CD-LOVE-Q-43
F291 [P1, 2]:
எவரைக் குறித்தாயினும், விசேஷமாக உடன் அங்கத்தைக் குறித்து ஒரு அவதூறான கதையைக் கேட்கும்போது வேதனையை உண்டு பண்ணும் அளவுக்கு சபையின் ஒவ்வொரு அங்கத்தினருக்குள்ளும், பரிசுத்த ஆவி அதாவது அன்பின் ஆவி அதிகமாக தங்கியிருக்க வேண்டும். இது உடனடியாக பிரச்சனையை பாதியாகவோ அல்லது அதிகமாகவோ, நிவர்த்தி செய்யும். இல்லை என்றாலும், ஆண்டவரால் கோடிட்டு காட்டப்பட்ட முறைகளைப் பின்பற்றும் போது அடிக்கடி வருகிறன்ற சபை பிரச்சனைகள் தவிர்க்கப்படும். அது விரோதங்கள் வருவதற்கான காரியங்களை அகற்றவதோடு, சபையின் தீர்ப்பானது, ஆண்டவருடைய தீர்ப்பாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும், சபையின் குரல் கேட்கப்பட்டு, அதற்கு ஏற்றபடி கீழ்ப்படியப்படும். இதற்கு மேலாக, ஒழுங்கும் அன்பும் இப்படியாகக் காணப்படும்போது, ஒவ்வொருவரும் தன்னால் இயன்றவரை தன் தன் வேலையை மாத்திரம் கவனிக்க நாடுவர் என்றும் தன்னுடைய சகோதரரை கண்டிக்கவோ, திருத்தவோ முற்படமாட்டார்கள். மேலும், தன்னை பற்றி அல்லது சபையைப் பற்றி அல்லது சத்தியத்தைப் பற்றி சில முக்கியமாக காரியங்களாக இருந்தால் மட்டுமே அக்காரியத்தை, ஆலோசனைக் குழுவிடமோ அல்லது சபையினிடமோ கொண்டுவருவார்.
கேள்விக்கிடமில்லாமல், சபையில் வரும் பெரும்பாலான பிரச்சனைகள் (சமுதாய, குடும்ப பிரச்சனைகளும் கூட) தவறு செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் அல்ல, வேண்டுமென்று அதாவது எந்த உள்நோக்கமும் இல்லாமல், குறைந்தபட்சம், நோக்கங்கள் அல்லது நோக்கங்களை தவறாக புரிந்துக்கொள்ளுவதிலிருந்து பிரச்சனைகள் ஏற்படுகிறது. நாவு தான் பொதுவாக பிரச்சனைகளை உண்டு பண்ணுவதாகும். அது தெளிந்த புத்தியின் ஆவியின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆகவே உதடுகளுக்கும். இருதயத்திலிருந்து புறப்படும் பொல்லாத சிந்தனைகள், உதடுகளின் மூலம் வெளியாக்கப்பட்டு தீவிர உணர்ச்சிகளைக் கொழுந்துவிட்டு எரியச் செய்து, அநேகமுறைகள் மற்றவர்களுக்குத் தீமையை வருவிக்கும் இருதயத்திற்கு காவல் வைக்க வேண்டும். இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி புதுசிருஷ்டியான சபை. ஆண்டவரும் தலையுமாய் இருக்கிறவரிடத்திலிருந்து கண்டிப்பான கட்டளைகளை பெற்றுள்ளது. யாரோடும் எதையும் பேசாமலும், முன்பு செய்த ஆலோசனைகள் இன்றி, குற்றம் செய்பவரிடம் தனித்து, சொந்த விருப்பத்தின்படி செல்லும் போது, அவருடைய அன்பின் ஆவி அவர்களை நிரப்ப வேண்டும். அவர்கள் அப்படிச் சொல்வது அவருடைய நடத்தையைக் குறித்து வெட்கப்படுத்தும்படிக்கு அல்ல, அல்லது கடின வார்த்தைகளைப் பேசி, தண்டிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக அவர் குற்றம் செய்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொள்வதற்கும், முடிந்தால் முன் விளைவிக்கப்பட்ட தீமைக்கு கைமாறு பெறும்படியாகவும் இருக்கவேண்டும். அந்த தவறைக் குறித்து, மற்றவர்களிடம் அறிவிப்பது அன்பில்லாத காரியமாகும். மேலும், நம்முடைய தலையாயிருக்கிறவரின் வார்த்தைக்கும் ஆவிக்கும் எதிர்மாறானதாகும். ஆலோசனை கேட்க வேண்டும் என்பதற்காகக் கூட விஷயம் சொல்லப்படக்கூடாது, நமக்கு ஆண்டவரின் ஆலோசனை உண்டு, அதை நாம் பின்பற்ற வேண்டும். பிரச்சனைகள் விசித்திரமாக தோன்றினாலும், உண்மையான பிரச்சனைகளையும், தவறு செய்தவர்களையும் பற்றி வெளிப்படையாகக் கூறாமல், மூப்பர்களில் மிகவும் ஞானமுள்ளவரிடத்தில் ஆலோசனையை கேட்கப்படவேண்டும். உண்மையான ஆயாசம் மற்றும் தவறு செய்தவரை வெளிப்படுத்தாதபடி, ஒரு கற்பனையான வழக்கின் வழிகாட்டுதலுடன் ஆலோசனையை கேட்கப்பட வேண்டும்.
R2928 [col. 1 P1 to end]: –
அந்நிய பாஷைகளின் அற்புதமான வரம் இப்போது நமக்கு இல்லை. ஆயினும், நம்மால் பெறப்பட்ட அதே ஆவி. நமக்குள் மிகுதியாக தங்கி. தேவனுடைய மகத்தான வேலைகளை அதிகதிகமாக வெளிப்படுத்துகிறது. “பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக் கூடாதே என்றார்கள்” (அப்போஸ்தலர் 4:19,20) என்று அப்போஸ்தலர் அவருடைய காலத்தில் குறிப்பிட்டபடியே, இது அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து இராஜ்ரீகமான ஆசாரியத்துவத்திற்கும் இந்நாள் வரையிலும், இது உண்மையாக காணப்படுகிறது. இயேசு இந்த உலகத்தின் மீட்பராகவும், அவருடைய மீட்பின் வேலையில் நமக்குள்ள பங்கையும் நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின் அறிவொளி நமக்கு காண்பித்திருக்கிறது. மேலும் பிதாவின் அங்கீகரித்தலும், அவர் வழியாக இராஜ்யத்தில், அவருடைய கூட்டு வாரிசுகளாக இருப்பதற்கும். இப்போது, மிக பெரிய விரோதி இந்த விஷயங்களைக் குறித்து உலகத்தை ஏமாற்றி, வெளிச்சத்தை இருள் என்றும், இருளை வெளிச்சமாக காண்பிக்கும் போதும். இன்றைய காலத்தில் அவருடைய சக ஊழியர்களாக இருப்பதற்கு, உண்மையான சுவிசேஷத்தின் நிமித்தம் நிந்தனைகளை சுமந்துக்கொள்கிறோம். மேலும், நாமும் கூட மற்ற மொழிகளில் பேசுகிறோம். பரிசுத்த நாமத்தை தூஷித்த நாவுகள் யாவும். இப்போது, நன்றிகளை ஏறெடுத்து, துதிக்கிறது. தெய்வீக தன்மையையும், திட்டத்தையும் அறியாமல் தவறாக எடுத்துக் கூறினவர்கள் இப்போது, இருளிலிருந்து அற்புதமான ஒளியினிடத்திற்கு அழைத்தவருடைய புகழை ஒருவக்கொருவர் அறிவிக்கிறார்கள். நம்முடைய உணர்வுகளையும், சகோதரர்கள் இன்னும் இந்த உலகத்தைப் பொருத்தவரையில் நம்முடைய வெளிப்பாடுகள் அல்லது முகபாவணைகள், பரிசுத்த ஆவியின் தாக்கத்தினால் உருமாற்றப்படுகிறது. எனவே, வெறுப்பு, கோபம், தீமை ஆகியவற்றிற்குப் பதிலாக, அன்பு. மென்மை, பொறுமையையும் வெளிப்படுத்துகிறது. மேலும் நம்முடைய நாவு பொறாமை, கசப்பு, பெருமை, உலக இலட்சியங்களை வெளிப்படுத்துவதற்கு பதிலாக, எல்லா மனுஷரிடமும், விசேஷமாக விசுவாச வீட்டாரிடமும் உதவிச்செய்யக்கூடிய அன்பை, புதிய சிந்தையின் மென்மையும், வெளிப்படுத்துகிறது. இவைகள் ஞானமும் நம்முடைய புதிதான மொழிகளை மற்றும் புதிதாக வாழும் நிரூபங்களாக நம்முடைய குடும்பங்களிலும், அயலகத்தாரிடமும், இந்த உலகத்திலும் அடையாளமாக இருப்பதை நம்முடைய துதித்தலின் பாடலாக, தீர்க்கதரிசி மிக அழகாக வெளிப்படுத்துகிறார் – “நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்.’
F587 [P1, 2]: –
நம்முடைய விழுந்துபோன சுபாவத்தின் கெட்ட குணத்தை அறிந்த பின்னரும் கூட, நாவை அடக்குவது எவ்வளவு கடினமான ஒரு விஷயம் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆகவே, நாங்கள் நாவை அடக்க அல்லது கட்டுப்படுத்த உள்ள ஒரே ஒரு சரியான வழி அதாவது இருதயத்தின் மூலமாக, கட்டுப்படுத்துவதற்கு கவனத்தை செலுத்தும்படி கேட்கிறோம். ஆவியினால் அருளப்பட்டிருக்கிற வசனம் – “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்று அறிவிக்கிறது. இது உண்மையாக இருப்பதால், நம்முடைய நாவுகளை கட்டுப்படுத்த அதிகமான கஷ்டப்படும்போது, நம்முடைய இருதயங்களில் அநீதியான விஷயங்கள் அநேகம் உண்டு என்பதைக் குறிக்கிறது. எந்த அளவுக்கு நம்முடைய இருதயங்களை சரிப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய நாவுகளை அடக்குவதில் உள்ள கஷ்டம் குறையும். மற்றவர்களைக் குறித்து தொடர்ச்சியாக இழிவாக பேசுகின்ற உதடுகள், பெருமையான கர்வமுள்ள, ஆதிக்கம் செலுத்துகிற, தன்னையே நினைத்துக் கொண்டிருக்கிற இருதயநிலையைக் காட்டுகிறது. மற்றவர்களைக் குறித்து பொல்லாங்கு பேசுகிற உதடுகள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, உதடுகளின் பின்னால் இருக்கும் இருதயம் சுத்தமாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும், ஆண்டவரின் அன்பின் ஆவியால் நிரப்பப்படவுமில்லை என்பதை குறிக்கிறது. ஏனெனில், “அன்பு அயலானுக்கு தீங்கு விளைவிக்காது.” சிந்தனையில் கூட அப்படி செய்யாது. அது “பொல்லாங்கு நினைப்பதில்லை”. அது அவனைக் குறித்து பொல்லாங்கை யூகிக்க அனுமதிக்காது. அனுகூலமற்ற தன்மையை யூகிப்பதைவிட அனுகூலமான தன்மையை யூகிக்கும். அது எழும் ஒவ்வொரு ஐயநிலையையும் அவனுக்கு சாதகமாகவே (நன்மையானதையே) யோசிக்கும். மனுக்குலத்தில் எல்லாரிடமும் சுய அன்பு, தன்னையே காயப்படுத்திக்கொள்ளாதபடி. நாவை தடுத்து நிறுத்த பலமுள்ளதாக இருக்கிறது. சரியான அன்பு, சுய நலமற்றதாக இருக்கிறது. அது அயலானையும் தன்னைப் போன்று நேசிப்பது, மாத்திரமல்ல, அயலான் அல்லது சகோதரனுக்கு கேடு விளைவிக்கும்படி பேசுவதைக் கூடவெறுக்கும். அல்லது அவனுடைய நடத்தையைக் குறித்துக்கூட பிரதிபலிக்க விருப்பப்படாது. ஏனெனில், தனக்கு விரோதமாக அப்படி ஒரு வழியை தெரிந்துகொள்ள விருப்பமில்லாமல் இருக்கும். அப்படியானால், இந்த விஷயத்தை எந்த வழியிலிருந்து நாம் பார்த்தாலும், புது சிருஷ்டியின் மிக முக்கியமான விஷயம் நம்முடைய இருதயங்களில் பரிபூரண அன்பை அடைவதுதான் என்று நாம் பார்க்கிறோம். இது சத்தியத்தின் ஊழியமாகிய திவ்விய ஊழியத்தில் ஒத்துழைக்குமாறும், அதிக வைராக்கியமும், முயற்சியும், தியானம் உள்ளவர்களாக இருக்கவும் தேவனுக்கு நேராக நம்மை ஊக்குவிக்கும். இது பரிசுத்த ஆவியாகும். இதைக் குறித்துதான் நாம் ஜெபிக்க வேண்டும் என்று நம்முடைய மீட்பர் கற்றுக்கொடுத்தார். மேலும், இதைக் குறித்துதான் அவர், “பூலோகத்திலுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பூலோகத்திற்குரிய நல்ல ஈவுகளை கொடுப்பதைக் காட்டிலும், நம்முடைய பரலோகப் பிதா அதிக நன்மையானதை கொடுப்பதற்கு மிக வாஞ்சையாயிருக்கிறார்.” என்று அறிவிக்கிறார். இந்த பரிசுத்த ஆவிக்காகவும். அன்பின் ஆவிக்காகவும் ஊக்கமாக ஜெபிப்பது என்பது. நம்முடைய சரீரம் முழுவதும். சிந்தனையிலும், வார்த்தையிலும், செயலிலும் அன்பு ஊற்றப்பட வேண்டும் என்பதற்காக ஊக்கமான வாஞ்சையையும், முயற்சியையும் குறிப்பிடுகிறது. ஆகவே, நாம் பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதாவின் பிள்ளைகளாக இருப்போம். இப்படியாக, அவருடைய அன்புக்கும். அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற எல்லாவற்றிற்கும், அவரை நேசிக்கிறவர்களுக்கு என்று அவர் வைத்திருக்கிறவைகளுக்கும் நாம் தகுதி வாய்ந்தவர்கள் என்று எண்ணப்படுவோம்.