந்த விதமான துன்பம் கொடுக்கக்கூடிய வீண் பேச்சுக்களையும், அசுத்தமான அல்லது பரிசுத்தமில்லாத சம்பாஷணைகளையும், கலகத்திற்குரிய வார்த்தைகளையும் பேசமாட்டார்கள். கிறிஸ்துவின் நாமத்தில் உண்மையாகவும், உத்தமமாக இருப்பவர்கள் இவைகளை தூரமாக களைய வேண்டும். நாம் நித்தமும் தேவனிடத்தில் நம்முடைய கணக்கை முடிக்கும் போது, நாம் உச்சரிக்கும் தவறான எந்த வார்த்தைகளுக்கு மனம் வருந்தி, மன்னிப்பை பெறாமல் விட்டுவிடப்பட்டு, நம்முடைய நியாயத் தீர்ப்புக்கு முன் நின்று விடக்கூடாது. “நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தையே சம்பாஷணையாக பேசுங்கள்.” நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷனும், தன் சரீர முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக் கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.” “கடைசியாக சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.” (பிலி 1:27, 4:8)
ஆகவே நம்முடைய இருதயத்தில் நல்ல பொக்கிஷங்கள் இருந்தால் மட்டுமே சத்தியத்தின் வார்த்தைகளை பேச முடியும். மேலும் நாம் மகிமைப்பட பரிசுத்த நடக்கைகளையும், சம்பாஷணைகளையும் நாம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியதாக இருக்கிறது. இதனிமித்தம் விழுந்து போன நிலையில் இருக்கும் நாம் தீமையான எண்ணங்களையும் கிரியைகளையும் விட்டு விலக முடியும். “கடைசியாக சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.” (பிலி 1:27, 4:8)