நாவின் வல்லமை என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-EVILSPEAK-Q-3

நாவின் வல்லமை என்ன?

What is the power of the tongue?

யாக் 3:1-18

“என் சகோதரரே, அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான். பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம் போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம். கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிப்பட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும். அப்படியே, நாவானது சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது! நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினாலே கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும் ஜந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது. உங்களிலில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகீக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்திற்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதனத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.”

F586-F588 “தேவனை துதிப்பதும், மனுஷரை சபிப்பதும்”

முழுமையான விஷம் நிறைந்ததும், கட்டுக்கடங்காத அவயமாக யாக்கோபு நாவை குறிப்பிடுகிறார். மேலும், ஆச்சரியமல்ல அதை கட்டுப்படுத்துவது மிக கடினம் என்றும் வலியுறுத்துகிறார். அது நெருப்பைப் போல அனைத்தையும் கொளுத்திவிடும் என்றும் கூறுகிறார். (யாக் 3ம் அதிகாரம்) இந்த அனுபவங்களைப் பெறாதவர்கள் ஒருவரும் இல்லை. வாழ்க்கையில் ஏற்படும் அதிகமான பிரச்சனைகளுக்கு உண்மையில்லாத நாவு தான் காரணம், என்று கண்டுபிடிக்கப்பட்டது. துரிதமானதும், மூர்க்கமானதும், உக்கிரமானதுமான வார்த்தைகளினால் மில்லியன் கணக்கான பணமும், ஆயிரக்கணக்கான உயிர்களையும் சேதப்படுத்துகிற – யுத்தங்களை ஏற்படுத்தியது. மேலும் இப்படிப்பட்ட அநேக காரியங்கள், நீதி மன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளுக்குக் காரணமாக இருக்கிறது. மேலும், கடந்த 6000 வருடங்களாக மனித இனத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிய முக்கிய காரணமும் இதுவே. “அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.” என்று, நாவைப் பற்றி அப்போதலர் கூறுகிறார். அயல்வீட்டுக்காரனை கொலைச் செய்யமாலும், அவனிடம் திருடாமலும் இருக்கும் ஒரு நிலையை ஒரு கிறிஸ்தவன் அடைந்திருக்கலாம், ஆனால் அதே அயலானை நாவினால் கீறி, காயப்படுத்தி, அவருடைய நல்ல பெயரைக் கெடுத்துகொண்டிருக்கிறாரே, இப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் சரியான வழியில் நடப்பவர்களாக இருந்தாலும், பரலோக நிலையை அடைவதற்கு வெகு தூரத்தில் இருக்கிறார்கள்.

நம்முடைய விழுந்துபோன நிலையில் இப்படிப்பட்ட துன்மார்கமான குணம் இருப்பதை நன்கு உணர்ந்தபோதிலும் நாவை அடக்குவது எவ்வளவு கடினமாக காரியம் என்று அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆகவே இந்த நாவை அடக்குவதற்கு சரியான வழியை யோசித்து அதில் கவனம் செலுத்தவேண்டும். அதாவது இருதயத்திலிருந்து இந்த மாற்றம் வரவேண்டும். “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்று ஆவியினால் ஏவப்பட்ட வார்த்தைகள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய இருதயத்தில் உள்ள பிரச்சனைகள் அதிகமாக இருப்பதன் காரணமாகவே நம்முடைய நாவின் பிரச்சனைகள் அதிகமாக காணப்படுகிறது. ஆகவே, நம்முடைய இருதயத்தின் சிந்தைகளை சரிப்படுத்தினால் நம்முடைய நாவை அடக்குவது சற்று எளிதாக இருக்கும். தொடர்ந்து மற்றவர்களை அலட்சியமாகவும், இகழ்ந்தும் பேசக்கூடிய உதடுகள் தங்களுக்குள் இருக்கும் பெருமையயும், அகந்தையையும், கர்வத்தையும், அதிகமான தன்னம்பிக்கையயும் வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து மற்றவர்களை மறைமுகமாகவோ, நேரடியாகவோ தவறாக பேசும் உதடுகள் சுத்தமில்லாததும், தேவனுடைய அன்பின் ஆவியினால் நிரப்பப்படாமலும் இருக்கிறது. ஏனெனில் “அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது” அது அவனைக் குறித்து பொல்லாங்கை யூகிக்க அனுமதிக்காது. அனுகூலமற்ற குணங்களை யூகிப்பதைவிட அனுகூலமான குணங்களை யூகிக்கும், ஒவ்வொரு சூழ்நிலையையும், அவனுக்கு சாதகமாகவே (நியாயமானதை) யோசிக்கும்.

தன்னை குறித்து பேசி, தன்னை காயப்படுத்தி கொள்ளாத அளவுக்கு ஒவ்வொரு மனுஷனுக்குள்ளிருக்கும் சுய நலமாக அன்பு மிக உறுதியானது. அதேபோல் சுய நலமற்ற அன்பு பிறனையும் நேசிக்கும். அது அயலானை தன்னைப்போன்று நேசிப்பது, மாத்திரமல்ல, அயலான் அல்லது சகோதரனுக்கு கேடு விளைவிக்கும்படி பேசுவதைக் கூட வெறுக்கும், அல்லது அவனுடைய நடத்தையைக் குறித்துக்கூட பிரதிபலிக்க விருப்பப்படாது. ஏனெனில், தனக்கு விரோதமாக, அப்படி ஒரு வழியை தெரிந்துகொள்ள விருப்பமில்லாமல் இருக்கும். அப்படியானால், இந்த விஷயத்தில் எந்த வழியிலிருந்து நாம் பார்த்தாலும், புதுசிருஷ்டியின் மிக முக்கியமான விஷயம் நம்முடைய இருதயங்களில் பரிபூரண அன்பை அடைவதுதான் என்று நாம் பார்க்கிறோம். இது சத்தியத்தின் ஊழியமாகிய திவ்விய ஊழியத்தில் ஒத்துழைக்குமாறும், அதிக வைராக்கியமும், முயற்சியும், தியானமும் உள்ளவர்களாக இருக்கவும், தேவனுக்கு நேராக நம்மை ஊக்குவிக்கும். மேலும் மனிதர்களிடத்திலும் நம்மை இதேபோல நியாயத்துடனும், அன்புடனும், நடக்கும்படியாக மாத்திரமல்ல, கூடுமானவரை, அனைவரைப் பற்றியும் கிருபையாய் நினைக்கவும், பேசவும் ஊக்குவிக்கும். இது பரிசுத்த ஆவியாகும். இதைக் கேட்டு நாம் ஜெபிக்க வேண்டும் என்று நம்முடைய மீட்பர் கற்றுக்கொடுத்தார். மேலும், இதைக் குறித்துதான் அவர் “பூலோகத்திலுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பூலோகத்திற்குரிய நல்ல ஈவுகளை கொடுப்பதை காட்டிலும், நம்முடைய பரலோகபிதா ஆவிக்குரிய நல்ல ஈவுகளை அதிகமாக கொடுப்பதற்கு மிக வாஞ்சையாயிருக்கிறார்” என்று அறிக்கையிட்டார். நம்முடைய சரீரம் முழுவதும், சிந்தையினாலும், வார்த்தையிலும், செயலிலும் அன்பு ஊற்றப்பட வேண்டும் என்பதற்காக, இந்தப் பரிசுத்த ஆவிக்காகவும், அன்பின் ஆவிக்காகவும் ஊக்கமாக ஜெபிக்க, வாஞ்சையோடு, முயற்சிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறது. இப்படி செய்தால், நாம் பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதாவின் பிள்ளைகளாக இருப்போம். இப்படியாக, அவருடைய அன்புக்கும், அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற எல்லாவற்றிற்கும், நாம் பாத்திரமாக இருப்போம்.

R2447 (col.2 P1)

நம்முடைய சரீர அவயவங்களில் நாவே செல்வாக்குமிக்கது. நம்முடைய சகல அவயவங்களும் இணைந்து செயல்பட்டாலும், நாவை மேற்கொள்ளவோ, அதை கட்டுப்படுத்தவோ முடியாது. ஆகவே தேவனுடைய பணியில் அதை கட்டுப்படுத்துவது மிக அவசியமாக இருக்கிறது. அழியக்கூடிய இந்தச் சரீரங்களினால் தேவனுடைய ஊழியத்தை செய்வது மிக முக்கியம். அன்பு, கனிவு, உதவி பற்றிய சில வார்த்தைகள் – மனித வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மேலும் ஒவ்வொரு தேசங்கள் சீரப்டுத்துவதற்கு, எவ்வளவு காரியங்களை இந்த நாவு செய்யவேண்டும். அதே நேரத்தில் இந்த நாவு – தீமையான மற்றும் இரக்கமற்ற வார்த்தைகளை பேசி, அநீதியான செயல்களைச் செய்து, நற்கீர்த்தியுள்ள அனைத்தையும் அழித்து விடுகிறது, அல்லது அப்போஸ்தலர் கூறுவதுபோல “அது எல்லாவற்றையும் கொளுத்து விடுகிறது.” இது தீவிர உணர்ச்சிகளை தூண்டிவிட்டு, சண்டைகளையும், பகைகளையும் பிறப்பிக்கும். “நாவு காட்டை கொளுத்திவிடும் நெருப்பு” (Gehenna) கெஹன்னா என்று சொல்லப்படும் இரண்டாம் மரணத்தை குறிக்கும் என்று யாக்கோபு சொல்லுவதில் ஆச்சரியமில்லை.

R2156 (col.1 P5)

இந்தப் பாடம் நாவுக்கு எதிராக மட்டும் அல்ல, இந்த நாவைக் கொண்டு மற்றவர்களுக்கு எதிராக செயல்படுத்தும் வல்லமைக்கு எதிராகவும் எச்சரிக்கப்படுகிறது. எல்லா அவயவங்களைக் காட்டிலும், நாவு அதிக ஆற்றலுள்ளது (நன்மை அல்லது தீமையை செய்ய) என்று அனுபவம் பெற்ற அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். மேலும், மற்ற அவயவங்களை காட்டிலும் நாவை அடக்குவது கடினம் என்று அனுபவங்களும் கற்றுத் தருகிறது. ஆகவே விழுந்து போன நிலையின் ஒவ்வொரு ஆசையையும், ஆர்வமிக்க காரியங்களையும், நிறைவேற்றிக் கொள்ள இந்தத் திறமையுள்ள ஊழியக்காரனை தீமையான காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறது. ஆகவே ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடைய கவனத்தையும், ஞானத்தையும் சரியாக பராமரித்து, தன்னுடைய சரீர அங்கங்களை கட்டுக்குள் வைத்து கிறிஸ்துவுக்குள் இருக்கும் புது சிந்தனைக்கு கீழ்ப்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும். இப்படிச் செய்தால் தனக்கும் மற்றவர்களுக்கும் எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல், நெருக்கமான பாதையில் செல்ல உதவி செய்யும். குதிரையின் வாயிலிருக்கும் ஒரு சிறிய கடிவாளம், அந்தக் குதிரையை முழுமையாக கட்டுப்படுத்தி நடத்துவது போலவும், ஒரு சிறிய சுக்கான் பெரிய கப்பலின் திசையை திரும்பி நடத்துவதுபோல, நம்முடைய நாவும், எழுதக்கூடிய பேனாவாக இருக்கிறது. நன்மைக்கானாலும், தீமைக்கானாலும் சரி, அநேக ஜனக்கூட்டங்களைத் திசைதிருப்பிவிடும். ஆகவே இந்த நாவு எவ்வளவு முக்கியமானது என்றும், அதை நாம் நன்மையை காட்டிலும் தீமைக்காக எந்த அளவுக்கு பயன்படுத்துகிறோம் என்றும், நம்முடைய விசுவாசத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக எத்தனை முறை நம்முடைய விசுவாசம் குன்றிப்போய்விட்டது என்றும், நீதியையும், சமாதானத்தையும் பிறப்பிப்பதற்குப் பதிலாக எத்தனை முறை அதிருப்திகளையும், சண்டைகளையும் ஏற்படுத்தியது என்றும் நாம் கவனிக்கவேண்டும். உலகப்பிரகாரமான காரியங்கள் இவையனைத்தும், உண்மையாக இருக்கும்பட்சத்தில் தேவனுடைய ஜனங்கள் மத்தியில் இது இன்னும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். நாளுக்கு நாள் – சத்தியம், நீதி மற்றும் சமாதானத்திற்கு ஏதுவாகவோ அல்லது எதிராகவோ வழி நடத்தும் ஓர் உபாத்தியராக நாவு செயல்படுவதை, ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளவேண்டும்.