CD-FAITH-Q-22
நம்முடைய காரியம் எதுவானாலும் சரி, மேலே சொல்லப்பட்டக் கோட்பாடுகள், சகலத்திற்கும் நேர்த்தியாகப் பொருந்துகிறது. தேவனுடன் உடன்படிக்கை செய்த ஜனங்களைப் பொறுத்த வரையில், விசுவாசத்தின் பாடமானது, சத்தியம், போதனைகள் மற்றும் உபதேசங்களின் மேல் விசுவாசமாக இருந்தால் மட்டும் போதாது, தேவன் மேலும், அவர் சொல்லிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்றும், முழு நம்பிக்கையோடிருக்க வேண்டும். இந்த விசுவாசம் வருங்காலத்திற்கு மட்டும் அல்லாமல் நிகழ்காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது. இப்படிப்பட்ட விசுவாசம் வரக்கூடிய மகிமையான காரியங்களைக் குறித்து மட்டும் சந்தோஷப்படாமல், தேவனுடைய கண்ணோட்டத்தில் மிகச்சரியாக தோன்றினதும், இப்பொழுது நமக்கு அனுமதிக்கப்பட்ட சகல பாடுகளிலும், சோதனைகளிலும், கஷ்டங்களிலும் களிக்கூருவதாக இருக்கும். ஆகவே அப்போஸ்தலர்கள் சொன்னபடி எல்லாவற்றிலும் மகிழ்ச்சியாக இருப்போம். “சகலத்திற்காகவும் தேவனை ஸ்தோத்தரியுங்கள்” – 1தெச 5:18, எபே 5:20
இந்த உண்மையான விசுவாசத்திற்கு, தொடர்ந்து தேவன் மேல் நம்பிக்கையாயிருப்பதே தகுந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. நம்முடைய ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசுவின் அனுபவங்களில் இதை நாம் காணலாம். இந்த உலகத்தில் அவர் தெய்வீகத் திட்டத்தை நிறைவேற்றினார் என்பதை உணர்ந்தவராய், அவருடைய சகல காரியங்களிலும், தெய்வீக ஞானத்தால் வழிநடத்தப்பட்டார் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவர் தன்னுடைய பிதாவினிடத்தில் ஜெபிக்கும்பொழுதும், அவர் பெற்ற ஒவ்வொரு அனுபவத்தின் போதும், அநேக எதிர்ப்புகளை அவர் சந்தித்தப் போதும், அவர் தெய்வீக வழிநடத்துதலின் கீழ் இருந்ததை உணர்ந்தார். அவர் தன்னை முழுமையாக பிதாவினிடம் ஒப்புக்கொடுத்ததை அறிந்து, தன்னுடைய சித்தத்தை அல்ல, அவருடைய சித்தத்தை செய்யவே காத்திருந்தார். ஆகவே எல்லா சூழ்நிலைகளிலும், பிதாவாகிய தேவனின் வழிநடத்துதலை அவர் உணர்ந்திருந்தார்.
பிலாத்து நம்முடைய ஆண்டவருக்குப் பதில் அளிக்கையில் இந்த ஒரு காரியம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது –“…பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது…” மேலும், அவருடைய பாடுகளை மற்றும் உபத்திரவங்களைக் குறித்து அவர் பேசுகையில் – “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்”. உண்மையில், எல்லா காரியங்களிலும் பிதா தன்னை வழிநடத்துகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார் – அவர் சகலவிதமான துன்பங்களையும், பாடுகளையும் சகிக்க இந்த உணர்வே அவருக்குத் தைரியம் கொடுத்தது.
நம்மை நேசித்து, நமக்காக மரித்த அவருக்குள் ஜெயிக்க விருப்பமுள்ள ஒவ்வொருவரும் அவரைப்போலவே, தெய்வீக வழிநடத்துதலின் மேல் நம்பிக்கையாய் இருப்பது மிக அவசியம். தேவனுடைய அழைப்பின்படி நாம் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டோம் என்பதில் நாம் உறுதியாக இருந்தால், நமக்கு சகலமும் நன்மைக்காக நேரிடுகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலைகளையும், தேவன் நமக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதையும், அதில் நாம் பிரவேசித்து ஜெயிக்கும்பொழுது, நமக்காக ஆசீர்வாதங்களையும் வைத்திருக்கிறார் என்பதையும் நாம் உணரவேண்டும். – பிதாவின் பிரதிநிதியாகிய, நம்முடைய ஆண்டவராம் இயேசு, நாம் அனுபவிக்கும் சோதனைகளையும், பாடுகளையும் கண்காணித்து, இவ்வுலகத்தின் சாத்தானின் ஊழியக்காரர்கள் மூலம் நமக்கு அனைத்தையும் அனுமதிக்கிறார் என்பதையும் நாம் உணரவேண்டும். ஆகவே நம்முடைய எந்தவிதமான உலகக் காரியங்கள் நஷ்டமடைந்தாலும், அதை மகிழ்ச்சியோடே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவை இதன் மூலம் பெறுகிறோம். ஆகவே நமக்கு இப்படிப்பட்ட சோதனைகளை ஏற்படுத்துபவர்களிடத்தில், அன்போடும், கனிவோடும், அவர்களை மன்னிக்கும் மனப்பக்குவத்தோடும் நடந்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கும் இப்படிப்பட்ட விசுவாசம் இருப்பதற்கு வாய்ப்பில்லை – இந்த உலகத்தைப் பொறுத்தவரையில் – ஒரு விசேஷித்த வகுப்பார் – சிறு மந்தைக்கு – மட்டுமே இந்த விசுவாசம் இருக்கவேண்டும். இவர்கள் விலையேறப்பெற்ற இரத்தத்தின் மேல் விசுவாசம் வைத்து, நீதிமான்களாகி, கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக தங்களைப் பொருத்திக்கொண்டு, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவரோடு பாடுகளைச் சகித்து, அவரோடுகூட மகிமையடையக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.