CD-FAITH-Q-19
1 யோவான் 3:2, வெளி 2:10
F693 – F694
விசுவாசத்தின் கண்களும், காதுகளும் எந்த அளவிற்கு தெய்வீக வார்த்தைகளினால் பழக்குவிக்கப்பட்டிருக்கிறதோ, அந்த அளவிற்கு புது சிருஷ்டிகள் வருங்காலத்து மகிமைகளைக் குறித்து அறிந்துகொண்டு பாராட்டமுடியும். சராசரி மனிதர்களும், முழுமையாக தங்களை அர்ப்பணிக்காதவர்களும் இவைகளைக் காணமுடியாது. வருங்கால ஆசீர்வாதங்களுக்கு அச்சாரமாக இன்று பெற்றுள்ள பரிசுத்த ஆவியை செயலாற்றி தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் வரைக்கும் இதை புரிந்துகொள்ள முடியாது. வருங்கால ஆசீர்வாதங்கள் வந்தடையும் நேரம் வரைக்கும், தேவன் பேரில் விசுவாசம் வைத்து, நீதிமானாக்கப்பட்ட நிலையில் – ஆசரிப்புக்கூடாரத்தில், லேவியர்கள் பிரகாரத்தில் தேவபணிகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பரிசுத்த ஸ்தலத்தில் குத்துவிளக்கையோ, சமூகத்து அப்பங்களையோ பார்க்க அனுமதிக்கப்படாததுப்போல – இவர்களுக்கும் இந்த அறிவு அனுமதிக்கப்படுகிறதில்லை. பரிசுத்த ஸ்தலத்திலிருக்கும் குத்துவிளக்கின் வெளிச்சம், சமூகத்து அப்பங்கள், தூபப்பீடம் மற்றும் அவைகளில் உள்ள காரியங்களைக் குறித்து லேவியர்கள் ஒருபோதும் காண்பதில்லை. ஆனால் அந்த ஸ்தலத்திற்குள் நுழையும் ஆசாரியர்களிடமிருந்து இவைகளைப் பற்றிய காரியங்களை இவர்கள் கேட்டு அறிந்துகொள்ளலாம்.
இப்படிப்பட்ட இராஜரீகமான ஆசாரியர்களாகிய புது சிருஷ்டிகளுக்கு அவருடைய நிரூபத்தில், அப்போஸ்தலனாகிய யோவான் – இக்காலத்தில் முழுமையான கிருபை, அறிவு, விசுவாசம் மற்றும் ஆவிக்குரிய பார்வையைப் பெற்றிருந்தாலும், மாம்சத்தில் இருக்கும்போது, வருங்காலத்து காரியங்களைத் தெளிவாக அறிந்துகொள்ளமுடியாது என்கிறார். “இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை, ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.” – 1யோவ 3:2 ஆகவே இவைகள் மனித கற்பனைக்கும் எட்டாத ஒன்றாக இருப்பதினால், தேவனுடைய ஜனங்கள் தங்களுடைய விசுவாசத்தின் மூலம் பெற்றிருக்கும் அறிவில் திருப்தியடைந்திருக்கிறார்கள். எவ்வளவு விபரங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த மாம்சத்தை விட வருங்காலத்தில் பெறப்போகிற ஆசீர்வாதங்களும் மனித கற்பனைக்கு எட்டாதது என்று நிச்சயமாகத் தெரிகிறது. இந்த சபை தன்னுடைய ஆண்டவரைக் காணும்பொழுது, அவரை போலிருக்கும் என்று நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிறது. அவர் மாம்சத்தில் வந்த நிலையையோ, உயிர்த்தெழுந்த பின் சீஷர்களுக்குக் காட்சியளித்த நிலையையோ இங்கு குறிப்பிடப்படாமல், இயேசு இப்பொழுது இருக்கும் நிலைக்கு சபையோடு மாற்றப்பட்டு மகிமையடைவார்கள் என்று தெளிவாக சொல்லப்படுகிறது. இதுவே நமக்கு போதுமானது.
ஆனாலும், நம்முடைய ஆண்டவர் அந்தத் திரையை ஓரளவுக்குத் திறந்தார் என்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில், முதலாம் உயிர்த்தெழுதலின் விபரங்களைக் குறித்து ஒரு சுருக்கமான பார்வையை அப்போஸ்தலனாகிய பவுலின் மூலமாக தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் – 1கொரி 15:41-44, அந்த அதிகாரம் முழுவதும், புது சிருஷ்டிகளுக்கு மிக ஆர்வமுள்ளதாக இருக்கிறது. முதலாம் உயிர்த்தெழுதலில் சபையாகிய சிறு மந்தை, ராஜரீகமான ஆசாரியர்களாக, பூரணப்பட்டு, கர்த்தரின் சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பதற்கு மட்டும் அல்லாமல் இந்த உலகத்தில் வருங்கால நம்பிக்கைகளைக் குறித்தக் காரியங்களை விவரிப்பதினால் இந்த அதிகாரம் மிக சுவாரசியமாக இருக்கிறது. உண்மையில், பவுல் பரிசுத்தவான்களுக்கு மட்டுமே இந்த நிரூபத்தை எழுதினாலும், உலகத்தினைக் குறித்தும் எழுதியிருக்கிறார் ஏனெனில், இரண்டு உயிர்த்தெழுதலும் ஒரே விதமாக இருக்குமோ என்று வாசிக்கக்கூடியவர்கள் குழப்பமடையாதபடிக்கு அவர் உலகத்தில் உயிர்த்தெழுதலைக் குறித்தும் எழுதினார். இதினிமித்தமாக, தேவன் சபை ஜனங்களுக்கு பரலோகத்தில் விசேஷித்த ஆவிக்குரிய நிலையை வைத்திருக்கிறார். அதற்குப்பின் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் வெளிப்பட்டு, பொதுவான உலக ஜனங்களுக்கு கொடுக்கப்படும். முதலாம் உயிர்த்தெழுதலுக்கும் (முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்களாக சபை ஜனங்கள் உயிர்த்தெழுவார்கள் – வெளி 20:6), இரண்டாம் உயிர்த்தெழுதலுக்கும் (அதற்கு பின்னாக, தேவனுடைய கிருபையை ஏற்றுகொள்ளும் மீதியிருக்கும் அனைத்து ஜனங்களும் உயிர்த்தெழுப்பபடுவர்) இடையில் இப்படிப்பட்ட வேறுபாடுகள் இருப்பதினால் இரண்டு உயிர்த்தெழுதலைப் பற்றி இந்தப் பாடத்தை மற்றவர்களுக்கு அறிவிக்க அப்போஸ்தலனாகிய பவுலை போல் பிரசங்கிக்க ஆலோசனை அளிக்கப்படுகிறது.