Q-14
F551 [P1] through F554
நோய் அல்லது ஆரோக்கியத்தில் பிள்ளையின் உணவில் வழிகாட்டுதலிலும் இதே முறையை பின்பற்ற வேண்டும். ஒருபோதும் பிள்ளைகளுக்கு வலிகள் அல்லது வேதனைகள் பரிந்துரைக்கப்படக்கூடாது. ஏனென்றால் மனம் நிச்சயமாக இவற்றைக் கட்டுப்படுத்தி, வலியை அல்லது வேதனையை இன்னும் மோசமாக்கும். மேலும் வலிகள் மற்றும் வியாதிகளை உரையாடலின் தலைப்பாக மாற்றக்கூடாது. குறிப்பாக மேஜையில், ஒவ்வொரு சிந்தனையும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். நல்ல ஆலோசனைகள் முன்கூட்டியே வழங்கப்படவேண்டும். மேலும் அவைகள் மீண்டும் மீண்டும் நினைப்பூட்டப்படவேண்டும். “இன்று காலை என் சிறிய மகன் மகிழ்ச்சியாக இருக்கிறானா? அவன் அப்பாவையும் அம்மாவையும் சகோதரியையும் சகோதரனையும் நாயையும் நேசிக்கிறானா? ஆம், அது சரி என்று நான் நினைத்தேன், காலையில் உணவை புசிக்க அவன் பசியாக இருக்கிறானா? – பால் மற்றும் சர்க்கரையோடு நல்ல கஞ்சி மற்றும் பிரடு வெண்ணை மற்றும் ஜாம்? இன்று என் மகனின் வயிற்றுக்கு வலி தரும் எதையும் நான் தரக்கூடாது. அவனுக்கு சிறப்பான வேறு நல்ல உணவை தரவேண்டும். இன்று மேஜையில் சோளம் இருக்கும். அது என் சிறிய மகனுக்கு நன்றாக இருக்காது. அதனால் அதை வேண்டாம் என்று கூறுவான். தேவன் விரும்புவதைப் போல அவன் நன்றாகவும் வலுவாகவும் இருக்க விரும்புகிறான். அப்பாவும் அம்மாவும் அவனைப் பார்க்க விரும்புவதைப் போலவும் அவன் இருக்க விரும்புகிறான். சுயத்தை வெறுத்தலுக்கும் இது ஒரு நல்ல பாடமாக இருக்கும். மேலும் அப்பாவும் அம்மாவும் தங்கள் சிறு பிள்ளை இந்த சிறந்த பாடத்தைக் கற்றுக்கொள்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள், இது ஆண்மைக்கும் பெண்மைக்கும் உண்மையாகவே மிகவும் அவசியமானது. எல்லாக கிறிஸ்தவரிகளும் பாவங்களைப் பொறுத்தமட்டிலும், எந்த விதத்திலும் ஆவிக்குரிய வாழ்க்கையை தடுக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் சுயத்தை வெறுத்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். உலக ஜனங்கள் அனைவரும் கூட, பசி ஆர்வத்திற்கு அடிமையாக இருபபவவர்களை பரிதாபகரமான பலவீனமானவர்களாகவும், ஆண்மையற்றவர்களாகவும் அல்லது பெண்மையற்றவர்களாகவும் காண்கிறார்கள். இப்போது அப்பாவும் அம்மாவும் தங்கள் சிறு பிள்ளையின் மன உறுதி எவ்வளவு வலிமையானது என்பதைப் பார்க்கிறார்கள். அவன் வெற்றி பெறுவான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தேவன் தன்னடக்கத்தை எவ்வளவு உயர்வாக மதிக்கிறார் என்பது வேத வாக்கியத்தின் மூலம் காட்டப்படுகிறது. “பட்டணத்தைப் பிடிககிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.” (நீதிமொழிகள் 16:32)
நன்னெறி கேள்விகளில், ஆலோசனையின் மூலம் பாடங்களானது நன்மை தீமைக்கு சமமான ஆற்றல் வாய்ந்தவை… அதாவது தீமை செய்வோம் என்ற ஆலோசனைகள், தீய செயல்களுக்கு ஒரு சக்திவாய்ந்த ஊக்கமாக இருக்கும். அல்லது நன்மை செய்வோம் என்ற ஆலோசனைகள், நன்மை செய்வதற்கு ஒரு சக்திவாய்ந்த ஊக்கமாக இருக்கும். எனவே, சரியானதோ தவறானதோ, உன்மையானதோ பொய்யானதோ, உன்னதமானதோ, இழிவானதோ, எதுவானாலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விஷயத்திலும் அடிக்கடி முறையிடப்பட்டு, நம்முடைய ஆண்டவரும், சிருஷ்டிகரோடு, நாம் பின்பற்ற வேண்டிய உன்னதமான மற்றும் சிறந்த மனுஷரால் அங்கீகரிக்கப்பட்ட உண்மையான, உன்னதமான மற்றும் சரியானவைகளை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும். உன்னதமான மற்றும் உண்மையானவற்றைப் போற்றுவதற்கு ஆரம்பகாலத்தில் விடாமுயற்சியுடன் கற்பிக்கப்படும் பிள்ளை – பொதுவாக கீழ்த்தரமான மற்றும் கண்ணியமற்ற நடத்தைக்கு எதிராக அவனுடைய மனதில் ஒரு அரணை வளர்ப்பான். சத்தியத்தால் ஒருபோதும் பரிசுத்தப்படாவிட்டால், ஆவியால் ஒருபோதும் ஜெநிப்பிக்கப்படாவிட்டால், அவர் உன்னதமான மனுஷனுக்கு தேவையான தன்மையை தனக்குள் புதைத்துவிட்டிருப்பார். ஒருவேளை பரிசுத்தப்பட்டு, ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டால், தற்போதும், எதிர் காலத்திலும், வெற்றிகரமான ஊழியத்திற்கு மிக பெரிய வாய்ப்புகளைப் பெறுவார்.
பிள்ளையின் கீழ்ப்படியாமைக்கு திருத்தமும் கண்டனமும் தேவைப்பட்டால், அது அனுதாபம், நம்பிக்கை மற்றும் நல்ல நோக்கங்களின் நிலைப்பாட்டில் இருந்து அறிவுறுத்தப்பட வேண்டும். நான் மிகவும் நேசிக்கும் மற்றும் மகிழ்ச்சியாக இருக்கவும், கர்த்தர் அங்கீகரிக்கும் விதத்தில் பயிற்றுவிக்கவும் தொடர்ந்து நான் முயற்சிக்கும் எனது குட்டிப் பெண், வேண்டுமென்றே எனக்குக் கீழ்ப்படியவில்லை என்பதை நான் அறிவேன். இந்த கீழ்ப்படியாமை மற்றவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதன் விளைவாகும் என்பதை நாம் நிச்சயத்திருக்கிறேன். அவள் அம்மா சொன்னதைச் செய்ய அவள் போதுமான அளவு முயற்சி செய்யாததன் விளைவாகும் என்ற நான் நம்புகிறேன். இந்த முறை நான் உன்னை தண்டிக்காமல் மன்னித்து விடுவேன். ஆனால் என் பிரியமே, இந்த விஷயத்தை உன் மனத்தில் பதியவைப்பதற்காக, இன்று இரவு நான் உனக்கு கொடுக்கும் குட் நைட் முத்தத்தை கொடுக்க மாட்டேன். இப்போது நீ அடுத்த முறை தன்னடக்கத்தைக் கடைப்பிடிக்க இன்னும் கடினமாக முயற்சி செய்வாயா என் அன்பே? நிச்சயமாக நீ செய்வாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அடுத்த முறை இந்த விடியத்தை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள், ஆனால் பிவ்வையின் சரியான ஆசைகள் அல்லது நோக்கங்களை ஒருபோதும் கேள்வி கேட்காதீர்கள். என் சிறிய மகள் மீண்டும் தோல்வியடைந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். உன்னுடைய நல்ல நோக்கத்தை நான் சந்தேகிக்கவில்லை அன்பே, ஆனால் இந்த விஷயத்தில் உன் விருப்பத்தை நீ பயன்படுத்தாததைக் கண்டு நான் வருந்துகிறேன், உன்னால் முடியும் என்று நான் நம்புகிறேன், மேலும் எதிர்காலத்தில் நீ செய்வாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனாலும் என் பிள்ளையே, நான் உனக்கு பரிந்துரைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், நான் உன்னிடம் என் கடமையைச்செய்து உன்னைத் தண்டிப்பது மிக அவசியம் இந்த சூழ்ச்சியின் மீதான உனது வெற்றியில் நான் விரைவில் உன்னுடன் மகிழ்ச்சியடை முடியும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் இப்போது சோதனைக்கு, “வேண்டாம், இல்லை” என்று சொல்லக் கற்றுக்கொள்வீர்களானால், நேரடியான கீழ்ப்படியாமையின் பாதிப்புகளை காட்டிலும், உங்கள் முழு எதிர்காலத்தையும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும். மேலம் எதிர்கால வாழ்க்கையில் முக்கியமான மற்றும் பாரமான கேள்விகளுக்கும் நீங்கள் தோல்வியடைவீர்கள். ஆனால் எனது அன்பும், நம்பிக்கையும் அறிவுரைகளும் இன்னும் கனிகளைத்தரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மேலும் என் குழந்தையே, நம்முடைய தோல்லிகள், உங்கள் விஷயத்தில், எங்களுக்கு உதவியாக இருக்கும் என்றாலும், நம்முடைய விருப்பங்களை சரியானவைகளுக்காக உறுதியாக முன்வைக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நம்முடைய பலவீனங்களை அனுபவத்தின் மூலம் கண்டுபிடித்து, அதில் குறிப்பாக கவனமாக இருக்க கற்றுக்கொள்கிறோம், இந்த தோல்வி ஒரு லாபகரமான பாடமாக இருப்பதற்கு நாம் தேவனிடம் வணங்கி அவருடைய ஆசீர்வாதங்களை கேட்போம். மேலும் நமக்கு அடுத்து வரும் சோதனையின் தாக்குதலில் நம்முடைய நடத்தை அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, அவைகளை நம் இருதயத்தில் வைத்துகொள்வதற்கு அவருடைய உதவியை கேட்போம். அனைத்து ஆலோசனைகளும் தேவனுடைய கருத்திற்கு இசைவுளிவதாக இருக்கவேண்டும். “கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.” வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையிலும் உள்ள வேதவசன அட்டைகளிலும், கர்த்தருடைய சித்தமே அங்கீகரிக்கப்பட்ட ஒரே தரமாக இருக்கவேண்டும். நம்முடைய எல்லா காரியங்களையும், செயல்களையும் கர்த்தரே அறிந்தவர் என்பதையும், தேவன் “நமக்காக” இருக்கிறார் என்பதையும், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும், நண்பர்களுக்கும், புதிதாக ஜெநிப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் பணிவுடன் நீதியைத் தேடும் அனைவருக்கும் தொடர்ந்து நினைப்பூட்ட வேண்டும்.