Q-4
1 யோவான் 3:3 – “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்.”
R2517[col.2 P3,4]
“அவர் மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்.” – 1 யோவான் 3:3
நாம் தேவனுடைய பிள்ளைகளாக தத்தெடுக்கப்பட்டு, உணிமையுவிளவர்களாக இருந்தால் நாம் அவரைப் போல இருப்போம், அவரைகாண்போம், அவருடைய மகிமையை பகிர்ந்துகொள்வோம் என்ற வாக்குத்தத்தம், இங்குகுறிப்பிடப்பட்டுள்ள நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையுடன் நம் மனமும் இருதயமும் விரிவடையும் போது, அதன் நீளங்கள், அகலங்கள், உயரங்கள் மற்றும் ஆழங்களை நாம் அளக்கத்தொடங்குவோம். அது நிச்சயமாக நமக்கு முன்களால் பரலோக தந்தையின் அன்பையும், வானவில்வண்ணங்களில் மீட்பரின் அன்பையும் அமைக்கும். மேலும் தந்தையும் குமாரனும் நம்மை முதலில்நேசித்ததினால், நாம் அவர்களை அதிகமதிகமாகநேசிக்கிறோம், அன்பின் தெய்விக வடிவமே மேலும்மேலும் நம் இலட்சியமாகிறது. நாம், அதைபிரதிபலிப்பதற்கு முதலில், அதை நாம் நகலெடுக்க முற்படும்போது, நம் இருதயங்களின் சுத்திகரிப்பும் பரிசுத்தப்படுதலும் தொடரும். சுதந்திரத்தின் பரிபூரணபிரமாணமாகிய அன்பை நாம் தேடும் போது, நம்மை வீழ்த்திய அனைத்து சுயநலம் மறிறும் அற்பத்தனத்திற்காக நாம் அதிகமதிகமாகவெட்கப்படுகிறோம். மேலும் அவற்றின் உண்மையான ஒளியில் மாம்சம் மற்றும் பிசாசின் வேலைகளாக பார்க்கையில், அனைத்து கோபம், தீமை, பகை, பொறாமை, சண்டை, தீமை பேசுதல், தீய யூகங்கள், பின்னாக பேசுவது மற்றும் அவதூறு ஆகியவை நமக்குமேலும் மேலும் வெறுப்பை ஏற்படுத்தும். இறுதியாக, இந்த தீய குணங்களுக்காக எந்த அளவிலும் பரிதாபப்படுவது, நம்மை இராஜ்யத்திற்கு தகுதியற்றவர்களாக்கி, ஒவ்வொரு நல்ல வேலைகளும் பயனற்றதாக இருப்பதை நாம் காணும்போது, கொடிய தொற்று நோமிலிருந்து நாம் தப்பி ஓடுவது போல இந்த தீமைகளிலிருந்து தப்பி ஓடுகிறோம். நம்முடைய இருதயங்கள் (சித்தங்களும், நோக்கங்களும்) உடனடியாக தூய்மையாகும். நம் வாயின் வார்த்தைகள் மற்றம் நம் இருதயங்களின் தியானங்கள் தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நம் உதடுகளுக்கு மட்டுமல்ல, நம் சிந்தைகளுக்கும் ஒரு காவல் வைக்கிறோம்.
மனிதனின் மூளை ஒவ்வொருவருக்கும் ஓரளவு வேறுபடுவதால், அவரவருடைய சிந்தனைகளும் வேறுபட்டதாக இருக்கவேண்டும் என்று சிலர் நம்புகிறார்கள். அதாவது ஒரு மனுஷன் தனது மூளை கட்டுமானத்துடன் இசைவாக மட்டுமே சிந்திக்க முடியும் என்று நம்புகிறார்கள், ஆனால் அவ்வாறு இல்லை என்று நாம் பதில் அளிக்கிறோம். ஒவ்வொருவரும் தனது சொந்த எண்ணங்களை சீர்தூக்கி பார்க்கவும், சமப்படுத்தவும், சிலவற்றை கட்டுப்படுத்தவும் மற்றவைகளை ஊக்குவிக்கவும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் இவைகளைச் செய்வதற்கும் பின்பற்றுவதற்கும், ஒவ்வொருவருக்கும் முன் ஒரு சிறந்த மாதிரி வைக்கப்பட வேண்டும். வார்த்தைகள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்துவது போல எண்ணங்களையும் கட்டுப்படுத்தலாம். விருப்பம் தலைமைத்துவத்தில் உள்ளது, மேலும் அது எந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் ஆதரித்து ஊக்கவிக்க வேண்டும் என்றும், எதைத் தடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறது. எனவே, முதலில் விருப்பத்தை சரியாக வழிநடத்த வேண்டும். இரண்டாவதாக சிந்தனையின் கட்டுப்பாட்டில் அதன் வல்லமையை வலுவாக பயன்படுத்தவேண்டும். தீமை என்று அங்கீகரிக்கும் எண்ணங்களை முழுமையாக கட்டுப்படுத்தி, நன்மையானதையும், உதவிகரமானதையும் தூண்டியிட வேண்டும். “இருதயம்” என்று வேதம் அழைக்கப்படும் சித்தம், இப்போது ஆண்டவரால் தொடர்ந்து தேடப்படுகிறது. ஏனெனில் அவருடைய விசேஷித்த ஜனங்களாக அவர்களை நாடுகிறார். “என் மகனே உன் இருதயத்தை எனக்கு தா” என்ற அவருடைய விருப்பமே, செய்தியாகும். இந்த வேண்டுகோள் மனப்பூர்வமாக பாவம் செய்யும் பாவிகளுக்கு கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் தேவனுடைய மக்களாக அங்கீகரிக்கப்படவும் இல்லை உரையாற்றப்படவும் இல்லை, அவர்கள் தீயவனின் பிள்ளைகள். மீட்பர் கிறிஸ்து இயேசுவின் மீதான விசுவாசத்தினால் மனந்திரும்பி, பாவமன்னிப்பை பெற்று தேவனோடு இணக்கமானவர்களை மட்டுமே தேவன் அவருடைய புத்திரர்களாக அங்கீகரிக்கிறார்.
இப்படிப்பட்டவர்களே, “பரிபூரணத்தை நோக்கி சென்றால்” அதாவது அவர்களை பொருத்தவரையில் அவருடைய கிருபையான நோக்கங்களை முழுமையாக அடைவதற்கும், அவர்களின் இருதயங்களையும், விருப்பங்களையும் முழுமையாக அர்ப்பணிப்பதே ஒரே வழி என்று கர்த்தர் தெரிவிக்கிறார். இவ்வாறு தேவனிடம் ஒப்படைக்கப்பட்ட இருதயமும், விருப்பமும், தெய்வீக சித்தத்தை அறிய நாடவும், தெய்விக சிந்தனையை பிடித்துகொள்ளவும், அவருடைய வார்த்தைகளையும், கிரியைகளையும் கீழ்ப்படிய முயல்கிறது. மேலும் புதிய சிந்தை இந்நிலையை எட்டினால், அதே விகிதத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் புதிய லட்சியங்களும், நம்பிக்கைகளும் உணர்வுகளும், முயற்சிகளும் தொடங்கும். இந்த காரணத்தினால் தான் தெய்வீக விருப்பம் மற்றும் திட்டத்தின் வெளிப்பாடு விசுவாசிகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதை பற்றிய அறிவில் வளர்வதன் மூலமும், இவைகளைப் பற்றி சிந்திப்பதன் மூலமும், சிந்தனையை தெய்வீக திட்டம் மற்றும் சித்தத்தினால் நிரப்புவதன் மூலமும், வாழ்க்கையின் ஒவ்வொரு அருமையான வழியிலும், மறுருபமாக் கப்படுதலின் தாக்கங்கள் நீட்டிக்கப்படலாம்.