CD-LOVE-Q-23
F186 [P1,2]
தேவனுடைய பிரியமான குமாரனுடைய இருதயத்திற்கு ஒத்த சாயலாய் இருப்பதற்கான இந்த வரம்புகளும் தகுதிகளும், நாம் ஏற்கெனவே, சுருக்கமாக பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த சாயலை குறிப்பாக ஆராய்ந்து பார்க்கும்போது, அப்போஸ்தலராகிய பேதுரு இங்கு சுட்டிக் காட்டுகிறபடி, நாம் பரிசுத்த ஆவியின் கனிகளை உடைவர்களாக இருக்க வேண்டும் என்று அர்த்தப்படுத்துவதை காணலாம். தேவன் பரிசுத்தமுள்ளவர், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், அவருடைய ஆவியையும், நீதியின் மேல் அவருக்கு உள்ள அன்பின் சுபாவத்தையும் பெற்றவர்களாகவும். அக்கிரமத்தை எதிர்ப்பவர்களாயும் இருக்க வேண்டும். அப்போஸ்தலர் இந்த வேத பகுதியிலிருந்து தேவனுடைய பரிசுத்த ஆவியின் கிரியையின் பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டி, நாம் நம்முடைய ஓட்டத்தின் ஆரம்பத்தில், அவருடைய பரிபூரண சாயலை (பரிபூரண அன்பு) பெறும்படியான நிலைக்கு வருவதில்லை என்ற உண்மையை குறிப்பிடுகிறார். ஆனால் அதற்கு மாறாக அது ஓட்டம் முடிவு பெறுவதைக் காட்டும் குறியாக அல்லது அளவாக குறிப்பிடப்படுகிறது. அன்பு என்று பொதுவாக கூறும் போது குணாதிசயத்தின் எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியதாயிருக்கிறது. அவைகள் உண்மையில் அன்பின் பாகங்களாக உள்ளன. சாந்தம், தயவு, சகோதர அன்பு தேவ பக்தி எல்லாம் அன்பின் பகுதிகளாகும். யாரோ ஒருவர் தேவனுடைய ஆவியின் கனிகள் பின்வருமாறு வரையறுக்கலாம் என்று கூறியிருக்கிறார். நாங்களும் மனதார ஏற்றுக் கொள்கிறோம்.
1. சந்தோஷம் – அன்பில் அதிக சந்தோஷம்
2. சமாதானம் – இளைப்பாறுதலில் அன்பு
3. நீடிய பொறுமை – அன்பு நீடிப்பது
4. தயவு – சமுதாயத்தில் அன்பு
5. நற்குணம் – செயல்பாட்டில் அன்பு
6. விசுவாசம் – வாழ்க்கை என்னும் யுத்தகளத்தில் அன்பு
7. சாந்தம் – தன்னலமில்லாத அன்பு
8. இச்சையடக்கம் – பயிற்சியில் அன்பு