CD-PRAYER-Q-45
மத்தேயு 6:9-13 “நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் எங்ககளை சசோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.”
பதிவு செய்யப்பட்ட நம்முடைய ஆண்டவரின் ஜெபங்கள் அனைத்தும் எளிமையாகவும் நம்பகத்தன்மை கொண்டதும், தன்னலமற்ற தன்மையோடு அழகாக காணப்படுகிறது. ஆனால் வழக்கமாக அழைக்கப்படும் “கர்த்தருடைய ஜெபம் “, ஒரு சரியான ஜெபத்திற்கு எடுத்துக்காட்டாகவும், நிச்சயமாக எல்லா வகையிலும் ஒரு மாதிரியாகவும் நம்முடைய எல்லா விண்ணப்பங்களிலும் பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறது. லூக்கா 11:2-4. மத்தேயு 6:9-13. (1) அதன் தொடக்க முகவரி முழு மரியாதையும் நம்பிக்கையுள்ளதாக காணப்படுகிறது – “பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” இதைவிட இனிமையாகவும் இது குழந்தையை போன்று என்ன இருக்கமுடியும்! நேரடியாக பரலோக கிருபாசனத்தண்டைக்கு பக்தியோடு செல்ல இந்த தைரியமான அணுகுமுறையை விட வேறு எது இருக்கமுடியும்! (2) இது ஒரு தனிப்பட்ட குணாதிசயத்தின் குறைவான விஷயங்களுக்கு பதறி உடனே கடந்துச் செல்லாமல், பூமியின் அனைத்து விவகாரங்களையும் தேவனானவர் அறிந்திருக்கிறார் என்பதை முதலில் அங்கீகரிக்கிறது. பூமியின் அனைத்து விவகாரங்களைப் பற்றிய அறிவை தேவன் பெற்றிருக்கிறார் என்பதையும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு கிருபையான மற்றும் போதுமான தீர்வையும் கொண்டிருப்பதை உணர்ந் திருப்பதை இந்த மாதிரி ஜெபம் ஒப்புக்கொள்கிறது. இதனால், “உம்முடைய இராஜ்யம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக” என்ற தேவனுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய திட்டத்தின் மேலுள்ள நம்பிக்கையும் ஆர்வத்தையும் காட்டுகிறது. ஆம், உண்மையில், ஜெபத்தில் தேவனை அணுகும் அனைவருமே அவருடைய சித்தத்தையும். திட்டத்தையும் பற்றி அவர் வெளிப்படுத்தியவைகளில் சிலவற்றை அறிய முன்னமே தேடியிருக்கவேண்டும் என்பதோடு, அதைக் குறித்து கற்றுக்கொண்ட பின், அவரது திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்போது, நம்முடைய அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்று அவர்கள் தேவன் மீதுள்ள விசுவாசத்தை அறிக்கையிட வேண்டும். இது தேவன் தம்முடைய இராஜ்யத்தை நியமிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே கொண்டுவருவதற்கான ஒரு வேண்டுகோளும் அல்ல, அதற்காக பொறுமையற்ற ஏக்கத்தின் வெளிப்பாடும் அல்ல, ஆனால் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் தேவனுடைய வார்த்தையின் வாக்குத்தத்தங்கள் அனைத்தும் நிறைவேறவும். நம்முடைய சரியான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார் என்பதற்கான வெளிப்பாடாகும். இது இராஜ்யத்துடனான நம்முடைய விசுவாசத்தையும் அதன் சட்டங்கள் மற்றும் ஆவியையும் குறிக்கிறது. ஆகவே நம்மைப் பொருத்தவரை, நம்முடைய முழு வல்லமையினால், இப்போதும் கூட நம் வாழ்க்கையை அதன் கட்டளைகளுக்கு இணங்க செய்வோம். (3) பின்னர் தனிப்பட்ட ஆசைகளுக்கு வரும்போது- “அப்பம் மற்றும் தண்ணீர்” பற்றிய தேவைகளை மட்டுமே கோருகிறது. தேவனிடம் உண்மையாக இருக்கும் அனைவருக்கும் நிச்சயம் என்று உறுதியளிக்கப்படுகிறது. இது செல்வத்துக்காகவோ, ஆடம்பரங்களுக்காகவோ மிதமிஞ்சியதற்காகவோ, ருசிகரமான உணவுக்காகவோ அல்ல மாறாக, “எங்கள் அனுதின ஆகாரத்தை எங்களுக்கு தாரும்” என்று கேட்கிறது. இது நம்முடைய தேவன் மகா பெரிய வள்ளல் என்றும் நம்முடைய உயர்ந்த நன்மைக்காக எந்த அளவையும் தரத்தையும் மற்றும் எல்லாவற்றையும் தெய்வீக ஞானத்திற்கும் அன்பிற்கும் விட்டுவிட்டு, அவர் மீதும் அவர் அளித்த வாக்குறுதிகள் மீதும் நாம் நம்பிக்கை வைத்திருப்பதை ஒப்புக்கொள்வதாகும். (4) நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருந்தாலும், “எங்கள் பிதாவே” என்று ஜெபிப்பதற்கான உரிமை கிடைப்பதற்கு முன் தேவனுடைய குடும்பத்தில் அவருடைய புத்திரர்களாக நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால் இது நம்முடைய சொந்த தகுதியினால் அல்ல. கிறிஸ்துவின் கிருபையினால், தேவனுடைய “புத்திரர்களாக” மிக தாழ்மையான உணர்வோடு நிற்கிறோம். ஆகவே நாம் தினமும் பாவம் செய்பவர்கள் என்பதை நாம் சரியான முறையில் ஒப்புக்கொள்கிறோம். நாம் தேவனுடைய சித்தத்தை பூரணமாக செய்ய முடியாதவர்களாக, “எங்களுடைய கடன்களை மன்னியும்.” என்று ஜெபிக்கிறோம். (5) அடுத்து தேவனுடைய நீதியின் ஒரு கொள்கையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதாவது தெய்வீக இரக்கத்தின் உணர்வை நாம் உணர்ந்துகொண்டு, அதேபோல மற்றவர்கள் நம்முடைய பழகும் விவகாரங்களில் குறைவுள்ளவர்களாக இருக்கும் போது அவர்களுக்கும் அதே இரக்கத்தைப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறோமென்றால், அந்த இரக்கம் கிறிஸ்துவின் மூலமாக சம விகிதத்தில் நமக்கும் நீட்டிக்கப்படும் எனவேதான், “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல” என்று நாம் சேர்க்கிறோம். இது தேவனோடு பேரம் பேசுவதற்கு சமம். அதாவது அவருடைய கிருபையின் விதிகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதை தவிர நாம் வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை. மற்றவர்களிடம் நாம் அதைப் பயன்படுத்தினால் மட்டுமே நாம் எதிர்பார்க்கமுடியும். என்ன ஒரு சிந்தனை! முழுமையாகப் புரிந்துக்கொள்ளப்பட்டால், தேவனுடைய ஜனங்கள் அனைவருமே ஒருவருக்கொருவர். மற்றும் எல்லா மனிதர்களிடமும் சிந்தனையிலும். வார்த்தையிலும் செயலிலும் அன்பாகவும். தாராளமாகவும் இருக்க ஏவும். – மத்தேயு 5:24; 6:15 காண்க, (6) “மேலும் எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்”, அல்லது நம்முடைய ஒழுக்கத்திற்கும், இராஜ்யத்திற்கான தயாரிப்புக்கும் சிட்சைகள் மற்றும் சோதனைகள் அவசியம் என்பதால் (யாக்கோபு 1:2-12) இதை நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும். நம்முடைய விசுவாசத்தின் சோதனை, பொறுமை, அனுபவம் மற்றும் நம்பிக்கையை செயல்படுத்துவதாலும் (1 பேதுரு 4:12, ரோமர் 5:3-5) மேலும் பரிசுத்தத்தில் நாம் பூரணப்படுவது அவசியமானதாலும், (1 பேதுரு 1:6,7) தேவன் எந்த மனிதனையும் சோதிக்காவிட்டாலும், நமக்கு வரும் சோதனைகளை அவர் தடுக்கவும் மாட்டார். (யாக்கோபு 1:13) ஒரு மனிதன் தப்பான வழியில் நடந்து, தன்னுடைய சுயநலத்தினால், விழுந்து போன ஆசை இச்சைகளுக்கு இணங்கும்போது பாவம் செய்கிறார். (யாக்கோபு 1:14) ஆனால் சோதனையின் நேரத்தில் “தேவைப்படும் எல்லா நேரங்களிலும் உம்முடைய கிருபை போதும்” என்ற வாக்குத்தத்தம் இன்றி எவ்வாறு ஜெயிக்கமுடியும். மேலும் இது நமக்கு உதவுவதோடு, நாம் தாங்கக்கூடியதை விட அதிகமாக சோதிக்கப்படுவதை அனுமதிக்காது. ஆனால் சோதனையுடன் தப்பிப்பதற்கான போக்கை அளிக்குமா? கொரி 10:13. (7) “தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” அல்லது சிலர் விரும்புவதைப் போல, “தீயவனிடமிருந்து எங்களை விடுவியும்.” மகா பெரிய எதிராளி, மாம்சத்தின் பலவீனங்களால் நம்மைப் பிடிக்க எச்சரிப்புடன் இருந்தாலும், நம்முடைய ஆண்டவர் நம்மை விடுவித்து வெற்றியைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். இருளின் வல்லமைகளுக்கு எதிரான அத்தகைய போட்டிக்கு நம்முடைய சொந்த பலன் போதுமானதாக இல்லை. ஆகவே. “எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது” (2 கொரிந்தியர் 3:5) என்று அப்போஸ்தலர் கூறுகிறபடி இதற்காக நாம் அடிக்கடி கிருபாசனத்தண்டைக்கு செல்லவேண்டும். {அடிக்குறிப்பு இந்த ஜெபத்தில் மீதமுள்ள வாக்கியம் பண்டைய கிரேக்க பதிப்புகளில் காணப்படுவதில்லை. சபையின் பூமிக்குரிய உயர்வில், போப்பாண்டவரின் மகிமையே, தேவனுடைய இராஜ்யத்தின் மகிமை என்று சிலர் நம்புவதற்கு வழிவகுத்த நேரத்தில் இது சேர்க்கப்பட்டதாகத் தேரிகிறது.}
R3351 [ R2252 col. 2:4] through R3353 [col. 2:3]:
“பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. “நாம்பார்த்தபடி. தேவனுடைய முகவரியை நம்முடைய பிதாவாக நாம் அழைத்தாலும், முழு மனுக்குலத்திற்கும் அவர் பிதா என்று குறிக்கவில்லை. இதற்கு மாறாக, நம்முடைய மாபெரும் ஆசிரியர், சிலரை நோக்கி “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்” என்று அறிவித்ததை நினைவில் கொள்கிறோம். மேலும். நாம் அனைவரும் “கோபாக்கினையின் பிள்ளைகள்” என்று அப்போஸ்தலர் அறிவுறுத்துகிறார். நாம் இந்த உலகின் மேலுள்ள தண்டனைக்கு தப்பித்திருக்கிறோம். மேலும் இருளின் இராஜ்யத்திலிருந்து தேவனுடைய நேசிக்கப்பட்ட குமாரர்களாக வெளியேறியுள்ளோம். அதாவது கோபாக்கினையின் பிள்ளைகளிடமிருந்து தேவனுடைய குடும்பமாக வந்திருக்கிறோம். ஆகவே, இப்போது தேவனுடைய பிள்ளைகளாக, இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்ட அனைவரும். “பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே.” என்று ஜெபிக்கலாம். விண்ணப்பத்தின் இந்த பகுதி. தேவனுடைய மகத்துவத்தையும் அவருக்குரிய பயபக்தியையும். நம்முடைய பணிவையும் சிறிய தன்மையையும் முகவரியாக கொண்டுள்ளது. வழிபடுபவர் ஒரு லேசான அல்லது பயபக்தியற்றவர்களாக அல்ல. தேவனை பயபக்தியோடு தொழுது கொள்வார் என்பதை இது குறிக்கிறது. உண்மையாக வழிபடுபவர்கள் அவருடைய நாமத்தை கூட பரிசுத்தப்படுத்துவார்கள்.
“உம்முடைய இராஜ்யம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக.” இந்த விண்ணப்பம் ஒரு கோரிக்கையின் தன்மையிலோ. பொறுமையின் வெளிப்பாடாகவோ இல்லை. மாறாக இந்த பூமியில் தேவன் குறித்த காலத்தில் பரலோக இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் என்ற தெய்விக வாக்குத்தத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களின் ஒப்புதலாகும். வழிபடுபவர் தேவனுடைய வாக்குத்தத்தை நம்புவதோடு. அவர் அதற்கு ஏற்றபடி வாழ்ந்து, விரும்பக் கூடிய தேவனுடைய இராஜ்யத்தை வாஞ்சிப்பதை ஒப்புக்கொள்கிறார். அவர் பாவத்தோடு இசைந்து இல்லை என்பதையும். அதோடு இந்த உலகின் இராஜ்யங்கள் மற்றும் தற்போதைய ஒழுங்கு மற்றும் அதன் அபூரணமான சமூகம், நிதி, அரசியல் மற்றும் பெயர் சபைகளின் ஏற்பாடுகள் இவ்வனைத்திலும் எந்த விதமான இணக்கம் இல்லாதவர் என்று குறிப்பிடுகிறது. தேவனை தொழுது கொள்பவர் மேலும் பாவம் சாத்தியமில்லாத நிலைக்காக ஏங்குகிறார் என்பதற்காக ஒப்புதலாகவும் இருக்கிறது. அதில் தேவனுடைய சித்தமே இந்த பூமியின் மேலும். பரலோகத்திலும் மேலோங்கும். அவர் பாவத்துடன் இணக்கமற்றவராகவும், நீதியுடனும் உண்மையுடனும் நன்மையுடனும் இணக்கமாக இருக்கிறார் என்பதை இது குறிக்கிறது. தேவனுடைய சித்தம் பூமியில் செய்யப்படவில்லை. அவருடைய இராஜ்யம் இதுவரை பூமிக்கு வரவில்லை. ஆயினும் அவருடைய இராஜ்யம் வரும்போது, நியமிக்கப்பட்ட இராஜாவாக கிறிஸ்து தம்முடைய மாபெரும் வல்லமையையும் ஆட்சியையும் பொறுப் பெடுக்கும் போது. வசனங்களில் காண்பிக்கப்பட்டபடி அதன் விளைவுகள் விரைவாக இருக்கும். சாத்தான் கட்டப்பட்டு, தீமை குறைக்கப்படும். அப்போது அதற்கு எதிராக அறிவும். சமாதானமும் ஆசீர்வாதமும் இந்த பூமி முழுவதையும் நிரப்பும். (வெளிப்படுத்தல் 20:1-3; 21:1-5; 22:1-6) என்ன செய்யவேண்டும் என்றும், இராஜ்யம் எவ்வாறு. எப்போது ஸ்தாபிக்கப்படவேண்டும் என்றும். ஆண்டவரிடம் சொல்வதற்கான முயற்சிகள் தேவை இல்லை. எல்லாவற்றையும் உருவாக்கியவர் ஆளுவதற்கும் நிர்வகிக்கவும், வழிநடத்தவும். சகலத்தை மேற்கொள்ளவும் முற்றிலும் திறமையானவர் என்றும் மேலும் அவர் தன் சித்தபடியான ஆலோசனைக்கு ஏற்ப எல்லாவற்றையும் செய்கிறார் என்றும் எல்லாவற்றிலும் சரியாக அறிவுத்தப்பட்ட வழிபாடுசெய்கிறவர். (தேவனை உண்மையோடு தொழுது கொள்பவர்) அறிந்திருக்கவேண்டும். தேவனை வழிபடுபவர். தெய்வீக வார்த்தையில் இருக்கும் அறிவுறுத்தல்களை பெறுவார். மேலும் தெய்விக நோக்கங்களை பொருத்தவரையில் தொடர்ந்து அவருடைய அறிவுறுத்தல்களை பெறுவார். இந்த விண்ணப்பத்தில் அவர் தெய்விக ஏற்பாட்டிற்கு தனது முழு ஒப்புதலையும் வெளிப்படுத்தி அதில் மகிழ்ச்சியடைகிறார்.
“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். இங்கு மத்தேயுவின் வார்த்தைகள் லூக்காவின் வார்த்தைகளிலிருந்து சற்று வேறுபடுகின்றன. லூக்காவின் கூற்று சொல்லர்த்தமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்.” என்று லூக்கா கூறுகிறார். “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று மத்தேயு கூறுகிறார். இருப்பினும். நடைமுறையில் சிந்தனை ஒன்றே. எனினும். இது மிகுதியாகவும். பல நாட்களுக்காக ஏராளமான பொருட்களுக்காக தேவனிடம் வேண்டி கொள்வது அல்ல. அல்லது ஆடம்பரங்களுக்கான வேண்டுகோளும் அல்ல. மாறாக தினமும் எங்களுக்கு தேவையானவற்றை எங்களுக்கு தாரும் என்று வேண்டுவதாகும் மனநிறைவே இந்த விண்ணப்பத்தின் ஆவி. இந்த முறையில், இருதயத்திலிருந்து தேவனிடம் ஜெபிப்பவர். நிச்சயமாக மிகவும் நன்றியுணர்வையும், மனநிறைவையும் உடையவராக இருப்பார். இந்த விண்ணப்பமானது உத்தரவாதமளிக்கும் பூமிக்குரிய விஷயங்களைக் குறித்தான தெய்வீக வாக்குத்தத்ததைப் போலவே விஸ்தாரமாக உள்ளது. உங்களுடைய அப்பமும் உங்களுடைய தண்ணீரும் நிச்சயமாக கொடுக்கப்படும். இதில் சொகுசான கோரிக்கைகளுக்கு இடமில்லை. மேலும், இந்த ஒரு கோரிக்கை மட்டுமே பூமிக்குரிய காரியங்களுக்கும் நலன்களுக்கும் கேட்கப்படுகிறது. இது ஆவிக்குரிய விஷயங்களுடனும் தொடர்புடைது என்றும் புரிந்துகொள்ளப்படலாம். உண்மையில், இரக்கம், அறிவு மற்றும் ஆவிக்குரிய காரியங்களில் அதற்கு ஏற்றவாறு வளர்ச்சி அடைவதில், அனைத்து தேவனுடைய பிள்ளைகளுக்கும் இது பொருந்தும் என்று நாம் நம்புகிறோம். ஆவிக்குரிய சிந்தனை உள்ளவர்கள் ஆவிக்குரிய உணவையயும். ஆவிக்குரிய தேவைகளையும். நாளுக்கு நாள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். மேலும் காட்டு புஷ்பங்களை உடுத்துவித்து. ஆகாயத்து பறவைகளை போஷிக்கும் பரலோக தந்தை. தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுபவர்களுக்கு தற்காலிகமான நலன்களையும் கொடுப்பார் என்பதை அதிகதிகமாக உணர்ந்து கொள்வார்கள்.
“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.” இது நடைமுறைப்படுத்தும் நீதி, என்ன ஒரு சிந்தனை! கோபம், பொறாமை, வெறுப்பு. சச்சரவு. மன்னிக்கா தன்மை, நன்றியறியாத, மனக்கசப்புள்ள. அவதூறு செய்து, புறம் கூறி ஆகிய குணங்கள் நிரம்பிய தீய ஆவியின் கட்டுபாட்டில் இருப்பவர் “இந்த விதத்தில்” எப்படி ஜெபிக்க முடியும்? மாம்சத்தின் இந்த அனைத்து கிரியைகளை. பிசாசு தீய நிலைகளிலிருந்து தொடர்கிறது. இவைகளில் ஒன்றும் உண்மையான அன்பினால் தூண்டப்பட்டது அல்ல. கிறிஸ்தவ கொள்கையின் சாராம்சம் அன்பு. அனுதாபம். நாமும் தவறு செய்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாக. அவைகளை தேவன் கிருபையாக கிறிஸ்துவினால் நமக்கு மன்னித்தது போல மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பதாகும். ” ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். (மத்தேயு 7:2) என்று கூறி. பரலோகத்தில் இருக்கும் நம்முடைய பிதாவின் பிள்ளைகளாக இருப்பதற்கு முன் கொடுக்கக்கூடிய ஆவியின் முக்கியத்துவத்தைக் குறித்து நம்முடைய ஆண்டவர் வலியுறுத்துகிறார். மேலும் இந்த விஷயத்தை விளக்கும் ஒரு உவமையை கொடுத்தார் என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்கிறோம். அதில் பத்தாயிரம் தாலந்துகள் கடன்பட்ட ஒரு வேலைக்காரனை கட்டாயப்படுத்தாமல். இலவசமாக மன்னித்தார். ஆனால் மன்னிப்பை பெற்றவர், தன்னிடம் வெறும் சில நாணயங்களை கடன் வாங்கினவரை கண்டவுடன். அவரை இரக்கமின்றி நடத்தி, மிகவும் வித்தியாசமான ஆவியை வெளிப்படுத்தினார். ஆகையால் இரக்கமும், தாராள மனப்பான்மையும் அவரிடமிருந்திருந்து தேவன் திரும்ப எடுத்துவிட்டார்.- மத்தேயு18:23-35காண்க.
பரலோக கிருபாசனத்திற்கு செல்லும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும், கிறிஸ்துவின் நிமித்தம் தேவன் அவரை மன்னிக்க வேண்டும் என்று அவர் விரும்புவது போல. அவருக்கு கடன்பட்டுள்ளவர்களை அவர் மன்னித்தாரா இல்லை என்று தினமும் தனது சொந்த இருதயத்தை விசாரிக்கட்டும். இது நிதிக் கடனை மன்னிப்பதைப் பற்றியோ அல்லது நம்முடைய கணக்கு புத்தகங்களை அழிப்பதையோ அர்த்தப்படுத்துவதில்லை. கடனாளி கடனை திருப்பி கொடுக்க விரும்பினாலும், அதை கொடுக்க. இயலாதபோது. நாம் ஆண்டவரிடம் தயவை எதிர்பார்ப்பது போல, நாமும் தயவையும். பொறுமையையும் காண்பிக்கவேண்டும். இது தார்மீக கடமைகள். மீறல்கள் மற்றும் கடன்படுதலின் சிறப்பு பயன்பாடாகும். நமக்கு எதிராக மற்றவர்களின் அத்துமீறல்களுக்கு நாம் கவனம் செலுத்தக்கூடாது என்பதையும் இது குறிக்கவில்லை – குற்றங்களை நாம் அங்கீகரிக்கக்கூடாது. உண்மையில், குற்றம் செய்வதற்கு நாம் விரைவாக இருக்கக்கூடாது. கோபத்திற்கு பொறுமையாக இருக்கவேண்டும். குற்றத்தின் நோக்கம் மிகவும் வெளிப்படையாக இல்லாவிட்டால் நாம் ஒருபோதும் குற்றம் சாட்டக்கூடாது. பின்னர். இந்த விஷயத்தில் தெய்விக வடிவமைப்பின்படி, நம்மிடம் மன்னிப்பு கேட்கப்படும் வரை நாம் முழுமையான அர்த்தத்தில் மன்னிக்க முடியாது என்றாலும், நாம் எப்போதும் மன்னிக்கும் மனப்பான்மையில் இருக்கவேண்டும். அதாவது நாம் எந்தவிதமான பழிவாங்கும் அல்லது தீங்கிழைக்கும் உணர்வைக் கொண்டிருக்கக்கூடாது. அன்ப, மற்றும் அனுதாபத்தைத் தவிர வேறு எந்த உணர்வுகளும் நமக்கு இருக்கக்கூடாது. நமக்குச் செய்யப்பட்ட தவறுகளை விரைவாக மன்னிக்கும் விருப்பம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். முடிந்தவரை தவறு செய்தவர்களை நல்வழிப்படுத்துவதற்கு சீக்கிரமாக மென்மையும். எளிதான வழியை அமைத்து கொடுக்க அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய பங்கில் ஏதேனும் தவறான செயல்கள் அல்லது தவறான நடைகளை சரிசெய்வதில் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். மேலும்,
“எங்களை சோதனையினின்று இரட்சித்து. தீமையிலிருந்து எங்களை விடுவியும்.” இதில் உள்ள சிந்தனை சற்று தெளிவற்றதாக உள்ளது. “தேவன் எந்த மனிதனையும் சோதிப்பதில்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். வாக்கியத்தின் நேரடியான மொழிபெயர்ப்பை நாம் நம்பும்படியாகவும், நம்முடைய ஆண்டவரின் முழு சிந்தனையைப் பற்றிய நமது கருத்தை இங்கே தெளிவுபடுத்துவதற்கும் இந்த வாக்கியத்தை பெரிதாக்கி, சில அறிவுறுத்தும் சொற்களை அடைப்புகளில் சேர்த்து. அவரைக் கேட்டவர்கள் புரிந்துகொண்டது போல. இந்த பகுதியை இவ்வாறாக வாசிக்கப்படுகிறது. “எங்களை சோதனையில் விட வேண்டாமல் (வெறுமனே). ஆனால் தியவரிடமிருந்து எங்களை விடுவியும்.” சோதனைகள் அல்லது சோதனை நிலைகளில் நம்மை கொண்டவரும் அல்லது அனுமதிப்பது தெய்விக ஏற்பாட்டின் ஒரு பகுதியாகும். இந்த விஷயத்தில் நாம் தெய்வீக ஞானத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யக்கூடாது. மாறாக சோதனைகளை ஏற்றுக்கொள்வது. நம்முடைய வளர்ச்சிக்கு அவசியம் என்பதை உணரவேண்டும். ஆகவே, சோதனைகளுக்குள் உட்படுத்தவேண்டாம் என்று ஜெபிப்பதற்கு பதிலாக, தேவனுடைய முன்னேற்பாட்டின் படி சோதனைக்குரிய இடங்களுக்கு நம்மை அவர் கொண்டுவரும்போது, அந்நேரம் அவரும் நம்மோடு இருந்து, அவருடைய கிருபையும், இரக்கமும் நமக்கு போதுமானதாக இருப்பதற்கும். நாம் தாங்கக்கூடிய அளவுக்கு மேல் சோதிக்கப்படாதபடிக்கு, சோதனையிலிருந்து தப்பித்து கொள்ளும் போக்கையும் அவர் உண்டுபன்னி. சாத்தானிடமிருந்து நம்மை இரட்சிக்கவேண்டும் என்று நாம் ஜெபிக்கவேண்டும்.
“இராஜ்யமும். வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென். என்பதே.” இந்த சொற்கள். பொதுவான பதிப்பிலும் சில கிரேக்க கையெழுத்துப் பிரதிகளிலும் காணப்பட்டாலும், பழமையான கிரேக்க எம்.எஸ்.எஸ். சைனிடிக் மற்றும் வத்திக்கன் ஆகியவற்றில் காணப்படவில்லை. ஆகவே இவை நம்முடைய தேவனுடைய வார்த்தைகளோடு சேர்க்கப்பட்ட மனித சொற்கள் என்று தோன்றுகிறது. இந்த பூமியைப் பொருத்தவரை. இந்த வார்த்தைகள் சுவிசேஷ யுகத்தில் உண்மையானதல்ல. பூமியின் ஆதிக்கம் மற்றும் அதன் வல்லமை மற்றும் அதன் மகிமை தேவனுடையது அல்ல. மாறாக, சாத்தானே இந்த உலகத்திற்கு அதிபதியாக இருந்து. கீழ்ப்படியாமையின் பிள்ளைகளின் இருதயங்களில் செயல் புரிந்து, அவர்கள் சுவிசேஷத்தை விசுவாசிக்காதபடிக்கு அவர்களின் மனதை குருடாக்கினான். இந்த உலக இராஜ்யங்களும், வல்லமைகளும் சாத்தானுடையதாக இருந்தது. தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய இராஜ்யம் வருவதற்காக காத்திருக்கிறார்கள். பத்தாம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்த உலக இராஜ்யங்களை தூக்கி எறிந்து, நீதியின் இராஜாவை நிலைநிறுத்தி, சாத்தானை கட்டி, மாம்சத்தின் கிரியைகளையும் சாத்தானையும் அழித்து போடும்.