CD-EVILSPEAK-Q-27
“கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.” (எபேசி 5:11-12)
R2444 [col.1 P1-3]: –
“மதத்தின் மேல் மற்றவர்களிடம் நாம் ஆன்மீகத்தைப் பற்றி பேசலாம், ஆனால் உலகத்தாரோடு அல்லது வேலை ஸ்தலத்தில், மதத்தின் மேல் நாட்டம் இல்லாத உலகத்தாரோடு நாம் என்ன பேசுவது? சூழ் நிலைகள் ஏற்படும் போது நாம் பேசாமல் இருந்தாலும், அவர்களின் வெட்டிப்பேச்சுக்களையும், செய்திகளையும் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சம்பாஷனைகளில் கலந்து கொள்ளாவிட்டால் அனைவரும் என்னை ஒதுக்கி விடுவார்களே” என்று வெட்டிப் பேச்சை பேசுவதற்கு அநேகர் இப்படிப்பட்ட சாக்குப்போக்கை சொல்லிவருகிறார்கள். ஆம், பரிசுத்தவான்கள் இந்த உலகத்தாரோடு என்றுமே ஒத்துப்போக முடியாது. அவர்கள் இந்த உலகத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டதினால் அவர்கள் எங்கிருந்தாலும் தனித்தே காணப்பட வேண்டும் என்று நாம் பதிலளிக்கலாம். உலகத்தார் மேலோட்டமாக மதத்தை தழுவலாம் அல்லது வாரத்தில் ஒர் நாள் ஆன்மீகத்தில் ஈடுபாட்டை காட்டலாம். ஆனால் உண்மையில் மதம் என்பது இருதயத்திலிருந்து வரக்கூடியதாயும், நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் அதன் பிரதிபலிப்பு இருக்கவேண்டும். தெய்வீக கட்டளைகளை கண்டிப்பாக நாம் கடைபிடித்தோமானால், தீமையை விரும்பக்கூடிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலரிடம் இருந்து உண்மையில் பிரிய வேண்டியதாய் இருக்கும். தேவனுடைய புத்திரர்களாக அவருடைய ஆவியை பெற்றவர்கள் உலகத்தாராய் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இதை புரிந்து கொண்ட நம்முடைய ஆண்டவர், உலகத்தார் செல்வது விசாலமான பாதை என்றும் சீஷர்கள் செல்வது குறுகலான பாதை என்றும் வேறுபடுத்தி காட்டினார். “நீங்கள் ஒருவரையும் தூஷிக்காமல் இருக்கவேண்டும். அவதூறு பேசாமல் இருக்கவேண்டும்” என்பது கிறிஸ்துவின் அன்பின் பிரமாணத்திற்கு கட்டுப்பட்டது. புது சிருஷ்டிகளாக இருப்பதினால் விருந்தாளிகளையும் மகிழ்ந்து களிகூறலாம். ஏனெனில் கிறிஸ்துவின் நிமித்தம் நீங்கள் சின்ன சின்ன பாடுகளை அனுபவிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. முதலில் நாம் அடையக்கூடிய நஷ்டம் மிகப் பெரியதாக தோன்றலாம். ஆனால் நம்முடைய வரக்கூடிய மகிமைக்கு ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த பாடுகள் மிகக் குறைவாகவே இருக்கும். (பிலி 3:7,8 11 கொரி 4:7)
நமக்கு நேரிடும் சகலமும் நம்முடைய நன்மைக்காக ஏற்படுகிறது என்று நம் ஆண்டவர் வாக்களித்ததினால் நாம் மகிழ்ந்து களிகூறலாம். புது சிந்தையில் நடக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய ஒருவர் உலகத்தாரின் சிந்தையோடு இசைந்து நடப்பது ஆவிக்குரிய மனிதனின் வளர்ச்சிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆகவே இப்படிப்பட்ட உலக சிநேகத்தை நம்மை விட்டு விலக்குவது நம்முடைய ஆவிக்குரிய சிந்தையை, வளர்த்து நம் ஆண்டவரோடும் அவர் வார்த்தைகளோடும் மிக நெருங்கிய ஐக்கியத்தை கொடுக்கும். இப்படிச் செய்வதினால் கிறிஸ்துவின் உண்மையான சரீர அங்கங்களோடு நாம் தொடர்பு கொள்வது எளிதாயிருக்கும். இந்தக் காரியங்களை அடிப்படையாக கொண்டு “உலக சிநேகம், தேவனுக்கு முன்பாக பகை’ என்று யாக்கோபு கூறுகிறார். (யாக் 4:4) இந்த ஒரு காரியத்தை தம்முடைய ஜனங்கள் தம்முடைய முழு விருப்பத்தின்படி குறுகலான வாசலில் பிரவேசிக்க விரும்ப வேண்டும் என்று எதிர்பார்த்து ஒவ்வொருவருக்கும் ஏற்ற சூழ்நிலைகளை தேவன் அமைத்து தருகிறார். ஒன்று அவர்கள் தெய்வீக உறவையும், ஐக்கியத்தையும் இழக்க வேண்டும் அல்லது உலகத்திற்குரிய நண்பர்களையும் ஐக்கியத்தையும் இழக்க வேண்டும். தேவன் விரும்பும் காரியங்களை இந்த உலகம் வெறுப்பதினாலும் இந்த உலகத்தின் தீமையான பேச்சுக்களையும், சிந்தைகளையும், கிரியையும் அன்பையும், விரும்புவதாலும், அநேகர் தேவனுடைய ஐக்கியத்தை தொலைத்து விடுகிறார்கள். அவருடைய ஆவியையும் இழந்து விடுகிறார்கள். “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.” (ரோமர் 8:9)
R2967 [col.1p3]: –
நம்மிடம் பொதுவாக காணப்படும் இப்படிப்பட்ட குறைவான நிலையிலிருந்து (சிந்தை, வார்த்தை, கிரியைகள்) நாம் உயர வேண்டும். ஏனெனில், தேவனுடைய பிள்ளைகளாக இருக்கும் நாம், அவருடைய ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டதால், இந்த உலக காரியங்களோடு எந்த ஐக்கியமும் வைத்துக் கொள்ளமுடியாது. அப்போஸ்தலர் சொல்லுகிறபடி இவைகள் “இருளின் கனியற்ற கிரியைகள்” என்று நாம் விட்டுவிட வேண்டும். கனியற்ற நிலை என்பது அழிவுக்குரிய பாவ நிலை என்று அப்போஸ்தலர் தெளிவாக நமக்கு கூறுகிறார். இது மரணத்திற்கு வழி வகுக்கும். இதற்கு எதிராக, கிறிஸ்துவின் சிந்தை, கனி கொடுக்கக்கூடியதாகவும், அதில் வளர்ச்சி அடைவதும், ஆசீர்பெற்று, உயர்நிலைக்கு நம்மை வழி நடத்தும். தனிப்பட்ட கிறிஸ்தவர்களை மட்டும் அல்ல, நம்முடைய ஆண்டவர் சொல்லியபடி அவரை சார்ந்த அவருடைய மற்றவர்களும் அதனால் பயன் அடைகிறார்கள். உண்மையுள்ள கிறிஸ்தவன் எப்படிப்பட்ட இருளான பாவத்திலும் ஒளிவீசக்கூடியவராக இருக்கிறார்கள். அவர்கள் இந்தப் பூமிக்கு உப்பாக இருந்து, பூமி கெட்டுப்போகாமல் அதை பாதுகாக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இன்றைய நாகரீகம் நிறைந்த உலகத்தில், பரிசுத்த ஆவியைப் பெற்ற தேவ ஜனங்களினால் சில ஒழுக்கங்கள் அல்லது நன்மையான காரியங்கள் நடை பெற்று வருகிறது. “இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது.” (மத் 5:16) நாம் வாழும் அனுதின வாழ்க்கையில் ஜீவிக்கக்கூடிய நிரூபங்கள், நம்முடைய பாவங்களை உணர்த்தி எச்சரிக்கிறது. இது சரியானதாக இருப்பினும், நம்முடைய கடமையாக இருக்கிறது. நாம் இருளுக்கு விரோதமாக செயல்பட்டாலும், தெய்வீக ஒளிக்குள் பிரவேசித்து, சத்தியத்திற்கு சாட்சி பகிர்ந்து, பரிசுத்த ஆவியை வெளிப்படுத்தி பாவங்களை துணிந்து தகர்த்து எறியலாம்.
R2406 [col.2p5]: –
தேவனுக்கு பயந்து அவருடைய நாமத்தை கனப்படுத்தி அவருடைய வார்த்தைகளை தியானித்து அவருடைய மாதிரியை பிரதிபலித்து தெய்வீக வழி நடத்துதலுக்குத் தங்களை உட்படுத்தி, ஜீவிப்பவர்களுக்கு மத்தியில் எந்த விதமான பகையும், பொறாமையும், மாம்சத்தின் கிரியைகளும் வேலை செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆகவே மேல் கூறப்பட்ட காரியங்களை நாம் செய்தால், சகலவிதமான தீய பேச்சுக்களும் கிரியைகளும் மறைந்து போய்விடும். மாம்சத்தின் எந்தக் கிரியையும் தேவனிடமிருந்து அல்ல சாத்தானிடமிருந்தே வருகிறது என்று இவர்கள் எளிதில் அறிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அன்போடு எடுத்துக்காட்டலாம். அல்லது இப்படிப்பட்ட சம்பாஷனைகளை உடனடியாக தவிர்த்து நம்முடைய அதிருப்தியை தெரிவிக்கலாம். அதற்குப் பின் அப்படிப்பட்டவர்களின் கூட்டங்களையும் தவிர்க்கலாம். அதற்குப் பின் நம்முடைய சொந்த வார்த்தைகளையும் நடத்தைகளையும், கவனித்து, “இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வரவழைத்தவரை துதிக்க வேண்டும்.”